BREAKING NEWS

Like Us

Monday, August 9, 2010

TWO STATES : ஒரு தமிழ் பொண்ணும், பஞ்சாபி பையனும்

முதன் முதலில்  ஆங்கிலத்தில் நாவல் type ஆன புத்தகம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன், இருநூற்றைம்பது பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த நாவல், ஒரு காதலில் இருந்து  , கல்யாணம் வரையிலான  கதையினை சொல்ல வருகிறது. சேட்டன் பகத் நவீன எழுத்தாளரால் படைக்கப்பட்டு இருக்கும்  இது  , இன்றைய இந்தியாவின் இளைய வாசகர்களின் கைகளில் தவழும் Best Selling  நாவல்.

எனக்கு ஆங்கில புத்தகங்களில் அதிகம் நாட்டம் இல்லை தான் ,   I AM LOOSING MY VERGINITY என்ற Richard Brandson நின் அறுநூறு பக்க புத்தகத்துக்கு பிறகு, நீண்ட காலத்துக்கு பின் வாசித்த புத்தகம் இது. இதை வாசித்த பிறகு சில பல காரணங்களால் ஆங்கில புத்தகங்களில் மோகம் பிடித்திருக்கிறது.

கிரீஸ் என்ற பஞ்சாபிக்கும், அனன்யா என்ற தமிழ் பிராமின் பொண்ணுக்கும் இடையில் வரும் காதல் இரு தரப்பினரரின் கலாச்சார முரண்பாடுகளிநூடே பயணித்து, பெற்றோரின் சம்மதத்துடன் எப்படி நிறைவேறுகிறது என்பதே சுவாரசியம் நிறைந்த இந்த நாவலில் சுருக்கம். இது எழுத்தாளரின் சொந்த கதை, IIM இல் MBA படித்த சேட்டன் பகத் கூடப் படித்த பிராமின் பெண்ணை காதலித்த கதையை  தான்
2 states நாவலாக , ஒரு வகையில் சொல்லவதானால் சுயசரிதையாக எழுதியிருக்கிறார்.

சேட்டன் பகத் இந்தியாவின் வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் ஒருவர். மிக குறுகிய காலத்தில், Best selling புத்தகங்களின் எழுத்தாளராக மாறி இருப்பவர். அவரின் புத்தகங்களை தழுவியே ஆமிர் கான் நடித்த 3 Idiods படம் வெளிவந்தது. அவரின் புதுமையான, வெளிப்படையான கதை சொல்லும் பாணி, இளைஞர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுத்தந்திருக்கிறது.

இந்தியாவில் காதல் என்பது ( ஏன் இங்கும் தான்) ஒரு ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறது, ஒரு பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறது என்பதை தாண்டி, திருமணம் வரையில் செல்கையில் அந்த ஆணின் குடும்பத்துக்கு பெண்ணின் குடும்பத்தை பிடித்திருக்க வேண்டும் , பெண்ணின் குடும்பத்துக்கு ஆணின் குடும்பத்தினை பிடித்திருக்க வேண்டும் என்பதாகவும், சம்பந்தப்பட்ட அந்த ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அவர்களில் குடும்பங்களையும் விரும்ப  வைக்க வேண்டும் என்ற சிக்கலான  இந்திய உறவுகளின் முரண்பாட்டினை சொல்லி ஆரம்பிக்கிறது நாவல்.

தம் காதலை நிறைவேற்றுவதற்காக, தங்கள் குடும்பத்தினரை compromise செய்ய ஆனநயாவும், கிரிஷும் செய்யும் போராட்டங்களும், அவர்களின் காம்பஸ் வாழ்கை, வேலைக்கான போராட்டங்கள் , காதலின் தவிப்புக்கள், சின்ன சின்ன சண்டைகள் , அவர்களில் பெற்றோர்களில் சிறு பிள்ளை தனமான செயற்பாடுகள் , தமிழ் , பஞ்சாபி கலாச்சார முரண்பாடுகள் மிக எளிய வார்த்தைகளால் புதுமையாக உணர வைக்கப்பட்டு இருக்கிறது.

சாதி , இனம், மதம், மொழிகளை கடந்து காதல் செய்யும்  இளைய உள்ளங்களின் அங்கீகரிக்கப்படாத பாட நூலாக மாறி , ஐம்பது  பதிப்புகளுக்கு மேல் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது , 
சேட்டன் பகத் எழுதிய இந்த  2 STATES
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes