
ஏற்கனவே எனக்கு Mr.Mrs iyer மூலமாக அறிமுகமானவர் தான் அபர்னா சென். 2001 இல் வெளியா இந்த படம் உலக அளவில் பெரிதும் பேசப்பட்டு இருந்தது. நான் வாழ்கையில் இதுவரை பார்த்த தரமான இந்தியப் படம் என்று அதனை கூறுவேன். மிகவும் மென்மையாக ஒரு ஆண் பெண் நட்பை அல்லது காதலை மிகவும் அழகாக பல்வேறு புறக் காரணிகளுடன் சொல்வதென்றால் அபர்னா சென் போன்ற தரமான பெண் இயக்குனரால் மட்டுமே முடியும். ஒரு கைக் குழந்தையுடன் கூடிய இந்துப் பெண் , ஒரு முஸ்லீம் வாலிபன் அகிய இருவரின் பஸ் பயணம் , ஜாதிக் கலவரங்களினுடாக எப்படிப் பயணிக்கிறது என்பதே படத்தின் ஒரு வரி கதை. தன் மகளான கொள்கொன்ன சென் சர்மாவை மீனாட்சி என்ற பிராமண தமிழ் பெண்ணாக அப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார் இயக்குனர். ( இவர் தான் இப்போது பெண்களுக்கான ஹோர்லிக்ஸ் விளம்பரத்தில் வருபவர்)
அந்தப் படம் ஏற்படுத்திய அதிகபட்ச ஈர்ப்பு காரணமா 15 park avenue என்ற படம் பார்க்க வேண்டிய ஆவல் ஏற்பட்டது. நான் முதல் கூறிய படம் போல் இல்லை என்றாலும் கூட பல அதிர்வுகளை இந்தப் படமும் ஏற்படுத்த தவறவில்லை. படத்தின் இயக்குனர் , நடிகை மட்டுமல்ல கதநாயகன் கூட முதல் கூறிய படத்தில் இருந்து வேறுபடவில்லை.

ஆனால் mr mrs iyer படம் இரண்டு கதாபாத்திரங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தியிருந்தது , மற்றைய படமோ மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை சுற்றி நடைபெறும் கதையில் பல கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான மனநிலையயும் , ஏகாந்தமாய் அமைந்திருக்கும் முடிவை கொண்டிருக்கும் 15 park avenue இல் சபானா அஸ்மி போன்ற பிரபல்யமானவர்களும் நடித்திருந்தார்கள். மனிதர்கள் பற்றிய நிஜ முகங்களையும் , அவர்களின் சுயநலமான மனித வாழ்க்கை , வாழ்க்கை தொடர்பான சகிப்பு தன்மைகளை அருமையாக காட்சிப்படுத்திய இந்தப் படம் உலகளவில் மிகச்சிறந்த படமாக பேசப்பட்டது.
இரண்டு படங்களுக்குமான காட்சித்துனுக்குகளை இங்கே இணைத்திருக்கிறேன்
நண்பரே.. அபர்ணா சென் இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்.
கொங்கனா சென் அழகிலும் நடிப்பிலும் அருமை.. வார்த்தைகள் இல்லை..
என்னை மிகவும் கவர்ந்தவர். அவரின் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து விட்டேன்.
இதே போன்று மான்சூன் வெட்டிங் திரைப்படத்தையும் பாருங்கள்.
வாழ்க்கையின் மெல்லிய தருணங்களின் இழையோடும் திரைக்கதை கொண்ட திரைபடங்களை விரும்புவர்கள் உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.
நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் அன்போடு அழைக்கிறேன்.
நன்றி.இசை வேறு ஜாகிர் உசேன் போட்டிருக்குது.படத்தை பார்த்துட வேண்டியதுதான்.
நண்பரே நல்ல பதிவு
Post a Comment