BREAKING NEWS

Like Us

Tuesday, December 22, 2009

அளிமங்கட (The road to elephant pass)

முதன் முதலாக இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் இந்த படத்தின் போஸ்டரை பல மாதங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.  
அன்றிலிருந்து, அப்படி இந்த படத்தில் என்ன தான் இருக்கு? என்று பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருந்தது. வழமை போலவே ஒரு பிரச்சார படமாகவும் , தமிழனை கேவலமாகவும் சித்தரித்து இருப்பார்கள் என்ற எண்ணமே படம் பார்க்கும் வரை இருந்தது.


நான் வேலை செய்யும் இடத்தில் பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசியதாலும் , சந்திரன் ரத்னம் என்ற பெயருடை ஒருவர் தயாரித்து இயக்கி  இருந்ததாலும் எப்படியும் பார்த்துவிட வேண்டும் எண்டு  முடிவெடுத்து  நண்பர்களிடம் கேட்கலாம் என்றால், சுதாவுக்கு சிங்கள படம் பார்க்கும் அளவுக்கு கிறுக்கு பிடித்து விட்டதோ என்று நினைப்பார்களோ என்று அஞ்சி , தன்னந்  தனியாகவே ரீகல் தியட்டருக்கு போனேன். உலக  சினிமாக்களை தேடும் நம்மில் பலருக்கும், மிக அண்மித்து , மிக தரமான சிங்கள சினிமாக்கள் இருந்தும், அதை பார்க்கும், ரசிக்கும் , பாராட்டும் மனப்பக்குவம் வரவில்லை என்பது  எமக்கிடையே நெகிழ்வுத்தன்மையின் ஆழத்தையே பிரதி பலிக்கிறது.

ரீகல் தியட்டர், பெரிய ஆச்சரியத்தை தந்தது, பழைய காலத்து மாட மாளிகை எப்படி இருக்குமோ அப்படி இருந்தது, எந்தவிதமான நவீன தொழில் நுட்பங்களுக்கும் அப்பாற்பட்டு  இருந்தது. கொழும்பில் தமிழ் படங்களுக்கு இருக்கும் வசூலில் கால் வாசியாவது இந்த திட்டர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே?


ஒரு இராணுவ வீரனுக்கும், ஒரு பெண் போராளிக்கும் இடையிலான அழகான காதல் மிக யதார்த்தமான இன ரீதியான அடையாளங்களுடன் சொல்லபட்டிருக்கிறது என்பதே படத்தின் ஒன் லைன்.  நிஹால் டி சில்வா என்ற எழுத்தாளரின் ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கிறது படம்.

இரண்டாயிரத்து ஓராம் ஆண்டில் நடப்பதாக காட்டப்படும் கதையில், இராணுவத்திற்கான மிக முக்கியமான உளவு செய்தி ஒன்றை கொண்டு வரும் ஒரு பெண் போராளிக்கும் , அதை பெறுவதற்காக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளூடாக அவளோடு சேர்ந்து பயணித்து கொழும்பை வந்தடையும் இராணுவனுக்குமான அபாயம் நிறைந்த பயணமும் ,  அதில் நடக்கும் சம்பவங்களினூடாக நகர்கிறது கதை.

படத்தின் ஆதாரமே , குறித்த இருவருக்கும் இடையிலான வசனங்கள் தான். தமிழர் , சிங்களவர் என்ற எந்த தரப்பையும் குறைத்து பேசாமல் , இன முரண்பாடுகளில்  இருக்கின்ற யதார்த்தினை சுடுகின்ற வசனங்களால் புரிய வைக்க முயன்றமையே நான் இந்த படத்தை அதிகம் ரசிக்க காரணம். மொத்த சனத்தொகையில் எட்டு வீதமே இருக்கும் தமிழர்கள் எப்படி மூன்றில் ஒன்று நிலப்பரப்பை கேட்கலாம் என்பான் அவன்.. ஏமது பாரம்பரியமான நிலத்தில் , சுகந்திரமாக வாழ்வதற்கான உரிமைக்காகவே மட்டுமே போராடுகிறோம் என்பாள் அவள், இது போன்ற ஏராளமான கேள்விகளும் , மிக நேர்மையான நியாயப்படுத்தல்களும், தமிழர் பிரச்சனை, சரியான ஊடகத்தின் ஊடக , மிக பக்குவமாக புரியவைக்கப்பட முயர்ச்சிக்கப்பட்டு இருக்கிறது, அதில் குறித்தளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் , குறியீட்டு காட்சிகள், அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன, முக்கிய கதா பாத்திரங்கள் இருவரினதும் நடிப்பு அபாரம், அதிகம் நாடகத் தன்மை கொண்ட சிங்கள சினிமாவில் யதார்த்தம் காட்டி நிற்கின்றனர்.  யுத்தம் என்ற கோர முகம் குறைத்து , தமிழ் சிங்கள இனத்தவரான இருவருக்கு இடையில் காதல், அன்பு என்ற முகங்களை இந்த படம் காட்டி நிற்பது, அதிகம் வரவேற்க தக்க ஒன்று.

தமிழ் சிங்கள மக்களிடையே சரியான புரிதலை, நியாயமான தொடர்பாடல் மூலமே ஏற்படுத்த முடியும் , அந்த புரிதல், சகல அடித்தட்டு மக்களையும் சென்றடையுமாயின் , அடுத்த கட்ட போராட்ட வடிவம் என்றதற்கான தேடல் தேவையற்று போகலாம், அந்த பணி இது போன்ற சிறந்த ஊடகத்தின் ஊடாகவே இலகுவாக இருக்கும், மொத்தத்தில் பேதம் மறந்து பார்க்க வேண்டிய படம் அளிமங்கட

Saturday, December 5, 2009

புறாவே நில்லுன்னு சொன்னேன், கனாவாய் ஓடி மறைந்தாய்........


புறாவுக்கு தன் தொடையில் ஒரு பகுதியையே வெட்டி அளித்தான் சிபிச்சகரவர்த்தி எண்டு நான்காம் வகுப்பு சமயபாட புத்தகத்தில் காட்சிப்படங்களுடன் படித்திருக்கிறேன். அதன் பின்பு வேறு ஒரு சமயத்தில் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி எண்டும் படித்திருக்கிறேன். அன்றிலிருந்து இந்த சிபியும் , பாரியும் என் நீண்ட கால ஹீரோக்களாகவே இருந்து வந்தார்கள்...

இந்த கதையின் நாயகனும் நாயகியும் இரண்டு புறாக்களே ஆனாலும் இங்கு கதை பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு செல்லவில்லை . மாறாக ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் என் பிளாட்டின்ஆறாம் மாடியில் தான் நடக்கிறது. பூகோள வெப்பமடைதல் , ஓசோன் படலத்தில் ஓட்டை விழுதல் போன்ற அறிவியல் காரணங்காளால் மனித வாழ்கை மட்டுமன்று , விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சாதாரண வாழ்கையும் " இலங்கை தமிழர்களை போலவே " அகதி வாழ்க்கை தான்.

முன்பெல்லாம் , பம்பலபிட்டி கதிரேசன் கோவில் கோபுரம் , வஜிராபிள்ளையார் கோவில் , பம்பலபிடிய அரச தொடர் மாடி குடியிருப்புகளிலேயே அதிகமான புறாக்களா காண முடியும். அனால் இப்போது தமிழர்களை விட அவர்கள் கும்பிடும் கடவுளருக்கு வசதி வைப்புக்கள் கூடி விட்டதாலும், எப்போதும் கோவில் பகுதிகளில் கட்டுமான வேலைகள் நடை பெறுவதாலும் இந்த புறாக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவை வெள்ளவத்தை போன்ற நிறையவே பிளாட்டுகள் இருக்கும் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

இப்படியாக இடம் பெயர்ந்து வந்த ஜோடிப் புறாக்கள் இரண்டு ஆறாம் மாடியில் இருக்கும் என் அறையின் சன்னல் சுவர் விளிம்பில் அடிக்கடி காதல் மொழி பேசிக்கொண்டு இருந்தன. அட்டிக்கடி குருகுருத்துக்கொண்டு இருப்பது கொஞ்சம் இடைஞ்சலாக இருந்தாலும்.. அட இரண்டு புறாக்கள் தானே , அவையாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். இப்படி சிலகாலம் கழித்து திடீரெண்டு பார்த்தால் ஒரு கூடு இரண்டு முட்டை வேறு சுவர் விளிம்புக்கு வந்து விட்டது. புறாக்கள் காதல் மொழி மட்டும் அல்ல குடும்பமும் நடத்தியிருக்கிறது என்று அறியும் நுண்ணறிவு பெரும் அளவுக்கு ஜியோக்ரபிக் சேனல் பார்ப்பது இல்லை என்பதால் எனக்கு குறைவு தான்.

புறாக்களால் துர்நாற்றம் எடுக்கும், கூட்டையும் முட்டைகளையும் வீசி விடுங்கள் எண்டு பக்கத்து வீட்டு aunty எச்சரித்து கூடியும் ...முட்டை போட்டு விட்டது கொஞ்சு பொறித்து இன்னும் கொஞ்ச நாளில் போய்விடும் என்று அப்பாவும் கூட பரிதாபம் காட்டினார். சரி அடுத்து புறா சில நாட்கள் ஆடைகாத்து குஞ்சு பொறித்த பின்பு தான் வில்லங்கம் விபரீதமானது எண்டு விளங்கியது. என் அறைக்குள் போகவே முடியவில்லை. துர்நாற்றம் தூக்கி வாரியது. என்றாலும் என் சின்ன வயது ஹீரோவான சிபிச்சக்கற வர்த்தி தொடை அறுத்து கொடுக்கையில் , நான் என்னை நம்பி வந்த புறாவுக்கு அடைக்கலம் கொடுத்து கொஞ்சம் திருப்ப்திப்பட்டுக்கொண்டேன். இந்த விடயம்சம்பந்தமாக என் கீழ் விட்டுகாரான நண்பர் கோபன் எந்த முரண்பாடும் தெரிவிக்கவில்லை. பாவம் அவரும் என் அளவுக்கு பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் துர்நாற்றம் வருகிறது , புறாக்களை தரித்து நிற்க விடாமல் துரத்துவது ஒவ்வொரு குடியிருப்பாலரினதும் கடமை எண்டு ப்ளாட் நிர்வாக குழு கூடி முடிவும் எடுத்து (இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு தான் கூடுவார்கள்) அறிவித்தல் பலகையிலும் ஒட்டி விட்டார்கள் . அப்போதும் அந்த வில்லன்களை எல்லாம் எதிர்த்து பொறுமை காத்தேன் . புறா குஞ்சுகளும் வரர்ந்தது , தாய் புறா முதல் கொஞ்ச நாள் உணவு கொடுத்தாலும் , பின்னர் வருகையை குறைத்துக்கொண்டது. நானும் ஒவ்வொரு நாளும் எப்படா இந்த புறாக்கள் பறந்து போகும் எண்டு பாத்துக்கொண்டே இருந்தேன்.

இப்படி ஒரு நாள் , நான் காலையில் கண்விழித்து பார்த்த பொது , நிறையா காகங்கள் கத்திக்கொண்டு நின்றன.. சில புறாக்களும் நின்டிருந்தன . எதோ அசம்பாவிதம் நிகழ்ந்தது போல காகங்கள் கத்தின. சன்னலை திறந்து பார்த்தேன் புறாக்களை காணவில்லை. அவசரமாக மொட்டை மாடிக்கு ஓடி போனேன் , ஒரு நாற்பது காகங்கள் , பத்து புறாக்கள் வேறு ஒரு புறமும் நின்றன. ஒரு மூலையில் தலை இல்லாத குட்டி புறாவின் சடலம் கிடந்தது, அந்த பத்து புறாக்களும் வெளிப்படுத்திய சோகத்தை எனக்கு எந்த காலத்துக்கும் மறக்க முடியாது. மற்றைய புறாவுக்கு என்ன நடந்தது எண்டு தெரியாது .. ஆனாலும் அந்த காகங்கள் தூக்கி போயிருக்கலாம் என்பது என் அனுமானம்....ஆனாலும் அந்த புறாக்களின் இழப்பால் துக்கம் தொண்டையை அடைத்தது , அன்றைய நாள் முழுவதும் ஒரு வெறுமையாவே இருந்தது. நான் பார்த்து வளர்ந்த ஒரு புறாவின் நேரடி இழப்பும் அதன் வலியும் நீங்க நிறைய நாள் எடுத்தது.

ஆனாலும் , இந்த உலகத்தில் நிறைய பேர் அடுத்தவனை கொன்றே வாழ நினைக்கிறார்களே. கொலைகள் சாதாரணமாக நடக்கிறதே , ஆயுத கலாச்சாரம் நாட்டின் கலாச்சாரமாகி போகிறதே. இரத்தம் படிந்த கைகளால் உணவு அருந்துகின்றர்களே , இன்னும் பலர் தாங்கள் வெளிநாடுகளில் சந்தோசமாய் வாழ்ந்து கொண்டு ...எங்கேயோ அப்பாவிகள் கொல்லப்படுவதை ஊக்கப்படுத்துகிரார்களே.இன்னும் நாடுகள் ஆயுதம் கொடுத்து போரை , அழிவை ஊக்கப்படுதுகின்றனவே.சர்வதேச சமுகம் எப்போதும் வேடிக்கை மற்றும் கண்டனம் மட்டும் தெரிவிக்கிறதே. இவர்களுக்கு எல்லாம் இழப்பின் வலி எப்போது விளங்கும் ?

Friday, December 4, 2009

"நாளைய திலகம்" டிரோஷனுக்கு பாராட்டு விழா

பக்கத்தில் இருக்கிற வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிக்க முடியாம, வீட்டுல நித்திர கொள்ளுற ஆக்கள் இருக்கிற இந்த ஊருல, அவசர வேலைகளுக்கும் இடையில போகவர நானூறு கிலோமீட்டர் தூரம் வவுனியாவுக்கு பயணம் செய்து, பெரும்தொகையான பணம் செலவு செய்து, வாக்களித்து விட்டு ஒரே நாளில் திரும்பி வந்த டிரோஷனின் ஜனநாயக உணர்ச்சியை இந்த உலகம் வியந்து பார்க்கிறது. தோத்துப்போன பொன்சேகாவுக்கு அவர் காட்டிய அபரிமிதமான பாசம், கொள்கை மீது அவர் கொண்ட உறுதிப்பாடு என்பன இன்னும் ஏழு ஏழு சந்ததிக்கு தமிழர்கள் படிக்க வேண்டிய கட்டாய பாடம்.



இவரின் இது போன்ற சாதனையை பாராட்டி, பட்டம் சூட்டி , பதக்கம் வழங்க வேண்டியது எதிர்கால தமிழரின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்கான முதல் படி. ஒரு வாக்கு தானே என்று அலட்சியப்படுத்தாமல் ஒட்டு மொத்த தமிழரும் சேர்ந்தால் தான் பலம் என்று நிருபிக்க அவர் காட்டிய ஆர்வத்தின் மூலம் , தமிழினத்தின் விடிவெள்ளியாக வலம் வருகிறார்.



காரணமே இல்லாமல் வோட்டுப்போடாத தலைநகரத்தின் உணர்வில்லா தமிழர்கள், எத்தனையோ மல்டிபரல்கள் , கிபிர் விமானங்கள் பார்த்திருந்தும், இரண்டு மூன்று கைக்குண்டுகளுக்கு பயந்து தமது வாக்குரிமையை பணயம் வைத்த உணர்விருந்தும் துணிவு வராத தமிழர்களுக்கு இடையில் வன்முறைகளுக்கு மத்தியில் வாக்களித்த டிரோஷன் சரித்திரத்தில் இடம்பெற வேண்டியவர்.



அடிமைப்பட்டு இருக்கும் தமிழரின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டிய முக்கியமான தேர்தலில், இனவாத பிரசாரங்களுக்கு மத்தியில் , கூட்டமைப்பையும் பங்காளியாக்கி போட்டியிட்ட பொன்சேகா தப்பித்தவறி ஒரு லட்சம் , ஐம்பதினாயிரம் வோட்டு வித்தியாசத்தில் தோற்றிருந்தால் எம்மை நம்பி சம்பந்தம் பேசியவர் பெருத்த அவமானம் அல்லவா அடைந்திருப்பார். வடக்கில் இருபதுக்கும் குறைவான வீதம் மட்டுமே வாக்குகளை பதிவாக்கி எங்கேயும் எப்போது தமிழர்களை நம்பி ஒண்டு செய்யக்கூடாது எண்டு இரண்டாவது தடவையாக உலகுக்கு காட்டிய எம்மிடையே டிரோஷன் போன்ற போன்ற வீராதி வீரர்களும் இருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சி தரும் விடயம்.



வெளிநாடு சென்றவர்கள், வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தவிர்த்து அறுபது வீத வாக்குப் பதிவுக்கான வாய்ப்பு இருந்தது, அப்படியும் எம் சனம் உறுதியாக ஒன்று பட வில்லை என்பது அரசியல் ரீதியாகவும் எமக்கு தீர்வு பெரும் திராணி இல்லை என்பதையே குறியீடாக காட்டுகிறது. எனவே இனிவரும் காலங்களில் தேர்தல்களை தவிர்த்து , பெரிதாய் ஆர்ப்பாட்டம் பண்ணாமல் ஒற்றுமையாய் அடிமைப்பட்டு வாழ்வோம் என்று நினைக்கையில் , இப்படி டிரோசன் போன்ற இளம் சிங்கங்களும், இது போல உணர்வுடன் வாக்களித்த பலரும் எதிர்காலத்த மாத்த புறப்பட வேணும்.



எனவே அவரின் இன உணர்வையும், பொறுப்புணர்வையும் வியந்து கொண்டாடும் அன்னாரின் பாராட்டு விழாவுக்கு , முதல்கட்டமாக ஐநூறு ரூபா நிதி உதவி அளிக்கிறேன் , மேலும் பல அன்பர்கள் நிதி உதவி அளிப்பதன் ஊடாக அன்னாரின் பாராட்டு விழாவிலும் , தொடந்து நடைபெறும் விருந்து உபசாரத்திலும் கலந்து கொள்ளலாம், நிதி அளித்தவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிட தக்கது.. தகுந்த நிதி சேரும் இடத்து பாராட்டு விழா வெள்ளவத்தையில் உள்ள நல்ல சாப்பாட்டு கடையில் நடைபெறும்.

Sunday, October 18, 2009

ஏன் பதிவு திருடப்பட்டமையில் பெருமை அடைகிறேன்

 நீண்ட காலமாகவே நான் எழுதி வருகிறேன். தொண்ணூறு பதிவுகளுக்கு மேலே எழுதியாகிவிட்டது. ஆனால் முதல்  முறையாக ஏன் பதிவு ஒன்று http://www.infotamil.ச/ என்ற தளத்தினால் நூறு விதிதமும் திருடப்பட்டு , எது வித (reference) சும் தரப்படாமல் வெளியிடப்பட்டதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. இப்போது தான் தரமான எழுத்தாளனாக உயர்ந்திருக்கிறேன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நான் எழுதிய "ராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை? " தலைப்பிலான கட்டுரையை பார்த்து நண்பர் ஒருவர் http://www.infotamil.ch/ta/view.php?2eESoC00asgYe2edAA6W3acldAU4d4AYl2cc26oS2d43YOE3a02oMS2e என்ற லிங்கை பின்னுட்டம் இட்டுருந்தார். ஒரு வேளை நான் காப்பி அடித்திருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்கலாம். ஆனாலும் நான் பிறருடைய எழுத்துக்களை பாவிக்கும் பொது , அதற்குரிய reference கொடுத்தே எழுதுவதுண்டு . அது தவிர என்னுடைய பதிவுகளில் (என்று) எண்டு வரும் இடங்களில் எல்லாம் (எண்டு) எண்டே எழுதுவதுண்டு. மேலே கூறிய  பதிவு நூறு விதமும் என்னாலேயே எழுதப்பட்டது என்பதை ஏன் தமிழ் சாட்சியாக உறுதிப்படுத்துகிறேன். தொடர்ந்தும்  குறித்த தளம் திருடி வெளியிட்டது மட்டுமல்லாமல் அடியில் "காப்புரிமை 2008-09 © இன்போதமிழ், அனைத்து உரிமைகளும் எமக்கானது" இப்படி எழுதியிருப்பது வேதனை தருகிறது.

மேலும் , பிரபலமான அந்த தளம் சிறுவனான எனது பதிவை திருடி வெளியிட்டு என்னையும் பெரிய எழுத்தாளனாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள்.

Friday, October 16, 2009

ராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை?


இலங்கை பங்குச்சந்தை அபரிமிதமான வளர்ச்சியை காட்டி , வளர்ச்சி வேகத்தில் உலகிலேயே முதல் நிலையான பங்குச்சந்தையாக வந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. பங்கு விலைகள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் வெளிவந்திருக்கும் செய்தி இலங்கை முதலீட்டாளர்களை மட்டுமன்றி அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அமெரிக்காவின் 239 வது நிலையில் உள்ள செல்வந்தரும் , முதல் நிலையில் உள்ள இலங்கையில் செல்வந்தருமான ராஜ் ராஜரட்ணம் " insider dealing" என்னும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். போர்ப்ஸ் சஞ்சிசிகையின் படி இவரின் சொத்து மதிப்பு ஆயிரத்து இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கல்லேன் குழுமம் என்னும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளராகவும் , முன்னணி பங்கு வணிகராகவும் இவர் இருப்பதனால் இவரின் கைது நியூயார்க் பங்குச்சந்தையில் சில அதிர்வலைகளை  ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த ராஜ் ராஜரட்ணம் ?
இலங்கையரான ராஜ் ராஜரட்ணம் , சென் . தாமஸ் கல்லூரியில் கல்விகற்றவர், பின்னர் பிரித்தானியாவில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில்  தனது பொறியியல் கல்வியை கற்ற ராஜ் , எண்பதுகளின் தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு தனது M.B.A பட்டத்தை வால்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொண்டார். பின்னர் முதலீட்டாளராக தன்னை  நிலை நிறுத்திக்கொண்டு, கல்லேன்  குழுமம் என்ற தனது நிறுவனத்தை நிறுவி ஏராளமான கம்பனிகளில் முதலீடுகளை மேற்கொண்டார்.   மிகப் பிரபலமான " IT பூம் " காலப்பகுதியில்  அதிகம் பயனடைந்த முதலீட்டாளர்களில் ஒருவராகவும் ராஜ் கருதப்படுகிறார்.

"insider dealing" என்றால் என்ன? 
ஒரு கம்பனியின்  பிரசுரிப்பதற்கான நிதியறிக்கைகளை மட்டுமே அதன் பங்குதாரர்களோ அல்லது பொது மக்களோ பார்க்க முடியும் , இந்த அறிக்கைகள் மட்டுமே கம்பனி ஒன்றால் உத்தியோக பூர்வமாக பிரசுரிக்கப்படும் , இவை தவிர்ந்த சில பிரத்தியேகமான , பெறுமதியான தகவல்களும்  செய்திகளும் ஒரு கம்பனியில் இரகசியமாக பேணப்படும். இது போன்ற பெறுமதியான தகவல்களையும் , நிதி நிலைமைகளையும் கம்பனியின்  அனுமதி இல்லாமல் கசிய விடுதல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்  போன்றன "insider dealing" என்று கொள்ளப்படும். இது போன்ற தகவல்களால் பங்குச்சந்தையில் செயற்கையான விளைவுகளை ஏற்படுத்தி இலாபம் அல்லது நட்ட நிலைமைகளை ஏற்படுத்தலாம்,  உதாரணமாக கூகிள் நிறுவனத்தில் நாற்பது வீதமான பங்குகள் microsoft நிறுவனத்துக்கு விற்கப்பட இருக்கிறது என்பதை கூகிள் ஊழியர் ஒருவர் மூன்றாம் நபரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்தினால் அதை insider dealing எண்டு சொல்லமுடியும்.

தண்டனை என்ன?
இது போன்ற insider dealing கள் கிரிமினல் குற்றமாகவும் , சிவில் குற்றமாகவும் கருதப்படும், இரண்டு குற்ற அடிப்படைகளின் கீழும் , அபராதமும் , சிறைத்தண்டனையும் குற்றத்தின் விளைவுகளை பொறுத்து வழங்கப்படும்.

ராஜ் செய்த insider dealing என்ன ?
இருபது மில்லியன் டாலர் பெறுமதியான insider dealing குற்றத்தை ராஜ் செய்திருப்பதாக தெரிய வருகிறது. அவை பின்வரும் பிரபலமான கம்பனியின் பங்குகளுடன் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன International Business Machines (NYSE: IBM), Advanced Micro Devices (NYSE: AMD), and Sun Microsystems (NYSE: SUN). Other companies included Google (Nasdaq: GOOG), Polycom (Nasdaq: PLCM), and Hilton hotels. மூன்று மாதங்களாக அவரின் தொலைபேசியை ஓட்டுக்கேட்டதாகவும் , குற்றம் நிரூபிக்க பட்டு உள்ளதாகவும் , ராஜுடன் சேர்த்து மேலும் ஆறு முதலீட்டாளர்களும் கைது செய்ப்பட்டு இருப்பதாக FBI அறிவித்து இருக்கிறது.


இலங்கையில்  என்ன தாக்கம். ?
இவரின் ஏராளமான  பணம் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் முதலிடப்பட்டு இருக்கிறது. இலங்கை பங்கு சந்தையில் அதிகம் முதலிட்ட தனி நபர் இவர் தான் எண்டு சில தகவல்களும் உண்டு. நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறையவே ஆதிக்கம் உள்ள இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் முன்னணி வியாபார இதழின்(LMD) முன் அட்டையை அலங்கரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கவர். தன்னுடைய முதலீடுகளுக்கு என்றே தனி பங்கு தரகர் நிறுவனம் தொடங்கும் அளவுக்கு ஆதிக்கம் நிறைந்தவர் கைது செய்யப்பட்டு இருப்பது இலங்கை பங்குச்சந்தையை ஒரு உலுக்கு உலுக்கும் என்றே கருதப்படுகிறது.
திங்கள் கிழமை பங்குச்சந்தை எத்தனை புள்ளிகளால் குறைகிறது என்பதை வைத்தே இவரின் கைது ஏற்படுத்த இருக்கும் தாக்கங்களின்  பெறுமதியை மதிப்பிடலாம்.

Tuesday, August 25, 2009

ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" திரைப்பட விமர்சனம்

ஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் கண்டபாட்டுக்கு அடித்து நோருக்கியிருந்தனர். நான் நேற்று தான் படம் பார்த்ததால் இனியும் கந்தசாமிய விமர்சிக்கிறது மனிதாபிமானம் இல்லை. அந்த மனுசனை எத்தனை பேரு தான் தாக்குவீர்கள். பாவம் ஒருவன் தோத்துப்போனா ஏறி மித்திக்கிறது தான் தமிழர் பண்பாடா ? இதுவரை குறித்த ஹீரோ எத்தனையோ படங்களில் எம்மை மகிழ்வித்து இருப்பதால் அவருக்கு போது மன்னிப்பு அளித்து அவரை  விமர்சனங்களில் இருந்து விடுதலை செய்து , ஒரு மாற்றத்துக்காக ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" படத்தை விமர்சிக்குறேன்.



நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயா கடைசியாக எமக்கு சுப்புலக்ஸ்மியாக காட்சி தந்திருக்கிறார் என்பது பக்தகோடிகளான எமக்கு அளப்பெரிய மகிழ்ச்சியே.. எங்கே எம்மை எல்லாம் தவிக்க விட்டு விட்டு அந்த பைங்கிளி கோலிவுட்டுக்கும் , போலிவுட்டுக்கும் ஓடி விட கூடாது எண்டு நான் நல்லூர் கந்தசாமிய வேண்டிக்கொண்டு இருந்தனான். ஏற்கனவே யாறோ இங்கிலிச்ஷ் காரனுக்கு முத்தமிட்டு எங்க வயித்துல புளியை கரைத்து விட்டிருந்தது அந்த ஏஞ்சல். இந்த தடவை அந்த மூன்று மணி நேர படத்தில் நிறைய நேரம் எங்களுக்கு தரிசனம் தர வைத்ததற்காக சுசி கணேசனுக்கு ஒரு சபாஷ் போடலாம்.


இதுவரை கால தமிழ் சினிமாவில் இல்லாத மாதிரி அட்டகாசமான முறையில் ஸ்ரேயாவ காட்டின படத்தை எப்படி தோல்விப்படம் எண்டு கூற முடியும். ஒரு கதாநாயகி படம் முழுவது சேலையை தவிர்த்து , கட்டையாக முடி வெட்டி, போட்டு வைக்காமல் வந்தது, உலக தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்னும் போது படத்தை அரைத்தமாவு எண்டு கூறுவதில் என்ன நியாயம்.



படத்தில் ஸ்ரேயா வரும் ஒவ்வொரு பிரேமும் கொள்ளை அழகு. அவரும் நல்ல involvement ஓட நடித்திருந்தார். அது போன்ற அழகான , கவர்ச்சியான , புதுமையான costume களை நான் இதுவரை எந்த ஆங்கில படத்தில் கூட பார்த்தது இல்லை. கிட்டத்தட்ட எழுபது தொடக்கம் நூறு வரையான costume களுக்கு காசை இறைத்து படம் எடுத்திருக்கும் தாணுவை பாராட்டாமல் இருப்பது நல்ல ரசிகனுக்கு அழகல்ல.


ஸ்ரேயாவின் அழகும், தாராளமும் என்னை மெய்மறக்க வைத்ததாலும் , படத்தொகுப்பில் ஒரு நேர்த்தி இல்லாத தாலும் எனக்கு பாதிப்படம் விளங்க வில்லை. ஆனால் ஏன் நண்பர் ஒருவர் தனக்கு ஒண்டுமே விளங்கேலடா எண்டு கவலைப்பட்டார். ஐயோ பாவம், ஸ்ரேயா தவிர வேற ஒண்டையும் அவர் பார்க்கல போலயிருக்கு எண்டு நான் நினைத்துக்கொண்டேன்.


கலைப்"புலி" இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிப்பதால் இந்த படம் இலங்கையில் வெளிவாருமா எண்டு எனக்கு சந்தேகம் இருந்தது..அனால் ஒரு மாதிரி பார்த்தாகிவிட்டது. பல பேர் தாணு இந்த படத்துடன் தொலைந்த்தார் எண்டு ஆருடம் கூறுகிறார்கள்..நான் நிறைய பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிப்பதாக கனவு கண்டவன் என்ற அனுபவத்தில் கூறுகிறேன். இருபத்தைந்து வருட அனுபவம் உள்ளவர் சரியாகவே கணக்கு போட்டிருக்கிறார். விக்கிரமுக்கு எண்டு ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. பாட்டுக்கள் ஹிட்டான ஒரு படம் படு தோல்வி அடைவதற்கு வாய்ப்புக்கள் குறைவு (sutha, 2009). பாட்டுக்களையும் , வடிவேலின் நகைச்சுவையும் தொலைக்காட்சிகளில் வரும்போது கட்டாயம் கூட்டம் வரும், ஆனால்  எல்லோரும் ஒரு தடவை மட்டும் படம் பார்ப்பார்கள். ரிபீட்டு பார்ப்பவர்களை மட்டுமே தாணு இழப்பார். எனவே தயாரிப்பாளர் என்ற முறையில் படம் போட்ட முதலை திருப்பி கொடுக்கும்.


மொத்தத்தில் , நகைச்சுவையுடன் கலந்து எழுதும் மொக்கை (பம்பல்) பதிவுகள் ஹிட்டாவது போல் ..ஸ்ரேயாவுடன் தரிசனம் தரும் கந்தசாமியின் உண்டியல் நிறையும்.

Sunday, August 23, 2009

இலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்

நானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந்து வோட்டுக்களோடு படுத்துவிடுகிறது. சில நேரம் என்னை தவிர வேறு யாரும் வோட்டு போடா மாட்டர்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் மினக்கெட்டு எழுதின பதிவை நாலு பேர் பார்க்கவில்லையே என்று கடுப்பா இருக்கும். நான் பதிவு எழுதுற நேரத்தைவிட எழுதின பதிவுக்கு ஹிட்ஸ்  கிடைச்சிருக்கா என்று தலையை பிச்சுக்கொண்டு தேடுற நேரம் அதிகம்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒண்டு காணவேணும் எண்டு தான் இலங்கை பதிவர் சந்திப்புக்கு போயிருந்தனான் , அப்படி போய் ஓரமாய் இருந்து வடையும் சாப்பிட்டு , கோப்பியும் குடித்துக்கொண்டு எல்லோரும் பேசுவத கேட்டுக்கொண்டு இருந்தேன். அப்படி கேட்டதில லோசன் அண்ணாவும், புல்லட்டும் பேசியதிலிருந்து எனது மில்லியன் டாலர் கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

புல்லெட் , மிக தரமான ஒரு நகைச்சுவை உணர்வாளர். ஒவ்வொரு ஜோக்கும் ஒவ்வொரு தகவல்கைளையும் காவி வந்தது (intelligent joker) அப்படி அவர் சொன்னது தான் " பின்னூட்டம் இட்டு மற்ற பதிவர்களுடனான உறவை வளர்க்க வேண்டும் என்பது. தான் தொடங்கிய காலத்தில் எல்லாப் பதிவுக்கும் போய் "சுப்பர் அப்பு" எண்டு பின்னூட்டம் இட்டதாக சொன்னார். நான் இதுவரை காலமும் அப்படி ஒண்டை செய்ததில்லை, எனக்கு வார ஒண்டிரண்டு பின்னுட்டங்களுக்கும் கூட பல சமயங்களில் பதில் சொல்வதில்லை. இந்த விடயத்தில் என்னை இனிமேல் மாற்றிக்கொள்ள அவரின் தகவல்கள் பிரயோசனமாய் அமைந்தது.

அடுத்து லோசன் அண்ணா பேசும் போது , தலைப்புக்களை அட்டகாசமாய், கவர்ச்சிகரமாய் போடவேண்டும் எண்டு சொன்னார். தனது " நயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா ? " எண்ட பதிவு பலத்த வரவேற்பு பெற்றது எண்டு சொன்னார். அவரின் அந்த பதிவை வாசித்ததில் இருந்து அது போன்ற பரபரப்பு தலைப்பு இடவேண்டும் எண்டு எனக்கும் ஆசை வந்திருந்தது. இதற்காக கீழே இருப்பது போன்ற சில தலைப்புக்களையும் தயார்படுத்தி இருந்தேன்,

சௌந்தர்யா ரஜனிகாந்துக்கும் பிரபல பதிவருக்கும்(நான் தான்) காதல்
நமீத்தா ரசிகர்கள் வெள்ளத்தால் அவதி (அப்பவாவது எம் மக்களில் கஷ்டங்களை நாலு பேர் பார்ப்பார்கள் எண்டு நினைத்து)

ஆனால் பின்னர் பேசிய ஒரு பதிவர், அப்படி எல்லாம் தலைப்பு இடக்கூடாது, அது தம்மை பிழையாக வழிநடத்துகிறது. தாங்கள் எதிபார்க்கும் விடயம் இல்லாமல் ஏமாற்றப்படுகிறோம் எண்டு புலம்பினார். நயன்தாரா, சிங்கம், வாழைப்பழம் என்ற சொற்களை பார்த்து விழுந்தடித்து ஓடியந்து ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்திருப்பார் போலும். தனிப்பட்ட நபர்கள் (நயன்தாரா ?) பாதிக்கப்பட கூடாது என்று கட்டமாக கூறினார். அவரின் கருத்துக்களுக்கு லோஷன் அண்ணா பலமாய் தலையாட்டிக்கொண்டு இருந்தார், அவரின் தலை ஆட்டலின் அர்த்தம் நயன்தாராவின் பெயருக்கு இனிமேல் களங்கம் ஏற்படாது என்பதா?

Thursday, August 20, 2009

யார் இந்த அழகான பொண்ணு ? யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..

தொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்கம் பன்னிரண்டு நிமிடங்களை ஆக்கிரமிக்கும் விளம்பரங்களை கண்ணுக்கு குளிர்ச்சியாக , அழகாக காட்டவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு விளம்பர இயக்குனருக்கும் உண்டு. ஒவ்வொரு தோல்வி அடையும் விளம்பரத்துடனும் , குறித்த விளம்பர சார்ந்த பொருளின் விற்பனையும் தோல்வி அடையும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

சமீப காலமாக அழகான ஒரு மொடல் நிறைய விளம்பரங்களில் தோன்றுகிறார். அவர் யார் ?என்ன பெயர் போன்ற விடயங்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் தோன்றும் ஒவ்வொரு விளம்பரமும் அழகாக , அர்த்தமுடையதாக செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை கதை கேட்டு விளம்பரங்களில் நடிக்கிறாரோ தெரியவில்லை.

இந்த பெண் வரும் விளம்பரங்களை பார்க்கும் போது தனி ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது, ரகசியமாக ரசிக்க தோன்றுகிறது, அழகாக நடிக்கவும் செய்கிறார். ஏன் இது போன்ற அழகு தேவதைகளுக்கு சினிமா கதவுகள் திறக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சேரன், பாரதிராஜா போன்ற ஹெரோஇன் தொடர்பாக தேடல் உள்ள இயக்குனர்கள் கூட கவனிக்க வில்லையே.

அவர் நடித்த விளம்பரங்களை தேடி தேடி தந்திருக்கிறேன், universal mobile phones,sowbhakkiya,ashok,3 roses tea என்று நிறைய விளம்பரங்களில் வருகிறார். அதையும் தாண்டி koohinoor jasmine condoms விளம்பரத்திலும் அனைவரையும் கவரும் இந்த மொடல் பற்றிய விபரம் தெரிந்தால் பின்னூட்டம் இடவும் .
















பிடித்திருந்தால்(பொண்ணும்,பதிவும்)வோட்டுப் போடுங்கள்

Sunday, August 16, 2009

இது ஒரு இந்திய எதிர்ப்பு பதிவு

இந்தியர்களுக்கு , அதிலும் குறிப்பாக வட இந்தியர்களுக்கு ஒரு கர்வம் இருக்கிறது. தாங்கள் வானத்தில் இருந்து வந்ததாய் இறுமாப்பு கொண்டிருப்பார்கள். தங்களை அனைவரும் தலையில் வைத்து கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தங்கள் நாடு தொடர்பாக யாருக்கும் இல்லாத பற்று தங்களுக்கு உண்டு எனக்காட்டி கொள்வார்கள். ஓட்டு மொத்த இந்தியாவும் தங்களால் தான் பிரதிநிதித்துவ படுகிறது என்று உலகத்துக்கு கதை சொல்வார்கள்.

அப்துல் கலாமுக்கு அமெரிக்காவுக்கு சொந்தமான விமான சேவை ஒன்றில் செல்லும் போது, அவர் குடியரசு தலைவர் என்று பார்க்காமல் சோதனை செய்தது தவறு தான். அதற்காக அந்த விமான சேவை நிறுவனம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் வெறும் கூத்தாடி பயல் சாருக்க் கானிடம் இரண்டு மணிநேரம் அமேரிக்காவில் வைத்து விசாரணை நடத்தியதற்காக ஓட்டு மொத்த வட இந்தியாவும் இதை ஒரு தேசிய பிரச்சனையா கொள்வதற்கு என்ன காரணம்?அமெரிக்காவின் பார்வையில் சாருக்க் கான் சாதாரண மனிதன் தானே. அவரில் சந்தேகம் இருந்தால் அவர்கள் நாட்டுக்குள் நுழையும் போது விசாரிக்க தானே செய்வார்கள். இதை இனவாத தாக்குதல் என்று சாயம் பூசுவதில் யாருக்கு என்ன இலாபம்.

சருக்கானை பற்றி எல்லாருக்கும் தெரியும் , இந்தி சினிமாவில் ஓவராய் படம் காட்டுவதற்கு அவருக்கு நிகர் அவர் தான் . அவரின் ஓவரான பந்தா காரணமாகவே அவரை யாருக்கும் பிடிப்பதில்லை. இதுவே ரஜினி, கமலுக்கு நடந்திருந்தால் இது போல தூக்கி பிடித்திருப்பர்களா.

அமெரிக்க தலைவர்கள் வந்து, இந்தியா எமது தோழமை நாடு , அருமையான நாடு , அழகான நாடு என்று பீ பீ ஊதுவதில் , இந்தியாவில் நூறு கூடி மக்கள் கொண்ட ஒரு மார்க்கெட் என்பதை தவிர வேறு காரணம் இல்லை. வெள்ளையன் தங்களுக்கு எது வசதியோ அதை அடைவதற்காக எதுவும் செய்வான். அதை ஐநூறு ஆண்டுகள் அடிமையாக இருந்தும் இந்தியா புரிந்து கொள்ள வில்லையே. இப்படி பாசாங்கான அமெரிக்க பாசத்தை பார்த்து , தங்கள் மேலாண்மையை நிலை நாட்ட இது போன்ற காரணத்தை வைத்து மோதிக்கொள்வது நிறையவே ஓவராய் இருக்கிறது.

அப்படி மோதிக்கொண்டு அமேரிக்கா மன்னிப்பு கேட்டால் , மற்றுமொடு சுகந்திர தினமாய் கொண்டாடுவார்கள் போலும். சாருக்கான் டிவியில் வந்து பாரத் மாதாவுக்கு ஜெ என்பார். இப்படி எல்லாம் செய்வதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். ஆஸ்திரேலியா மாணவர் தாக்கப்பட்ட விடத்தில் பெரிதாக கத்தி கூப்பாடு போட்டும் அவுஸ்திரேலியா அரசாங்கம் கண்டு கொள்ள இல்லையே. மீண்டும் இந்திய மாணவரை கைது தானே செய்தது.

இந்தியா தனது நிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். வல்லரசு , வல்லரசு சினிமாக்களும் , மீடியாக்களும் ஊதுவதை பார்த்து தன்னை வல்லரசு என்றே நினைத்துக்கொண்டு விட்டது போலும். இந்த வல்லரசு நாட்டுக்கு தான் மும்பை வந்த பத்து தீவிரவாதிகளை பிடிப்பதற்கு மூன்று நாள் பிடித்தது. இதே வல்லரசு தான் நக்க்ஷல் தீவிராவாதிகளுக்கு பரிசுத்திட்டம் அறிவித்து அடக்க முனைகிறது. (ஆயுதம் மூலம் அடக்க முடியாமல்) இதே வல்லரசு தான் இலங்கை ராணுவத்திடமே தொடை நடுங்குகிறது.

இதுவரை வரலாற்றிலே எந்த ராணுவ சாதனையும் செய்யாது வல்லரசு என்று சொல்பவர்கள் இந்திய இராணுவம் மட்டுமே. (பாகிஸ்தானிடம் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை, தோல்வியில் முடிந்த இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கை , இவை இரண்டு மட்டுமே நான் அறிந்த அண்மைய இந்திய ராணுவ நடவடிக்கைகள். ) வேண்டும் என்றால் விடுதலை இயக்கம் ஒன்றை மறைந்திருந்து தாக்கியதை சாதனை கொள்கிறார்களோ தெரியவில்லை.?

பாரதி, வா.ஊ.சி. பகத் சிங், திருப்பூர் குமரன் வடிவத்தில் இன்று கூத்தாடி பயல் சாருக்க் கானின் போராட்டத்தையும் இந்திய விடுதலை போராட்டமாக கருதும் இன்றைய இந்தியர்கள் மனநிலையை எப்படி அழைப்பது ?

Monday, August 10, 2009

Scribd தரமான file sharing தளம்


தகவல்களையும் , கோப்புக்களையும் பரிமாற்றிக்கொள்வதற்கு ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. எனினும் மிகவும் திட்டமிட்ட முறையில் தகவல் கோப்புக்களை தேவைக்கு ஏற்றவாறு தேட கூடிய முறையில் இலகுவாக தருகிறது www.scribd.com என்ற இந்த தளம். இங்கு இலவசமாக எமக்கான தகவல் பக்கத்தை திறந்து Word, Pdf, Powerpoint,Xcel என்கிற தேவையான விடிவத்தில் உள்ள கோப்புக்களை உலக வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். நாம் share பண்ணும் ஒவ்வொரு file க்கான புள்ளிவிபரங்களையும் தருகிறது இந்த தளம். எத்தனை முறை எங்கள் கோப்புக்கல் தரவிறக்கம் செய்யப்பட்டன , எத்தனை மக்களால் பார்க்கப்பட்டது போன்ற விபரங்களையும் தருகிறது.

பெரும்பாலும் கல்வி, வியாபாரம், அறிவியல், புத்தகங்கள் போன்றவற்றுக்கான தரமான தளமாகவே இதை கருத முடியும், இதில் விடயங்கள் குறைவாக உள்ளதாலும் , படங்கள் போன்றவற்றை பகிர முடியாததாலும் இந்த தளத்தின் பயன்பாடு சரியான முறையில் உள்ளது. அது தவிர இங்கு நாம் பகிரும் கோப்புக்களுக்கு copyright போன்ற விடயங்கள் உறுதிப்படுத்தப் படுகின்றன. வேறு யாராவது எமது தகவல்களை திருடினால் , அல்லது தவறாக பயன்படுத்தினால் அதிக பட்ட்சம் இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கிறார்கள். குறுகிய காலத்தில் உலகில் மிகச்சிறந்த இருநூறு தளங்களுக்குள் இதுவும் இடம் பிடித்திருக்கிறது.

அதிகபட்சமான விளம்பரங்கள், கட்டணங்கள் இல்லாதபடியால் இன்றும் தரமான தளமாக இருக்கிறது http://www.scribd.com/

Thursday, July 30, 2009

சில நேரங்களில் சில மனிதர்கள்

உலகில் கடினமான ஒன்று உண்டென்றால் அது மனிதர்களையும் அவர்கள்முகங்களையும் புரிந்து கொள்வது தான். நாம் கடந்து வரும் நட்புக்களிலும் உறவுகளிலும் எவ்வளவு போலித்தனம் ஒட்டியிருக்கிறது என்பது சில சமயங்களில் தெரியாமலே போய்விடுகிறது. எவ்வளவு போலியாகவும் , பகட்டாகவும் வாழ்கின்றோம் என்பதை பல சமயங்களில் எம் மனசாட்சி கூட ஏற்றுக்கொள்வதில்லை. திருத்தி கொள்ள அனுமதிப்பதும் இல்லை.

மனிதர்கள், பிறர் பற்றிய அறிதல்களிலும் , அவர்கள் தொடர்பான செய்திகளிலும் சம்பவங்களிலும் ஆர்வங்கொண்டு பின் அடிமையாகி பின்னர் அதுவே வாழ்கை என்றாகி விடுகிறது. அடுத்தவர் பற்றிய ஆய்வு இல்லாமல் மனிதனுக்கு வாழ்வு சுவாரசியம் இல்லாமல் போனதற்கு, எமது சமூக அடிப்படையில் தளர்வு உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதை தான் பாரதி
" தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரை"
என்றான்.

இந்த வேடிக்கை மனிதரை பற்றி அதிகம் அல்லட்டிக் கொள்ளாமல் , எமக்கு எமக்கு எது சரி என்று படுகிறதோ அதை தனித்தே செய்யவேண்டும், உலகம் ஆயிரம் சொல்லும், எனக்கான வழியில் நான் சரியாக சென்றுகொண்டிருந்தால் இந்த சில வேடிக்கை மனிதர்களால் என்ன செய்து விட முடியும்?

சில நேரங்களில் சில மனிதர்கள், கடந்த காலங்களில் என்னை அதிகம் கவர்ந்த தலைப்பு. இது எழுபதுகளில் ஜெயகாந்தன் எழுதிய அற்புதமான நாவல். சாகித்திய அகாடமி விருது கூட கிடைத்தது அவருக்கு . பின்னர் பீம்சிங் இயக்கத்தில் லக்ஷ்மி , ஸ்ரீ காந்த், நாகேஷ் நடிப்பில் திரைப்படமாக கூட வெளிவந்தது. அன்றைய எழுத்தாளர்கள் எப்படி நவீனத்துவமாக சிந்திக்கிறார்கள் என்பதற்கு திரைப்படமாக கூட வந்த நாவல் ஒரு நல்ல உதாரணம்.

இது போன்ற படங்களெல்லாம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுவதை நான் பார்த்ததில்லை, பாவம் அவர்களுக்கு விஜய் , சிம்புகளோடு மாரடிக்க காலம் போதாதபோது தரமான தேடல்களுக்கு எங்கு நேரம்.

கங்கா(லக்ஷ்மி) என்ற பெண் பாத்திரத்தை மையமாக வைத்து நகருகிறது கதை, படத்தின் முதல் காட்சியில் கெடுக்கப்படுவதாக காட்டப்படும் ஒரு பெண்ணின் போராட்டங்களும் புரிதல்களுமே படத்தின் ஒன்லைன். ஆனாலும் பக்கம் பக்கமாக வீர வசனம் பேசாமல் , யாரையும் பழிவாங்காமல் கதை நகர்த்தப்பட்ட முறையே புதுமையிலும் புதுமை. மிக சொற்பமான மனிதர்களையும் அவர்களின் பாசாங்கான உறவுகளின் யதார்த்தத்தை காட்டி நிற்கிறது படம். எழுபதுகளில் வந்த படத்தில் dating, living together பற்றி வசனங்கள் இருப்பது எவ்வளவு புதுமை என்பதற்கு நல்ல சான்று. நான் இதெல்லாம் எதோ இருபத்தோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு என்று இதுவரை நினைத்துக் கொண்டு இருந்தேன்.

பிரமிட் நிறுவன வெளியீடான இந்த படம், தரமான டி.வி.டி களாக கிடைக்கிறது. இங்கும் கூட வெள்ளவத்தை மோஹான்சில் கிடைக்கிறது. இப்படத்தை சிபாரிசு செய்து பார்க்க உதவிய நண்பர் ரிஷங்கனுக்கு நன்றிகள்.








Wednesday, July 29, 2009

அர்த்தம் உள்ள இந்து மதம் : எழுதுவது அனானி

இந்து மதத்தில் அர்த்தம் உண்டா என்று கேட்டு ஒரு பதிவு எழுதியிருந்தேன், பல பேருக்கு அசொகரிகங்களையும் , வெறுப்புக்களையும் கொடுக்கும் சர்ச்சையான விஷயம் தான்.
அனாலும் பல பேர் அதை வாசித்து பாராட்டியும் இருந்தனர். சில பேர் ஏன் கருத்தை மறுதலித்து பின்னூட்டம் இட்டிருந்தனர். அப்படி ஒரு நியாயமானதும் , பக்குவமானதுமான ஒரு பின்னூட்டம் ஒரு அநோனியிடம் இருந்து வந்தது. எப்படி எனக்கு பலரின் நம்பிக்கைககளை கேள்வி கேட்க உரிமை உள்ளதோ, அந்த நம்பிக்கைகளை நிலை நிறுத்த உரிமை அநோனிக்கு கூட உள்ளது என்பதால் அவரின் மறுப்பு கருத்துக்களை ஒரு பதிவாக்குகிறேன். ( அனோனி அனுமதிப்பாராக)



சிந்தனையை தூண்டும் கருத்துக்களுக்கு நன்றி. என்னுள் தோன்றிய சில கருத்துக்களை பரிமாற அவா கொண்டு இந்த பதிவு. என்னுடைய கருத்துகள் பழமையானவையாய் இருந்தாலும் நான் மாற்றங்களை ஏற்று கொள்பவனே! தேங்காயை 40/= மதிப்புள்ள உணவாக நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் வேறு எந்த பழத்திலும் இல்லாத தனித்துவம் அதற்கு உண்டு. அது தான் அக்கண்கள். அதனை உடைக்கும் போது எம்முள் உள்ள ஆணவம், சுயநலம், ஆசை, பொறாமை போன்ற தீய குணங்களை உடைத்து இறைவனுக்கு அற்பனிக்கின்றோம்.


பால் குடம் பற்றி கூறியிருந்தீர்கள். எமது பாவங்களை எல்லாம் அவள் தனதாக ஏற்று கொண்டு அருள்கடாட்சம் புரியும் அவளிடம் எம்மால் வந்த பாவங்களை அந்த பாலாபிஷேகம் மூலம் தீர்க்கிறோம். அதனை நாம் பெற்று இல்லாதோருக்கு கொடுப்பது அந்த பாவங்களை கொடுப்பது போன்றது என்கிறது சிவா மரபு.கிரனைட் கல்லால் கோயில் கட்டுகிறார்கள், நாற்பது லட்சம் செலவில் தேர் கட்டுகிறார்கள் , கடவுள் சிலைக்கு வைர அட்டியல் போடுகிறார்கள். இதை எல்லாம் கடவுள் கேட்டாரா? அந்த அம்மன் 1987 ஆம் ஆண்டு எப்படி இருந்தால் என்று எனக்கு தெரியும். பக்தர்கள் பெருக பெருக, கோவில் வளர்ச்சி அடையும். அந்த அம்மன் கோவில் நிர்வாகம் நடாத்தும் அறநெறி பாடசாலையில் இலவசமாக எத்தனை மாணவர்கள் சைவம் பயில்கிறார்கள்? கலைகூடத்திலும் தியான மண்டபத்திலும், நூலகத்திலும் எத்துனை விடயங்களை அமைதியை பெறுகின்றோம். கோவில் வளர்ச்சி பெற்றது தவறா? நீங்கள் கூறுவதை பார்த்தால் i.b.c road பிள்ளையார் கோவில் மட்டும் தான் கோவிலா? அதுவும் சிறிது காலத்தில் வளர்ச்சி அடைந்த பின் என்ன கூறுவீர்கள்? கோவில் குருக்கள் கலோரி பற்றியோ அல்லது போஷாக்கின்மை பற்றியோ அறிந்திருக்கவில்லை மாறாக அவர் அந்த மக்களுக்காக இறைவனிடம் தினம் பிரார்த்திப்பார் அது தான் அவர் வேலை.


பிசைகாரகளுக்கு நாம் கொடுக்கும் வரை அவர்கள் இவ்வுலகில் இருப்பார்கள். அப்படி ஒரு சமுதாயத்தைச் உருவாகிய பெருமை எமக்கே சேரும். எம்மிலிருந்து அவர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள். தீண்டத்தகாதவர்களா? அவர்கள் தொழில் செய்ய முடியாதா? அவளை ஸோம்பெரி ஆக்கியது மட்டுமல்லாது அவள் மகளையும் கண்ணிருந்தும் குருடனாக்குகிறது உங்கள் சமூகம். காத்திருந்து செவிடனாகுகிறது.


உடலை வருத்தி அவர்கள் காவடி எடுப்பது எந்த வகையில் இந்து மதத்தை அர்த்தமற்றதாகுகிறது. atleast தனி மனித உரிமையில்லை தலையிடாமல் இருப்பமே? மனதை ஒறுத்தி இறைவனை நாடலாம் முடியாதவர்கள் உடலை ஒறுத்தி நாடுகிறாகள். விட்டுடுவமே? சரி ஆபிரிக்க பழங்குடியினர் வேட்டையாடி மாமிசம் உண்கிறார்கள். நாம் வேட்டயாடுவதில்லை ஆனால் உண்கிறோம். எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா?

இறைவன் இவை அனைத்தையும் கேட்கவில்லை. மாறாது அன்பையும் தன்னை மறக்காத நெஞ்சையும் மட்டுமே கேட்கிறார். அதற்காக அந்த பக்தர்களையும் அந்த இறைவனையும் விமர்சிப்பது உண்மைக்கு தொலைவானது. உங்கள் பாஷயிலையே பேசினால் அந்த கணமாவது இறைவனை நினைகிறார்கள் இந்த கொடிய உலகில் என்று நிம்மதியாய் இருப்போம். நீங்கள் தானே உங்கள் முந்தய "இன்னும் இனி என்ன செய்ய போகிறோம்? " பதிவில் பொருளாதாரத்தை முனேற்றவும் மாற்றத்தை ஏற்கவும் கூறினீர்கள். இந்த சந்தர்பத்திலாவது இலங்கை government, எம்மக்களின் சக்தியை அறியட்டுமே. இந்து மதத்திற்கு அர்த்தமுண்டு. தெய்வம் நின்று கொல்லும் அண்ணா... காத்திருங்கள் நம்பிக்கையுடன்...

Sunday, July 26, 2009

இந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா?

பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்லாமலேயே புரிந்திருந்தது. வெள்ளவத்தையை நெருங்கும் போது ஊரே விழாக்கோலம் கொண்டிருப்பதாய் பட்டது. தேருக்கு பின் பெரும் கூட்டம் அரோகரா பாடிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் சென்ற எல்லோரும் எட்டி எட்டி பார்த்தார்கள் , காவடிகளாகி தங்களை வருத்தி கொள்ளும் பலரும் அவர்கள் கவனத்தை ஈர்த்திருந்தார்கள்.



வெளிநாட்டு காசு மாத்தும் கடைக்கு முன்னால் பஸ் கன நேரம் நிண்டது. கடைக்காரர் நல்ல பழுத்த வாழைக்குலையுடன் இரண்டு பக்கமும் வாழை மரம் கட்டியிருந்தார். கடைக்கு எதிரே நடைபாதையில் ஒரு பிச்சைக்காரி அருகில் மூன்று வயது மதிக்க தக்க அவளது குழந்தை. அவர்களை இதற்கு முதலும் எங்கேயோ சிக்னல்களில் இரந்து கொண்டு நிற்பதை பார்த்ததாக நினைவு இருக்கிறது.


அவள் கையை மட்டும் நீட்டி தன்னை கடந்து போகின்றவர்களிடம் எதோ கேட்டுக்கொண்டு இருந்தாள். அவள் குழந்தை சத்தம் போடும் காவடிகளோடு செல்லும் கூட்டத்தையும் , இடை இடையே தன் தலைக்கு மேலே கட்டி இருக்கிற வாழைப்பழத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது. தேரில் செல்லும் அம்மன் , பின்னால் சேவித்துக்கொண்டு செல்லும் கூட்டம் யாருமே அந்த இருவரையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. தேரும் கூட்டமும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. பிச்சைகாரி ஏன் கண்ணில் இருந்து மறையும் வரை இரந்து கொண்டு தான் நின்றாள். அனால் அந்த காட்சி மட்டும் ஆயிரம் முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது...

தேர் போகும் வழி நெடுகிலும் ஓராயிரம் தேங்காய்களாவது உடைத்திருப்பார்கள். அதன் பின் அந்த தேங்காய்க்கு என்ன நடக்குது என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நாற்பது ரூபா பெறுமதியான ஒரு உணவு பொருளை வெறுமனே வீணாக்குவதன் தாற்பரியம் என்ன.?
இது எல்லாம் செய்ய சொல்லி கடவுள் எங்களை கேட்டாரா?


மூவாயிரம் பேர் பால் குடம் எடுத்தார்கள்.. ஒரு குடத்தில் மூண்டு லீற்றல் பால் என்றாலும் , எதனை ஆயிரம் லீற்றல் பால் அம்பாளுக்கு பாலபிசேகம் என்ற பெயரில் வீணாக்கப்பட்டது.? இப்படி செய்யச் சொல்லும் பக்தியை என்ன பெயர் கொண்டு சொல்வது? எத்தனை ஆயிரம் குழந்தைகள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் போசாக்கில்லாமல் இருக்கின்றன என்ற புள்ளிவிபரம் பால் குடங்களை வாங்கி ஊற்றும் வேதம் படித்த குருக்களுக்கு தெரியுமா? ஒரு மில்லி லீட்டர் பாலில் எத்தனை கலோரி இருக்கேன்பது அதை வாங்கி விரையமாக்கும் எத்தனை பக்த கோடிகளுக்கு தெரியும் ?

கிரனைட் கல்லால் கோயில் கட்டுகிறார்கள், நாற்பது லட்சம் செலவில் தேர் கட்டுகிறார்கள் , கடவுள் சிலைக்கு வைர அட்டியல் போடுகிறார்கள். .இப்படி எல்லாம் ஆடம்பரங்களுக்குள் இருக்கும் கடவுளரை சத்தியமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரத்மலானையில் உள்ள பெற்றோரை இழந்த சிறுவர்கள் படிக்கும் விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தேன். ஒரு குட்டி அறையில் நாற்பது பேர் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு கிழமையில் ஒரு நாள் விஷ்ணு கோயிலில் இருந்து சோறு போகிறது. (அங்கேயும் கடவுள் தான் அனுப்பி வைக்கிறார்) அந்த ஒரு நாள் சாப்பிடும் நல்ல சோறுக்காக ஆறு நாள்காத்திருக்கிர்றார்கள் இந்துக் குழந்தைகள் . அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க நிதி போதியளவு இல்லையாம். பசித்த வாய்க்கு சோறு போடும் மனிதர்கள் குறைவாக இருக்கிறார்கள், ஆனால் கடவுளருக்கு வசதி செய்ய நிறையவே கனவான்கள் காத்திருக்கிறார்கள்.

இது தான் நான் பின்பற்றும் மதத்தின் வெளிப்பாடுகள் என்னும் போது. அந்த மதமும் அதனை பின்பற்றும் நாமும் எவளவு தூரம் நியாயமானவர்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை .இது போன்ற பகட்டான சம்பிரதாயங்களாலும் சடங்குகளாலும் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் நான் சார்ந்த மதத்தவர்கள் நம்பும் போது, இந்த மதத்தில் அர்த்தம் இருக்கா என்று தலைப்பிடுவதில் எனக்கு முரண்பாடுகள் இல்லை .


மதம் என்ற ஒன்றையும் அதன் நம்பிக்கைகளையும் மதிக்கிறேன், ஆனால் அதன் உள்ளீடுகள் அபத்தமாக இருப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. உடலை வருத்தி காவடி எடுக்கும் நாகரிகமடைந்த எமக்கும் , ஆபிரிக்காவில் வாழும் பழங்குடியினர் என்று டிஸ்கவரி சனேளில் காட்டும் காட்டு வாசி மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்.

இதே மதத்தில் தானே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த திருமூலர் சொல்லிவைத்தார்.

உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்.
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்,
கள்ளபுனைந்துனுன் காலமணி விளக்கே ..

அந்த திருமூலரை எத்தனை தீவிர இந்துக்களுக்கு தெரியும்? அது போன்ற வழிபாட்டு முறைகளும் , எளிமையான மத அணுகுமுறைகளும் ஏன் தீவிரப்படுத்தப்படவில்லை ? வியாபார ரீதியாக பலன் தராது என்பதாலா ?

Wednesday, July 15, 2009

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.

பழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தகங்கள் அங்கு உள்ளன. அதை நடாத்திவரும் வேற்று மொழி பேசும் மனிதர் புத்தகத்தின் பெறுமதியை அதன் தடிப்பத்தை வைத்தே மதிபிடுவார். புத்தகம் கிழியாமல் கொள்ளாமல் இருந்தால் அதிகம் விலை சொல்லுவார். அதிகம் சேதமான மிக நல்ல எழுத்தாளரின் புத்தகத்தை கூட குறைந்த விலைக்கு முடித்துக்கொள்ளலாம்.

அப்படி ஒரு நாள் போன போது , குமுதம் ,ஆனந்த விகடன் , ஒரு சில பழைய "பக்தி" சஞ்சிகைகளுக்கு இடையே சில ராணி கொமிக்ஸ்கலும் கிடந்தன. கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களை பார்கிறேன். ஒரு பெண்ணின் முக முத்திரை பதித்த ராணி கொமிக்ஸ் புத்தகங்கள் இன்னும் வெளிவருகின்றனவா என்பது தெரியவில்லை. அதில் கிடந்தவை இரண்டாயிரத்து இரண்டு மூன்று காலத்தில் வெளிவந்தவை.

ராணி கொமிக்ஸ் மீதான ஏன் ஈடுபாடு ஆறாம் , ஏழாம் ஆண்டுகளில் மிக அதிகமாக இருந்தது. எட்டாம் ஆண்டுகளில் அதை படித்திருந்ததாக எனக்கு நினைவு இல்லை. அதற்கு பிறகு இண்டைக்கு தான்
முகமூடி வீரர் மாயாவி வாழ்ந்திருந்த ராணி கொமிக்ஸ் புத்தகத்தை பார்க்கிறேன். ஹாரி போட்டார்கள் , அனிமேசன் படங்கள் எல்லாம் வெளிவராத அந்தக்காலத்தில் ஏன் கனவுலக ஹீரோவாக இருந்தது மாயாவி தான். அவர் குத்தினால் தாடையில் மண்டை ஓட்டு குறி பதியும் , அதை அளிக்கவே முடியாதாம், என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கடைசி நேரத்தில் நம்ம விஜயகாந்த், எம்.ஜி. ஆர்ர் போல மாயாவி வந்து காப்பாற்றி விடுவார். மாயாவிக்கு ஒரு கேர்ள் பிரேண்டும் , சில உதவியாளர்களும் இருந்ததாக நினைவு இருக்கிறது. மாயாவியும் கேர்ள் பிரேண்டும் தங்க கடற்கரையில் குளிப்பதாக படங்களுடன் வரும் காட்சிகள் சில கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன அந்த காலங்களிலேயே...

என்னை போலவே பாடசாலையில் நிறைய பேர் ராணி கொமிக்ஸ் பைத்தியங்களாகவே திரிந்தார்கள். யார் அதிகம் வாசித்தார்கள் என்று போட்டியே நடக்கும். பாடம் நடக்கும் போது கூட கொப்பிக்குள் வைத்து சிலர் வாசித்து டீசெரிடம் அடியும் வாங்குவார்கள். பாடசாலைக்குள் இந்த புத்தகங்கள் கொண்டு வர கூடாது என்று தடைச்சட்டம் கூட இருக்குது. அதை மீறி ரகசியமாக கொண்டுவருவதும் அதை நண்பர்களுடன் பரிமாற்றி கொள்வதும் மாயாவி கதையை விட சுவாரசியமாக இருக்கும். சில நண்பர்கள் இந்த புத்தகங்களை வாடகைக்கும் விடுவார்கள். வாடகை இரண்டு ஸ்திக்கெர்கலாகவொ அல்லது வேறு பண்ட மாற்று பொருளாகவோ இருக்கும். ரெக்ஸ் , ரேயான் என்று வேறு பாத்திரங்கள் இருந்தாலும் மாயாவிக்கு தான் அதிகம் மவுசு இருந்திருக்கிறது..சில மாயாவி புத்தகங்கள் ஐந்து ச்டிக்கேர் வரை விலை போயிருக்கின்றன. சில சமயங்களில் டீசெரோ , மாணவர் தலைவர்களோ இந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களை கண்டு பிடித்து கிழிக்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஒரு நாள் நண்பன் ஒருவனின் நான்கு புத்தகங்களை மாணவ தலைவர் கிழித்து விட்டதால் அவன் நாள் முழுக்க அழுது கொண்டு இருந்தான். நாங்கள் எல்லாம் பொய் ஆறுதல் கூறினோம். பின்னர் ஒரு காலத்தில் வகுப்பறை நூலகம் என்று ஒரு நடைமுறை வந்த போது எங்கள் வகுப்பு அலுமாரியில் நிறையவே ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் ஒரு சில பாரதியார் , ராமகிருஸ்னர் புத்தகங்களுமே இருந்தன.









இப்படி சில காலங்கள் அறுபது எழுவது பக்கங்களுடன் வந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் முகமூடி வீரர் மாயாவியின் வீர சாகசங்களும் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி விட்டிருந்தன. இன்றைக்கு வாசிக்கும் சுஜாதாக்களுக்கும் , ராபின் ஷர்மாக்களுக்குமான ஆரம்பம் இது போன்ற மயாவிக்கள் வாழ்ந்த கொமிக்ஸ் புத்தகங்களால் தான் ஏற்படுத்த பட்டிருக்கிறது என்பதை எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்.?

அட இப்படியும் திருமண அழைப்பிதலா?

Tuesday, July 14, 2009

"யாமம்" ஏற்படுத்திய தாக்கம்


நாவல் என்றால் எப்போதுமே ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் எஸ். ராமகிருஷ்ணனின் இந்த நாவல் படித்து முடித்தவுடன் நிறையவே வலுப்பெற்றிருக்கிறது. முன்னர் கூட இவரின் ஊறுபசி என்ற நாவல் படித்திருக்கிறேன். அது பக்கங்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் ஒரு நாளில் படித்து முடிக்க கூடியதாக இருந்தது. அதில் சம்பத் என்ற கதாபாத்திரம் ஏற்படுத்திய துயரம் பல நாள் வரையில் மனதில் ஓட்டிக்கொண்டு இருந்தது. அதன் பின்னரே சிறுகதைகள் கட்டுரைகள் தாண்டி நாவல்கள் மீதும் ஆர்வம் பற்றிக்கொண்டது.

அந்த வகையில் இந்த யாமம் என்கிற நாவலின் ஆரம்பம் பெரிதாக கவரவில்லை என்பதால் , சில நாட்களில் ஓரிரெண்டு பக்கங்கள் கூட தாண்டுவதில்லை. இப்படி பல நாட்கள் வாசித்தும் நூறு பக்கங்கள் தாண்டாத புத்தகத்தை ஒரு நிறைந்த பௌர்ணமி தினத்தில் , முற்றிலுமான ஒரு லீவு நாளில் முடியும் வரை வாசித்த போது தான் அதன் சுவையும், கதாபத்திரங்களின் வலியும் சேர்ந்து நிறைவை தந்தது.

கதையும் அதற்கான சம்பவங்களும் ஆயிரத்து என்னூராம் ஆண்டுகளில் நடப்பதாக அமைந்திருக்கிறது. நான்கு கதைகள் தனித்தனியே நடந்தாலும் யாமம் என்ற வாசனை திரவியத்தால் ஒன்றாக பிணைக்கப்படுகின்றன. வாசித்து முடித்தபின் கதையில் வந்த சில சம்பவங்கள் உண்மை போன்று தோன்றியதால் , இணையத்தில் தகவல் தேடினேன் , சில ஆங்கில ஆளுநர்களில் பெயர்கள், விக்டோரியா மகராணி பற்றிய தகவல்கள் ,ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து நாளில் மதராஸ் பட்டணத்தில் காலரா வந்தது பலர் இறந்து போனது , அந்த காலராவை தடுக்க ஆங்கிலேய ஆளுனரால் வெளியிடப்பட்ட ஹன்சாட் அறிக்கை என்பன கதையோடு நிறையவே ஒத்து பெரும் வந்த நிறைய சம்பவங்கள் இணையத்தில் கொட்டிக் கிடந்தமை நிறையவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அன்றைய நாளின் வாழ்கை முறையும், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்களை வலியோடு சொல்லிமுடித்து யாமம்.

"எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது.
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம"






Sunday, July 5, 2009

"Warren Buffett" டால் எப்படி முடிந்தது.


அண்மையில் வாசித்து முடித்த புத்தகம் இது. மிகவும் பயனுள்ள புத்தகமும் கூட. புத்தகம் என்பது ஒருவருடைய அனுபவங்களை சாரமாக தருகிறது. அந்த வகையில் இந்த புத்தகம் உலகளாவிய பங்குச் சந்தையில் குருவாக கருதப்ப்படும் "Warren Buffett" டின் வெற்றியின் ரகசியங்களையும், அவரால் எப்படி சரியாக பங்குகளை தெரிவுசெய்து மிகப்பெரிய இலாபம் உழைக்க முடிந்தது என்பதற்கான இருபது மூன்று இலகுவான சூட்சுமங்களை இலக்கு நடையில் விபரிக்கிறது இந்த புத்தகம். "Warren Buffett" கனவுகளுடன் திரிபவர்களுக்காக தமிழாக்கி தருகிறேன்.


  1. உங்கள் தெரிவு இலகுவானதாக இருக்கட்டும் , கடினமானதை தவிருங்கள்.
  2. உங்களுக்கான முதலீட்டு முடிவுகளை நீங்களே எடுங்கள்.
  3. மிகச் சரியாக திட்டமிடுங்கள் .
  4. பொறுமையாக இருங்கள்.
  5. பங்குகளை வாங்காதீர்கள்..வணிகத்தை வாங்குங்கள்.
  6. பல் தேசிய கம்பனிகளை கூர்ந்து கவனியுங்கள்
  7. அதிக தொழில்நுட்பத்தை விட குறைந்த தொழில்நுட்பத்தையே தெரிந்தெடுங்கள்.
  8. உங்கள் தெரிவுகளில் மட்டும் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
  9. எப்போதும் செயட்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்கதீர்கள்.
  10. விலையில் மட்டுமே கவனம் கொள்ளாதீர்கள்
  11. பங்குச் சந்தையின் சரிவுகளை முதலீட்டுக்கான வாய்ப்பாக கருதுங்கள் .
  12. இருப்பதில் வித்தியாசம் ஆனதையே தெரிவு செய்யுங்கள்
  13. பேரண்ட காரணிகளில் (Macro Factors) கவனம் கொள்ளாது , சிற்றின காரணிகளில் (Micro Factors) கவனம் கொள்ளுங்கள்.
  14. கம்பனியின் முகாமைத்துவத்தையும் , முகாமையாளர்களையும் கணக்கில் கொள்ளுங்கள்.
  15. சுயாதீனமாக சிந்தியுங்கள், யாரையும் நம்பாதீர்.
  16. உங்களுக்கு வசதியான வட்டத்துக்குள் மட்டும் நில்லுங்கள்.
  17. பங்குச் சந்தை எதிர்வு கூறல்களை தவிருங்கள்.
  18. சந்தை பற்றியும் அதில் உள்ள அபாயம் பற்றியும் விழிப்பாக இருங்கள்.
  19. மற்றவர்கள் பயப்படும் பொது நீங்கள் துணியுங்கள், மற்றவர்கள் துணியும் பொது நீங்கள் அமைத்து பேணுங்கள்.
  20. வாசியுங்கள், வாசியுங்கள்..வாசித்த பின் யோசியுங்கள்.
  21. உங்களால் முடியுமானவரை உங்கள் சக்தியை பாவியுங்கள்
  22. அடுத்தவரின் விலை மதிப்பான தவறுகளை தவிருங்கள்.
  23. உறுதியான முதலீட்டாளராக உங்களை நம்புங்கள்.

Thursday, June 4, 2009

வென்றதும் தோற்றதுமான ஏன் designs






















































































யார் இந்த சூஸன் பாய்ல்?


யார் இந்த சூஸன் பாய்ல், எல்லா தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றியே பேச்சு . அவர் தொடர்பான பாடல் காட்சி ஒன்றை இணைய வீடியோ தளமான யுடுபில் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து லட்ச கணக்கில் பின்னுட்டம் இட்டிருக்கிறார்கள். ஒரே இரவில் மேற்கு உலகின்பிரபல்ய பெண்மணியாகி இருக்கிறார் இந்த நாற்பது எட்டு வயதான பெண்மணி .

நேற்று வரை யார் எண்டு தெரியாதவர் பற்றி விக்கிபீடியா முழுப்பக்க விபரம் கொடுக்கிறது. அதையும் தாண்டி கூகிள் இருபது நான்கு மில்லியன் தகவல் பக்கங்களை அள்ளி வழங்குகிறது. பிருத்தானிய பிரதமர் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார் , ஒபாமா , அமெரிக்க குடியரசு தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி வழங்குமாறு கேட்டிருக்கிறார். ஒபரா வின்ப்ரையும் , எல்லனும் (ellen) இப்போதே நிகழ்ச்சிகளை பதிவு பண்ணி விட்டு அந்த பெண்மணியின் வருகைக்காக காத்து இருக்கிறார்கள். கையில் இரண்டாயிரம் பவுன் காசு இல்லாத அந்த பெண்ணின் இன்றைய விளம்பர மதிப்பு பதின்மூன்று மில்லியன் பவுன்கள் என்கிறது இவரை பின் தொடர்ந்து கொண்டு இருக்கும் பத்திரிகைகள். சோனி மியூசிக் இவருடன் ஆல்பம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது. பிபிசி , சிஎன்என் எண்டு ஏராளமான சநேல்ல்கள் பல நிகழ்ச்சிகளாக எடுத்து தள்ளிவிட்டன .

சரி அப்படி என்ன தான் செய்தார் இந்த பெண்மணி ? யார் இந்த பிரபு தேவா , சுப்பர் சிங்கர் போன்ற ஒரு டேலேன்ட் ஷோ நிகழ்ச்சி ஒன்றை அறிவித்திருந்தது அங்கெ இருக்கும் முன்னணி தொலைக்காட்சி . தனது தாயை பராமரித்து கொண்டு வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த பெண்மணியும் பங்கு பற்றி இருக்கிறார் . எந்த விதமான பிறரை கவரும் அழகோ ஒப்பனையோ இல்லாமல் மேடைக்கு வந்த இவரை நடுவர்கள் கூட முகத்தை சுழித்தே பார்த்திருக்கிறார்கள் . ஆனால் பாடி முடித்ததும் நடுவர்கள் உட்பட ஓட்டு மொத்த அரங்கமும் எழுந்து நின்று பாராட்டி இருக்கிறது. அதன்பின் அனைவரின் மனங்களை வென்று அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் கிடைத்து இருக்கிறது அவருக்கு.

அறுபத்து ஆறு மில்லியன் பேர் பார்த்த இந்த இணைப்பை பார்க்க தவறாதீர்கள்.
http://www.youtube.com/watch?v=9lp0IWv8QZY

Monday, May 18, 2009

நாற்பத்து ஆறு பில்லியன் பெறுமதியான கொலைச்செய்தி..கொழும்பு பங்குச்சந்தையில் அதிசயம்


இன்று உலக பங்குச்சந்தைகள் எல்லாம் ஏற்றங்களை காட்டி இருக்கின்றன . நுயோர்க் , லண்டன் ,டோகியோ பங்குச்சந்தைகள் எல்லாம் அதிகரிப்புகளை காட்டுவதன் பின்னணியில் உலக பொருளாதார மீட்சி என்ற காரணம் இருக்கிறது.

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் உயரிய பெறுமதியை அடைந்திருக்கிறது , அதற்கு காரணம் அங்கு காங்கிரஸ் தலைமையில் ஒரு பொருளியல் அறிஞரை பிரதமராக கொண்ட நிலையான ஒரு அரசாங்கம் அமைந்திருக்கிறது. இடது சாரிகள் ஆதரவோ , பிற்போக்கான கொள்கைகள் உடைய கட்சிகளில் தங்கி இருக்கின்ற அரசாங்கம் அமையாமை மிகப் பெரிய அந்த மாற்றத்துக்கு காரணம் . ஒரேநாளில் இரண்டாயிரத்து பத்து புள்ளிகள் அதிகரித்து பதின் நாலாயிரம் புள்ளிகளை தொட்டிருக்கிறது.

இவை எல்லாம் இப்படி இருக்க ஒரு தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு செய்திக்காக நாற்பத்து ஆறு பில்லியன் ரூபாய் மாற்றம் காட்டியிருக்கிறது கொழும்பு பங்குச் சந்தை. இன்று மட்டும் பதினோராயிரம் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. நாற்பத்து மூன்று மில்லியன் பங்குகள் பரிமாற்றப்பட்டு இருக்கின்றன. ஒன்று தசம் இரண்டு பில்லியன் ரூபாய்கள் மொத்த புரள்வாக பதிவாகி இருக்கிறது . இவை எல்லாம் கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்று சாதனைகள். இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மட்டுமே. வேறு எந்த பொருளாதார காரணியும் அல்ல. குறித்த நாளின் முடிவில் கொழும்பு பங்குச்சந்தை குறியீடுகள் பின்வருமாறு காணப்பட்டது.

ASI 2,030.90 123.23 6.46%
MPI 2,230.27 162.01 7.83%

The Colombo Stock Exchange (CSE) has 235 listed companies representing 20 business sectors. The market capitalization as at 31st March 2009 was 533.7 billion ருபீஸ். இந்த தகவலின் அடிப்படையில் பார்த்தால் சகல கம்பனிகளினதும் மொத்த நிதிஈட்டத்தின் பெறுமதி அண்ணளவாக எட்டு சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது. அதன்படி சகல கம்பனிகளினதும் பங்குகளின் பெறுமதி நாற்பது நான்கு தசம் ஆறு பில்லியனால் குறித்த நாளில் மட்டும் அதிகரித்தது எண்டு கொள்ளலாம். எனவே அந்த கொலைச் செய்தியின் மொத்த சந்தை பெறுமதி நாற்பத்து ஆறு பில்லியன் ரூபாய்கள் ஆகும். உலகிலேயே ஒரு கொலை செய்தியால் இவ்வளவு மற்றம் ஏற்படும் நாடு இலங்கையாக மட்டுமே இருக்க முடியும்.


"The main price indices of the Colombo Stock Exchange (CSE) recorded exceptional gains during trading today (18th May 2009). The All Share Price Index (ASPI) gained 123.2 points (6.5%) to close the day at 2,030.9 while the 25 stock Milanka Price Index (MPI) recorded an increase of 162.0 points (7.8%) during the day's trading to close at 2,230.2. This is the sixth highest daily percentage growth recorded by the ASPI in CSE history, surpassing 5.95% growth recorded by the index in November 2003. The MPI too reached record levels today by recording the fifth highest percentage growth in history. The turnover for the day reached Rs. 1.2 billion, with 43.1 million shares changing hands. A total of 11,539 trades took place today, the fourth highest ever number of trades to have been executed at the CSE, surpassing 11,369 trades executed in October 2007.The exceptional growth of the ASPI during the day brought the index growth for the current year up to 35.1%, while the MPI growth for the year to date stands at 36.7%. "

Thursday, May 7, 2009

உணர்வு எப்போது தான் ஒற்றுமைப்பட்டு வருமோ?

அன்றாட வாழ்க்கையில மிகவும் வேதனையான ஒன்று, எதாவது ஒன்ற பெறுவதற்காக வரிசையில் நிற்பது அல்லது யாராவது ஒருவருக்காக காத்திருப்பது. அப்படி இருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் எரிச்சல் தருகின்ற ஒரு அனுபவமாக அமையும். தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒவ்வொருவரும் இலங்கை போன்ற நாட்டில் பல விடயங்களுக்காக வரிசையில் நிண்டு பழக்கப்பட்டு விட்டோம். அது எம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது.

இதிலும் நான் அதிகம் வெறுக்கும் ஒன்று வங்கிகளுக்கு செல்வது, அதும் வெள்ளவத்தையில் உள்ள வங்கிகளுக்கு செல்வது. இலங்கையிலே வைப்பில் இடுவதற்கோ மீளப் பெருவதக்கோ மக்கள் அதிகம் வரிசையில் நிற்பது வெள்ளவத்தை வங்கிகளாக தான் இருக்கும் . எங்கட சனத்துக்கு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வெளிநாட்டுல இருந்து அனுப்புறத வைப்பில் இடுறதும்
மீள பெறுவதும் அன்றாட வாடிக்கைகள். இப்படி எடுக்கிற நிறைய பெருசுகளுக்கு வங்கி சீட்டுகல ஒழுங்கா நிரப்பவும் தெரியாததால வெள்ளவத்தை வங்கிகளின் வரிசைகள் மேக மெதுவாகவே நகரும்( ATM கூட operate பண்ண தெரியாது). அதிலும் எங்கட ஆக்களுண்ட ஆஸ்தான வங்கி HNB யும் கமர்ஷியல் வங்கியும் தான் , இதில் ஒவ்வொரு நாளும் நிக்கிற கூட்டத்தை பற்றி கேட்கவே தேவை இல்லை. அதிலும் சில வங்கி உத்தியோகத்தர்களின் அலம்பல் தாங்க முடிவதில்லை . வாடிக்கையாளர்கள் வரிசையில் நிக்க போனில் தண்ட போடியனோல அல்லது பிள்ளையோல பேசிக்கொண்டு இருப்பார்கள். சில நேரம் மேலதிகாரி கைஎழுத்து வைக்க வேண்டும் எண்டு காக்க வைப்பார்கள்.

இதனாலேயே இந்த இரண்டு வங்கிகளுக்கும் போவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். PABC போன்ற சிறிய வங்கிகளில் கூட்டம் இல்லாததால் எங்கட வேலையை சட்டு புட்டுன்னு முடித்து விட்டு வந்துடலாம். செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது எண்டு ஆகியபிறகு இப்படி வரிசைகளையும் கூட்டத்தையும் கண்டால் பெரிய வெறுப்பு தான் வரும்.

ஸ்கூல் காலத்துலயும் மாணவர் தலைவர்கள் பிடித்து வைத்து ஒவ்வொரு வகுப்பா வரிசையில் அனுப்பும், பாடசாலை முடிந்த பின் வரும் அந்த பத்து பதினைந்து நிமிடங்கள் வெறுப்பின் உச்சமாவே இருக்கும். பின் நான் மாணவ தலைவனாக வந்த பிறகு 5ஆம் வகுப்புக்குட்பட்ட மாணவர்களை வரிசையில் அனுப்பி வைக்கும் பணி என்னுடையது, எப்படி அவர்களை விரைவாகவும் ஒழுங்காகவும் அனுப்புவது எண்டு தலையை பிய்த்து யோசித்திருக்கிறேன், ஆயிரம் ஆயிரத்து இருநூறு வரையான மாணவர்களை, அதுவும் சிறிய மாணவர்களை அனுப்புவது என்பது லேசுப்பட்ட விடயம் இல்லை , கோசம் பிசகினாலும் நெரித்து அடித்துக்கொண்டு ஓடுவார்கள், கை முறிந்த மூச்சு திணறல் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது. அப்படி ஏதும் நடந்தால் பெற்றோர் அடுத்த நாள் வந்து ருத்ர தாண்டவம் ஆடுவார்கள். அந்த காலங்களில் கூட அந்த குறிப்பிட்ட நேரங்களில் வரிசை பற்றியே யோசனை எல்லாம் இருக்கும். இப்படி எங்கட என்றாட வாழ்வை திட்டமிடுதலில் வரிசைகளுக்கும் , கூட்ட நெரிசலுக்கும் நாம் அதிகம் முக்கியம் தருகிறோம்.

கடந்த வாரம் கூட ஒரு நிகழ்ச்சியில் இடண்டு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நிண்டு ஏன் வேலை ஒன்றை முடிக்கவேண்டி இருந்தது. ஒவ்வருவரும் நான் முந்தி நீ முந்தி வரிசையை கொழப்பி அடித்ததால் பெரிய எரிச்சலாக இருந்தது. அந்தநேரத்தின் வலிகள் வார்த்தைகளில் வராது. அப்போது யோசித்து கொண்டேன் ,


















எம் இனம் இது போலதான் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு எரிக்கும் வெய்யிலில் கோப்பைகளை ஏந்தி கொண்டு வரிசையில் நிற்கும் வேதனை எப்படி வலிக்கும். ஒவ்வொரு மனிதனும் சராசரியாக இரண்டு மணித்தியாலம் ஆகிறதாம். இதில் குழந்தைகள் , வயோதிபர் வேறு .சில நேரம் கடைசி ஆளுக்கு சாப்பாடு கிடைக்க 5மணி ஆகிறதாம். அதுவும் பசியுடன் வெய்யிலில் நிக்க வைத்து பழிவாங்கும் கொடுமையை மனிதாபி மானத்துன் யோசிக்க கூட தமிழனாய் பிறந்த அவர்களுக்கு ஒரு அரசியல் தலைமை கூட இல்லை. கழிப்பிடம் போவதுக்கு கூட நீண்டவரிசையாம்.

அவர்கள் வசதியாய் வாழ்ந்தவர்களும் கூட, அவர்களின் அந்த வலியும் வேதனையும் தீர்த்து வைக்க நாமாகவே குறைந்த பட்சமாகவேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எப்படி என்பதற்கு ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் , அதையும் தாண்டி உணர்வு வேண்டும். அந்த உணர்வு எப்போது தான் ஒற்றுமைப்பட்டு வருமோ?

Sunday, May 3, 2009

இப்போதாவது Slumdog Millionaire பார்த்து விட்டீர்களா?

இந்த படத்துக்கு அஸ்கர் கிடைப்பதற்கு ஒன்றரை மாதத்திற்கு முன் நான் எழுதிய விமர்சனம் இது. தமிலிஷ் இணையதளத்தில் பதின்எழு வோட்டுக்கள் உள்ளடங்கலாக என்னையும் ஒரு பதிவராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வரவேற்பை பெற்ற பதிவு இது. அன்று நான் எழுதும் போதுபலபேர் இந்த படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் . இன்று பல மொழிகளிலும் வெளியாகி பலரும் பார்த்திருப்பார்கள் என்ற அடிப்படையில் மீண்டும் பிரசுரம் செய்கிறேன்.

""இந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ.ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றியும் , அவர் இசை அமைத்த Slumdog millionire பற்றியுமான அதிகபடியான தேடல்கள். 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தப் படம், குறைந்தது 8 விருதுகளையாவது அள்ளிவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த அளவு தரத்துடன் வேறு படங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் இப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது உள்பட நான்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.அமைதியாக வந்த அந்த படம் எ.ஆர். ரஹுமான் ஆல் ஏக எதிர்பார்ப்புக்களை உலகம் முழுதும் ஏற்படுத்தியிருக்கிறது. அது அவருக்கு மட்டுமேயான தனித்துவமான திறமையால் சாத்தியமாகி இருக்கிறது , அவரின் திறமையை குறைத்துக் கூறுவது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்த படம் எனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளையும் , அது தொடர்பாக என் கேள்விகளையும் பதிவு செய்வதே எனது நோக்கம்.


என் பார்வையில் , இந்த படம் இந்தியாவின் , அதன் மக்களின் மிக அசிங்கமான ஒரு மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்தியர்கள் மட்டும் பார்த்து , தெரிந்து, மறைத்து வந்த பல விடயங்கள் இந்த படம் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு வரப்போகிறது. நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன் , ஒரு உபகண்டமாக , உலகின் அடுத்த வல்லரசு எண்டு சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது.

மிக திறமையான இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்குதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவரின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதி இன்மை , குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில் , சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், இன ரீதியான சண்டைகள் , வேட்டுகுத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை , தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம் , அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டுவது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. இதன் காரணமாகவோ என்னவோ இந்தியரான ரெசுல் பூக்குட்டி என்பவரது பெயரும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை கவ்ரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அறிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.


முதல் சந்தேகம் , எ.ஆர். ரஹுமான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்பட இல்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?


படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கத பாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்பட இல்லை. ஹீரோவை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் நெகடிவ் ஆக இருப்பதற்கு காரணம் என்ன ...? அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அணில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும். சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொரூரம்? இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனர் , உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திராந்கலிநூடாக தான் கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுகிறார். அந்த காட்சிகள் கூட இந்திய போலீஸ் காரரின் கேவலத்தை நன்கு பறைசாற்றுகிறார் இயக்குனர். இப்படியான காட்சி அமைப்பு படத்தின் கதை ஓட்டத்திற்கு கட்டாயம் தேவை தானா?


அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள், மற்றைய நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள் ?


இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார் படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்? வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்றைய இந்திய நகரங்கள் பற்றி ? இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழுகிறது .

ஆனாலும் இயக்குனர் பொய்யான ஒன்றை கட்டவில்லை, நிஜமான பல விடயங்களையே கட்ட்சிப்படுத்தியிருக்கிறார். நாம் சென்று அமெரிக்க போன்ற நாடுகளின் மக்களையும் , மனிதர்களையும் கேவலமாக பிரதிபலித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா ? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?


இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் ஒன்றுக்கும் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction )விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய எதாதிபதியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளை கடுமையாக விமர்சித்து இருந்தார். எனவே விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலிய படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெற்றிருக்கிறது. இனிமேல் கமல்ஹசன் போன்றோரும் இந்தியாவை விமர்சித்து படம் நடித்தால் ஆஸ்கார் விருதுகள் வெகு தொலைவில் இருக்காது"".

Friday, May 1, 2009

எழுநூறு மில்லியன் பேர் பயன்படுத்தும் சுஜாதா உள்ளிட்ட குழுவினரின் கண்டுபிடிப்பு.

முன்பு எல்லாம் தேர்தல் நடந்து அதன் முடிவுகள் வர வாரங்கள் கூட சென்றிருக்கலாம் . ஆனால் இன்று தேர்தல் சார்ந்த அனைத்து வாக்குப்பதிவுகளும் கணணி மயப்படுத்த பட்டு விட்டது. வாக்கு பதிவு இயந்திரத்தின் துணையுடன் வாக்கு கணக்கிட தொடங்கி மூன்று மணி நேரத்திலேயே மொத்த முடிவுகளும் வந்து , யார் பிரதமர், முதலமைச்சர் , எந்த தொகுதியில் யாருக்கு கூடிய வாக்குகள் என்ன்பதெல்லாம் சில நிமிடங்களிலேயே தெரிந்து விடுகிறது.


இந்தியா போன்ற மிக பெரிய ஜனநாயக நாட்டுக்கு இது போன்ற ஒரு நாடளுமண்ட தேர்தலை பழைய முறையில் நடத்துவதாயில் வாக்கு எண்ணிக்கை கணக்கிட மட்டும் பத்து லட்சம் மனித மணித்தியாலங்கள் தேவை . ஆகக்குறைந்தது மூன்று லட்சம் வாக்கு கணக்கிடும் பணியாளர்கள் தேவைப்படலாம்.

உதாரணமாக , இலங்கையில் ஒன்றரை கோடி வாக்காளர்கள் உள்ள நாட்டில் வாக்கு கணக்கிடும் பணியில் மூன்றாயிரம் பணியாளர்கள் முப்பது தொடக்கம் நாற்பது மணி நேரத்தில் மொத்த முடிவுகளையும் பெறுகிறார்கள் . சில தடவைகளில் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் கணக்கிடும் கூத்தும் அடிக்கடி நடைபெறும் . இது போன்ற சிறிய நாட்டுக்கு இவ்வளவு நேரம் என்றால் , இந்தியாவுக்கு முடிவு சொல்ல ?



இது போன்ற சிக்கல்களை நிவர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்டது தான் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம். இது எண்பத்து ஒன்பதாம் ஆண்டு அறிமுகப்படுத்த பட்டாலும் கூட முழு அளவில் , இந்தியா முழுவதும் பாவிக்கப்பட்டது இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தான். இந்த மிகப் பெறுமதியான இந்திய கண்டுபிடிப்பின் பிதாமகன் எழுத்தாளர் சுஜாதா என்கிற ரங்கராஜன் தான். இது சுஜாதா உள்ளிட்ட குழுவினரின் ஒரு மகத்தான கண்டுபிடிப்பாகும்.





எழுத்தாளராக அறிமுகமான சுஜாதா அப்துல் கலாமுடம் ஒரே கலூரியில் படித்த பொறியியலாளர் என்பதுடன் பாரத் எலெக்ட்ரிக் இல் மேலாளராகவும் இருந்தவர் என்பவை தான் அவரை கல்வியலளராக அறிமுகப்படுத்தும் முக்கியமான சான்றுகள். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ.பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.


அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்//(விக்கிபீடியா)

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கண்டுபிக்கப்பட்ட காலத்தில் அதன் திட்ட குழுவில் மூத்த அதிகாரியாக இருந்தவர் சுஜாதா . அந்த இயந்திரத்தின் கருத்திட்டம் , வடிவமைப்பு என்பதில் அவரின் பங்களிப்பு மகத்தானது. எண்பத்து ஒன்பதில் முதல் கட்டமாக எழுபத்து ஐயாயிரம் வாக்கு பதிவு இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதன்பின் முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த தடவை கூட தேர்தலின் முடிவுகளை குறுகிய நேரத்திலேயே தர இருக்கிறது இந்த இயந்திரங்கள். ஆட்சியை நிர்ணயிக்கும் இயந்திரத்தின் பிதாமகனை வாக்கு போடும் பொது அல்லது முடிவு வரும்போதாவது நினைத்துக் கொள்வோம்



Wednesday, April 29, 2009

நலன்புரிமுகாம்களை பார்வையிடும் வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இந்த கதை புரியுமா?


ஒரு ஊர்ல ஒரு பாடசாலை இருந்திச்சாம் , அந்த பாடசாலையில ஒரு டீச்சர் இருந்தாங்களாம். அந்த டீச்சர் ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு வருவாங்களாம் ஆனா பாடம் நடத்த மாட்டங்களாம் ... சில நேரம் பசங்களா படிக்க சொல்லி விட்டு டீச்சர் பெஞ்சுல தூங்கிடுவாவாம். பல நேரங்களில் நேற்று நடந்த மெகா சீரியல், கிரிக்கெட் மேட்ச் , சினிமா எண்டு பலதும் பத்தும் பேசியே பொழுத களிப்பவாம். இப்படி இருக்கேக்க அந்த டீசெரை பற்றி அந்த பாடசாலை அதிபருக்கு நிறைய முறைப்பாடுகள் வந்ததாம். அந்த டீச்சர் வகுப்பில பாடமே எடுக்கிறதில்ல எண்டு பெற்றோர்களும் வந்து முறைப்பாடு செய்தினமாம்.


இதற்க்கு ஒரு நடவடிக்கை எடுக்கோணும் எண்டு நினைத்த அதிபர் ..டீசெரை அழைத்து , நான் நீங்க படிப்பிக்கிரத்தை பார்க்கவேணும், எப்ப வர எண்டு கேட்டாராம் ? டீச்சர் அதுக்கு , நாளைக்கு எட்டாம் வகுப்புக்கு படிப்பிக்கும் பொது வந்து பாருங்கள் என்று கூறினாராம்.




அடுத்த நாள் அதிபர் அந்த வகுப்புக்கு சென்ற பொது அந்த டீச்சர் மிக அருமையாக படிப்பித்துக்கொண்டு இருந்தாராம். மாணவர்கள் எல்லாம் மிக ஆர்வத்துடன் பதில் அளித்தார்களாம். மிக சிறப்பாக விளங்குகிறது என்று எல்லா மாணவர்களும் தலை ஆட்டினார்கலாம். அதிபரும் அதை எல்லாம் பார்த்து நம்பி டீச்சர் நல்ல படிப்பிக்கிறீங்க எண்டு சொல்லி பாராட்டி விட்டு வந்தாராம். மற்ற டீசெர்களுக்கும் அந்த டீசெரை பற்றி புகழ்ந்து சொன்னாராம். சம்பளத்தையும் அதிகரிக்க பரிந்துரை செய்தாராம்.


அநியாயமாக ஒரு டீசெரை தவறாக நினைத்து விட்டோமே என்று அதிபர் பல தடைவை வருந்தினாராம். ஆனாலும் சில காலங்கள் கழித்து மீண்டும் அந்த டீச்சர் பற்றி பல முறைப்பாடுகள் வந்ததாம்..அதன் பின்னர் சுதாரித்துகொண்ட அதிபர் சில மாணவர்களை அழைத்து உருட்டி மிரட்டி விசாரித்த பொது உண்மை வெளிவந்தது. அந்த டீச்சர் குறித்த அந்த நாளில்(அதிபர் கண்காணித்த நாள்) மாணவர்களை தயார்படுத்தி , உனக்கு இந்த கேள்வி கேட்பேன் , நீ இந்த விடை கொடுக்கவேணும் , நான் படிப்பிக்கிறது விளங்குதா எண்டு கேட்டால் எல்லோரும் ஆம் எண்டு தலை ஆட்ட வேணும் , மாறி வேற என்னவாவது ஆட்டிநீக எண்டால் உரித்துபோடுவன் எண்டு மிரட்டினதை எல்லாம் மாணவர்கள் அதிபரிடம் சொன்னார்கள் .







முடிவு - ஏமாந்து போனார் அதிபர், பாதிக்க பட்டார்கள் மாணவர்கள்..பிழைத்துக்கொண்டார் டீச்சர்.

காங்கிரஸ் படு தோல்வி, ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு


இப்படி ஒரு செய்திக்காக , ஐந்தாம் கட்ட தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும். தமிழர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இது போன்ற ஒரு செய்தி தான். சோனியா காந்தியும் அவர் காங்கிரஸ் கட்சியும் படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதே என் சமீபத்திய விருப்பம். இந்த தேர்தல் கருணாநித்யையும் அவரது அன்னை சோனியாவையும் இருந்த இடம் தெரியாமல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே கருணாநிதியின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலுடன் ஏறக்குறைய முடித்துவிடும் என்பதில் ஐயமில்லை . அதையும் தாண்டி அவருக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருக்குமாயின் ஜெயலலிதா குண்டுக்கட்டாய் தூக்கிவந்து சிறையில் வைப்பார் . மு.க.அழகிரி உட்பட பலருக்கும் ஜெயலிதா பல இன்ப அதிர்ச்சிகள் கொடுப்பார். அவரின் பழிவாங்கும் உணர்ச்சி பற்றி புதிதாய் எதுவும் தமிழக மக்களுக்கு சொல்லவேண்டியது இல்லையே.

என்ன திடீரென்று ஜெயலலிதா மீது பாசம் என்றெல்லாம் இல்லை, அவா வந்தும் எதுவும் செய்து கிழித்துவிட போவது இல்லை , தனி ஈழம், தமிழருக்கு தீர்வு என்பதெல்லாம் வெறும் தேர்தலுக்கனது என்பதை புரிந்து கொள்ளமுடியா அளவுக்கு நான் உணர்வு ரீதியாக முடிவு எடுப்பவன் இல்லை. ஆனாலும் கருணாநிதிமீதான அளவு கடந்த கோபம் , அவர் தமிழ் சமூகத்தின் காவலராக இருந்து கொமேடியானாக மாறியதால் ஏற்பட்ட ஏமாற்றம் என்பன அடுத்த மாற்றீடான ஜெயலலிதா மீது நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது. காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் தாங்களின் பாவம் புரிய ஜெயலலிதா வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.


அடுத்ததாக , நான் அதிகம் மதித்த மனிதர் ப.சிதம்பரம் , ஒரு வழக்கறிஞராக , ஹர்வர்ட் பட்டதாரியாக , சிறந்த ஒரு நிர்வாகியாக மதித்தேன் , ஆனால் இவ்வளவு இருந்தும் தமிழ் உணர்வு மனிதருக்கு குறைவுதான் . சிவகங்கையில் போட்டியிடும் அவர் படு தோல்வி அடைய வேண்டும் என்பதும் என் ஆவல் . பாரதிராஜா ஆவன செய்ய வேண்டும் .அவர்தவிர ஜெயந்தி நடராஜன் , பிரணாப் முகர்ஜி போன்ற அதி மேதாவிகளும் , தேர்தலில் போட்டி இடுவார்களாக இருந்தால் படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதும் மிகப் பெரிய ஆசை.


அது தவிர ப.ஜ.க. காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமையும் என்பதே என் எதிர்பார்ப்பு. அப்படி ஒரு ஆட்சி அமைந்தால் ஜெயலிதா அல்லது சந்திரபாபு நாயுடு பிரதமராக வேண்டும் . அதுவும் தமிழ் நாட்டில் இருந்து ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு நிறையவே பொருத்தமானவர் தான்.

Saturday, April 25, 2009

மாகாண சபை தேர்தலும் , வாக்களிக்க மறந்த தமிழனும்


இன்று கொழும்பு மாகான சபை தேர்தல், என்னுடைய வாழ்வில் முதல் வாக்கும் கூட இரண்டாயிரத்து நாலில் நடைபெற்ற இதே தேர்தலுக்கானது தான். ஏன் முதலாவது வாக்கில் ஒரு ஆட்டோ காரர் மாநகர மேயராக வந்தார் என்று கதை சொல்வதாயின் ஆகக் குறைந்தது நான்கு பத்தியாவது நான் டைப் அடிக்க வேண்டும். எனவே அதை தவிர்த்து நேரடியாக விடயத்துக்கு வருகிறேன்.

காலையிலேயே நண்பர் ஒருவருக்கு மெசேஜ் போட்டேன் , அடே வாக்கு போட போனியா எண்டு? இதுக்கு எல்லாம் எவன் போவான் எண்டு பதில் வந்தது அலட்சியமாக. எண்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாக்கில் அப்பா , நான் ஆகிய இருவரினதும் வாக்குகள் மட்டுமே பதிவானது. நான் வசிக்கும் பிளாட்டில் எழு பேர் மட்டுமே வாக்கு போட போனதாக எங்க சிகுரிட்டி ஐயா சொன்னார். முழு வெள்ளவத்தையிலும் இதே நிலைமை தான். நூற்றில் இருபது தமிழர்கள் வாக்களித்திருப்பர்களா என்பது எனக்கு சந்தேகமே . பெருன்பான்மை கட்சிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள் எல்லாம் மடையர்கள் , தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற தோரணையில் பசல்ல்ஸ் ஒழுங்கையில் சுவரொட்டி பார்த்தேன்.

கவலையில் எல்லா தமிழர்களும் இருக்கிறார்களோ எண்டு பார்த்தல் அதுவும் இல்லை , எது என்ன நடந்தாலும் எம் சமூகம் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. சிலருக்கு இன்று தேர்தல் என்ற ஒண்டு இருப்பது தெரியவே தெரியாது. நமது தமிழர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றோ , தலை நகர தமிழரின் அரசியல் பிரநிதித்துவம் என்ன என்பது பற்றிய எந்த வித உணர்வும் இன்றி ஏன் சமூகம் தன் வேளைகளில் மட்டும் மும்மரமாக இருந்தது.

தொலைக்காட்சியில் போகும் செய்தியை பார்த்து கருணாநிதியை திட்டிக்கொண்டு இருந்தார் அம்மா . ஏமாற்றுவார் எண்டு தெரிந்தும் ஜெயலலிதா மீது எதோ ஒரு நம்பிக்கை எங்கள் வீட்டில் புதிதாக.. ஒருவேளை கருணாநிதி மீதான எதிர்ப்பு "டாக்டர்" "புரட்ச்சித்தலைவி" "அம்மா" அவர்களுக்கு ஆதரவாக மாறி இருக்கலாம். எம் சொந்த நாட்டில் தேர்தல் அதில் எமக்கான பிரதிநிதித்துவத்தை மறந்து எதோ ஒரு நாட்டின் தலைவர்களை நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம் .

எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமிழர்கள் வாக்களிக்க மறுத்ததன் விளைவுகள் , இன்று தமிழ் உயிர்கள் ஆயிரங்களில் பலியாகின்றன. லட்ச்சக்கணக்கான மக்கள் தமது பொருளாதாரம் இழந்து , தமது உழைப்பு இழந்து , உடைமைகளை இழந்து ஒருவேளை சோற்றுக்கும் , தண்ணிக்கும் யாரிடமோ கையேந்துகிறார்கள் . அளிக்கப்படாத தமிழனின் வாக்குக்கு இவ்வளவு விலையா ?
இல்லாவிடில் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்றால்.? இது ஒன்றும் கேயாஸ் தியரி போல் சிக்கலானது இல்லை . வாக்கு போட்டிருந்தால் அன்று வந்திருக்க கூடியவருக்கு கொஞ்சம் மனிதாபிமானமும் , நெஞ்சில் கொஞ்சம் ஈரமும் இருந்திருக்கும் ஆகக் குறைந்தது தமிழன் உயிர் மீதாவது ......




 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes