
வாழ்கையில் முதன் முதலாக வாங்கி படித்து முடித்த எண்ணுரு பக்க புத்தகம்.
இப்புத்தகத்தை அதிக விலை கொடுத்து வாங்க நிறையவே
ஜோசித்தேன். இதை வாங்க தூண்டுவதற்காக எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் அருமை பெருமைகளை எல்லாம் நண்பன் ரிஷங்கனுக்கு ஐஸ் வைத்தேன். எனக்கு ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் , ராஜநாராயணன் போன்ற தரமான கதைசொல்லிகளை அறிமுகப்படுத்தியவனே அவன் தான். என் போலி வார்த்தைகள் அவனிடம் பலிக்கவில்லை, வேறு
வழி iன்றி நானே இதை வாங்கினேன் அவன் இன்னுமொரு அருமையான நாவலான யாமம் வாங்கிக்கொண்டான். இன்னுமொரு சிறப்பும் இப்புத்தகத்துக்கு உண்டு , படிப்பு சம்பந்தமான புத்தகங்கள் தவிர்த்து நான் அதிகம் விலை கொடுத்து வாங்கிய முதல் புத்தகமும் இதுவே. இரண்டு family pizza வாங்கும் அளவுக்கு நான் சம்பளம் எடுத்து நான் உயிர் வாழ்ந்த காலங்களில் எல்லாம் இரவல் புத்தகங்களிலேயே அறிவை நிரப்பியிருக்கிறேன். அப்போதெல்லாம் கிடைத்த திருப்பதி , மூன்று மாதங்களாக இழுத்தடித்து வாசித்து முடித்த இந்த புத்தகத்தில் கிடைக்கவில்லை. அதன் அளவை கூட்டுவதற்காக பல நீர்த்துப்போன கதைகளையும் சேர்த்திருப்பது சலிப்பை தருகிறது. அனாலும் பல இடங்களில் எழுத்த்ழாரின் தனித்துவமான துக்கமும் வலியும் நிறைந்த பத்திரங்களை அனுபவிக்க முடிகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் தொகுப்பு
நவீன தமிழ் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாக தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காண முடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகு புனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ் புனைவியலை உருவாக்கு கின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.
Post a Comment