சோற்றில் தெரியுது
வன்னியில் பசியால் வாடும்
பிஞ்சு குழந்தையிண்ட முகம்

கண்ணீருடன்
இருந்தும் குழைத்தே கலைக்கிரன்
என்ட ஒருவேளை சுகம்
பாதிக்கப்பட கூடாது
என்பதற்காக .....
நான் பஞ்சணையில்
படுத்துக்கொண்டே
யோசிக்கிறன் .....அங்க வேலிகளுக்குள்ள
வெறுந்தரையில் படுத்திருக்கும்
எண்ட இனம் வெயிலுக்கும்
மழைக்கும் என்ன
செய்யும்எண்டு .....
எனக்கு நாளைக்கு
விடிய எழும்பினா
இந்த உணர்வெல்லாம்
மறந்து போம் ,
ஆனா நாளையே
ஒரு கேள்விக்குறியாய்
வாழ்ந்து கொண்டிருக்கும்
என் சமூகம்
பற்றி யோசிக்க கூட
எனக்கு நேரமில்லை.....
உங்கள் உணர்வுகளை இன்னும் பலமாகப் பறை சாற்றுங்கள்!!!! ..சகோதரரே
Post a Comment