BREAKING NEWS

Like Us

Sunday, March 22, 2009

இந்திய அரசின் நடத்தை (attitude) சரி இல்லையாம்: இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கும் புரிந்திருக்கிறது



தன் வினை தன்னைச்சுடும் என்பார்களே , அது போல தான் இந்தியாவின் அணுகு முறை மீண்டும் ஒரு முறை அவர்களையே சுட்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடைபெற வேண்டும் என்று நான் அதிக நாள் எதிர்பார்த்து காத்து இருந்தேன். இலங்கை அணி மீது லாகூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போதுஇந்திய ஊடகங்கள் நடந்து கொண்ட விதமும் , தெரிவித்த காட்டமான கருத்துக்களும் இப்போது இந்தியாவிற்குள்ளேயே உள் வீட்டு பிரச்சனையாகி இன்று உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது.




இந்திய பர்மியர் லீக் என்ற உள்ளூர் போட்டி இப்போது வெளிநாட்டில் நடை பெறுமாம். கேட்கவே சிறு பிள்ளை தனமா உள்ளது. ஒரு உள்ளூர் போட்டிக்கு பாதுகாப்பு தரமுடியாத அரசாங்கம் எப்படி உலக கிண்ண போட்டி , இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில் டில்லியில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகைளை எல்லாம் நடத்தப் போகிறது என்பது ஆட்சியில் இருக்கிற காங்கிரசுக்கும் , டீலா திட்சிதுக்கும் மட்டும் வெளிச்சமான விடயம்.




உலகின ஐந்தாவது பெரிய இராணுவம் என்று பீலா விடும் நாட்டுக்கு , ஒரு கிரிக்கெட் போட்டி , ஒரு தேர்தல் என்ற இரண்டை கூட சமாளிக்க முடியாத நிலை இருக்கிறது என்று தலிபான் தீவிரவாதிகளுக்கு தெரிந்தால் , ஓட்டு மொத்த இந்தியாவையே இரண்டு நாட்களுக்குள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியுமே? ஆக இந்திய உள்துறை அமைச்சின் இந்த முடிவு இது போன்ற ஒரு பலவீனமான ஒரு செய்தியை தான் வெளி உலகத்துக்கு சொல்லியிருக்கிறது.




போட்டிகளில் முதலிடப்பட்ட பணம் , காலம் என்பன தொடர்பில் பலரையும் கவலை கொள்ள செய்திருக்கிறது , டீம் உர்மையாளர்கள் பலரும் கப்பல் கவிழ்ந்தது போல இருந்தார்கள். லலித் மோடி தன்னை ஒரு பெரும் நிர்வாகி என்று காட்டிக்கொள்ள மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். அது எந்தளவு தூரம் வெற்றி தரும் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும் , வெற்றி தாராது என்பதே என்னுடைய அனுமானம்.




பாக்கிஸ்தான் சம்பவத்துக்கு ரா (RAW) தான் காரணம் என்று இன்று செய்தி வெளியான நிலையில் , ஒருவேளை பாக்கிஸ்தான் சம்பவம் போன்று ஒரு கிரிக்கெட் போட்டியின் போது நடந்தால் அது தேர்தலின் ஓட்டு மொத்த முடிவையே பாதிக்கும் என்று சிதம்பரத்தின் ஹர்வர்ட்(HARWARD) மூளைக்கு விளங்கியிருந்தாலும் , அதை எப்படி பக்குவமாக கையாளுவது என்று அவர் படித்த பல்கலைக்கழகத்தில் சொல்லி கொடுக்க வில்லை போலும். நேரடியாக சொல்லாமல் லலித் மோடியை இழுத்தடித்து இருக்கிறார். ..அது கடைசியில் இந்திய அரசின் "பழக்க வழக்கம் " சரியில்லாததால் கிரிக்கெட் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றுகிறோம் எண்டு சொல்லும் வரை கொண்டு வந்து இருக்கிறது. பாவம் காங்கிரசுக்கு தான் எத்தனை சோதனைகள். லல்லு வாழ்க, மாயாவதி வாழ்க, மூன்றாவது அணி வாழ்க... கடைசியாக லலித் மோடி வாழ்க .




Share this:

எட்வின் said...

//உலகின ஐந்தாவது பெரிய இராணுவம் என்று பீலா விடும் நாட்டுக்கு , ஒரு கிரிக்கெட் போட்டி , ஒரு தேர்தல் என்ற இரண்டை கூட சமாளிக்க முடியாத நிலை இருக்கிறது என்று தலிபான் தீவிரவாதிகளுக்கு தெரிந்தால் , ஓட்டு மொத்த இந்தியாவையே இரண்டு நாட்களுக்குள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியுமே?//

கரிக்டா சொல்லிருக்கீங்க

எட்வின் said...

//லல்லு வாழ்க, மாயாவதி வாழ்க, மூன்றாவது அணி வாழ்க... கடைசியாக லலித் மோடி வாழ்க//

வழி மொழிகிறேன் :)

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes