
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.இத்தகவலையறிந்த தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைது செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜே.எம். ஹாரூண், கிருஷ்ணமூர்த்தி மற்றும் 300க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் தேனியில் கட்சி தொண்டர்கள் கூட்டம் நடந்த தியாகராஜன் திருமண அரங்கில் இருந்து ஊர்வலமாகச் சென்றார்.பின்னர் தேனி - பெரியகுளம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள் திருமாவளவனின் கட்-அவுட்டுக்கு தீ வைத்தனர். இதைத்தொடர்ந்து இதைத்தடுக்க வந்த காவல்துறையினரு வந்தனர். எல்லோரும் பாத்துகோங்க என்னையும் கைது செய்யுறாங்க , நானும் பெரிய அரசியல்வாதிதான் எண்டு வடிவேல் கணக்கா அவர்களின் ஜீப்பில் தானே சென்று எரிய தங்க பாலு தான் கைது செய்யப்பட்டதாக தானே அறிவித்தார் . அவரது மெகா தொலைக்காட்சி "தங்கபாலு கைது தமிழகம் கொந்தளிப்பு" என்று செய்தி வெளியிட்டது...அப்படி எதாவது நடந்ததா எண்டு விசாரிச்சு பார்க்க வேண்டும்.
இன்னும் கொஞ்ச நாளில் இவரது பீலா தங்காமல் சோனியாவே தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை பறிக்கலாம். அப்பவாவது முதல்வர் ஆசை விட்டு போகுதா பார்க்க வெண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது.
அருமையான ஆக்கம் நண்பா
http://www.tamilskynews.com/
Post a Comment