
எதோ சினிமா பற்றி சொல்ல போகிறேன் என்று எதிர்பார்த்து நீங்கள் உங்கள் mouse பட்டனை கிளிக்கி இருந்தால் மன்னிக்கவும்...இதில் நான் எழுத இருப்பது எனக்கும் அபிக்குமான ஒரு நட்பு பற்றி...இப்போது அபி எங்கு இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது, அவளுக்கும் எனக்கும் எந்த தொடர்புகளும் இல்லை, தொடர்பு கொள்ளும் நிலையிலும் அவள் இல்லை. அபிக்கு என்னை பற்றிய ஞாபகங்கள் வருமா? அவள் நினைவுகளின் நான் இருக்கிறேனா ? ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களாவது அபி என்னை பற்றி நினைக்கிராள? என்பது தொடர்பாக பல கேள்விகள் என் மனமெங்கும் பரந்திருக்கிறது.
இன்றோடு ஒரு வாரம் கடந்தாகிவிட்டது அபி என்னை பிரிந்து சென்று.. போகும் பொது கூட அபியை பார்க்க முடியவில்லையே, அவளது அழகான சிரிப்பை நுகரமுடியவில்லையே என்ற கவலையும் ஏக்கமும் என்னை அதிகமாக வாட்டுகிறது. எதோ அதிகமாக நேசித்த ஒன்றை இழ்ந்துவிட்டதன் வலியை வாழ்வில் முதல்முறையாக அனுபவிக்கிறேன்.
அபி யார் ? அபி என்ற பெயர் வெறும் சுவரசியதுக்காக மட்டும் செருகபட்டதா என்றால் நிச்சயமாக இல்லை. அதிகம் நெருக்கமான அடுக்குமாடி குடியிருப்பில் என் அயல் வீட்டுக்காரி அபி என்கிற அபிநயா. நாலரை வயது மட்டுமேயான ஒரு குட்டி தேவதை. என் இத்தனை வருட வாழ்வில் அவள் மட்டுமே என்னுடன் அதிகம் மழலை மொழி பேசியிருக்கிறாள். என்னிடம் வந்து இது என்ன, அது என்ன, அது என் இப்படி இருக்கு? இது என்ன கலர்? நீங்க என்ன செய்யிறீங்க? என்று அவள் அபினயமாய் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க பல தடவை நான் அதிகம் சிந்திக்கவேண்டி இருந்திருக்கிறது. பல விடியல்கள் அபியின் குரல் கேட்டே நான் விழித்திருக்கிறேன். எழுந்து பார்க்கையில் கண்களால் சிரித்துகொண்டு இருப்பாள் அபி.
அபி குடும்பத்துடன் நிரந்தரமாகவே வெளிநாடு ஒன்றுக்கு செல்ல இருக்கிறாள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். சரியாக இந்த நாள் தன் என்பதை நான் நின் நினைவில் நிறுத்திவைக்க தவறி இருந்தேன். தேடிரென்று ஒரு நாள் அபி நாளைக்கு போகபோகுது என்று தகவல் கிடைத்தது.. நேரம் எட்டு மணியை தாண்டி இருந்த போதிலும் வீதிக்கு சென்று ஒரு GIFT வாங்கி வந்தேன். வந்து பார்த்த பொது அபி வீட்டில் இல்லை. வந்ததும் என் நினைவு பரிசை கொடுத்து விடலாம் என்று காத்திருந்தேன். இரவு நெடு நேரம் வரை அபி வரவில்லை. சரி அடுத்த நாள் போகும்போது கொடுத்துவிடலாம் என்று இருந்துவிட்டேன். அடுத்த நாள் நான் எழுந்த பொது , விடிய ஐந்தரை மணிக்கே அபி போய்விட்டதாக கூறினார் அப்பா. ஏமாற்றமும் கவலையும் தொண்டையை அடைத்துக்கொண்டது...அன்று முழுவதும் நினைவுகள் அபியையே சுற்றி வந்தன....இனி மீண்டும் அபியை சந்திப்பேனா....அப்படி சந்தித்தால் அபியின் நினைவுகளில் நான் இருப்பேனா ? போன்ற விடை தெரியாத கேள்விகளுடன் அபிக்காக நான் வாங்கி பொம்மையை ஒரு நாளில் சில தடவைகள் பார்த்துக்கொள்கிறேன்..............
Post a Comment