Thursday, June 4, 2009
யார் இந்த சூஸன் பாய்ல்?
Posted by Sutha on 11:31:00 AM in My Interest | Comments : 5
யார் இந்த சூஸன் பாய்ல், எல்லா தொலைக்காட்சிகளிலும் அவரை பற்றியே பேச்சு . அவர் தொடர்பான பாடல் காட்சி ஒன்றை இணைய வீடியோ தளமான யுடுபில் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து லட்ச கணக்கில் பின்னுட்டம் இட்டிருக்கிறார்கள். ஒரே இரவில் மேற்கு உலகின்பிரபல்ய பெண்மணியாகி இருக்கிறார் இந்த நாற்பது எட்டு வயதான பெண்மணி .
நேற்று வரை யார் எண்டு தெரியாதவர் பற்றி விக்கிபீடியா முழுப்பக்க விபரம் கொடுக்கிறது. அதையும் தாண்டி கூகிள் இருபது நான்கு மில்லியன் தகவல் பக்கங்களை அள்ளி வழங்குகிறது. பிருத்தானிய பிரதமர் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார் , ஒபாமா , அமெரிக்க குடியரசு தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி வழங்குமாறு கேட்டிருக்கிறார். ஒபரா வின்ப்ரையும் , எல்லனும் (ellen) இப்போதே நிகழ்ச்சிகளை பதிவு பண்ணி விட்டு அந்த பெண்மணியின் வருகைக்காக காத்து இருக்கிறார்கள். கையில் இரண்டாயிரம் பவுன் காசு இல்லாத அந்த பெண்ணின் இன்றைய விளம்பர மதிப்பு பதின்மூன்று மில்லியன் பவுன்கள் என்கிறது இவரை பின் தொடர்ந்து கொண்டு இருக்கும் பத்திரிகைகள். சோனி மியூசிக் இவருடன் ஆல்பம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது. பிபிசி , சிஎன்என் எண்டு ஏராளமான சநேல்ல்கள் பல நிகழ்ச்சிகளாக எடுத்து தள்ளிவிட்டன .
சரி அப்படி என்ன தான் செய்தார் இந்த பெண்மணி ? யார் இந்த பிரபு தேவா , சுப்பர் சிங்கர் போன்ற ஒரு டேலேன்ட் ஷோ நிகழ்ச்சி ஒன்றை அறிவித்திருந்தது அங்கெ இருக்கும் முன்னணி தொலைக்காட்சி . தனது தாயை பராமரித்து கொண்டு வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த பெண்மணியும் பங்கு பற்றி இருக்கிறார் . எந்த விதமான பிறரை கவரும் அழகோ ஒப்பனையோ இல்லாமல் மேடைக்கு வந்த இவரை நடுவர்கள் கூட முகத்தை சுழித்தே பார்த்திருக்கிறார்கள் . ஆனால் பாடி முடித்ததும் நடுவர்கள் உட்பட ஓட்டு மொத்த அரங்கமும் எழுந்து நின்று பாராட்டி இருக்கிறது. அதன்பின் அனைவரின் மனங்களை வென்று அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் கிடைத்து இருக்கிறது அவருக்கு.
அறுபத்து ஆறு மில்லியன் பேர் பார்த்த இந்த இணைப்பை பார்க்க தவறாதீர்கள்.http://www.youtube.com/watch?v=9lp0IWv8QZY
Subscribe to:
Post Comments
(
Atom
)
தப்பா எடுத்துக்காட்டி ஒரு சின்ன கரெக்ஷன்...அவங்க பேரு சூஸன் பாய்ல்னு உச்சரிக்கணும்...மற்றபடி தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பதிவு..
ரொம்ப நன்றிங்க வீடியோ பார்த்த பாதிப்பு இன்னும் போகவில்லை
நன்றி! பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் வழிவதை தடுக்க முடியவில்லை! :)
நீங்கள் சொன்னது போல் திருத்தி அமைத்திருக்கிறேன் .
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி .
வந்து பார்த்து பின்னுட்டம் இட்டவர்களுக்கு நன்றி
great, keep it up sutha
Post a Comment