BREAKING NEWS

Like Us

Sunday, January 11, 2009

இந்திய தேர்தல் என் கேள்விகள் பல ..

இந்திய நாடாளுமன்ற தேர்தல் இப்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் விடயமாகிவிட்டது. நேரடியாகவோ மறைமுகமாகவோ எமக்கு நன்மைகளும் பாதிப்புக்களும் இருக்கிறது என்றபடியால் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது என்பது தவிர இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது. இப்போது எமக்கென்று ஒரு ஜனநாயகமோ அல்லது நாம் விரும்பும் அரசியல் பிரதிநிதித்துவங்களும் இல்லாத நிலையில் தமிழர்களாகிய நாங்கள் அடுத்த வீட்டு தேர்தலை வேடிக்கை பார்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறோம். (தமிழர்கள் செய்த தேர்தல் புறக்கணிப்பை பற்றி நான் கதைக்க வரவில்லை) இப்படி இருக்கையில் இந்திய தேர்தல் தொடர்பான நிறையவே கேள்விகள் என்னிடம் இருக்கிறது....

  1. ஜெயலலிதா வெற்றி பெற்று தப்பித் தவறியும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்.?
  2. அப்படி கூட்டணி வைத்தால் வைக்கோ என்ன செய்வார்?
  3. மூன்றாவது அணி வெல்லுவதற்கு ஏதாவது வைப்பு இருக்கா?
  4. அப்படி வென்றால் யார் பிரதமர் ஆவார்கள் ? ஜெயலலிதா , பிரகாஷ் காரட் சந்திரபாபு நாயுடு?
  5. தி.மு.க , திர்நாமுள் காங்கிரஸ் தவிர்ந்த காங்கிரசின் கூட்டணி கட்சிகள் எவை?
  6. விஜெயகாந்த் தப்பித்தவறி ஒண்டு இரண்டு வெற்றிகள் பெற்றால் யாருடன் கூட்டணி வைப்பார்?
  7. ராகுல் காந்தியின் பிரதமர் என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது.
  8. கருணாநிதி வென்றால் இனி என்ன என்ன நாடகங்கள் எல்லாம் போடுவார்?
  9. நரேந்திர மோடியை பிரதமராக எப்படி ஓட்டு மொத்த இந்தியாவும் ஏற்றுக்கொள்ளும்?
  10. பீகாரில் , நிதிஷ் குமார் ப.ஜ.க வுடன் சேர்ந்ததால் , லல்லு என்ன செய்வார் ? மூன்றாவது அணிக்கா? அல்லது மீண்டு காங்கிரசுடன் பம்முவாரா?
  11. நவீன் பட்நாயக், புத்த தேவ பட்டச்சாரிய ஆகிய முதலமைச்சர்கள் இன்னும் மூன்றாவது அணியுடன் தான் இருக்கின்றனரா?
  12. ப.சிதம்பரம் தனது தொகுதியில் வேல்லுவாரா?
  13. தமிழ் திரை உலகினரின் எதிர்ப்பு எவ்வளவு தூரம் வெற்றி அடையும்?





Share this:

maheshpirassath said...

என்ன ஹரன் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைத்ததா? எல்லாம் எதிர்மறையாக நடந்துவிட்டது போல…….

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes