
புறாவுக்கு தன் தொடையில் ஒரு பகுதியையே வெட்டி அளித்தான் சிபிச்சகரவர்த்தி எண்டு நான்காம் வகுப்பு சமயபாட புத்தகத்தில் காட்சிப்படங்களுடன் படித்திருக்கிறேன். அதன் பின்பு வேறு ஒரு சமயத்தில் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி எண்டும் படித்திருக்கிறேன். அன்றிலிருந்து இந்த சிபியும் , பாரியும் என் நீண்ட கால ஹீரோக்களாகவே இருந்து வந்தார்கள்...
இந்த கதையின் நாயகனும் நாயகியும் இரண்டு புறாக்களே ஆனாலும் இங்கு கதை பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு செல்லவில்லை . மாறாக ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் என் பிளாட்டின்ஆறாம் மாடியில் தான் நடக்கிறது. பூகோள வெப்பமடைதல் , ஓசோன் படலத்தில் ஓட்டை விழுதல் போன்ற அறிவியல் காரணங்காளால் மனித வாழ்கை மட்டுமன்று , விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சாதாரண வாழ்கையும் " இலங்கை தமிழர்களை போலவே " அகதி வாழ்க்கை தான்.
முன்பெல்லாம் , பம்பலபிட்டி கதிரேசன் கோவில் கோபுரம் , வஜிராபிள்ளையார் கோவில் , பம்பலபிடிய அரச தொடர் மாடி குடியிருப்புகளிலேயே அதிகமான புறாக்களா காண முடியும். அனால் இப்போது தமிழர்களை விட அவர்கள் கும்பிடும் கடவுளருக்கு வசதி வைப்புக்கள் கூடி விட்டதாலும், எப்போதும் கோவில் பகுதிகளில் கட்டுமான வேலைகள் நடை பெறுவதாலும் இந்த புறாக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவை வெள்ளவத்தை போன்ற நிறையவே பிளாட்டுகள் இருக்கும் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
இப்படியாக இடம் பெயர்ந்து வந்த ஜோடிப் புறாக்கள் இரண்டு ஆறாம் மாடியில் இருக்கும் என் அறையின் சன்னல் சுவர் விளிம்பில் அடிக்கடி காதல் மொழி பேசிக்கொண்டு இருந்தன. அட்டிக்கடி குருகுருத்துக்கொண்டு இருப்பது கொஞ்சம் இடைஞ்சலாக இருந்தாலும்.. அட இரண்டு புறாக்கள் தானே , அவையாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். இப்படி சிலகாலம் கழித்து திடீரெண்டு பார்த்தால் ஒரு கூடு இரண்டு முட்டை வேறு சுவர் விளிம்புக்கு வந்து விட்டது. புறாக்கள் காதல் மொழி மட்டும் அல்ல குடும்பமும் நடத்தியிருக்கிறது என்று அறியும் நுண்ணறிவு பெரும் அளவுக்கு ஜியோக்ரபிக் சேனல் பார்ப்பது இல்லை என்பதால் எனக்கு குறைவு தான்.
புறாக்களால் துர்நாற்றம் எடுக்கும், கூட்டையும் முட்டைகளையும் வீசி விடுங்கள் எண்டு பக்கத்து வீட்டு aunty எச்சரித்து கூடியும் ...முட்டை போட்டு விட்டது கொஞ்சு பொறித்து இன்னும் கொஞ்ச நாளில் போய்விடும் என்று அப்பாவும் கூட பரிதாபம் காட்டினார். சரி அடுத்து புறா சில நாட்கள் ஆடைகாத்து குஞ்சு பொறித்த பின்பு தான் வில்லங்கம் விபரீதமானது எண்டு விளங்கியது. என் அறைக்குள் போகவே முடியவில்லை. துர்நாற்றம் தூக்கி வாரியது. என்றாலும் என் சின்ன வயது ஹீரோவான சிபிச்சக்கற வர்த்தி தொடை அறுத்து கொடுக்கையில் , நான் என்னை நம்பி வந்த புறாவுக்கு அடைக்கலம் கொடுத்து கொஞ்சம் திருப்ப்திப்பட்டுக்கொண்டேன். இந்த விடயம்சம்பந்தமாக என் கீழ் விட்டுகாரான நண்பர் கோபன் எந்த முரண்பாடும் தெரிவிக்கவில்லை. பாவம் அவரும் என் அளவுக்கு பாதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் துர்நாற்றம் வருகிறது , புறாக்களை தரித்து நிற்க விடாமல் துரத்துவது ஒவ்வொரு குடியிருப்பாலரினதும் கடமை எண்டு ப்ளாட் நிர்வாக குழு கூடி முடிவும் எடுத்து (இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு தான் கூடுவார்கள்) அறிவித்தல் பலகையிலும் ஒட்டி விட்டார்கள் . அப்போதும் அந்த வில்லன்களை எல்லாம் எதிர்த்து பொறுமை காத்தேன் . புறா குஞ்சுகளும் வரர்ந்தது , தாய் புறா முதல் கொஞ்ச நாள் உணவு கொடுத்தாலும் , பின்னர் வருகையை குறைத்துக்கொண்டது. நானும் ஒவ்வொரு நாளும் எப்படா இந்த புறாக்கள் பறந்து போகும் எண்டு பாத்துக்கொண்டே இருந்தேன்.
இப்படி ஒரு நாள் , நான் காலையில் கண்விழித்து பார்த்த பொது , நிறையா காகங்கள் கத்திக்கொண்டு நின்றன.. சில புறாக்களும் நின்டிருந்தன . எதோ அசம்பாவிதம் நிகழ்ந்தது போல காகங்கள் கத்தின. சன்னலை திறந்து பார்த்தேன் புறாக்களை காணவில்லை. அவசரமாக மொட்டை மாடிக்கு ஓடி போனேன் , ஒரு நாற்பது காகங்கள் , பத்து புறாக்கள் வேறு ஒரு புறமும் நின்றன. ஒரு மூலையில் தலை இல்லாத குட்டி புறாவின் சடலம் கிடந்தது, அந்த பத்து புறாக்களும் வெளிப்படுத்திய சோகத்தை எனக்கு எந்த காலத்துக்கும் மறக்க முடியாது. மற்றைய புறாவுக்கு என்ன நடந்தது எண்டு தெரியாது .. ஆனாலும் அந்த காகங்கள் தூக்கி போயிருக்கலாம் என்பது என் அனுமானம்....ஆனாலும் அந்த புறாக்களின் இழப்பால் துக்கம் தொண்டையை அடைத்தது , அன்றைய நாள் முழுவதும் ஒரு வெறுமையாவே இருந்தது. நான் பார்த்து வளர்ந்த ஒரு புறாவின் நேரடி இழப்பும் அதன் வலியும் நீங்க நிறைய நாள் எடுத்தது.

ஆனாலும் , இந்த உலகத்தில் நிறைய பேர் அடுத்தவனை கொன்றே வாழ நினைக்கிறார்களே. கொலைகள் சாதாரணமாக நடக்கிறதே , ஆயுத கலாச்சாரம் நாட்டின் கலாச்சாரமாகி போகிறதே. இரத்தம் படிந்த கைகளால் உணவு அருந்துகின்றர்களே , இன்னும் பலர் தாங்கள் வெளிநாடுகளில் சந்தோசமாய் வாழ்ந்து கொண்டு ...எங்கேயோ அப்பாவிகள் கொல்லப்படுவதை ஊக்கப்படுத்துகிரார்களே.இன்னும் நாடுகள் ஆயுதம் கொடுத்து போரை , அழிவை ஊக்கப்படுதுகின்றனவே.சர்வதேச சமுகம் எப்போதும் வேடிக்கை மற்றும் கண்டனம் மட்டும் தெரிவிக்கிறதே. இவர்களுக்கு எல்லாம் இழப்பின் வலி எப்போது விளங்கும் ?
good....
wel done ...but in last over feeling
//இவர்களுக்கு எல்லாம் இழப்பின் வலி எப்போது விளங்கும் ?
//
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்... வலியின் குரல் இங்கு யாருக்கும் கேட்பதாக இல்லை
mouna valikal enrum valvil marathavai.....
சோகத்தின் வலியினை ஆழமாகப் பதிந்துள்ளீர்கள்..
//இவர்களுக்கு எல்லாம் இழப்பின் வலி எப்போது விளங்கும் ?
உண்மைதான்.. தன்வீட்டு வாசலுக்கு வந்தபின்னர்தான் அவரவருக்கு இழப்பின் வலியும் சோகமும் புரிறும்... :( :(
ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா. என்ன செய்ய இப்பிடி பின்னூட்டம் அடிக்கத்தான் முடியுது. நம்மளால என்ன செய்ய முடியும் சொல்லுங்க வேடிக்கை பார்ப்பதை தவிர...
இதெல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது.. எப்பயுமே தஞ்சம் குடுத்துட்டு இப்பிடி யோசிக்கிறவங்க நிறைய பேர். அவங்களுக்கு தான் வலியும் அதிகம்.
sutha,
enna repostings. ran out of concepts?
உங்கள் சோகம் புரிகிறது!
10 புறாக்கள் 40 காகங்கள் உண்மையாக நடைபெற்ற உங்களின் கதையில் -
73.9 சதவீதமான சிங்களவர்கள் 26.1 சதவீதமான ஏனைய சமூகத்தினரைக் கொண்ட எம் நாட்டில் எத்தனை படுகொலைகள் இன்றும் தொடர்ந்தபடி உள்ளது!
இரண்டுக்குமே என்ன செய்வது?
good one anna... i jsut got to know u r blogging...
Post a Comment