BREAKING NEWS

Like Us

Tuesday, September 25, 2012

BARFI ! ..யும் சில எண்ணங்களும்

ஒவ்வொரு நாளுமே பார்ப்பேன், அந்த எழு வயது சிறுமியை.. ஆபிசுக்கு வெளியே உள்ள பெட்டிக்கடையில் சிகரட் பிடிக்க வருபவர்களிடம் இரந்து கொண்டு இருப்பாள், யாரும் கண்டு கொள்வதே இல்லை..

மெலிந்து போன சிறுவன், பிள்ளையார் வேஷம் போட்டிருந்தான், சிக்னலில் பிச்சை எடுத்துகொண்டு இருந்தான். விநாயகர் சதுர்த்தி காலம் இது, மும்பையில் விசேடமாக கொண்டாடப்படுகிறது. கடவுள்களும் பிச்சை எடுப்பது இந்தியாவில் மட்டும் தான் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது..
தினமும் நான் ஏறும் ரிக்க்ஷா காரர்களின் முகத்தில் ஒரு சோகம் ஓட்டிக்கொண்டே இருக்கிறது, அவர்களுக்கு புரிந்த ஆங்கிலத்திலும், சைகை மொழியிலும் கேட்பேன், பெரும்பாலும் அவர்கள் பீகார், உத்தர பிரதேஷ் போன்ற வறுமைப்பட்ட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள். அவர்கள் சுமக்கின்ற களைப்பும் சோகமும் வார்த்தைகளில் வராதது .. பின்னிரவுகளிலும், தூக்கம் மறந்து, யாராவது வந்து ஏறமாட்டார்களா என எதிர்பார்த்திருக்கும் அவர்கள் ஒவ்வொருவரையும் நம்பி, ஒரு குடும்பம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. கடைகளில், உணவகங்களில் வேலை செய்பவர்கள் எல்லாம் இரவுகளில் ஆடு மாடுகளை போல வீதிகளில் தான் படுத்து உறங்குகிறார்கள்.

மும்பை என்ற கனவு தேசத்தில் வசிப்பவர்கள், சக  மனிதனை   மனிதனாகவே மதிப்பது இல்லை, மேலே சொன்ன கடை நிலை மனிதர்களை எல்லாம் ஒருமையில் தான் அழைக்கிறார்கள். மற்றவன் தொடர்பான அக்கறையோ, கரிசனையோ, அன்போ, நட்போ கிடையவே கிடையாது. நான் மட்டுமே வசதியாக வாழ்ந்தால் போதுமென்று நினைக்கிறார்கள், எண்ணற்ற மனித அடர்த்தியும் , போட்டியும் அவர்களை மாற்றிவிட்டிருக்கிறது..

(எஸ். ராமகிருஷ்ணன் கதைகளை தேடி தேடி படித்ததாலோ என்னவோ இந்த விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய அவதானிப்பு இருந்து கொண்டே இருக்குறது) இப்போது விகடனில் ஒரு எழுத்தாளர் அதே பாணியில் எழுதுகிறார்.    


எம்மிடம் இல்லாத ஒன்றையோ , கிடைக்காத ஒன்றையோ நாம் சேலேபரெட் பண்ணுவம், கொண்டாடுவம்.. அதனால் தானோ என்னவோ காதல் , அன்பு , இறக்கம் என்கிற அடிப்படை மனித குணங்களை நேர்மையாக காட்டும் படங்கள் இங்கு வெற்றி பெறுகுது. கிட்ட தட்ட அமெரிக்ககாரன் வேற்று கிரக வாசிகளையும், வினோதமான உயிரினங்களையும் திரைக்கு கொண்டு வருவதை போல.



பர்பி , அத்தனை அழகான படம், உணர்வுகள் குறைந்த சாதாரண மனிதர்களின் உலகம் தவிர்த்து.. மாற்று திறனாளிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது.

ஒரு சாதாரணமான முக்கோண காதல் கதை, சொல்லப்பட்ட விதத்தால் அழகு பெறுகிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழர் ரவி வர்மன் (tp://en.wikipedia.org/wiki/Ravi_varman ) அத்தனை பிரேம்களிலும் அழகு. பல இடங்களில் மூன்றாம் பிறை டச் இருக்கிறது. எடுக்கப்பட்ட இடமும் அது போன்ற ஒரு இடம் தான்.


பிரியங்கா சோப்ரா தனித்து தெரிகிறார், என்ன ஒரு பக்குவப்பட்ட நடிப்பு, Fashion / BARFI .. போன்ற கதைகளை தெரிந்து நடிப்பதற்கே ஒரு தனி துணிவு வேண்டும். அது நிறையவே இருக்கிறது , இருபத்து எட்டு வயதிலும் இரண்டாம் வகுப்பு குழந்தையாய் நடிப்பதற்கு.. அண்மையில் PC வீடியோ பார்த்தேன்.. இதையும் பார்க்கவும்..

http://www.youtube.com/watch?v=NCIFymwreZ4&feature=related



ரன்பீர் cute ஆக இருக்கிறார்.. அனைவருக்குமே பிடித்திருக்கும் பர்பி என்ற பாத்திரம். .செமையாய் ஸ்கோர் பண்ணுகிறார்.. மூன்றாம் பிறை கமல்ஹசன், சார்லி சாப்ளின் , மிஸ்டர் பீன் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணினால் ஒரு Charecter வருமே அது தான் பர்பி. கேட்க பேச முடியாத பர்பி செய்யும் சேட்டைகள் காமெடி கலக்கல் .

கடந்த 6 வருடங்களில், இலியானாவின் இடுப்பு சைஸ் ஒரு இன்ச் கூட மாறவில்லையாம், நாம எல்லாம் இலியானட இடுப்பிலையே நிறைய மினக்கிட்டதால், வேற எதையும் பார்க்கல.. என்னமாய் expression காட்டுறார். இலியானவுக்காக இன்னொமொரு தடவை பார்க்கணும் போல இருக்கு பர்பியை.

எனக்கு என்னவோ ஆஸ்கார் கிடைக்கும் எண்டே தோணுது.. வெள்ளைகாரனை கவர நிறைய பிளஸ் இருக்கு இந்த படத்தில், அதிகம் வள வள டைலாக் இல்லாமல் expression ல படம் ஓடுவதால் .. எனக்கும் கூட விளங்கிச்சு பர்பி.. அவசியம் பார்க்கவும் . .

Share this:

Ragu said...

அமெரிக்க காரங்களுக்கு வேற்று கிரக வாசிகள் எவ்வாறு அந்நியமோ, அதே போல் தான் இந்தியாவிற்கு (இலங்கை போன்ற நாடுகளுக்கும்) மனிதாபிமானங்கள் என்ற கருத்துரைப்பு டச்#,
இந்த படம் பல படங்களின் நகல் என்ற கதை உலாவுகிறது அதனால் ஆஸ்கார் தூரம் என்று நினைக்கிறன், மற்று இந்த படத்தினால் தான் "வழக்கு எண்" படம் ஆஸ்காருக்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடதக்கது...)
வழமை போல சிறந்த நடை, இலியானவிற்காக பார்கதோன்றுகிறது...)

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes