
நான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில் பதிவெழுதி படத்துக்கு தாக்கம் ஏற்படுத்தியிருந்தனர் பலர். கஷ்டம் தான், அஜித் , விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு இது போன்ற விளிம்பு நிலை மனிதர்களின் கதையை புரிந்து கொள்ளும் பக்குவமும், பொறுமையுடன் இது போன்ற கதையை ரசிப்பது என்பதும் கஷ்டம் தான். எனவே அது போன்ற ரசிகர்களின் அதிகப்படியான கமர்ஷியல் சினிமாவுக்கான தேவைக்கு ஏற்ப இந்த கதையை பேரரசு இயக்கி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை.
படம் இரு துருவங்களாக நகர்கின்றது. ஜோசியம் கேட்டு 14 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த மகன் ஆர்யா கடவுளின் உருவமாய் ருத்ரனாக வீடு வருகின்றான். இந் நிலையில் சொந்தம் பந்தம் மறந்து அகொரியாக திரியும் ருத்திரனிடம் பாசமாக பழகு கின்றனர் அவரது குடும்பத்தினர். முதலில் ருத்திரன் அனைவர் மேலும் எரிந்து விழுந்து கோபம் காட்டினாலும் சில நாட்கள் செல்ல செல்ல அவனிடம் மாற்றம் தெரிகிறது. அவனது அம்மா இத்தனை காலம் பிரிந்திருந்த சோகத்தை கண்ணீருடன் சொல்கையில் அகொரியின் இதயத்திலும் ஈரம் கசிகிறது. அம்மா செண்டிமெண்ட் பற்றி பேரரசுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும் .
அடுத்ததாக தங்கச்சி செண்டிமெண்ட் , ருத்திரனுக்கு சின்ன வயதில் தன் தங்கையுடன் விளையாடிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன . இத்தனை காலமும் பிரிந்து இருந்த விட்டோமே என்ற ஏக்கம் மெல்ல மெல்ல வரத் தொடங்குகின்றன. அடிக்கடி தங்கையை பார்த்து உதட்டோரம் சிரிப்பதாக க்ளோஸ் அப் காட்சி வைக்கலாம். இது போன்ற நிலையில் (வானத்தை போல ஸ்டைலில் ) ஒரு கனவுப் பாடல் காட்சியில் அந்த குடும்பமே ஆடிப் பாடுவதாகவும் பாசம் பொழிவதாகவும் ஒரு பாடல் காட்சி. திடீரெண்டு ருத்திரனுக்கு உறவுகளை அறுத்தெறிந்து வரச்சொன்ன சாமியார் நினைவு வர கனவுப் பாடல் முடிவுக்கு வருகிறது.
மறுமுனையில் ஊனமுற்ற, மனநிலை பிறழ்ந்த உறவுகளை வைத்து பிழைக்கும் கும்பல். அவர்களில் கண்

ஊனமுற்றவர்களை பிடித்து செல்லும் கும்பலிடம் இருந்து தன் சகாக்களை காப்பதற்காக அகொரியான ருத்திரனிடம் வந்து முறையிடுகிறார் அம்சவல்லி. அவளின் கோரிக்கையை ஏற்று அந்த கும்பலை அடித்து துரத்தி கொன்று விடுகிறான் ருத்திரன். (பேரரசு ஸ்டைலில் நிறைய டாட்டா சுமோக்கள் , அரிவாள் வைத்து பறந்து பறந்து சண்டை வைக்கலாம்) இதனால் அவனை போலிசு பிடித்துச் செல்ல , கண் தெரியாத அம்சவல்லி ருத்திரனை ஜாமீனில் எடுக்க பிச்சை காரர்கள் எல்லாம் சேர்ந்து காசு சேர்ப்பதையும் , ஓவர் டைம் வேலை செய்வதையும் காட்டலாம்.
அடுத்த சீனில் , ஜாமீனில் வெளிவந்த ருத்திரனுக்கும் , அமசவல்லிக்கும் காதல் மலர்கிறது. ..அடுத்

தரமான படம் என்ற நிறைவுடன் வரும் ரசிகர்கள் , படத்தை பற்றி அஹா ஓகோ என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆரியா கட் ஒஉட்டுக்கு மாலை போட்டு பால் அபிசேகம் செய்கிறார்கள். ...படம் மாபெரும் வெற்றி அடைகிறது.
அப்படி போடு அருவாளை!!
கொடூரமான க்ரியேட்டிவ் திங்கிங்!
ஆஹா ரொம்ப சூப்பர்ங்க...
வாழ்த்துகள்...
பேரரசுக்கு தத்துவ பாடல் ஓன்று கொடுத்து இருக்கலாம்.
உங்கள் கற்பனை படி படம் எடுத்து இருந்தால் கண்டிப்பாக HIT OF THE DECADE ஆக இருந்து இருகும். அருமை.
உங்கள் கற்பனை படி படம் எடுத்து இருந்தால் கண்டிப்பாக HIT OF THE DECADE ஆக இருந்து இருகும்.அருமை.
நல்ல வேலை நீங்க ஹீரோவ மாதல. விஜய் அஜித் நடிச்சிருந்த பன்ச் டயலாக் வேற வந்து இருக்கும் ( சிம்புவ மறந்துட்டேன் மன்னிச்சிடுங்க) . ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பழுத்த மரமே கல்லடி படும். நான் கடவுள் படத்தின் எதிர் மறையான விமர்சனங்களை நான் இப்படித்தான் நினைக்குறேன்.
நல்ல வேலை நீங்க ஹீரோவ மாதல. விஜய் அஜித் நடிச்சிருந்த பன்ச் டயலாக் வேற வந்து இருக்கும் ( சிம்புவ மறந்துட்டேன் மன்னிச்சிடுங்க) . ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பழுத்த மரமே கல்லடி படும். நான் கடவுள் படத்தின் எதிர் மறையான விமர்சனங்களை நான் இப்படித்தான் நினைக்குறேன்.
Attakkasam !!!!
நல்ல கற்பனை வாழ்த்துக்கள். பேரரசு எந்தக் கட்டத்தில் வந்து செல்கிறார்
கடைசியில் ஆரியா & பூஜாவின் மகன் காசிக்கு செல்வதாய் முடித்தால் இன்னும் சிறப்பு..............
Then they can take NAAN KADAVUL PART 2............
Hi Sutha
Wonder full thinking. Imaginative creativity.
Best of Luck
Duva
அருமையான செருப்படி தலைவா
சினிமாக்காரத் தே பசங்களை யார் அடித்தாலும் நான் மகிழ்வேன்.
வளர்க உமது கற்பனை. வாழ்க உமது தொண்டு
Post a Comment