
அண்மையில் வாசித்து முடித்த புத்தகம் இது. மிகவும் பயனுள்ள புத்தகமும் கூட. புத்தகம் என்பது ஒருவருடைய அனுபவங்களை சாரமாக தருகிறது. அந்த வகையில் இந்த புத்தகம் உலகளாவிய பங்குச் சந்தையில் குருவாக கருதப்ப்படும் "Warren Buffett" டின் வெற்றியின் ரகசியங்களையும், அவரால் எப்படி சரியாக பங்குகளை தெரிவுசெய்து மிகப்பெரிய இலாபம் உழைக்க முடிந்தது என்பதற்கான இருபது மூன்று இலகுவான சூட்சுமங்களை இலக்கு நடையில் விபரிக்கிறது இந்த புத்தகம். "Warren Buffett" கனவுகளுடன் திரிபவர்களுக்காக தமிழாக்கி தருகிறேன்.
- உங்கள் தெரிவு இலகுவானதாக இருக்கட்டும் , கடினமானதை தவிருங்கள்.
- உங்களுக்கான முதலீட்டு முடிவுகளை நீங்களே எடுங்கள்.
- மிகச் சரியாக திட்டமிடுங்கள் .
- பொறுமையாக இருங்கள்.
- பங்குகளை வாங்காதீர்கள்..வணிகத்தை வாங்குங்கள்.
- பல் தேசிய கம்பனிகளை கூர்ந்து கவனியுங்கள்
- அதிக தொழில்நுட்பத்தை விட குறைந்த தொழில்நுட்பத்தையே தெரிந்தெடுங்கள்.
- உங்கள் தெரிவுகளில் மட்டும் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
- எப்போதும் செயட்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்கதீர்கள்.
- விலையில் மட்டுமே கவனம் கொள்ளாதீர்கள்
- பங்குச் சந்தையின் சரிவுகளை முதலீட்டுக்கான வாய்ப்பாக கருதுங்கள் .
- இருப்பதில் வித்தியாசம் ஆனதையே தெரிவு செய்யுங்கள்
- பேரண்ட காரணிகளில் (Macro Factors) கவனம் கொள்ளாது , சிற்றின காரணிகளில் (Micro Factors) கவனம் கொள்ளுங்கள்.
- கம்பனியின் முகாமைத்துவத்தையும் , முகாமையாளர்களையும் கணக்கில் கொள்ளுங்கள்.
- சுயாதீனமாக சிந்தியுங்கள், யாரையும் நம்பாதீர்.
- உங்களுக்கு வசதியான வட்டத்துக்குள் மட்டும் நில்லுங்கள்.
- பங்குச் சந்தை எதிர்வு கூறல்களை தவிருங்கள்.
- சந்தை பற்றியும் அதில் உள்ள அபாயம் பற்றியும் விழிப்பாக இருங்கள்.
- மற்றவர்கள் பயப்படும் பொது நீங்கள் துணியுங்கள், மற்றவர்கள் துணியும் பொது நீங்கள் அமைத்து பேணுங்கள்.
- வாசியுங்கள், வாசியுங்கள்..வாசித்த பின் யோசியுங்கள்.
- உங்களால் முடியுமானவரை உங்கள் சக்தியை பாவியுங்கள்
- அடுத்தவரின் விலை மதிப்பான தவறுகளை தவிருங்கள்.
- உறுதியான முதலீட்டாளராக உங்களை நம்புங்கள்.
ரத்தின சுருக்க சாரத்திற்கு நன்றி...
பகிர்விற்கு நன்றி...
24 technique-nu book-la iruku 23 inga iruku ina one enga?
Post a Comment