
நேற்று போல் இருக்கிறது இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின் அக்டோபர் நாலாம் திகதி. எத்தனையோ எதிர்ப்ர்புக்கலுடன் பயத்துடனும் பல்கலைகழகம் புகுந்த முதல் நாள். அன்றில் இருந்து எத்தனையோ கடந்தாகிற்று , பயம் போய்விட்டது ஆனால் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் எந்த மாற்றமும் இல்லை. வாழ்க்கை சார்ந்த இன்னுமொரு பரிமாணத்துக்குள் நுளைகையில் இந்த நான்கு வருடங்கள் கற்றுத்தந்த பாடம் அத்தனை வலிகளையும் தாண்டி மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்கையின் விசாலமான ஓட்டத்துக்கு எந்தெந்த வழியில் என்னை தயார்படுத்த நினைத்தேனோ அதையும் தாண்டி வாழ்க்கை பற்றிய புரிதலையும் அதன் மனிதர்கள் பற்றிய பாடங்களையும் நிறையவே கற்றுத்தந்துஇருக்கிறது கடந்து போன இந்த நான்கு வருடங்களும்.
Post a Comment