BREAKING NEWS

Like Us

Thursday, March 4, 2010

விண்ணை தாண்டும் அளவுக்கு எதுவுமில்லை ....

"உலகத்தில் இத்தனை பொண்ணுங்க இருக்கும்போது ஏண்டா எந்தப் பொண்ணு மேலும் எனக்கு காதல் வரமாட்டேங்குது? "

"நானும் ஒரு பிளட்டுல தான் இருக்கேன், ஏன் எங்க வீட்டு  மாடியில மட்டும் ஜெசி என்ற கிறிச்டயன்ட்  பொண்ணு இல்ல, ஒரு இந்து பொண்ணு, ஒரு சிங்கள பொண்ணு கூட குடி வர மாட்டேங்குது".

Msc Maths படிச்ச ஒரு த்ரிஷா வேணாம், Atleast  ஒரு A/L படிக்கிற figure  ஆவது இருந்திருக்கலாம் இல்ல. ஏன் இப்படி எல்லாம் நடக்க மாட்டேங்குது,

ஏன் எங்க ரோட்டுல மட்டும் எந்த பொண்ணும் அழகா சாரி உடுத்து HP  லப் டாப் மாட்டிக்கிட்டு போக மாட்டேங்குது?.
ஏன் நான்  போக்ஸ்சிங்/ கராத்தே எண்டு எதையும்  கத்துக்கல?, அண்ணன் இல்ல ஆறாம் வகுப்பு படிக்கிற ஒரு தம்பியவாவது அடிச்சு வீழ்த்தி இருக்கலாம். ஏன் எனக்கு இப்படி ஒண்ணுமே நடக்கல எண்டு .. கவலைப்பட்டுட்டு இருந்தேன் , அடுத்த சீன்லயே வசனம் வந்திச்சு ,

''காதலை தேடிக்கிட்டு போக முடியாது...
அது நிலைக்கணும்...
அதுவா நடக்கணும்...
நம்மள போட்டு தாக்கணும்...
தலைகீழ போட்டு திருப்பணும்...
எப்பவுமே கூடவே இருக்கணும்...
அதான் ட்ரூ லவ்......

என்னை தவிர , ஒட்டு மொத்த தியட்டரும் ஆர்ப்பரித்து அடங்கியது. இது தான் மச்சி டயலாக் எண்டு பின்னால ஒருத்தன் உணர்ச்சியை கொட்டினான்.. தலை கீழ நிக்கனுமாம், எப்பவுமே கூட இருக்கனுமாம் ... பல வெட்டிக் காதல்களை  காவியக்காதல் ஆக்கிவிட்டு அங்கீகாரம் தந்ததில் பலருக்கு தலை கால் புரியல.  ஐயகோ இந்த கருமாந்திரம் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.  நம்மள தலைகீழா போட்டு திருப்பும் அளவுக்கு காதல அனுமதித்தால், அப்புறம் நாம் யார், எண்டு தத்துவங்களாக துள்ளி எழுந்து...பின்பு தானாய் அடங்கியது ஏன்  எண்ணங்கள், இதனால் இடையில் ஒரு சில பிரேம்களில் த்ரிஷாவை ரசிக்க தவறி இருந்தேன் என்ற நினைவு வந்ததும் மீண்டும் படத்துக்குள் போனேன்.


கேயர்ஸ் தியரி எண்டு ஒன்று உண்டு, அது தான் தசாவதாரம் தொடங்கேக்க கமல் ஹாசன் சொல்லுவாரே வண்ணத்திப்புச்சி பறப்பதற்கும் தைவான்ல பூகம்பம் வருவதற்கும் சம்பந்தம் இருக்காம், அத மாதிரி இந்த படத்தில வார ஒவ்வொரு சீனும் மிக சாதரணமான சீன்கள், காதல் எண்ட ஒன்ற செய்யுற எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிற அன்றாட நிகழ்வுகள். அதை மிகப் பெரிய திரையில் , அழகான வசனங்களுடன் சொல்லும் போது எல்லோருக்கும் பிடித்து போகுது, தங்களுக்கும் அதே மாதிரி நடந்ததே எண்டு பார்த்து வியந்து போகிறார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றியே,

 நீ என்னை ஃபாலோ செய்கிறாயா என்று த்ரிஷா கேட்கும் இடம், தனக்கு ஏன் காதல் வரவில்லை என்பதற்கு த்ரிஷா சொல்லும் மூன்று காரணங்கள், அடிக்கடி நடக்கும் காதல் நாடகம், பிரண்ட்ஷிப் கதைகள், Sms சீன்கள்   என பல சீன்கள் எல்லோருக்கும் பொதுவான கெமிஸ்ட்ரி தானே, இதில் வியந்து பார்க்க என்ன இருக்கு. ஒரு வேளை அதை உணர்ந்து பார்த்தவர்களுக்கு பிடித்திருக்கலாம், ஆனால் எனக்கு இல்லை, ஏன் எனில் இப்படம் முழுவதுமே, திட்டமிடப்பட்ட "targeting'  ஒட்டு மொத்த இளைய உள்ளங்களை , காதல் என்ற பொதுவான உணர்வால் இளமையுடன் காட்டும் பொது யாருமே பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் கெளதம் மேனன்.

ஆனாலும் அவருக்கேயான ஸ்டைலும் , சில திருப்பங்களாலும் தான் படம் தனித்து தெரிகிறது. கப்பல் செட்டில் "GVM"  எண்டு எழுதுவதாகட்டும், கௌதம் மேனனா? அவர் தான் தமிழ்ப் படங்களை இங்களிஷ்ல எடுப்பாரே அவரா எண்டு படத்துக்குள் வரும் நக்கல் ஆகட்டும், தன்னை நன்றாக "BRAND"  செய்கிறார், இயக்குநருக்காக பார்த்த படம் இது,  நான் எந்த சிம்பு படமும்  தியட்டர் சென்று பார்த்ததில்லை.

தமிழ் சினிமாவிலேயே கேவலமான ஒரு WALK  திரிஷவினுடையது, அனால் அந்த WALKகை முன்னும் பின்னுமாக முப்பத்தைந்து சீனில் வைத்தது நிறையவே  ஓவர், த்ரிஷா எப்போதும் CLOSE-UP  காட்சிகளுக்கே  அழகு என்பதை ATLEAST என்னிடமாவது கேட்டு தெரிந்து இருக்கலாம்.

ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்து நன்றாக  தெரிந்த ஒரு கதையில் கடைசி திருப்பங்களில் மட்டுமே படம் இயக்குனரால் புதுமை பெறுகிறது, மொத்தத்தில் "விண்ணை தாண்டி வருவாயா" வியந்து பார்க்கும் அளவுக்கு எதுவுமில்லை.

என்னுடைய பிற சினிமா பதிவுகள்,
அளிமங்கட (The road to elephant pass)
ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" திரைப்பட விமர்சனம்
நான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்...... 

Share this:

Arinchayan said...

Ya.I agree with u. U speaks my words.Thanks for the truth.

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes