BREAKING NEWS

Like Us

Tuesday, February 3, 2009

வாழ்கை அழகானது (Life is Beautiful)


எத்தனையோ தமிழ் படங்கள் வாழ்கை முழுதும் பார்த்து பழகிய எனக்கு , ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த இத்தாலிய திரைப்படம் அதிக பட்ச அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது சர்வ சாதாரணமான ஒன்று தான். இதுவரை கால சினிமா ரசிகனாக நான் அதிகம் கவரப்பட்டும் ரசித்ததும் இந்த படமாக தான் இருக்கும். இயக்குனர் பேரரசு , தலை சிறந்த நடிகர் விஜய் போன்ற குறுகிய தமிழ் சினிமா வட்டத்தின் தேடலுக்குள் இருந்த எனக்கு இது போன்ற உலக சினிமாக்கள் அதிகம் வியப்பையே தருகின்றன.

உலகம் முழுதும் ஏராளமான விருதுகளை குவித்த இந்த படம் , இத்தாலிய சினிமாவின் மகுடமாக கருதப்படுகிறது. வாழ்கை அழகானது என்று அருமையான தலைப்புடன் வெளிவந்த இந்த படம் , இதை பார்த்தவர்கள் மனங்களில் வாழ்க்கை தொடர்பான அழகான பார்வையை ஏற்படுத்திடிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இரண்டாம் உலகம் போர் காலத்தில் நடக்கும் மிகவும் அருமையான கதை, வித்தியாசமான காட்சி அமைப்பு , புதுமையான சம்பவங்களால் காட்சிகளை கோர்த்திருக்கும் விதம் என்பன தரமான திரைப்படம் என்பதற்கு அழகான ஆதாரங்கள். சினிமாவிற்கு எந்த அளவு திரை கதையும் காட்சிபடுத்துதலும் முக்கியம் என்பதற்கான முன்உதாரணம் இப்படம் .

இந்த கதையை எழுதி இயக்கி நடித்திருக்கும் அந்த நபரின் தனித்துவமான திறமையை நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சிகளையும் பின் ஒரு முறை வரும் சம்பவத்துடன் சேர்த்த விதம். மிக அழகாக ரசித்து சொல்லப்பட்ட காதல். இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் படைகளிடம் சிறைப்பிடிக்கப்பட்ட யுத மக்களின் சோக வரலாற்றை மறைமுகமாக காட்சிப்படுத்திய விதம் அருமை. அந்த வேதனைகளையும் மீறி தன் மகனின் சந்தோசத்திற்காக சோகத்தையும் சுகமாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் முடிவுகள் நினைவுகளில் மாறாமல் நிற்கின்றன. தலைப்பை போலவே படமும் அழகானது தான்.




Share this:

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes