BREAKING NEWS

Like Us

Friday, March 27, 2009

என் பதிவை படித்து முடிவு எடுக்கும் ஒபாமா.

அப்படி ஒரு தலைப்பு இடுவது நிறையவே ஓவராய்தான் இருக்குது . அனாலும் ஒரு நாலு பேர் அதிகமாய் வந்து என் பதிவை படிக்க மாட்டார்களா என்ற விபரீத ஆசை எப்போது தலைப்பு இடும் போதும் வந்துவிடுகிறது. ஆனாலும் இப்படி தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருக்கு , அதை கடைசியில் சொல்லியிருக்கிறேன் . நான் எதிர்வுகூறிய விவாதித்த சில விடயங்கள் பின்னைய காலங்களில் நடந்தது , அல்லது அது போல கருத்துக்கள் வெளிவந்தன. அது போன்ற சிலவற்றை இப்பதிவில் தொகுத்து இருக்கிறேன்.

கமல்ஹாசன்

"அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள், மற்றைய நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள் ?


இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார் படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்? வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்றைய இந்திய நகரங்கள் பற்றி ? இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழுகிறது . ஆனாலும் இயக்குனர் பொய்யான ஒன்றை கட்டவில்லை, நிஜமான பல விடயங்களையே கட்ட்சிப்படுத்தியிருக்கிறார். நாம் சென்று அமெரிக்க போன்ற நாடுகளின் மக்களையும் , மனிதர்களையும் கேவலமாக பிரதிபலித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா ? ("http://haran5533.blogspot.com/2009/01/slumdog-millionire.html)

இது போன்ற ஒரு கருத்தை நான் ரகுமானுக்கு அஸ்கர் விருது கிடைப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னமே பதிவிட்டு இருந்தேன். அதன் பின்னர் அந்த படம் இந்திய இறையாண்மையை பாதிக்கிறது /இல்லை என்கிற தலைப்புகளில் பல பதிவுகள் , பட்டி மன்றங்கள் எல்லாம் நடைபெற்றன. என் நம்ம கூட இதே தலைப்பில் கலந்துரையாடல் நடை பெற்றது. நேற்று கூட ஒரு விழாவில் நடிகர் கமலஹாசன் படத்தில் இந்தியா பற்றிய உண்மைய தானே காட்டியிருக்காங்க ...எண்டு விமர்சித்து இருந்தார்.

அதிமுக கூட்டங்கள்

"தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாக தான் மிதப்பேன் ...அதி நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் , கவிழ்ந்து விட மாட்டேன்".

என்ற கருணாநிதியின் வீர வசனங்கள் பற்றி ஒரு பத்தி எழுதினேன் , இப்போது எல்லாம் a.தி.மு.க பொதுக் கூட்டங்களில் எல்லாம் இதவை வைத்து தாரளமாக கருணாநிதியை கடிக்கிறார்கள் . அண்மையில் ஜெ யின் உண்ணாவிரதத்தில் நடிகர் குண்டு கல்யாணம் ...மேற்கண்ட விடயம் தொடர்பாக நகைசுவையுடன் பேசியிருந்தார்.

தமிழருவி மணியன்

தமிழகத்தில் ஒரு முன்றாவது அணி அமைவது மட்டுமே நீண்ட காலத்துக்கு தீர்வாக அமையும். அதில் விஜயகாந்தின் கட்சி , சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி , ராமதாசின் ப.ம.க , திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், வைக்கோவின் ம.தி.மு.க போன்ற பெரிய கட்சிகளுடன் சீமான் , தா.பாண்டியன் போன்றவர்களும் சேர்ந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். இல்லாது போயின் மேற்சொன்ன அத்தனை பேரின் பணமும் , நேரமும், அரசியல் கொள்கைகளும் கருணாநிதி , ஜெயலலிதா போன்ற சுயநல அரசியல் முதலைகளால் சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. (http://haran5533.blogspot.com/2009/03/blog-post_12.html)

இந்த பதிவு எழுதி சில நாட்கள் கழித்து தமிழருவி மணியன் , வீரகேசரி நாளிதழுக்காக இதற்குச்சமனான ஒரு கருத்தை சொல்லி இருந்தார். அதாவது தமிழகத்தில் தமிழர் பாதுகாப்பு பேரவையின் பெயரின் ஒரு மூன்றாவது அணி அமைய வேண்டும் என்று.

கடைசியாக ஒபாமா

"இங்க என்ன நடந்தாலும் பரவாயில்லை, எனக்கு ஏன்டா மாமா வெளிநாடுல இருக்கிறார் எண்டு கிளம்ப இருப்போர் கவனத்துக்கு, இத விட மோசமான நிலை தான் அங்க இருக்கு..பெட்ரோல் அடிக்கும் வேலையையும் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்துக்கொல்வதாய் கேள்வி...எனவே வாழமுடியாமல் கிளர்ச்சிகள் வெடிக்கும், வெளிநாடுகளில் வேலை சார்ந்ததாய் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் உருவெடுக்கும்.. இதனால் குடிவரவு கொள்கைகளில் கூட மாறுதல்கள் வரலாம்....வெள்ளைக்காரன் ஆசிய நாட்டவர் மோதல் எண்டு செய்திகள் வரலாம் ...சாப்பாட்டுக்காகவும் கொவ்ரவத்துக்க்ககவும் மனிதன் எந்த நிலைக்கும் செல்வான், அந்த நிலைகளை இனிவரும் கால உலகம் நிறையவே காண வேண்டி இருக்கும்......நவீன மனிதனின் அத்தனை துறைகளிலும் நிதி நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட கிளை பிரச்சினைகளும் கொழுந்துவிட்டு எரியும்"(http://haran5533.blogspot.com/2008/12/blog-post_9314.html)

இது தான் என்னையும் ஒரு பதிவராக்க ஊக்கப்படுத்திய பதிவு . அதில் நான் கூறியது போல , ஒபாமா அரசு பல குடிவரவு கொள்கைகளை மாற்றியிருக்கிறது. அமெரிக்க உட்பட பல நாடுகள் தங்கள் நாட்டின் வேலை வாய்ப்பில் சொந்த தேசத்தவருக்கே முன்னுரிமை என்று வெளிப்படையாகவே அறிவித்து உள்ளது.

எனவே இப்போது நான் போட்ட தலைப்பில் ஒரு அர்த்தம் இருக்கு தானே.

Share this:

ஆ.ஞானசேகரன் said...

நீங்கள் ஒரு முன் யோசி...

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes