
"தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாக தான் மிதப்பேன் ...அதி நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் , கவிழ்ந்து விட மாட்டேன்".
இது இந்தியாவில் ஓட்டு மொத்த தமிழர்களுக்கும் தெரிந்த வாசகம் தான். கேட்கவும் பார்க்கவும் நன்றாக தான் இருக்கிறது. கடந்த பல மாதங்களாக பார்த்தும் கேட்டும் வருகின்றோம் . ஆனால் இப்போது பார்க்கும் பொது அதிகம் எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கிறது. இது போன்ற தனி மனித வீர பிரதாபங்களை எப்படி தான் தமிழக மக்களால் ரசிக்க முடிகிறதோ தெரியவில்லை. அன்று தொடக்கம் இன்று வரை , அன்றைய நடிகனில் இருந்து இன்றைய விஜைய் வரை இது போன்ற சுயவிலாசங்கள் சர்வ சாதாரணம். வேறு நாடுகளில் இப்படி படங்களிலும் அரசியலிலும் இது போன்ற வசனங்கள் வருவதில்லை. எப்படி தமிழக மக்களால் மட்டும் முடிகிறது என்று யாராவது ஆராய்ச்சி நடத்தலாம்.
சரி விடயத்துக்கு வருவோம் , இப்படி பல வாக்குருதிகளாலும் , வீர பிரதாபங்களாலும் தான் எழு கோடி மக்களின் தலைவன் எண்டு கூறும் அந்த நபர் ஜெயலலிதாவை வீழ்த்தியது போக அரசியலில் இத்தனை வருடமாக சாதித்தது என்ன என்ற கேள்வி மனதில் எழுந்ததே , இன்று அது போன்ற அவரது வீர வசனங்கள் ரசிக்கும் மனநிலை இல்லை. மத்தியில் கூட அவரது பேச்சை மதிக்கும் தருவாயில் யாரும் இல்லை , அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட நபர் இன்னும் அனுப்பப்பட இல்லை என்றால் ...அவர் மதிக்கப்பட இல்லை என்று தானே அர்த்தம்.
அவர் பழுத்த அரசியல் வாதி தான் , தமிழ் நாட்டில் எந்த விடயத்தையும் அவருக்கு கொழுந்து விட்டு எரிய வைக்கவும் முடியும் ...அடுத்த நாளே அதை மூடி மறைத்து விட்டு சிரிக்கவும் தெரியும். இல்லாவிட்டால் ஆறரை கோடி மக்களின் ஓட்டு மொத்த உணர்வலைகளை வெறும் இய்ம்பது கோடி ரூபாவுக்குள் எப்படி திசைதிருப்பியிருக்க முடியும்.
இன்னும் பல விடயங்கள் தொடர்பில் ஜெயலலிதா போல பக்கம் பக்கமாக விமர்சிக்க முடியும் ..அனால் பின்வரும் காரணிகள் என்னை தடுக்கின்றன.
. அவர் முத்தமிழுக்கும் ஆற்றிய அளப்பெரும் சேவை/மற்றும் திறமை
.அவரை தலைவரராக ஏற்றுக்கொள்ளும் தமிழக மக்களின் உணர்வுகள்
. அவரது வயது
. அவரது வயது
. அவர் மீது எஞ்சி இருக்கும் கொஞ்ச நம்பிக்கை
. அவர் நான் இருவருமே தமிழனாக இருப்பது.
. எனக்கு இங்கு இருந்து கொண்டு அரசியல் பேசுவதில் உள்ள பயம் .
அழிந்து வரும் தமிழ் இனத்தை காப்பற்ற வேண்டிய வரலாற்று கடமை இருக்க இந்த தருணத்தில் , இது போன்ற வீர வசனங்களை , எமாற்றல்களை, பொலி வாக்குறுதிகளை தவிர்த்து செயலில் நிருபித்தால் ..சந்தேகம் எதுவுமில்லை தமிழர்களுக்கு இருக்கும் தகுதியான அரசியல் தலைமை அவர்தான்.
Post a Comment