BREAKING NEWS

Like Us

Sunday, September 12, 2010

எவனோ ஒருவன் வாசிக்கிறான்.....இருட்டில் இருந்து

வாழ்க்கை என்பதே பல மனிதர்களும், அவர்களின் வேறுபட்ட முகங்களும் சங்கமித்துக்கொள்ளும் பல நிகழ்வுகளின் கோவை தான். இதனை வருட வாழ்க்கையில் எத்தனை மனிதர்களை சந்தித்திருக்கிறோம். அவர்கள் தொடர்பான ஆயிரம் ஆயிரம் நினைவுகளுடன்  தான் வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறது .



சன் டிவியில் ஏந்திரன் திரைப்படத்துக்கான trailer வெளியிட்டுக்கொண்டு இருந்தார்கள். ரஜினி , வைரமுத்து, பார்த்தீபன்  என்று  சில பல முக்கியமான நபர்களின்  பேச்சுக்களை கேட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோருமே  கலாநிதி மாறனை புகழ்வதிலேயே காலத்தை செலவழித்துக்கொண்டு இருந்தார்கள், படத்துக்கான அனைத்து  விசுவல் வெளிப்பாடுகளிலும் ஏந்திரன் என்ற பெயரை விட கலாநிதி மாறன் என்ற பெயரே பெரிய சைஸ் எழுத்துக்களாக இருந்தது. பணத்துக்கு தான் அத்தனை பலமும் இருக்கிறது, யார் என்ன சொன்னாலும்.

பரவாயில்லை,  இத்தனைக்கும் நடுவில் இக்கதையில் நாயகனின் சுஜாதாவின்  பெயர் இருக்கிறதா என்று தேடினேன், ஏன் கண்ணில் படவில்லை , யாராவது நினைவு படுத்துகிறார்களா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன், இல்லவே இல்லை.. நான் அறிந்து ஏந்திரன் படம் சுஜாதாவின் "ஏன் இனிய இயந்திரா" என்ற நாவலை தழுவியதே. சுஜாதா  இறப்பதற்கு சில மதங்களுக்கு முன்னமே அவரின் எழுத்தில் ஏந்திரன் படத்துக்கான ஒட்டு மொத்த திரைக்கதையும் இறுதிப்படுத்தப்பட்டு விட்டது. சங்கரின் படங்கள் விறுவிறுப்பாகவும் , சமச்சீரகவும் இருப்பதற்கு சுஜாதா என்ற மனிதரின் பங்களிப்பு அபரிமிதமானது. இந்தியன், முதல்வனில் இருந்து சிவாஜி வரை  ஒரு படத்தின் உயிர் நாடியான திரைக்கதையை எழுதியது சுஜாதாவே.

ஒவ்வொரு படங்களிலும் எப்படி சம்பவங்கள் பிணைக்கப்பட்டன எளிமையாக மாற்றப்பட்டன, பக்கம் பக்கமாக வசனம்  பேசாமல் எப்படி குறியீடுகளால் காட்சிகள் அமைக்கப்பட்டன என்ற தகவல்கள் " திரைக்கதை எழுதுவது எப்படி " என்ற சுஜாதா எழுதிய புத்தகத்தில் அருமையாக பதிவு செய்யப்பபட்டிருக்கிறது. திரைக்கதை உலகத்துக்கு அவரின் பங்களிப்பு ஆழமானது.

இருந்தும்  இத்தனை பிரமாண்டங்களுக்கு  மத்தியில் எந்திரனின் மூலக் கதையின் சொந்தக்காரர் சுஜாதா மறக்கப்பட்டார் என்பது வேதனையான விஷயம் தான்.  இறந்து போனால் மறந்து போகின்ற வாழ்க்கை ஒரு கலைஞனுக்கோ படைப்பாளிக்கோ இல்லையே....

அப்படி இந்த வாரம் மறைந்து போன இருவரின் நினைவுகள் மனதை அழுத்துகிறது.

முரளி......
ஒன்று  நாற்பத்து ஆறு வயதில் மாரடைப்பால் இறந்து போன முரளி.  நான் சிறு வயதுகளில்  பார்த்த ஏராளமான படங்களின்  நாயகன். அமைதியான  அழுத்தமான காதல்  கதைகளுக்கு பொருத்தமான நடிகர்.

இதயம் இன்னும் நினைவுகளில் நிற்கிறது. படம் முழுவதும்  காதலை சுமந்து கொண்டு, அதை கடைசிவரை வெளிப்படுத்தாமலே அவர் காட்டிய தவிப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது . முகம் முழுதும் சோகத்தை ஒட்டிக்கொண்டு அவர் நடித்த பொற்காலம்,   பகல் நிலவு , வெற்றி கோடி கட்டு போன்ற படங்கள் மறக்க முடியாதது.  சிறு வயதுகளில் ஏன் பல மணிநேரங்களை ரசிக்க வைத்த  பிடித்து போன  நடிகனுக்கும்




ஸ்வர்ணலதா.....
 ஸ்வர்ணலதா, எத்தனையோ பாடல்கள் கேட்டிருக்கிறேன், ஆனாலும் இந்தப் பாடலுக்காகவே அதிகம் நேசிக்கிறேன், என் உறக்கம் இல்லா முன்னிரவுகளில் இரவுகளில் ஒலித்து ஓயும் "எவனோ ஒருவன்" தந்த ஜீவனுக்கும் அஞ்சலிகள்.

Share this:

Nantha said...

True they should have at least acknowledge him

சிங்கக்குட்டி said...

//பணத்துக்கு தான் அத்தனை பலமும் இருக்கிறது//

:-) உண்மை உண்மை உண்மை :-)

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes