BREAKING NEWS

Like Us

Monday, September 22, 2008

சுயநலம்

நான் குழைக்கும்
சோற்றில் தெரியுது
வன்னியில் பசியால் வாடும்
பிஞ்சு குழந்தையிண்ட முகம்
கண்ணீருடன்
இருந்தும் குழைத்தே கலைக்கிரன்
என்ட ஒருவேளை சுகம்
பாதிக்கப்பட கூடாது
என்பதற்காக .....


நான் பஞ்சணையில்
படுத்துக்கொண்டே
யோசிக்கிறன் .....அங்க வேலிகளுக்குள்ள
வெறுந்தரையில் படுத்திருக்கும்
எண்ட இனம் வெயிலுக்கும்
மழைக்கும் என்ன
செய்யும்எண்டு .....

எனக்கு நாளைக்கு
விடிய எழும்பினா
இந்த உணர்வெல்லாம்
மறந்து போம் ,
ஆனா நாளையே
ஒரு கேள்விக்குறியாய்
வாழ்ந்து கொண்டிருக்கும்
என் சமூகம்
பற்றி யோசிக்க கூட
எனக்கு நேரமில்லை.....

Sunday, September 21, 2008

being silent


i am being silent for most of time..i dont know why, that does not mean i am unable to talk or there are no any reasons behind be.. but i want to be silent. i understood being silent is a very good strategy to solve problem... There are lot of instances where people hurt me by words...but according to my knowledge, i hv never ever tries/attemt to repeat that back... some times i hv thought dat i should hv given nice word to keep dat person to shut his mouth...but i hv never ever done that...bec i am not prepaired to do so and at the same time i dont have enough emotional intelligence to repeat back like them.


My this attitute offen makes my self down a step. they think that i am weak and not aggresive. But in such a circumstances when i was hurt by words my mind says 'sutha be quit....the time will answer those issues' there is no need to answer by words where people cant understand us. So in those time, i simply leave the question to be answered by the time factor. I definitely know they will be answered one day.. because i hv enough confidence that i am going on a right track which is not hamlful to anyone.

Saturday, September 20, 2008

வன்முறை வாழ்க்கை


ரத்தம்
உறைந்த சாலையில்
பிரேதங்களின் மீது
நடப்பதாகவே
ஒரு உணர்வு.

மனித
எச்சங்கள் எல்லாம்
வளமாகிப் போனதால்
பூக்களை கூட
நெருங்கமுடிவதில்லை
பிணவாடை.

கல்லறைகளுக்கு
வைத்தே தேசத்தின்
மலர்கள் தீர்ந்து விட்டதால்
விற்பனைக்கெல்லாம்
இப்போது பிளாஸ்டிக்கில்.

துப்பாக்கி தோட்டாக்களில்
கணிதம் படிக்கும்
அந்த அழகுச் சிறுவன்
நாளை
என்னவாவான் ?

இந்த இடுகாட்டுப்
பூமியில்
நாளை பிறக்கும்
குழந்தைக்கும்
கந்தக ஆயுதம்
தயாராகிவிட்டது.

கதந்து போகின்றன
நாட்கள்
என்று தீரும்
இந்த
வன்முறை வாழ்க்கை ?


Friday, September 19, 2008

என் வாசிப்புக்கள்

கடந்த சில வருடங்களாகவே நான் அதிகம் வாசித்து வருகிறேன் . கவிதை , சிறுகதை , இல்லக்கியம் , அறிவியல் என்பன என் ஆர்வத்துக்குரிய பரப்புகளாக இருந்து வருகின்றன. இதுதான் என்று வரையறுக்காமல், என் அறிவை உயர்த்தும் அத்தனையும் என் வசிப்புக்களுக்குரிய தேடல் தான்.
இத்தனை நூல்களையும் எனக்கு இரவல் தந்து என் இலக்கிய தாகத்துக்கும் என் தமிழ் வளத்தின் ஏற்றத்துக்கும் உதவிய திருவாளர் ரிசாங்கன் அவர்களுக்கும் அவர்தம் அளவை ஊரான் நூலகத்துக்கும் நன்றிகள் .


கிறுக்கல்கள் - ரா.பார்த்தீபன்
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
பதினோரு ஈழத்து கவிஞர்கள் - காலச்சுவடு பதிப்பகம்
மீண்டும் கடலுக்கு - சேரன்
கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா
அக்னி சிறகுகள் - அப்துல் கலாம்
கொரில்லா - சோபா சக்தி
எண்ணத்தை மேம்படுத்துங்கள் - KARPER MEYOR
நான் துணிந்தவள் - கிரண் பேடி
காக்கை சோறு - அப்துல் ரஹுமான்
ரத்ததானம் - வைரமுத்து
காவி நிறத்தில் ஒரு காதல் - வைரமுத்து
கவிராஜன் கதை - வைரமுத்து
ஒரு போர்களமும் இரண்டு பூக்களும் - வைரமுத்து
கேள்விகளால் ஒரு வேள்வி - வைரமுத்து
வனவாசம் - கண்ணதாசன்
என் பேர் கமலா - கண்ணதாசன்
உயிர் கொள்ளும் வார்த்தை - சேரன்
உறுபசி -எஸ்.ராமகிருஸ்ணன்
இதுவரை நான் - வைரமுத்து
கரிசல் கதைகள் - எஸ். ராஜநாராயணன்
ஆனா ஆவன்னா - எஸ்.முத்துகுமார்
பிணம் செய்யும் தேசம் - இளைய அப்துல்லா
என் தேசத்தில் நான் - பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள்
கடவுளுடன் பிரார்த்தித்தல் - மானுஷ புத்திரன்
உடைந்த நிலாக்கள் - பா. விஜய்
இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து
கடவுள்களின் முகவரி - அப்துல் ரஹ்மான்
எப்போதும் வாழும் கோடை- மானுஷபுத்திரன்
ம - சோபா ஷக்தி
முத்தங்கள் ஓய்வதில்லை - அப்துல் ரஹ்மான்
21 ஆம் விளிம்பு - சுஜாதா
இதமான நோக்கு, ஆழமான சிந்தனை - மிளிண்ட மொரகொட
மின்மினிகளால் ஒரு கடிதம் - அப்துல் ரஹ்மான்
மல்லிகை சிறுகதைகள் - செங்கை ஆழியன்
ஒரு கதவும் கொஞ்சம் - தாமரை
வில்லோடு வா நிலாவே -வைரமுத்து
கொஞ்சம் தேநீர் நிறைய வானம் - வைரமுத்து
மீண்டும் என் கடலுக்கு - சேரன்
பூப்படைந்த சப்தம் - அப்துல் ரஹுமான்
திருக்குமரன் கவிதைகள் - திருக்குமரன்
டாஷ்டாய் கதைகள் - வா.உ.சி.நூலகம்
மணலின் கதை - மனுஷ புத்திரன்
நடந்து செல்லும் நீருற்று - எஸ்.ராமகிருஷ்ணன்
பேசாத பேச்செல்லாம் - தமிழ்ச்செல்வன்
இது சிறகுகளின் நேரம் - அப்துல் ரஹுமான்
விடுதலை - அன்டன் பாலசிங்கம்
ஆதாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா
ஒரு கொடிமரத்தின் வேர்கள் - வைரமுத்து
ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும் -வைரமுத்து
கற்றதும் பெற்றதும் - சுஜாதா
என்? எதற்கு ? எப்படி? - சுஜாதா
திரைகதை எழுவது எப்படி - சுஜாதா
வானவில் பூங்கா - பா.விஜய்
கேள்வி குறி - எஸ்.ராமகிருஷ்ணன்
கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்
சிற்பியே உன்னை செதுக்கிகிறேன் - வைரமுத்து
இதனால் சகலமானவர்களுக்கும் - வைரமுத்து
கடந்த நூற்றாண்டு ஒரு பார்வை - விகடன் பிரசுரம்.


கடந்து வந்த பாதையில்....


காலம் வேகமாக கடந்து கொண்டு இருக்கிறது , நான் கடந்து வந்த பாதையை மீண்டும் பார்கையில் ஏதேதோ சம்பவங்களும் காட்சிகளும் நினைவுகளை ஆக்ரமித்து நிற்கின்றன. என் உள் மனம் சொல்கின்ற எதோ ஒரு திசையில் நான் பயணித்துக்கொண்டு இருக்கிறேன் . என் பயணம் சரியான பாதை தானா என்று நிதானித்து சிந்திக்க கூட சந்தர்ப்பம் அற்று சம்பவங்கள் அடுக்கடுக்காக அரங்கேறுகின்றன. என் நிகழ் கால வாழ்க்கை கருப்பு வெள்ளையில் நடந்து கொண்டிருக்கையில் எதிர்காலம் தொடர்பில் ஆயிரம் கனவுகள் மனத்திரை எங்கும் கலர்கலராய் ......

Tuesday, September 9, 2008

Somethink about me.....

I am calm cool person with always a nice smile.....(if u feet dat is not true pls contact me) people often say me that i have everythink in order except my fairly big nose....i do believe i am sooooo creative and energitic or i try to make others to believe that i am creative and energitic. I do and execute whatever my mind says right...too often my this attitute make me to go wild without direction but i have an assurance that what ever way i go , i will reach the destination....

I dont make close friends very easily....if i found one gud having two three chats, my perception about him/her never change....but truely i have gud friends because i define the parameters (statistical term) very clearly with each friendship.

Monday, September 8, 2008

A new Start....


At last, I have started an account in blogger. Feeling good, what can i do here? this is the million dollar question running out in my mind. Wel the answer is simple, i have to visit some other person profile have a look. But the think i do here should be worthful to atleast me....


Will wait and see....what can i write here from tomorrow onwards?
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes