இன்று கொழும்பு மாகான சபை தேர்தல், என்னுடைய வாழ்வில் முதல் வாக்கும் கூட இரண்டாயிரத்து நாலில் நடைபெற்ற இதே தேர்தலுக்கானது தான். ஏன் முதலாவது வாக்கில் ஒரு ஆட்டோ காரர் மாநகர மேயராக வந்தார் என்று கதை சொல்வதாயின் ஆகக் குறைந்தது நான்கு பத்தியாவது நான் டைப் அடிக்க வேண்டும். எனவே அதை தவிர்த்து நேரடியாக விடயத்துக்கு வருகிறேன்.
காலையிலேயே நண்பர் ஒருவருக்கு மெசேஜ் போட்டேன் , அடே வாக்கு போட போனியா எண்டு? இதுக்கு எல்லாம் எவன் போவான் எண்டு பதில் வந்தது அலட்சியமாக. எண்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாக்கில் அப்பா , நான் ஆகிய இருவரினதும் வாக்குகள் மட்டுமே பதிவானது. நான் வசிக்கும் பிளாட்டில் எழு பேர் மட்டுமே வாக்கு போட போனதாக எங்க சிகுரிட்டி ஐயா சொன்னார். முழு வெள்ளவத்தையிலும் இதே நிலைமை தான். நூற்றில் இருபது தமிழர்கள் வாக்களித்திருப்பர்களா என்பது எனக்கு சந்தேகமே . பெருன்பான்மை கட்சிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள் எல்லாம் மடையர்கள் , தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற தோரணையில் பசல்ல்ஸ் ஒழுங்கையில் சுவரொட்டி பார்த்தேன்.
கவலையில் எல்லா தமிழர்களும் இருக்கிறார்களோ எண்டு பார்த்தல் அதுவும் இல்லை , எது என்ன நடந்தாலும் எம் சமூகம் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. சிலருக்கு இன்று தேர்தல் என்ற ஒண்டு இருப்பது தெரியவே தெரியாது. நமது தமிழர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றோ , தலை நகர தமிழரின் அரசியல் பிரநிதித்துவம் என்ன என்பது பற்றிய எந்த வித உணர்வும் இன்றி ஏன் சமூகம் தன் வேளைகளில் மட்டும் மும்மரமாக இருந்தது.
தொலைக்காட்சியில் போகும் செய்தியை பார்த்து கருணாநிதியை திட்டிக்கொண்டு இருந்தார் அம்மா . ஏமாற்றுவார் எண்டு தெரிந்தும் ஜெயலலிதா மீது எதோ ஒரு நம்பிக்கை எங்கள் வீட்டில் புதிதாக.. ஒருவேளை கருணாநிதி மீதான எதிர்ப்பு "டாக்டர்" "புரட்ச்சித்தலைவி" "அம்மா" அவர்களுக்கு ஆதரவாக மாறி இருக்கலாம். எம் சொந்த நாட்டில் தேர்தல் அதில் எமக்கான பிரதிநிதித்துவத்தை மறந்து எதோ ஒரு நாட்டின் தலைவர்களை நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம் .
எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமிழர்கள் வாக்களிக்க மறுத்ததன் விளைவுகள் , இன்று தமிழ் உயிர்கள் ஆயிரங்களில் பலியாகின்றன. லட்ச்சக்கணக்கான மக்கள் தமது பொருளாதாரம் இழந்து , தமது உழைப்பு இழந்து , உடைமைகளை இழந்து ஒருவேளை சோற்றுக்கும் , தண்ணிக்கும் யாரிடமோ கையேந்துகிறார்கள் . அளிக்கப்படாத தமிழனின் வாக்குக்கு இவ்வளவு விலையா ?
இல்லாவிடில் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்றால்.? இது ஒன்றும் கேயாஸ் தியரி போல் சிக்கலானது இல்லை . வாக்கு போட்டிருந்தால் அன்று வந்திருக்க கூடியவருக்கு கொஞ்சம் மனிதாபிமானமும் , நெஞ்சில் கொஞ்சம் ஈரமும் இருந்திருக்கும் ஆகக் குறைந்தது தமிழன் உயிர் மீதாவது ......
posted in tamilish.com
தம்பி கரன்... இவ்வளவு காலமும் வாக்களித்து என்னத்தை கண்டனியள். எதிக்கட்சித்தலைவராக கூட பாராளுமன்றத்துக்கு ஒருத்தரை அனுப்பினியள்... என்ன நடந்தது?
சரியாகச் சொன்னீர்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காதாலேயே வடபகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்து கையேந்தவேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக வாக்களித்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் என்று கூறமுடியாதுதான். ஆனாலும் இவ்வாறானதொரு கையேந்து நிலை ஏற்பட்டிருக்காது என்பது சத்தியமான உண்மை.
நான் என்ற மசசுல பட்டத சொல்லுறன்
எந்தவித அரசியல் கருத்தையும் திணிப்பது ஏன் நோக்கு இல்லை.
கொக்குவிலான்.-- இப்படி ஏட்டிக்கு போட்டியா கதச்சுதான் இப்படி அம்மணமா நிக்கிறம்.
பிரசாத்- உங்கள் வருகைக்கும் , ஒன்றுபட்ட கருத்துக்கும் நன்றி
தம்பி சுதா.. நான் ஏட்டிக்கு போட்டியா எதையும் சொல்ல நினைக்கவில்லை... நாலும் தெரிந்த நீங்களே சொல்லுங்களே தமிழரினுடைய அரசியல் அபிலாசைகளுக்கு என்ன தீர்வென்று...
கொக்குவிலான்
Post a Comment