இந்தியா போன்ற மிக பெரிய ஜனநாயக நாட்டுக்கு இது போன்ற ஒரு நாடளுமண்ட தேர்தலை பழைய முறையில் நடத்துவதாயில் வாக்கு எண்ணிக்கை கணக்கிட மட்டும் பத்து லட்சம் மனித மணித்தியாலங்கள் தேவை . ஆகக்குறைந்தது மூன்று லட்சம் வாக்கு கணக்கிடும் பணியாளர்கள் தேவைப்படலாம்.
உதாரணமாக , இலங்கையில் ஒன்றரை கோடி வாக்காளர்கள் உள்ள நாட்டில் வாக்கு கணக்கிடும் பணியில் மூன்றாயிரம் பணியாளர்கள் முப்பது தொடக்கம் நாற்பது மணி நேரத்தில் மொத்த முடிவுகளையும் பெறுகிறார்கள் . சில தடவைகளில் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் கணக்கிடும் கூத்தும் அடிக்கடி நடைபெறும் . இது போன்ற சிறிய நாட்டுக்கு இவ்வளவு நேரம் என்றால் , இந்தியாவுக்கு முடிவு சொல்ல ?இது போன்ற சிக்கல்களை நிவர்த்தி செய்ய கண்டுபிடிக்கப்பட்டது தான் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம். இது எண்பத்து ஒன்பதாம் ஆண்டு அறிமுகப்படுத்த பட்டாலும் கூட முழு அளவில் , இந்தியா முழுவதும் பாவிக்கப்பட்டது இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தான். இந்த மிகப் பெறுமதியான இந்திய கண்டுபிடிப்பின் பிதாமகன் எழுத்தாளர் சுஜாதா என்கிற ரங்கராஜன் தான். இது சுஜாதா உள்ளிட்ட குழுவினரின் ஒரு மகத்தான கண்டுபிடிப்பாகும்.
எழுத்தாளராக அறிமுகமான சுஜாதா அப்துல் கலாமுடம் ஒரே கலூரியில் படித்த பொறியியலாளர் என்பதுடன் பாரத் எலெக்ட்ரிக் இல் மேலாளராகவும் இருந்தவர் என்பவை தான் அவரை கல்வியலளராக அறிமுகப்படுத்தும் முக்கியமான சான்றுகள். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ.பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்//(விக்கிபீடியா)
மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கண்டுபிக்கப்பட்ட காலத்தில் அதன் திட்ட குழுவில் மூத்த அதிகாரியாக இருந்தவர் சுஜாதா . அந்த இயந்திரத்தின் கருத்திட்டம் , வடிவமைப்பு என்பதில் அவரின் பங்களிப்பு மகத்தானது. எண்பத்து ஒன்பதில் முதல் கட்டமாக எழுபத்து ஐயாயிரம் வாக்கு பதிவு இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதன்பின் முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த தடவை கூட தேர்தலின் முடிவுகளை குறுகிய நேரத்திலேயே தர இருக்கிறது இந்த இயந்திரங்கள். ஆட்சியை நிர்ணயிக்கும் இயந்திரத்தின் பிதாமகனை வாக்கு போடும் பொது அல்லது முடிவு வரும்போதாவது நினைத்துக் கொள்வோம்
so how many countries are using these?
the info in the article doesn't connect to the title.
sujatha himself has written that it is a team work consists of Sujatha, abdula kalaam, Rajvi Ghandhi..
ஹரன், ஓட்டு மெஷின் சுஜாதாவின் கண்டுபிடிப்பு அல்ல. அவரே பேட்டியில் சொல்லி இருக்கிறார். அந்த டீமில் இவரும் ஒருவர். ஆகவே தவறான தகவல் அல்லது புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.
Does Sujatha owns a patent for his invention?
Fact is, EVM is a joint effort under the leadership of Sujatha a.k.a Rangarajan in BEL. Do not indulge in making him a saint.
மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ? சாத்தியம் என்றே தோன்றுகிறது...
மென்பொருளை மாற்றுவது செய்யக்கூடியதே....
மீள்பார்வைக்கு, மீண்டும் எண்ண காகித வாக்குகள் இல்லை
மேலும் சிந்தனைகள்
http://manakkan.blogspot.com/2010/04/blog-post_04.html
Post a Comment