பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிகட் வீரர்கள் (மக்கள்) தாக்குதலுக்கு உள்ளானது இலங்கையில் இருக்கிற ஊடகங்களை விட இந்திய ஊடகங்களே அதிகம் அலட்டிக்க்கொள்ளுகின்றன. கடந்த ஆறு மாதத்தில் மும்பை தாக்குதலுக்கு அடுத்தபடியாக ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த நிகழ்வு இதுதான். மும்பை தாக்குதலில் இந்திய மக்களும் ஊடகங்களும் உணர்ச்சிவசப்படுவதற்கு ஒரு நியாயம் இருந்தது. ஆனால் அதே அளவு உணர்ச்சியை NDTVயின் பார்க்க தத்தும் , ஸ்ரீநிவாசன் ரையும் மீண்டும் மீண்டும் படுவதற்குப் பின்னாலும் , இரண்டு நாட்கள் கடந்தும் இந்த சம்பவங்கள் ஆறாமல் இருப்பதற்கும் என்ன காரணம்.?

இந்த ஒரு சம்பவத்தை இந்திய ஊடகங்களும் அதன் அரசியல் வாதிகளும் மிகப் பெரிய பிரச்சாரமாக எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். காய்ந்து பொய் கிடந்த அவர்கள் வாயில் திருப்பதி லட்டு விழுந்திருக்கிறது , அதில் இருந்து உச்ச பயன் பெறுவதற்கான நாடகம் தான் இந்த அதிகப்படியான தேடல்கள். தனது எதிரி நாடான பாகிஸ்தானை இந்த ஒரு சம்பவத்தை வைத்தே மட்டம் தட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம், வீரர்களுக்கு (வெளிநாட்டு மக்களுக்கு) உரிய பாதுகாப்புக்கு அளிக்கவில்லை எண்டு பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் மூக்கால் அழுகிறார்கள். பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்கிரார்கலாம். அப்படி என்றால் மும்பை தாக்குதலில் அப்பாவி மக்களும் வெளிநாடு உல்லாச பயணிகளும் இறந்த சம்பவத்தில் என்ன பாதுகாப்பு வழங்கி கிழித்தார்கள் எண்டு தெரியவில்லை.

இதே சம்பவம் இந்தியாவில் நடந்திருந்தால் , அதே பினாப் முகர்ஜி, இது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி என்று எச்சரிக்கையும் விட்டிருப்பார். தங்கள் பாதுகாப்பின் தாற்பரியம் பற்றி எதுவும் பேசிக்கொள்ள மாட்டர்கள். என்ன நியாயம் இது ? இது போல தான் இந்தியாவின் நியாய அநியாங்களும் சந்தர்ப்பவதங்களும் எல்லாவிடயத்திலும். சங்ககாராவுக்கு காயம் பட்டது எண்டு இந்திய பெண் ஊடகவியலாளர் கண்ணீருடன் கூடிய வருத்தத்தில் கேள்வி கேட்டதையும் , நலம் பெற வேண்டியதையும் பார்த்து எனக்கு அனந்த கண்ணீர் வந்து விட்டது. இந்திய மக்களுக்கு தான் எம் மீது எவ்வளவு பாசம்.
இந்த ஒரு சம்பவத்தை வைத்து தனது எதிரி நாடுகளான பாகிஸ்தானையும் பங்கலதேசையும் (அங்கும் அண்மையில் தீவிரவாத, அரசியல் பிரச்சனை) ஒதுக்கி தள்ளிவிட்டு தனது நெருங்கிய பங்காளியான இலங்கையுடன் சேர்ந்து உலக கோப்பை வைக்க திட்டம் தயாராகி விட்டது. பாவம் பாகிஸ்தான் இந்தியா போல் இல்லாமல் எதையும் நேராகவே சொல்லும்/ செய்யும் நாட்டுக்கு சிக்கல் மேல் சிக்கல்.
இன்னுமொரு தீவிர வாத தாக்குதல் இந்தியாவில் நடந்தால், இந்தியா பாகிஸ்தான் சண்டை மூல வாய்ப்புக்கள் அதிகம். அப்பாவி வீரர்களும் மக்களும் துன்பப் படுவார்கள், அப்போதும் பிரணாப் முகர்ஜி வேடிக்கை பார்ப்பாரோ இல்லை காயமடையும் மக்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எண்டு அறிக்கை விடுவாரோ? வாழ்க இந்தியா , வாழ்க இந்திய ஜனநாயகம்.
காங்கிரஸ் பணம் இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறியது ஆனால் உண்மை நிரூபிக்கபட்டவுடன் ஒத்து கொண்டது .
காங்கிரஸ் ஆயுதம் இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறியது ஆனால் உண்மை நிரூபிக்கபட்டவுடன் ஒத்து கொண்டது .
காங்கிரஸ் இந்திய ராணுவம் இலங்கைக்கு வழங்கவில்லை என்று அடித்து கூறியது ஆனால் உண்மை நிரூபிக்கபட்டவுடன் ஒத்து கொண்டது .
இப்பொது பாகிஸ்தான் பிரச்சனைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்கிறது இது உண்மையா? இல்லை வழக்கம் போல் புலுகல . பொய், பித்தலாட்டம் புழுகல் எல்லாம் சந்தையில் தான் பார்த்தோம். இப்போது பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் சரளமாக புளுகுகிறார்கள். எது எப்படியோ இது இந்தியாவிற்கு நல்லது அல்ல
Post a Comment