BREAKING NEWS

Like Us

Saturday, March 20, 2010

ஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்

ஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தனையோ பப்ளிஷ் செய்யும் நிறுவனகள் வரிசை கட்டி நிற்கின்றன. எம்மவர் பலரும் எத்தனை ரூபாய் என்றாலும் கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள். ஆங்கில புத்தகத்தை வாசிப்பதில் அல்லது அதை வாசிப்பதாக காட்டிக்கொள்வதில் அலாதிப் பிரியம் அவர்களுக்கு. 

 எம்மவர் பலரும்  , புத்தகங்கள் எழுதி  , அவை வெறும் மண்ணோடு மண்ணாய் போகின்றன. மில்லியன் பிரதிகள் விற்பதுக்கு தகுதி இருக்கும் , புத்தகங்கள் கூட நாலு பேர்க்கு மட்டும் தெரிந்த விடய தானங்களாகி போகின்றன.  ஊக்கப்படுத்தவோ  , பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும் விதத்தில் அதை பதிப்பிக்கவோ யாரும் இல்லாத காரணத்தால்  பலரின் கதைகள் மௌனமாகவே இருந்து விடுகிறது.

வியாபர நோக்கமாகிவிட்ட இந்த உலகில் தரமான புத்தக தேடலுக்கான ஆர்வம் இல்லாமை , இறுதியில் அந்த மொழியில் வீழ்ச்சிக்கே இட்டுச்செல்லும். இதற்கு காரணம் யார் என்னும் போது , போலியான பகட்டுக்காய் ஆங்கில மொழிக்கும் அதன் புத்தகங்களுக்கும்  அடிமையாகிவிட்ட எம்மவர் மீதே அதிகம் கோவம் வருகிறது.

ஆங்கிலம் என்ற ஊடக மொழி அந்நியப்படாது போயிருக்கும் அல்லது ஆங்கிலம் என்ற அந்நிய மொழியை நான் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இன்றைய கால கட்டங்களில்  கூட அங்கில புத்தகங்களுடன் எனக்கு ஒன்ற முடியவில்லை. அவை மனதோடு வாசம் செய்ய மறுக்கின்றன. வாசித்தல் , ரசித்தல், அதனோடு வாழுதல் என்ற சுகானுபவத்தை முழுமையாக தர மறுத்து விடுகின்றன. இன்னும் தமிழ் புத்தகங்களியே ஏன் அதிக தேடல் தங்கி இருக்கிறது.

வாயில் நுழையாத ஆயிரம் ஆங்கில எழுத்தாளர்களை சொல்லும் எம்மில் பலருக்கும் ராஜநாராயணன் , எஸ். ராமக்கிஷ்ணன்,  போன்ற  எத்தனை கதை சொல்லிகளை  தெரியும். மல்லிகை போன்ற உள்நாட்டு இதழ்களை  தெரியும்.

ஆர்வமும் , ரசனையும் பல்வேறுபட்டு இருக்கலாம் ஆனால் , பிறந்து வளர்ந்து , பேசுகின்ற மொழியை காவு கொடுத்துவிட்டு , அன்னியத்துக்கு ஆட்படுகின்ற மனோபாவம் எப்படி எங்கிருந்து வருகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தன் தாய்  மொழியில் ஒன்றை ரசிக்காது பாராட்டாது பகட்டாய் புத்தக பிரியர்களாய் காட்டும் பலருக்கும், எம் மொழியிலும் ஒரு ரசனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதும் . மொத்த வாசிப்பு பரப்பில் கால்  வாசியாவது எம் மொழி படைப்புக்களில் ஆர்வம் வைப்பதும்,  ஆகக் குறைந்தது மொழி வளரவாவது உதவட்டுமே.  

Share this:

மதுரை சரவணன் said...

நல்ல சிந்தனை. அனைத்தும் உண்மை. பாராட்டுக்கள்

P.V.Sri Rangan said...

இளைஞர் நீங்கள் புரிந்துள்ளீர்கள்.பிறகென்ன இது மெல்ல வலுக்கும்.

Prasanna Rajan said...

உங்களின் ஆதங்கம் நியாயமானது ஹரன். ஆனால் தமிழ் புத்தகங்களுக்கான சந்தை மிகச் சிறியதே. தமிழ்நாடு தவிர்த்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நம் புத்தகங்களை எடுத்து செல்லலாம். அத்தகையதொரு சூழல் தற்போதைய இணைய புரட்சியில் இப்போது தான் சாத்தியமாகத் தொடங்கி இருக்கிறது. பார்ப்போம்... என்ன நடக்கிறது என்று...

balag said...

சத்தியமாக சொல்கிறேன். செந்தமிழிலே நல்ல நூல்கள் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் சில நூல்களை வாங்கி படித்தேன். வெறுமை. மன்னிக்கவும். சிந்தனையின் வறட்சி, அறிவீனம், தெளிவின்மை, இவற்றின் தொகுப்பு தமிழ் புத்தகம். இங்கே ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். நான் கதைகளை படிப்பதில்லை. எனக்கு கதைகளிலே நம்பிக்கையில்லை. கற்பனை இல்லாத கட்டுரை, தத்துவம், கோட்பாடு போன்றவற்றை விளக்கும் நூல்கள் தமிழிலே வேண்டும்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஆற்றல் பிரமிடுகள் மற்றும் அதன் பயன்கள் என்ற நூலை 40 அல்லது 50 ரூபாய் கொடுத்து வாங்கினேன். சத்தியமாக சொல்கிறேன் அதிலே ஒரு எழவும் பிரயோஜனமாக இல்லை. ஒரு அரை வேக்காடு, எதையோ அரையும் குறையுமாக படித்துவிட்டு உளறிக்கொட்டியிருக்கிறது. அந்த காசை பசித்தவர்களுகு சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கலாம். இன்னொன்று. அள்ள அள்ள பணம் என்று செந்தமிழிலே பங்குச்சந்தையில் பணம் பண்ணுவது எப்படி என்று கோட்பாடு தெரியாமல் பினாத்தியிருப்பது ஒரு பொருளாதார நிபுணர் அல்ல. வெறும் எம் ஏ பெர்சனல் படித்த மூதேவி

இந்த லட்சனத்தில் வாசிப்பவர்களை மட்டுமே குறை சொல்வானேன். ஏழுதுபவனையும் சேர்த்து சொல்லுஙள் அண்ணா.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்

மதுரகன் said...

உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன் முடிந்தால் தயவு செய்து எழுதுங்கள்
http://saaralhal.blogspot.com/2010/03/blog-post_20.html

ILLUMINATI said...

நண்பரே,ஆங்கிலப் புத்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்கின்றன என்றால்,அதற்கு காரணம் உலகம் முழுக்க அவர்களுக்கு இருக்கும் சந்தை மற்றும் அவர்களுடைய வியாபார உத்திகள்.நம் ஊர் மக்கள் நன்றாக இருந்தால் எதையும் படிப்பார்கள்.

உலகமெங்கும் நம்முடைய புத்தகங்கள் படிக்கப்பட வேண்டுமென்றால் அதை மொழி பெயர்த்து வெளியிடலாமே.ஆங்கில புத்தகம் படிப்பது prestige என சொல்லித் திரியும் சுய புத்தி இல்லாத மடயர்களும் அதைப் படிப்பார்கள்.

பிரச்சனை வாசகர்களிடம் இல்லை.பதிப்பகத்தில் தான்.எத்தனை நல்ல புத்தகங்கள் உங்களுக்கு மார்க்கெட்டிங் காரணமாக தெரிய வந்து இருக்கின்றன?நீங்கள் கேள்விப்பட்டது அதிப்படியாக உங்கள் நண்பர்கள் சொன்னதாக தான் இருக்கும்.

மேலும்,நம் நாட்டில் எழுத்தாளனுக்கு உரிய சன்மானம் தரப்படுவதில்லை,மரியாதையும் இல்லை.ப்ளாக்கிலேயே இவ்வளவு கலக்கும் நம் மக்கள்,நல்ல புத்தகங்கள் எழுத முடியாதா?இல்லை என்று நீங்கள் கூறுங்கள் பார்க்கலாம்?

நம் ஆட்களிடம் இருக்கும் இன்னொரு முக்கிய கெட்ட பழக்கம்,எழுத்தாளர்களானால் எழுதுவதை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் பார்ப்பது.இவர்கள் அரசியல் கருத்துக்கள் மற்றும் இவர்களுக்குள் யார் பெரியவன் என்ற போட்டி.......இதெல்லாம் தேவையா?எழுத்தில் காட்டுங்கள் யார் பெரியவன் என்பதை.அதை விட்டுவிட்டு சோற்றுக்கு அலையும் காக்கை கூட்டம் போல இருந்தால்,எவன் மதிப்பான்?

இல்லை தெரியாமல் கேட்கிறேன்,வெள்ளைக்காரர்கள் எழுதிய எல்லா புத்தகமுமேவா மில்லியன் கணக்கில் விற்கிறது?

இப்பொழுது நீங்கள் சொல்ல வருவது என்ன?”வேறந்த மொழிப் புத்தகத்தையும் படிக்காதீர்கள்,ஏன் என்றால் அது பிற மொழிப் புத்தகம்....”
படித்துப் பார்க்கவே கேவலமாக இல்லை?மில்லியன் புத்தகங்கள் விற்கும் அளவு அதில் சரக்கு இருந்தால் அதை promote பண்ணுங்கள்.இப்படி புலம்பாதீர்கள்........

Thuls said...

அண்ணா சில நல்ல புத்தகங்களின் பெயர்களை எனக்கு தயவு செய்து சொல்லுங்க நான் தேடி படிக்கிறன்.

Sutha said...

நன்றி பார்த்துசென்ற அனைவருக்கும்,
உங்கள் கருத்துக்கள் ஏன் பதிவுக்கு மேலும் வலுச்சேட்கின்றன
நான் எந்த இடத்திலும் ”வேறந்த மொழிப் புத்தகத்தையும் படிக்காதீர்கள்,ஏன் என்றால் அது பிற மொழிப் புத்தகம்....” என்ற கருத்தை திணிக்கவில்லை. அருமையானா ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் ஆங்கிலத்திலும் உள்ளது. அதை வாசிக்கும் அதேவேளை , சிறந்ததான எம் மொழி புத்தகங்களுக்கும் கொஞ்சன் வாழ்வு கொடுக்கலாமே என்பதே ஏன் கருத்து.

Balag....பொருளாதார ரீதியாக பலன் கிடைத்தால், நிறைய பேர் வாங்கி படித்தால் , நிச்சயமாக நீங்கள் சொல்லுகிற அந்த " மூ......" நன்றாகா எழுதுவார்கள்.

Dr. Srjith. said...

நல்ல சிந்தனை உங்கள் குற்று நியாயம் தான்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

thayavu seithu mokkai poda vendam

-Vithushana

ராம்ஜி_யாஹூ said...

nice post but please note that there should not be zerosum game, English & Tamil should go together hands in hand.

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes