BREAKING NEWS

Like Us

Sunday, October 18, 2009

ஏன் பதிவு திருடப்பட்டமையில் பெருமை அடைகிறேன்

 நீண்ட காலமாகவே நான் எழுதி வருகிறேன். தொண்ணூறு பதிவுகளுக்கு மேலே எழுதியாகிவிட்டது. ஆனால் முதல்  முறையாக ஏன் பதிவு ஒன்று http://www.infotamil.ச/ என்ற தளத்தினால் நூறு விதிதமும் திருடப்பட்டு , எது வித (reference) சும் தரப்படாமல் வெளியிடப்பட்டதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. இப்போது தான் தரமான எழுத்தாளனாக உயர்ந்திருக்கிறேன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நான் எழுதிய "ராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை? " தலைப்பிலான கட்டுரையை பார்த்து நண்பர் ஒருவர் http://www.infotamil.ch/ta/view.php?2eESoC00asgYe2edAA6W3acldAU4d4AYl2cc26oS2d43YOE3a02oMS2e என்ற லிங்கை பின்னுட்டம் இட்டுருந்தார். ஒரு வேளை நான் காப்பி அடித்திருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்திருக்கலாம். ஆனாலும் நான் பிறருடைய எழுத்துக்களை பாவிக்கும் பொது , அதற்குரிய reference கொடுத்தே எழுதுவதுண்டு . அது தவிர என்னுடைய பதிவுகளில் (என்று) எண்டு வரும் இடங்களில் எல்லாம் (எண்டு) எண்டே எழுதுவதுண்டு. மேலே கூறிய  பதிவு நூறு விதமும் என்னாலேயே எழுதப்பட்டது என்பதை ஏன் தமிழ் சாட்சியாக உறுதிப்படுத்துகிறேன். தொடர்ந்தும்  குறித்த தளம் திருடி வெளியிட்டது மட்டுமல்லாமல் அடியில் "காப்புரிமை 2008-09 © இன்போதமிழ், அனைத்து உரிமைகளும் எமக்கானது" இப்படி எழுதியிருப்பது வேதனை தருகிறது.

மேலும் , பிரபலமான அந்த தளம் சிறுவனான எனது பதிவை திருடி வெளியிட்டு என்னையும் பெரிய எழுத்தாளனாக ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகள்.

Share this:

Anonymous said...

Good to know. First I thought you copied.

Atchuthan Srirangan said...

bro i m nt mention u copy from other web page,still u have to know who copy 4 m ur site.

keep rocking

Unknown said...

காப்புரிமை 2008-09 © இன்போதமிழ், அனைத்து உரிமைகளும் எமக்கானது" இப்படி எழுதியிருப்பது வேதனை தருகிறது.
---
இது தான் காமெடி.
சில பேரு அப்படி இருகாங்க. என்வழி என்று ஒரு தளம் உண்டு. அங்கு கூட நான் இந்த காபி ரைட் கண்டு இருக்கிறேன். அவர்களும் பல இடங்களில் இருந்து தகவல்களை உருவுகிறார்கள்.

சாத்தான் சில சமயங்களில் வேதம் ஓதும்.

Anonymous said...

No even a single change in the article. Keep rocking SUTHA...

BTW i think there is no major changes in the share market yesterday

Unknown said...

ஒரு பதிவர் எழுதிய ஆக்கத்திற்கான 100 வீதமான பதிப்புரிமையும் அந்தப் பதிவருக்கே சேரும்...
நாகரிகம் தெரியாத மனிதர்கள்...
அந்த இணையத்தள நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டீர்களா?

pirassath said...

இதுதான் உங்களின் முதல் அனுபவம் என்று நினைக்கிறேன் அதுதான் இவ்வளவு வருத்தம், கோபம். போகப் போக எல்லாம் பழகிவிடும். தமிழர்களைப் பொறுத்தவரையில் எதையும் சுட்டுப் போடலாம் என்ற வழமையைக் கொண்டுள்ளார்கள். இந்த விடயத்தில் நான் ரொம்பவே அனுபவப்பட்டுள்ளேன். நான் ஒரு செய்தியை தரவேற்றி 10 நிமிடத்திற்குள் இன்னொரு இணையத்தளத்தில் ஒரு சொல் மாற்றமின்றி வேறொரு இணையத்தளத்தில் இருக்கும். அதில்; பைலைன் வேற.... விடுங்க..... விடுங்க.....

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes