BREAKING NEWS

Like Us

Saturday, May 14, 2011

தமிழர்களே ! தமிழர்களே! நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் ?

கருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற  பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற  போன்ற செய்தி ஆனந்தம் அளித்திருக்கும் என்றே  நம்புகிறேன். 

இரண்டு  வருடங்களுக்கு முதல் இருக்கும்,  இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த நேரம், தமிழக எம்பீக்கள் எல்லாம் இராஜினாமா செய்வதாக அறிவித்தார் கருணாநிதி, பின்னர் அவரது அன்னை சோனியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த நாடகம் முடிவுக்கு வந்தது. பின்னர் ஒரு நாள், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்க அண்ணா சமாதிக்கு வந்தார் கருணாநிதி, பகல் வேளை வரை  காத்துப்பட இருந்து விட்டு சென்று விட்டார், பின்னர்  கலைஞர் தொலைக்காட்சி இப்படி அறிவித்தது, " கலைஞர் உண்ணாவிரதம், போர் நிறுத்தம் அறிவித்தது ராஜபக்சா  அரசு " 

வெறுப்பாக இருந்தது, கோபமாய் வந்தது. நான்கு லச்சம் மக்களின் அவலம் இது போன்ற பச்சோந்தி தமிழ் அரசியல் வாதிகளால் திசை திருப்ப படுகிறதே என்று, அந்த சம்பவங்களின் பின்னரே எம் மக்கள் மீதான ஒட்டு மொத்த பரிதாபமும் நடந்து முடிந்தது. 

முன்பெல்லாம், கருணாநிதி மீது நிறைய மதிப்பு இருந்தது, அவரின் உழைப்பும் தமிழ் ஆற்றலும் அபரிமிதமானது, அனால் அன்றிலிருந்து நான் அதிகம் வெறுக்கும் மனிதராக கருணாநிதியும் காங்கிரஸ் கட்சியும்  மாறியது.    அவரும் காங்கிரஸ் கட்சியும்    படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதே என் சமீப கால  விருப்பமாக இருந்தது. . அந்த விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி இருக்கிறது.
கருணாநிதியின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலுடன் ஏறக்குறைய முடிந்து விட்டது  என்பதில் ஐயமில்லை. உதய சூரியனும் அஸ்தமனமாகி விட்டது. 

இந்த தோல்விக்கு பிறகும் அவருக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருக்குமாயின் ஜெயலலிதா குண்டுக்கட்டாய் தூக்கிவந்து சிறையில் வைப்பார் . அவரது குடும்பத்தில் பலருக்கும்  பலருக்கும் ஜெயலிதா பல இன்ப அதிர்ச்சிகள் கொடுப்பார். அவரின் பழிவாங்கும் உணர்ச்சி பற்றி புதிதாய் எதுவும் சொல்லவேண்டியது இல்லையே. அத வகையில் ஜெயலலிதா வந்தது மகிழ்ச்சியே.


என்ன திடீரென்று ஜெயலலிதா மீது பாசம் என்றெல்லாம் இல்லை, அவா வந்தும் எதுவும் செய்து விட போவது இல்லை, கருணாநிதியை விட மிக திட்டமிடலுடன் கூடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதி ஜெயலலிதா.

கருணாநிதி தோற்க வேண்டும் ,  அவர் தமிழ் சமூகத்தின் காவலராக இருந்து கொமேடியானாக மாறியதால் ஏற்பட்ட ஏமாற்றம் என்பன அடுத்த மாற்றீடான ஜெயலலிதா மீது நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது. காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் தாங்களின் பாவம் இப்போதாவது புரிய வேண்டும்.


ஜெயலலிதா மீது பெரிதாக நல்ல அபிப்பிராயம் இல்லாவிட்டலும் , அவரின் உறுதியும் , போராடும் குணமும் மதிப்பினை உண்டு பண்ணுகிறது.  அதிகம் பிற்போக்கான தமிழகத்தில், ஒரு பெண்ணால் அத்தனை ஆண்களையும் காலில் விழ வைக்க முடியுதென்றால் , அவரின் ஆளுமையின் விஸ்வரூபம் பிரமிக்க வைக்கிறது.

அனாலும், மாநில அரசியலை தாண்டி சாதிக்க  கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் நிறையவே மேன்மைப்பட்ட அரசியல் வாதியாக மாற வேண்டியிருக்கிறது.
அவரின் காய் நகர்த்தல்கள் தேசிய ரேதியாக இருக்க வேண்டும் . காங்கிரஸ் என்கிற நூற்றி இருபது வருட கட்சி பலமானது. அதை வீழ்த்த இளைஞர்கள் இல்லாத இந்துத்துவ கட்சியான ப.ஜ.க வால் முடியாது. எனவே நீண்டகாலத்தில் காங்கிரசை வீழ்த்த ஒரு மூன்றாவது அணி அமைய வேண்டும்.

அப்படி ஒரு மூன்றாவது அணியை , இதர மாநில கட்சிகளை இணைத்து அகில இந்திய அளவில் பலம் வாய்ந்த கூட்டணியாக மாற்ற வேண்டும். சந்திர பாபு நாயுடு , ஜெகன் மோகன் ரெட்டி , நவீன் பட்நாயக், இடது சாரிகளின் பிரகாஷ் கராத், கமுநிஸ்ட் கட்சிகள் அதையும் விட விருப்பம் இல்லாமல் காங்கிரசுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் , மம்தா, சிரஞ்சீவி , போன்றவர்களையும் இணைத்துக்கொண்டால்  ஊழல் நிறைந்த காங்கிரசும் ஒரு நாள் மண் கவ்வும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால்   , பிரதமராகும் வாய்ப்பு கூட இருக்கிறது ஜெயலலிதாவுக்கு.

சரி,  எது எப்படி இருந்தாலும், கருணாநிதி தோற்றுவிட்டார், கடாபி இன்றோ நாளையோ , பாகிஸ்தான் நொந்து நூலாகி தன் இறையாண்மையையும் தொலைத்து விட்டு நிற்கிறது, ஜப்பானில் அணுக்கசிவு, சுனாமி, இங்கோ போர் குற்ற  அறிக்கை, சிறையில் களி தின்னும் யாரோ தளபதி என்று பல சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளில் கோவை எதையோ காட்டி நிற்கிறது, இதைதான்  கேயர்ஸ் தியரி என்று சொல்வார்களோ.  

Share this:

அனானி said...

ஆட்சி மாற்றம் பெரிய அளவில் சந்தோஷ படும் அளவுக்கு இல்லை. அதே நேரம் தமிழக மக்கள் ஆட்சியை மாற்றியதும் ஈழ தமிழ் பிரச்சனைகாகவும் இல்லை என்பதை நாம் நன்கே உணர வேண்டும். ஈழ தமிழ் பிரச்னை தமிழ் நாட்டில் எப்போதும் ஒரு பரிதாப நோக்கம் கொண்ட விஷயமே ஒழிய, தேர்தலில் பாவிக்க கூடிய துரும்பு சீட்டு அல்ல (Always an emotional issue not an electoral issue). அம்மா வந்ததில் சந்தோஷ பட கூடிய ஒரே விஷயம் ' முதுகில் குத்தும் நண்பனை விட நெஞ்சில் குத்தும் எதிரி better என்பதே'

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes