BREAKING NEWS

Like Us

Wednesday, February 1, 2012

Wings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி

நாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருடங்கள் தடைப்பட்டிருந்து, தனது சிறிய தாயுடன் இருந்து கல்விகற்று வரும் அவளது வாழ்க்கை தேடல்கள் மிக சில தான்... சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்ததில் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல் எதோ ஏகாந்தமாய் தான் அவளது கல்வி தொடர்ந்து கொண்டிருக்கிறது.. வயதுக்கு ஏற்ற அறிவு முதிர்ச்சி கூட அவளிடம் குறைவு தான் , பதினான்கு வயதேயான அந்த சிறுமிக்கு தான் வாழ இருக்கும் எதிர்கால வாழ்க்கை தொடர்பான எந்த வித தெளிவும் இல்லவே இல்லை..



அந்தசிறுவன் சற்றே வித்தியாசமாக இருந்தான், குள்ளமான உருவம், எதோ ஒரு துடிப்பான நடவடிக்கைகள் அவனை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்தி இருந்தது, விசாரித்து பார்த்ததில் அவன் தான் முதல் மாணவன், சராசரி எண்பதுக்கும் மேலே இருந்தது. அவனது தேடல்கள் விசாலமானது... அவனுடைய வேகத்த்துக்கு ஏற்ற வளங்கள் அந்த பாடசாலையில் இல்லை, எதோ சாதிக்க துடிக்கும் வேகமும் ஆளுமையும் அவனிடம் இருக்கிறது.. அனாலும் அவனது வசதி வாய்ப்புக்கள் அவனது வேகத்துக்கு இடம் கொடுக்கவில்லை....
 இது போன்று ஏராளமான மாணவர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு போன்ற அதிகமாக போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ளார்கள், இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி அவர்களின் மேம்பட்ட வாழ்வுக்கு வழிகாட்டுவதே, சமூக நோக்கான "Wings to Fly " எமது குழுவின் நோக்கம்.


 இதன் ஆரம்ப கட்டமாக கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கபட்டு பாரமுகமாய் இருக்கின்ற பாடசாலைகளுள் ஒன்றினை தெரிவுசெய்து அங்கு காணப்படும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பிரச்சனைகளை எங்களால் முடிந்தவரை உடல் உழைப்பாலும் கிடைக்கும் நிதி முதல்களாலும் தீர்வுசெய்ய முயற்சித்தோம்.


 ஏற்கனவே அந்த பாடசாலைக்கு சென்று, அதிபருடன் தொடர்பை ஏற்படுத்தி, கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு தரப்பினருடனும் தொடர்பில் ஈடுபட்டு பெற்றுக்கொண்ட அனுபவங்கள் மூலமாகவும் அறிந்து கொண்ட தகவல்கள், கருத்துக்கள் மூலமாகவும் எமது மாதிரிச்செயல்திட்டத்தை கடந்த 20ம் திகதி செயல்படுத்தி இருந்தோம்.


 நாமும், எம் போன்ற எண்ணம் கொண்ட சிலரும் அளித்த நிதி உதவியுடன் , ஏழு பேர் அடங்கிய சிறிய குழுவினர்  கற்றல், விளையாட்டு உபகரண பொதிகளுடன் குறித்த பாடசாலைக்கு நேரடியாக விஜயம் செய்தோம்.


எமது பிரதான இலக்கானது, குறித்த பாடசாலைக்கு நீண்ட காலத்துக்கு ( குறைந்தது இரண்டு வருடம்) தேவையான உதவிகளை செய்து, அந்த மாணவர்களின் கற்றல் இணை பட விதான செயற்பாடுகளை அதிகரிப்பதாகும்...

எமது முதற்கட்ட செயற்திட்டம் பின்வரும் இலக்குகளை கொண்டது,
  • குறித்த பாடசாலை நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்கும் எமக்கும்மிடையிலான நம்பிக்கையை கட்டிஎளுப்புதல்.
  • மாணவர்களுக்கு எமது செயல்திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.எம்மால் வடிவமைக்கப்பட்ட எதிர்கால செயல்திட்டங்களுடன் மாணவர்களது தேவைகள் எதிர்பார்ப்புக்களை பொருத்திப்பார்த்தல்.
  • ஆசிரியர்களின் எண்ணங்கள், கருத்துக்கள், எதிர்பார்ப்புக்களை தெரிந்துகொள்ளல்
  • மாணவர்களின் கற்றல் இணை பட விதான செயற்பாடுகளை அதிகரிப்பதாகான செயத்திட்டன்களை (Career Guidance/ Coounselling) நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
மேலும் குறித்த நன்கொடை பொருட்களை மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு கையளித்ததுடன் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனுமான கலந்துரையாடல்கள் மூலம் பல விடயங்களை கேட்டறிந்துகொண்டோம். ஆசிரியர்களின் அபரிமிதமான ஊக்கமும் ஆதரவும் எமக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. சிறு சிறு அணிகளாக பிரிந்து பத்தாம் வகுப்புக்கு மேற்பட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பேசி அவர்களிடம் கனவுகளை விதைத்தோம்.

  
நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் எமது எதிர்கால செயல்திட்டங்களை வடிவமைக்கவுள்ளதுடன் சில உடனடித்தேவைகளுடன் அப்பாடசாலை எம்மை நாடி நிற்பதனால் எம் அங்கத்தவர்கள் அனைவரின் பங்களிப்புடனும் வெகு விரைவில் அடுத்த செயல்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அது தொடர்பான விபரங்கள் வெகு விரைவில் எமது தளத்தில் பதியவுள்ளோம்.

  
உங்களாலும் எங்கள் முயற்சிக்கு சிறிய அளவிலான பங்களிப்பை வழங்க முடியுமாயின், Wings to Fly என்ற எமது facebook குழுவில் இணைந்து கொண்டு எமது செயற்திட்டங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
இது ஒரு சமூக அக்கறை நோக்கான குழுமம் . அரசியல், மொழி, இனம் சாராததாக எமது நடவடிக்கைகளும் பிரதிபலிப்புக்களும் இருக்கட்டும்.


ஒவ்வொரு செயல்த்திட்டங்களையும் ஒவ்வொரு சிறகுகளாய் கொடுத்து மாணவர்களை கல்வி வானில் சிறகடிக்கச்செய்வோமாக..
Wings To Fly...
 You were born with potential
 You were born with goodness and trust
 You were born with ideas & Dreams
 You were born with greatness
 You were born with wings
 Learn to use them to fly..

                                    - Jalaluddin Rumi
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes