இந்தியர்களுக்கு , அதிலும் குறிப்பாக வட இந்தியர்களுக்கு ஒரு கர்வம் இருக்கிறது. தாங்கள் வானத்தில் இருந்து வந்ததாய் இறுமாப்பு கொண்டிருப்பார்கள். தங்களை அனைவரும் தலையில் வைத்து கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தங்கள் நாடு தொடர்பாக யாருக்கும் இல்லாத பற்று தங்களுக்கு உண்டு எனக்காட்டி கொள்வார்கள். ஓட்டு மொத்த இந்தியாவும் தங்களால் தான் பிரதிநிதித்துவ படுகிறது என்று உலகத்துக்கு கதை சொல்வார்கள்.
அப்துல் கலாமுக்கு அமெரிக்காவுக்கு சொந்தமான விமான சேவை ஒன்றில் செல்லும் போது, அவர் குடியரசு தலைவர் என்று பார்க்காமல் சோதனை செய்தது தவறு தான். அதற்காக அந்த விமான சேவை நிறுவனம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் வெறும் கூத்தாடி பயல் சாருக்க் கானிடம் இரண்டு மணிநேரம் அமேரிக்காவில் வைத்து விசாரணை நடத்தியதற்காக ஓட்டு மொத்த வட இந்தியாவும் இதை ஒரு தேசிய பிரச்சனையா கொள்வதற்கு என்ன காரணம்?அமெரிக்காவின் பார்வையில் சாருக்க் கான் சாதாரண மனிதன் தானே. அவரில் சந்தேகம் இருந்தால் அவர்கள் நாட்டுக்குள் நுழையும் போது விசாரிக்க தானே செய்வார்கள். இதை இனவாத தாக்குதல் என்று சாயம் பூசுவதில் யாருக்கு என்ன இலாபம்.
சருக்கானை பற்றி எல்லாருக்கும் தெரியும் , இந்தி சினிமாவில் ஓவராய் படம் காட்டுவதற்கு அவருக்கு நிகர் அவர் தான் . அவரின் ஓவரான பந்தா காரணமாகவே அவரை யாருக்கும் பிடிப்பதில்லை. இதுவே ரஜினி, கமலுக்கு நடந்திருந்தால் இது போல தூக்கி பிடித்திருப்பர்களா.
அமெரிக்க தலைவர்கள் வந்து, இந்தியா எமது தோழமை நாடு , அருமையான நாடு , அழகான நாடு என்று பீ பீ ஊதுவதில் , இந்தியாவில் நூறு கூடி மக்கள் கொண்ட ஒரு மார்க்கெட் என்பதை தவிர வேறு காரணம் இல்லை. வெள்ளையன் தங்களுக்கு எது வசதியோ அதை அடைவதற்காக எதுவும் செய்வான். அதை ஐநூறு ஆண்டுகள் அடிமையாக இருந்தும் இந்தியா புரிந்து கொள்ள வில்லையே. இப்படி பாசாங்கான அமெரிக்க பாசத்தை பார்த்து , தங்கள் மேலாண்மையை நிலை நாட்ட இது போன்ற காரணத்தை வைத்து மோதிக்கொள்வது நிறையவே ஓவராய் இருக்கிறது.
அப்படி மோதிக்கொண்டு அமேரிக்கா மன்னிப்பு கேட்டால் , மற்றுமொடு சுகந்திர தினமாய் கொண்டாடுவார்கள் போலும். சாருக்கான் டிவியில் வந்து பாரத் மாதாவுக்கு ஜெ என்பார். இப்படி எல்லாம் செய்வதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். ஆஸ்திரேலியா மாணவர் தாக்கப்பட்ட விடத்தில் பெரிதாக கத்தி கூப்பாடு போட்டும் அவுஸ்திரேலியா அரசாங்கம் கண்டு கொள்ள இல்லையே. மீண்டும் இந்திய மாணவரை கைது தானே செய்தது.
இந்தியா தனது நிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். வல்லரசு , வல்லரசு சினிமாக்களும் , மீடியாக்களும் ஊதுவதை பார்த்து தன்னை வல்லரசு என்றே நினைத்துக்கொண்டு விட்டது போலும். இந்த வல்லரசு நாட்டுக்கு தான் மும்பை வந்த பத்து தீவிரவாதிகளை பிடிப்பதற்கு மூன்று நாள் பிடித்தது. இதே வல்லரசு தான் நக்க்ஷல் தீவிராவாதிகளுக்கு பரிசுத்திட்டம் அறிவித்து அடக்க முனைகிறது. (ஆயுதம் மூலம் அடக்க முடியாமல்) இதே வல்லரசு தான் இலங்கை ராணுவத்திடமே தொடை நடுங்குகிறது.
இதுவரை வரலாற்றிலே எந்த ராணுவ சாதனையும் செய்யாது வல்லரசு என்று சொல்பவர்கள் இந்திய இராணுவம் மட்டுமே. (பாகிஸ்தானிடம் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை, தோல்வியில் முடிந்த இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கை , இவை இரண்டு மட்டுமே நான் அறிந்த அண்மைய இந்திய ராணுவ நடவடிக்கைகள். ) வேண்டும் என்றால் விடுதலை இயக்கம் ஒன்றை மறைந்திருந்து தாக்கியதை சாதனை கொள்கிறார்களோ தெரியவில்லை.?
பாரதி, வா.ஊ.சி. பகத் சிங், திருப்பூர் குமரன் வடிவத்தில் இன்று கூத்தாடி பயல் சாருக்க் கானின் போராட்டத்தையும் இந்திய விடுதலை போராட்டமாக கருதும் இன்றைய இந்தியர்கள் மனநிலையை எப்படி அழைப்பது ?
ஒரு அருமையான பதிவு
ரசிக்கத்தக்க பதிவு....உண்மையை சொல்லிருக்கிறீர்கள்.....சொல்வதற்கு இன்னும் நெறையா இருக்கிறது நண்பா...உலகின் மிகப்பெரிய கடற்ப்பரப்பை கொண்ட தேசம்....ஆனால் ஒரு விமானந்தாங்கி கப்பல் கிடையாது.....வல்லரசாம்..! எவனை ஏமாற்ற இந்து ராமும் பிரதீஷ் நந்தியும் இப்படி கெளப்பி விடுகிரார்கள்னு தெரியலை நண்பா...அடக்கம் அமரருள் உய்க்கும் நண்பா......சீனக்காரன் ரொம்ப அடக்கமா காரியம் பண்றான்(வங்கதேசம் ,மொரிசியசு ,இலங்கை ,சிங்கபூர் என அனைத்து நாடுகளிலும் துறைமுகங்கள் கான்ட்ராக்ட்டு சீனாக்காரனின் வசம் .......ஆகக் கூடி கடல் வழியில் நாம் ஆடம் போட்டால் அடக்க அவர்கள் தயார்.....தரை வழியில் எப்போவோ தயார் ).......இது தெரியாமல்....அல்லது தெரிந்து கொண்டே (அமேரிக்கா காரன் உதவிக்கு வருவான் என்ற பகல் கனவோடு ) இவங்கள் ஆட்டம் போட்றாங்கள்......அடங்காமை ஆரிருள் உயிக்கும்னு எப்போ சீனாக் காரன் சொல்லித்தரப் போறான்னு தெரியலை நண்பரே..!
அவை மட்டுமல்ல சீனாவிடம் தான் இழந்த நிலத்தை மீட்பதற்கு முடியாது இன்றும் சீனாவிடம் இழந்து நிற்கின்றது.
சுதா........
நீங்கள் ஷாருகான் என்ற நபரின் (அதாவது நடிகரின்) படம் காட்டுதல் குறித்து அனேகமாக குறிப்பிட்டுள்ளூர்கள். இந்தியாவில் சினிமா ரசிகர்கள் வைக்கின்ற வரைமுறையற்ற அபிமானத்தை திரை நட்சத்திரங்கள் தமது சுய விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொள்கின்றமை தொடரவே செய்கின்றது. அதுவும் ஷாருக்கானைச் சொல்ல வேண்டுமா? அவர் எவ்வளவு கோமளித்தனங்களைச் செய்து மலிவான பிரபலம் தேடுபவர் என்று.
ஆனால், இங்கு முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால்...... மேற்குலகத்தால் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் நிலை தொடர்கிறது. இதனாNயே ஷாருக்கான் என்ற நபர் அமெரிக்காவில் அலைக்கழிக்கப்பட்டால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே... அதே பரிதாப நிலைக்கு மலையாள நடிகர் மம்முட்டி அமெரிக்காவிலும், தமிழ் நடிகர் ஆர்யா (ஜம்ஷட் என்பது அவரது நியம்பெயர். அவரும் இஸ்லாமியரே) அமெரிக்கா விஷா அதிகரிகளாலும் அலைக்கழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவை தவிர்க்கப்பட வேண்டியதே.
வடஇந்தியர்களைப்பற்றிச்சொன்னது ஓரளவு உண்மைதான்.தங்களை கலாச்சாரத்தை பேணுபவர்களாகவும் மொத்த இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும் தான் சொல்லிக்கொள்கிறார்கள்.வெளிநாட்டவர்களுக்கு கூட இந்தியாவில் தமிழ்பேசும் மக்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கிறது.இந்தியாவில் வெளியாகும் இந்திப்படங்கள் மற்றும் இலண்டனில் மூன்றாவது பெரிய மக்கள் இனமாக மாறிவரும் இந்தியர்கள் போன்றவிஷயங்கள் இதில் செல்வாக்குச்செலுத்துகின்றன.இந்த ஷாருக்கான் விஷயம் என்பது... ஷாருக்கானைப்பொறுத்தவரை உலகம் முழுக்கலும் ரசிகர்களைக்கொண்ட ஒரு திறமையான நடிகர்.இந்திய விஐபி. இந்த விஐபியையே இப்படிநடத்தினால் சாதாரணஇந்தியர்களுக்கு என்ன நிலை என்ற பயமும் தாங்கள் நடிகர்களை தெய்வமாக வணங்குவதைப்போல மற்றவர்களும் செய்யவேண்டுமென்ற ஆதங்கமும் காரணமாக இருக்கலாம்.ஷாருக்கான் திரைப்பட நடிகர் என்பதைத்தாண்டி பல அமைப்புகளின் சர்வதேசத்துக்கான இந்தியப்பிரதிநிதியாக இருப்பவர்.அவருக்கே சோதனை என்பது வெள்ளைக்கார்களுக்கு சாதாரணம்.எங்களுக்குத்தான் புதுசு
grow up man.
its because of your complex you are unable to mingle properly with north indians.
leave all your - ve observations and write positively.
மொத்தப் பதிவுக்கும் ரிப்பீட்டே !
:)
***
வட இந்தியர்களுக்கு தேசிய உணர்வு மிகுதியாக இருப்பதாக சொல்வதிலும் ஞாயம் உண்டு. இந்தியா பாகிஸ்தான், பங்களா தேஷ் பிரிவினையின் போது பாதிப்பு அடைந்தவர்கள் அவர்கள் தான், பாகிஸ்தான் பகுதியில் இருந்தும், பங்களாதேஷ் பகுதியிலும் இந்துக்கள் என்பதற்காக வெளியேற்றப்பட்டவர்கள் வட இந்தியாவில் தான் இருக்கிறார்கள்.
பிரிவினை வலி அவர்களுக்கு தெரியும்.
அது மட்டுமல்ல.... 'இந்தியா துண்டாடப்பட்டது' என்று தான் அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தென்னிந்திய மக்களான நாம் பாகிஸ்தான் பிரிந்து சென்றது என்றே நினைப்போம். நிகழ்ச்சி ஒன்றே என்றாலும் வட இந்திய தென்னிந்திய உணர்ச்சிகள் வேறானவை. அவர்கள் நேரில் பார்த்தவை, நாம் கேள்விப்பட்டவை. என்பதாக இருப்பதால் பாதிப்பு அடைந்தவர்கள் என்ற வகையில் இந்தியர் என்கிற பெருமையும், கர்வமும் அவர்களுக்கு இயல்பாகவே இருக்கிறது. அதை தவறு என்று சொல்ல ஒன்றும் இல்லை !
:)
//ரமேஷ்// உங்கள் அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி. உங்கள் கருத்துக்களால் ஏன் பதிவுக்கு வலுச்செர்த்திருக்கிறீர்கள்.
//மருதமூரான்//.. அமெரிக்கர்களுக்கு இழப்பு இருக்கும் போது அவர்களும் ஜாக்கிரதையாக தானே இருப்பார்கள்.
நன்றி //கோவி கண்ணன்//.. வட இந்தியர்கள் தொடர்பான உங்கள் நியாயப்படுத்துதலை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் அவர்களை ஏனோ பிடிக்கவில்லை.
நன்றி சேரன்கிஷன்,கரிசல்காடு , opentalk
Post a Comment