பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்லாமலேயே புரிந்திருந்தது. வெள்ளவத்தையை நெருங்கும் போது ஊரே விழாக்கோலம் கொண்டிருப்பதாய் பட்டது. தேருக்கு பின் பெரும் கூட்டம் அரோகரா பாடிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் சென்ற எல்லோரும் எட்டி எட்டி பார்த்தார்கள் , காவடிகளாகி தங்களை வருத்தி கொள்ளும் பலரும் அவர்கள் கவனத்தை ஈர்த்திருந்தார்கள்.
வெளிநாட்டு காசு மாத்தும் கடைக்கு முன்னால் பஸ் கன நேரம் நிண்டது. கடைக்காரர் நல்ல பழுத்த வாழைக்குலையுடன் இரண்டு பக்கமும் வாழை மரம் கட்டியிருந்தார். கடைக்கு எதிரே நடைபாதையில் ஒரு பிச்சைக்காரி அருகில் மூன்று வயது மதிக்க தக்க அவளது குழந்தை. அவர்களை இதற்கு முதலும் எங்கேயோ சிக்னல்களில் இரந்து கொண்டு நிற்பதை பார்த்ததாக நினைவு இருக்கிறது.
அவள் கையை மட்டும் நீட்டி தன்னை கடந்து போகின்றவர்களிடம் எதோ கேட்டுக்கொண்டு இருந்தாள். அவள் குழந்தை சத்தம் போடும் காவடிகளோடு செல்லும் கூட்டத்தையும் , இடை இடையே தன் தலைக்கு மேலே கட்டி இருக்கிற வாழைப்பழத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது. தேரில் செல்லும் அம்மன் , பின்னால் சேவித்துக்கொண்டு செல்லும் கூட்டம் யாருமே அந்த இருவரையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. தேரும் கூட்டமும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. பிச்சைகாரி ஏன் கண்ணில் இருந்து மறையும் வரை இரந்து கொண்டு தான் நின்றாள். அனால் அந்த காட்சி மட்டும் ஆயிரம் முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது...
தேர் போகும் வழி நெடுகிலும் ஓராயிரம் தேங்காய்களாவது உடைத்திருப்பார்கள். அதன் பின் அந்த தேங்காய்க்கு என்ன நடக்குது என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நாற்பது ரூபா பெறுமதியான ஒரு உணவு பொருளை வெறுமனே வீணாக்குவதன் தாற்பரியம் என்ன.?
இது எல்லாம் செய்ய சொல்லி கடவுள் எங்களை கேட்டாரா?
மூவாயிரம் பேர் பால் குடம் எடுத்தார்கள்.. ஒரு குடத்தில் மூண்டு லீற்றல் பால் என்றாலும் , எதனை ஆயிரம் லீற்றல் பால் அம்பாளுக்கு பாலபிசேகம் என்ற பெயரில் வீணாக்கப்பட்டது.? இப்படி செய்யச் சொல்லும் பக்தியை என்ன பெயர் கொண்டு சொல்வது? எத்தனை ஆயிரம் குழந்தைகள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் போசாக்கில்லாமல் இருக்கின்றன என்ற புள்ளிவிபரம் பால் குடங்களை வாங்கி ஊற்றும் வேதம் படித்த குருக்களுக்கு தெரியுமா? ஒரு மில்லி லீட்டர் பாலில் எத்தனை கலோரி இருக்கேன்பது அதை வாங்கி விரையமாக்கும் எத்தனை பக்த கோடிகளுக்கு தெரியும் ?
கிரனைட் கல்லால் கோயில் கட்டுகிறார்கள், நாற்பது லட்சம் செலவில் தேர் கட்டுகிறார்கள் , கடவுள் சிலைக்கு வைர அட்டியல் போடுகிறார்கள். .இப்படி எல்லாம் ஆடம்பரங்களுக்குள் இருக்கும் கடவுளரை சத்தியமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரத்மலானையில் உள்ள பெற்றோரை இழந்த சிறுவர்கள் படிக்கும் விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தேன். ஒரு குட்டி அறையில் நாற்பது பேர் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு கிழமையில் ஒரு நாள் விஷ்ணு கோயிலில் இருந்து சோறு போகிறது. (அங்கேயும் கடவுள் தான் அனுப்பி வைக்கிறார்) அந்த ஒரு நாள் சாப்பிடும் நல்ல சோறுக்காக ஆறு நாள்காத்திருக்கிர்றார்கள் இந்துக் குழந்தைகள் . அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க நிதி போதியளவு இல்லையாம். பசித்த வாய்க்கு சோறு போடும் மனிதர்கள் குறைவாக இருக்கிறார்கள், ஆனால் கடவுளருக்கு வசதி செய்ய நிறையவே கனவான்கள் காத்திருக்கிறார்கள்.
இது தான் நான் பின்பற்றும் மதத்தின் வெளிப்பாடுகள் என்னும் போது. அந்த மதமும் அதனை பின்பற்றும் நாமும் எவளவு தூரம் நியாயமானவர்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை .இது போன்ற பகட்டான சம்பிரதாயங்களாலும் சடங்குகளாலும் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் நான் சார்ந்த மதத்தவர்கள் நம்பும் போது, இந்த மதத்தில் அர்த்தம் இருக்கா என்று தலைப்பிடுவதில் எனக்கு முரண்பாடுகள் இல்லை .
மதம் என்ற ஒன்றையும் அதன் நம்பிக்கைகளையும் மதிக்கிறேன், ஆனால் அதன் உள்ளீடுகள் அபத்தமாக இருப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. உடலை வருத்தி காவடி எடுக்கும் நாகரிகமடைந்த எமக்கும் , ஆபிரிக்காவில் வாழும் பழங்குடியினர் என்று டிஸ்கவரி சனேளில் காட்டும் காட்டு வாசி மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்.
இதே மதத்தில் தானே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த திருமூலர் சொல்லிவைத்தார்.
உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்.
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்,
கள்ளபுனைந்துனுன் காலமணி விளக்கே ..
அந்த திருமூலரை எத்தனை தீவிர இந்துக்களுக்கு தெரியும்? அது போன்ற வழிபாட்டு முறைகளும் , எளிமையான மத அணுகுமுறைகளும் ஏன் தீவிரப்படுத்தப்படவில்லை ? வியாபார ரீதியாக பலன் தராது என்பதாலா ?
மயூரா அம்மன் வியாபார ஸ்தாபனமாகி பல காலம். அதேபோல் மோதர விஷ்ணுகோவிலும் ரஞ்சனாஸ் வியாபாரிகளால் வியாபார ஸ்தாபனமாகவே நடத்தப்படுகிறது. கொச்சிக்கடை சிவன் கோவில், தெகிவளை விஷ்ணு கோவில்கள் சிறப்பான கோவில்கள் மட்டுமல்ல எந்த வியாபார நோக்கமும் அற்றவை.
நல்ல கேள்விகள்.
செத்த பிறகு சொர்க்கம் கிடைக்கும் என்கிற பேராசையில் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கிறார்கள்.
மதம், கடவுள் நம்பிக்கை என்கிற மாயையில் ஒரு சாதாரண மனிதனாவன் தன்னை தன் மக்களை பாதுகாக்க இவைகள் அவசியம் தேவை என்கிற பாழும் வலையில் சிக்கி சிறைபட்டு அதிலிருந்து மீண்டு வரத்தெரியாமல் (சிந்தனையின்) சிறகுகள் வெட்டப்பட்டு பார்வைகள் மங்கி அடிமைத்தனத்திற்கு ஆளாகி கடைசியில் ஒரு சாவி திருகப்பட்ட இயந்திர பொம்மையாகவே உலா வருகிறான். கண்மண் தெரியாமல் அப்பாவி மக்களின் உயிரை குடிக்கும் தீவிரவாதிகளுக்கும், மத கடவுள் நம்பிக்கையின் பெயரில் ஈவிரக்கமற்ற இயந்திர பொம்மைகளாக திரியும் இவர்களை போன்றவர்களுக்கும் வித்தியாசம் அதிகம் ஏதும் கிடையாது. பக்தி பரவச போதைகளில் ஊறிக்கிடக்கும் இவர்களால் சமுதாயத்திற்கு என்றுமே ஆபத்து காத்துக்கிடக்கிறது. விழிப்புணர்வு அவசியம் தேவை.
கருணை, ஈவு, இரக்கம், பகிர்ந்துகொள்ளுதல் போன்ற அடிப்படை மனப்பாங்கினை வளர்ப்போம். படிப்பவரை சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
//ஆனால் கடவுளருக்கு வசதி செய்ய நிறையவே கனவான்கள் காத்திருக்கிறார்கள்.//
மனிதனுக்கு செய்தால் எங்கே தன்னை மிஞ்சி விடுவானோ என்ற பயம் தான்
//இது போன்ற பகட்டான சம்பிரதாயங்களாலும் சடங்குகளாலும் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் நான் சார்ந்த மதத்தவர்கள் நம்பும் போது, இந்த மதத்தில் அர்த்தம் இருக்கா //
கண்டிப்பாக இல்லை என்பதே நிஜம்.
அன்புடையீர்,
நீங்கள் யோசிப்பதை போலவே நானும் யோசித்துள்ளேன். ஆனால் இந்த திருவிழாக்கள் எல்லாம் மும்மாரி (அதாங்க மாசத்து 3 முறை) பொழிந்த காலத்தில் செய்த ஏற்பாடுகள். அன்று காற்று,ஒளி,தண்ணீர்,எரிபொருள் எல்லாமே இலவசமாக கிடைத்தது இன்று ? இந்த பஞ்ச காலத்தில் இதெல்லாம் தேவையா என்று சம்பந்த பட்டவர்கள் யோசிக்கலாம்.. எங்கே யோசிக்கப்போகிறார்கள் .. இதற்கும் இந்து மதத்துக்கும் எந்த தொடர்புமில்லை. அந்த அம்மன் இந்த அம்மன் எனப்படும் அம்மன் எல்லாம் அந்த ஊரில் வாழ்வாங்கு வாழ்ந்த தாய்குலமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்
ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா
மானவ சேவா மாதவ சேவா இதை எல்லாம் கூட இந்து மதம் தான் கூறுகிறது
இதை நானும் அதே நேரம் மனிங் பிலேசில் எனது நண்பனின் கடையில் நிண்று பாரித்தென் என்னுடன் என் சக நன்பர்களும் இருந்தனர். ஆனால் நான் அந்த சாமியை கும்பிடவில்லை இதே கருத்தை முன் வைத்தென் ஆனால் தோற்றுவிட்டேன். மின்சார விழக்குக்ள்,பால்குடம் ,தேங்கய் என விண்விரையம். நான் மிகவும் சிறந்த ஒரு இந்து மத பின்னனி உள்ளவன் ஆனால் இப்பொது என் மதம் தொடர்பான சிந்தனை மாறிவருகிறது. ஈந்த பணத்தில் ஒரு பகுதியை அவ் இடம் பெயர்ந்த மக்களுக்கு கொடுத்திரிந்தால்?????? ஒருவேளை வயிரார சப்பிட்டிருப்பார்கள்.
its not the religions fault .its the peoples mentality and
our temmples are only not collecting money for the displaced .most of the churches r doing a good job.
நல்ல , சிந்தனையை தூண்டும் பதிவினை தந்ததற்கு நன்றி ! தொடரட்டும் உங்கள் புரட்சி !!
உங்களைப்போல் சிந்திக்கும்,
வாகீசன்
chittoor.S.முருகேஷன்
உங்கள் கருத்துக்கு நன்றி...நீங்கள் சொன்னது போலவே , காலத்துக்கு தகுத்தார்போல மாற்றம் பக்தி மார்க்கத்திலும் ஏற்படுத்த வேண்டும்....இன்னும் இந்து மதம் ராஜ ராஜன் காலத்திலேயே இருக்கிறது.
சத்தியன்
//ஈந்த பணத்தில் ஒரு பகுதியை அவ் இடம் பெயர்ந்த மக்களுக்கு கொடுத்திரிந்தால்?????? ஒருவேளை வயிரார சப்பிட்டிருப்பார்கள்.//.....அவர்களும் நல்லா இருந்த போது தனக்கு செய்ததை கடவுளே நினைத்து பார்க்காத போது.......மக்கள் எப்படி கொடுப்பார்கள்..
மாசிலா
//கருணை, ஈவு, இரக்கம், பகிர்ந்துகொள்ளுதல் போன்ற அடிப்படை மனப்பாங்கினை வளர்ப்போம்//
எத்தனை பேர் புரிந்து கொள்கிறோம், நீங்கள் மேல சொன்னவைகளை
பின் ஊட்டம் இட்ட வந்தியத்தேவன் , என் பக்கம், Vaheesan அனைவருக்கும் நன்றிகள் .
ஆஹா இந்து மதத்திற்கு அர்த்தம் இருக்கானு கேட்டீங்க சரி, இந்து மதச் சடங்குகளுக்கு அர்த்தம் இல்லைன்னே வைச்சுக்குவோம், அங்கதான நீங்க இருந்தீங்க, அவர்களுக்கு ஏதேனும் நீங்கள் உதவி செய்தீர்களா?
செய்து இருப்பின் இந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கிறது, இல்லையெனின் நிச்சயமாக இந்து மதத்துக்கு அர்த்தம் இல்லை. மிக்க நன்றி.
சிந்தனையை தூண்டும் கருத்துக்களுக்கு நன்றி. என்னுள் தோன்றிய சில கருத்துக்களை பரிமாற அவா கொண்டு இந்த பதிவு. என்னுடைய கருத்துகள் பழமையானவையாய் இருந்தாலும் நான் மாற்றங்களை ஏற்று கொள்பவனே! தேங்காயை 40/= மதிப்புள்ள உணவாக நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் வேறு எந்த பழத்திலும் இல்லாத தனித்துவம் அதற்கு உண்டு. அது தான் அக்கண்கள். அதனை உடைக்கும் போது எம்முள் உள்ள ஆணவம், சுயநலம், ஆசை, பொறாமை போன்ற தீய குணங்களை உடைத்து இறைவனுக்கு அற்பனிக்கின்றோம். பால் குடம் பற்றி கூறியிருந்தீர்கள். எமது பாவங்களை எல்லாம் அவள் தனதாக ஏற்று கொண்டு அருள்கடாட்சம் புரியும் அவளிடம் எம்மால் வந்த பாவங்களை அந்த பாலாபிஷேகம் மூலம் தீர்க்கிறோம். அதனை நாம் பெற்று இல்லாதோருக்கு கொடுப்பது அந்த பாவங்களை கொடுப்பது போன்றது என்கிறது சிவா மரபு.
கிரனைட் கல்லால் கோயில் கட்டுகிறார்கள், நாற்பது லட்சம் செலவில் தேர் கட்டுகிறார்கள் , கடவுள் சிலைக்கு வைர அட்டியல் போடுகிறார்கள். இதை எல்லாம் கடவுள் கேட்டாரா? அந்த அம்மன் 1987 ஆம் ஆண்டு எப்படி இருந்தால் என்று எனக்கு தெரியும். பக்தர்கள் பெருக பெருக, கோவில் வளர்ச்சி அடையும். அந்த அம்மன் கோவில் நிர்வாகம் நடாத்தும் அறநெறி பாடசாலையில் இலவசமாக எத்தனை மாணவர்கள் சைவம் பயில்கிறார்கள்? கலைகூடத்திலும் தியான மண்டபத்திலும், நூலகத்திலும் எத்துனை விடயங்களை அமைதியை பெறுகின்றோம். கோவில் வளர்ச்சி பெற்றது தவறா? நீங்கள் கூறுவதை பார்த்தால் i.b.c road பிள்ளையார் கோவில் மட்டும் தான் கோவிலா? அதுவும் சிறிது காலத்தில் வளர்ச்சி அடைந்த பின் என்ன கூறுவீர்கள்? கோவில் குருக்கள் கலோரி பற்றியோ அல்லது போஷாக்கின்மை பற்றியோ அறிந்திருக்கவில்லை மாறாக அவர் அந்த மக்களுக்காக இறைவனிடம் தினம் பிரார்த்திப்பார் அது தான் அவர் வேலை.
பிசைகாரகளுக்கு நாம் கொடுக்கும் வரை அவர்கள் இவ்வுலகில் இருப்பார்கள். அப்படி ஒரு சமுதாயத்தைச் உருவாகிய பெருமை எமக்கே சேரும். எம்மிலிருந்து அவர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள். தீண்டத்தகாதவர்களா? அவர்கள் தொழில் செய்ய முடியாதா? அவளை ஸோம்பெரி ஆக்கியது மட்டுமல்லாது அவள் மகளையும் கண்ணிருந்தும் குருடனாக்குகிறது உங்கள் சமூகம். காத்திருந்து செவிடனாகுகிறது.
உடலை வருத்தி அவர்கள் காவடி எடுப்பது எந்த வகையில் இந்து மதத்தை அர்த்தமற்றதாகுகிறது. atleast தனி மனித உரிமையில்லை தலையிடாமல் இருப்பமே? மனதை ஒறுத்தி இறைவனை நாடலாம் முடியாதவர்கள் உடலை ஒறுத்தி நாடுகிறாகள். விட்டுடுவமே? சரி ஆபிரிக்க பழங்குடியினர் வேட்டையாடி மாமிசம் உண்கிறார்கள். நாம் வேட்டயாடுவதில்லை ஆனால் உண்கிறோம். எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா?
இறைவன் இவை அனைத்தையும் கேட்கவில்லை. மாறாது அன்பையும் தன்னை மறக்காத நெஞ்சையும் மட்டுமே கேட்கிறார். அதற்காக அந்த பக்தர்களையும் அந்த இறைவனையும் விமர்சிப்பது உண்மைக்கு தொலைவானது. உங்கள் பாஷயிலையே பேசினால் அந்த கணமாவது இறைவனை நினைகிறார்கள் இந்த கொடிய உலகில் என்று நிம்மதியாய் இருப்போம். நீங்கள் தானே உங்கள் முந்தய "இன்னும் இனி என்ன செய்ய போகிறோம்? " பதிவில் பொருளாதாரத்தை முனேற்றவும் மாற்றத்தை ஏற்கவும் கூறினீர்கள். இந்த சந்தர்பத்திலாவது இலங்கை government, எம்மக்களின் சக்தியை அறியட்டுமே. இந்து மதத்திற்கு அர்த்தமுண்டு. தெய்வம் நின்று கொல்லும் அண்ணா... காத்திருங்கள் நம்பிக்கையுடன்...
//வியாபார ரீதியாக பலன் தராது என்பதாலா ? //
நிச்சயமாய் அதைத் தவிர வேறென்ன.
Post a Comment