BREAKING NEWS

Like Us

Friday, November 19, 2010

மனசுக்குள்ள மைனா...மைனா

மைனா நல்ல படமா, ரசனைக்குரியதா, எல்லோருக்கும் பிடிக்குமா  என்று எனக்கு சொல்ல தெரியல, ஆனாலும் எழுதணும் போல இருந்திச்சு மைனாவ பற்றி, எதோ அங்கங்க ஒரு தரமான ஆர்ட் ப்லிமுக்கான சாயல் தெரியுது, ஒளிப்பதிவாளர் நிறையவே மினக்கெட்டு இருக்கிறார்.. பசுமையான அந்த  இயற்கையை அப்படியே ரசிக்க தருவதற்கு. ஒட்டு மொத்த படமும் கண்களுக்கு குளுமை.   

விளம்பரங்கள் உணர்வுகளை தூண்டியது , நண்பன் ஒருவன் நல்ல இருந்திச்சு என்று பேஸ் புக்குல போட்டான்.  காதலாகி,  கசிந்து , கண்ணீர் மல்கி , படத்த பற்றி நிறைய பேர் பேசினதால அப்படி என்னதான் காதல் , அது எப்படியிருக்கும் எண்டு பார்க்கவேண்டும் போல இருந்திச்சு. எங்க போகுது என்று தேடிப்பாத்தால், கேபிடல் - கொழும்பு என்று இருந்தது. கொழும்புலையே மிக மோசமான திரையரங்கு என்றால் இது தான்...அதனால் தான் என்னவோ பால்கனி டிக்கெட் நூற்று ஐம்பது ரூபாவுக்கு தருகிறார்கள். பல அசொகரியங்களுடன் படம் பார்க்க நேரிட்டது. 

இந்த திரையரங்கில் நான் படம் பார்க்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இது, இதற்கு முதல் சுமார் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னால தனுஸ் , ப்ரியா மணி நடித்த ஒரு படம், பாலு மகேந்திரா நீண்ட நாட்களுக்கு  பிறகு இயக்கி இருந்தாரு.. படத்தினுடைய பேரு கூட "அது ஒரு கனாக்காலம்"  என்று நினைக்கிறேன். அது ஒரு தரமான படம். அத இங்க சொல்ல நிறைய காரணம் இருக்கு , மைனா படத்துக்கும் அந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இல்ல. இரண்டுமே ஒரே மாதிரியான கதை, திரைக்கதை ..சம்பவங்கள் கூட ஒரே மாதிரி தான் இருந்திச்சு  எனக்கு, என்ன அந்த படம் கொஞ்சம் நடுத்தர வர்க்கத்து கதை, இது அடித்தட்டு மக்களின் கதை என்றபடியால் உணர்வுகளும் வன்முறைகளும் கொஞ்சம் வேற  மாதிரி இருந்தது.  ஆனாலும் நான் ஒரே திரையரங்குல, ஒரே நண்பர்களுடன் பார்த்த ரெண்டே ரெண்டு படமும் ஒரே மாதிரி இருந்தது நிறையவே ஆச்சரியமாக இருந்த்தது. 

கதையின் நாயகன் விதார்த் கூத்துப் பட்டறையில் இருந்து வந்திருக்கிறார். கலைந்த கேசமும் கசங்கிய சட்டையுமாய் தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். அந்த பொண்ணும் தேர்ந்த நடிப்பால மனசுல நிக்குது. இரண்டு பேருக்கும் இடையில இருக்கிற காதலும் சில பாடல்களும்  தான் படத்துல ரசனைக்குரிய பகுதி. 

அனாலும், சுருளி என்கிற கதாநாயகனுடைய கரெக்டேரை நியாப்படுத்தும் விதம் தான் எனக்கு முரண்பாட இருக்குது. நாயகன் சுருளி சிறு வயதிலேயே ரவுடி போல் வளர்கிறார், அப்பா , அம்மா , ஏன் மைனாண்ட  (காதலி) அம்மாவை கூட அடித்து துவைத்து விடுகிற வீட்டு வன்முறையாளன் என்கிற வகையில் சித்தரிக்கபட்டிருக்கிறது. ஆனா அவருடைய  காதல் மட்டும் அப்படியே மென்மையாக விழியில் விழுந்து , இதயம் நுழைந்து , உயிரில் கலந்து நிக்குதாம். காதல் பண்ணேக்க மட்டும் சுருளி மல்டிபல் பெர்சொனளிட்டி ஆவது நிறையவே முரண்பாட இருக்குது. ஒரு வன்முறையாலனது காதல் மட்டும் எப்படி இவ்வோளவு மென்மையா இருக்கிறது என்கிற தமிழ் சினிமாவின் ஆண்டாண்டு கால கோட்பாடு எனக்கு குழப்பமா இருக்குது. 

ஏட்டு தம்பி ராமையா வும், அவர   கூட்டிக் கொண்டு சுருளிய தேடி  மலைக்கிராமத்துக்கு வரும் இன்ஸ்பெக்டரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.  தம்பி ராமையா நிறை இடங்களில் சிரிக்க வைக்கிறார், அவரின் ரிங் டோன்  'மாமா... நீங்க எங்க இருக்கீங்க...' வைத்து பல இடங்களில் வெவ்வேறு விதமாய் டைரக்டர் சொல்லி இருக்கும் காமெடிஅருமையான கற்பனை. இதே மாதிரி தனுசை தேடி வரும் இரண்டு போலிஸ் கரெக்ட்டர் நான் மேலே சொன்ன பாலு மகேந்திர படத்திலும் இருந்தது. படம் நன்றாக போகிறது,கிளைமாக்ஸுகளுக்கான நல்ல நல்ல இடங்களையெல்லாம் தவறவிட்டுக்கொண்டு வரும் போதே அனுமானிக்கமுடிகிறது, காவியம் படைப்பதற்காக ஒரு ட்ராஜிடிக் முடிவுடன் இயக்குனர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று. நினைத்தது நடக்கிறது..கடைசி பதினைந்து நிமிடங்களும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் , ஆஹா , ஒஹோ என்று இருக்க வேண்டிய படத்தை ,எதோ ஒரு வலியுடன், ஆழமான மௌனத்துடன், விடை தெரியாத கேள்விகளுடன்  முடித்து வைக்கிறது.  படம் பார்த்த ஒரு திருப்தி இல்லை. .
முடிவு தொடர்பில் எனக்கு உடன் பாடு இல்லை. எனவே நான் இயக்குனராக  இருந்தால்..


சீன் -86
கதாநாயகனை, மீண்டும் ஜெயிலில் கொண்டு வந்து விடுகிறார் இன்ஸ்பெக்டர்..... 
..
..
...
...


என்ற இடத்தில தொடங்கி ...வேறு மாதிரி இருந்திருக்கும். 


மொத்தத்தில் காதலர்கள் சேருவார்களா,சேர மாட்டார்களா என சஸ்பென்ஸ்  மெயிண்ட்டன் பண்ணுவதில் டைரக்டர் ரொம்ப தெளிவாக இருந்தும், அது தான் படத்தின் ஆதாரம் என்று தெரிந்தும்.... முடியாமல் முடிகிறது மைனா. 

Thursday, September 23, 2010

கூட்டத்தில் நான் தேடிய செவ்வந்திப்பூக்கள்....

பிறந்தது முதலே எம் வாழ்க்கை பல தெரிவுகளின் ஊடாக தான் பயணித்துக்கொண்டு இருக்கிறது. யதார்த்தமாக,  எம்  ரசனைக்கு  ஏற்ப தெரிவுகளை அமைத்துகொள்வதிலே நாம்  அதிகம் நேரம் செலவிடுகிறோம். நாம், எம் வாழ்க்கை என்பதே நாம் சார்ந்த தெரிவுகளின் பிரதி விம்பம்   தான்.  

ஆறாவது தடவையாக இருக்கும் என நினைக்கிறேன் , புத்தகத் திருவிழாவுக்கு இந்த முறை நான் செல்வது. வழமை போலேவே இருந்தது கூட்டம், இம்முறை அனைத்தையும் குறுகிய நிலப்பரப்புக்குள் அடக்கியது நிறையவே நெருக்கடியாக இருந்தது.

இருந்தும்  பூபாலசிங்கம் புத்தக சாலை, கிழக்கு பதிப்பகம் , சேமமடு புத்தக நிலையம், எக்ஸ்போ கிராபிக்ஸ் நிறுவனங்களில் தேவையானவற்றை வாங்கிகொண்டேன். நான் வழைமையாக வாங்கும் குமரன் பதிப்பகத்தை இம்முறை காணவில்லை. இம்முறை வியாபாரம் சிறப்பாக இருப்பதாக பலரும் சொன்னார்கள்.  

கடல் போன்ற புத்தகங்களிடையே  ஏன் ரசனைகுரியவற்றை தெரிவது என்பதே மிக கடினமான காரியம் தான். முதலில் போனது சேமமடு புத்தகசாலைக்கு , இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், என்ரசனைக்குரிய தரமான தெரிவுகள் இருந்தன.  நான் நிறைய புத்தகங்களை எடுப்பதை பார்த்த ஒரு அக்கா, விலை இந்திய ரூபாவில் இருப்பதாக கூறிச்சென்றார். இது எங்களுக்கு தெரியாதாக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

முதலில் எடுத்தது சோம வள்ளியப்பன் எழுதிய , "யார் நீ" என்ற , பல்வேறு பெர்சனலிட்டிகளை ஆராயும் ஒரு புத்தகம், உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒன்பது பெர்சனலிட்டிகளுக்குள் அடக்கிவிடலாம் என்று தொடங்குகிறது அந்த புத்தகம்.

சோம வள்ளியப்பன் என்ற எழுத்தாளருடனான ஏன் அறிமுகம் அனந்த விகடனில் இருந்து ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன் பல தன்னம்பிக்கை தொடர்கள், பின்னர் நாணயம் விகடனில் பல பணம் பண்ணும் முறைகளை தந்தவர் என்றவாறாக நினைவு இருக்கிறது.

மீண்டும் பங்குச்சந்தை பற்றிய நுணுக்கங்களை சொல்லும் , அள்ள அள்ள பணம் என்று புத்தகம் , தொடராக வெளிவந்த ஐந்து புத்தகம்கள்  இருந்தன . தொடராக  வருபவற்றில் முதலாவது எப்போதும்  சிறந்ததாக இருக்கும் , வாங்கிகொண்டேன். 


கடந்த முறை "சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்" என்ற ஒரு புத்தகம் வாங்கினேன். மிகவும் பயனுள்ளதாக  இருந்தது. எனக்கு என்னவோ தமிழில் எம் பாடவிதானங்களை படிப்பது ஆழமாக விளங்க கூடியதாகவும் , ஆர்வமானதாகவும் இருக்கிறது. எனவே இம்முறையும் அப்படி ஒரு புத்தகம் ஏன் தொழிலுக்கு உதவலாம் என்கிற நினைப்பில்.

அடுத்து போனது கிழக்கு பதிப்பகத்துக்கு, ஏன் விருப்பத்துக்குரிய சுஜாதாவின் புத்தகங்களுக்கு யாருக்கு பதிப்புரிமை இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அனாலும், இங்கு அவரின் அனைத்து குறு நாவல்களும் விரும்பிய வகையில் புதுப்பதிப்பிடப்பட்டு இருந்தது கொஞ்சம் ஆச்சரியத்தை தந்தது. அவரின் எழுத்துகள் மலினப்படுத்தப்பட்டு போய்விட்டதோ என்று எண்ணிக்கொண்டேன்.  அவரின் எழுத்துக்கள் மீதான ஏன் விசுவாசத்துக்காகவே நைலான் கயிறு என்ற குறு நாவரை வாங்கி கொண்டேன். மருதன் என்ற ஒரு எழுத்தாளர் , முன்னரும் எதோ ஒரு வரலாறு சம்பந்தமான புத்தகம் வாசித்திருக்கிறேன்.  இம்முறை இரண்டாம் உலகப்போரின் முழுமையான கதையை சொல்லும் ஒரு புத்தகத்தை ஆர்வமூட்டியதால்  வாங்கினேன்.

அடுத்து சென்றது , எனக்கு நெருக்கமான பூபாலசிங்கத்துக்கு , அங்கும் அதிகப்படியான தெரிவுகள் ஆசையை ஊட்டின. கவிதை புத்தகங்கள் வாசித்து நிறையவே காலமாகிறது. செழியன் என்று ஒரு எழுத்தாளர் , ஒரு ஒளிப்பதிவாளரும் கூட. கல்லூரி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். முன்னரும் உலக சினிமா தொடர்பான அவரின் ஒரு புத்தகம் வாசித்திருக்கிறேன் . காதல் கவிதைகள் உள்ள புத்தகம் "வந்த நாள் முதல்..."  கவிதைகள் மீதான ஏன் தாகத்துக்காக.

கடைசியாக , ஏன் விருப்பத்துக்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் , வாழ்க்கை பற்றிய பல்வேறு புரிதல்களையும் அனுபவங்களையும் பேசுபவர். "துணை எழுத்து" என்ற புத்தகம் ஏற்கனவே விகடனில் அங்கும் இங்குமாக வாசித்திருக்கிறேன் . அவரின் வலி நிறைந்த எழுத்துகளின் முழுமையான சுகத்துக்காக வாங்கிகொண்டேன். 

கடைசியாக இரண்டு ஆங்கில புத்தகங்கள்  வாங்கிகொண்டு திரும்பினேன், ஒன்பது புத்தகங்களையும் எடுப்பதில் நான்கு மணித்தியாலங்கள் கடந்திருந்தது. ஆனாலும் வருடத்தில் ஒரு நாள் மட்டும் கிடைக்கும் ஆயிரம் ஆயிரம் புத்தகங்களை தொட்டுப்பார்க்கும் , நுகர்ந்து பார்க்கும் ஒரு சுகானுபவத்துக்காக அடுத்தவருடமும் காத்திருக்கிறேன், நான் தேடிய செவ்வந்திப்பூக்களுடன்.

Sunday, September 12, 2010

எவனோ ஒருவன் வாசிக்கிறான்.....இருட்டில் இருந்து

வாழ்க்கை என்பதே பல மனிதர்களும், அவர்களின் வேறுபட்ட முகங்களும் சங்கமித்துக்கொள்ளும் பல நிகழ்வுகளின் கோவை தான். இதனை வருட வாழ்க்கையில் எத்தனை மனிதர்களை சந்தித்திருக்கிறோம். அவர்கள் தொடர்பான ஆயிரம் ஆயிரம் நினைவுகளுடன்  தான் வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறது .சன் டிவியில் ஏந்திரன் திரைப்படத்துக்கான trailer வெளியிட்டுக்கொண்டு இருந்தார்கள். ரஜினி , வைரமுத்து, பார்த்தீபன்  என்று  சில பல முக்கியமான நபர்களின்  பேச்சுக்களை கேட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோருமே  கலாநிதி மாறனை புகழ்வதிலேயே காலத்தை செலவழித்துக்கொண்டு இருந்தார்கள், படத்துக்கான அனைத்து  விசுவல் வெளிப்பாடுகளிலும் ஏந்திரன் என்ற பெயரை விட கலாநிதி மாறன் என்ற பெயரே பெரிய சைஸ் எழுத்துக்களாக இருந்தது. பணத்துக்கு தான் அத்தனை பலமும் இருக்கிறது, யார் என்ன சொன்னாலும்.

பரவாயில்லை,  இத்தனைக்கும் நடுவில் இக்கதையில் நாயகனின் சுஜாதாவின்  பெயர் இருக்கிறதா என்று தேடினேன், ஏன் கண்ணில் படவில்லை , யாராவது நினைவு படுத்துகிறார்களா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன், இல்லவே இல்லை.. நான் அறிந்து ஏந்திரன் படம் சுஜாதாவின் "ஏன் இனிய இயந்திரா" என்ற நாவலை தழுவியதே. சுஜாதா  இறப்பதற்கு சில மதங்களுக்கு முன்னமே அவரின் எழுத்தில் ஏந்திரன் படத்துக்கான ஒட்டு மொத்த திரைக்கதையும் இறுதிப்படுத்தப்பட்டு விட்டது. சங்கரின் படங்கள் விறுவிறுப்பாகவும் , சமச்சீரகவும் இருப்பதற்கு சுஜாதா என்ற மனிதரின் பங்களிப்பு அபரிமிதமானது. இந்தியன், முதல்வனில் இருந்து சிவாஜி வரை  ஒரு படத்தின் உயிர் நாடியான திரைக்கதையை எழுதியது சுஜாதாவே.

ஒவ்வொரு படங்களிலும் எப்படி சம்பவங்கள் பிணைக்கப்பட்டன எளிமையாக மாற்றப்பட்டன, பக்கம் பக்கமாக வசனம்  பேசாமல் எப்படி குறியீடுகளால் காட்சிகள் அமைக்கப்பட்டன என்ற தகவல்கள் " திரைக்கதை எழுதுவது எப்படி " என்ற சுஜாதா எழுதிய புத்தகத்தில் அருமையாக பதிவு செய்யப்பபட்டிருக்கிறது. திரைக்கதை உலகத்துக்கு அவரின் பங்களிப்பு ஆழமானது.

இருந்தும்  இத்தனை பிரமாண்டங்களுக்கு  மத்தியில் எந்திரனின் மூலக் கதையின் சொந்தக்காரர் சுஜாதா மறக்கப்பட்டார் என்பது வேதனையான விஷயம் தான்.  இறந்து போனால் மறந்து போகின்ற வாழ்க்கை ஒரு கலைஞனுக்கோ படைப்பாளிக்கோ இல்லையே....

அப்படி இந்த வாரம் மறைந்து போன இருவரின் நினைவுகள் மனதை அழுத்துகிறது.

முரளி......
ஒன்று  நாற்பத்து ஆறு வயதில் மாரடைப்பால் இறந்து போன முரளி.  நான் சிறு வயதுகளில்  பார்த்த ஏராளமான படங்களின்  நாயகன். அமைதியான  அழுத்தமான காதல்  கதைகளுக்கு பொருத்தமான நடிகர்.

இதயம் இன்னும் நினைவுகளில் நிற்கிறது. படம் முழுவதும்  காதலை சுமந்து கொண்டு, அதை கடைசிவரை வெளிப்படுத்தாமலே அவர் காட்டிய தவிப்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது . முகம் முழுதும் சோகத்தை ஒட்டிக்கொண்டு அவர் நடித்த பொற்காலம்,   பகல் நிலவு , வெற்றி கோடி கட்டு போன்ற படங்கள் மறக்க முடியாதது.  சிறு வயதுகளில் ஏன் பல மணிநேரங்களை ரசிக்க வைத்த  பிடித்து போன  நடிகனுக்கும்
ஸ்வர்ணலதா.....
 ஸ்வர்ணலதா, எத்தனையோ பாடல்கள் கேட்டிருக்கிறேன், ஆனாலும் இந்தப் பாடலுக்காகவே அதிகம் நேசிக்கிறேன், என் உறக்கம் இல்லா முன்னிரவுகளில் இரவுகளில் ஒலித்து ஓயும் "எவனோ ஒருவன்" தந்த ஜீவனுக்கும் அஞ்சலிகள்.

Monday, August 9, 2010

TWO STATES : ஒரு தமிழ் பொண்ணும், பஞ்சாபி பையனும்

முதன் முதலில்  ஆங்கிலத்தில் நாவல் type ஆன புத்தகம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன், இருநூற்றைம்பது பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த நாவல், ஒரு காதலில் இருந்து  , கல்யாணம் வரையிலான  கதையினை சொல்ல வருகிறது. சேட்டன் பகத் நவீன எழுத்தாளரால் படைக்கப்பட்டு இருக்கும்  இது  , இன்றைய இந்தியாவின் இளைய வாசகர்களின் கைகளில் தவழும் Best Selling  நாவல்.

எனக்கு ஆங்கில புத்தகங்களில் அதிகம் நாட்டம் இல்லை தான் ,   I AM LOOSING MY VERGINITY என்ற Richard Brandson நின் அறுநூறு பக்க புத்தகத்துக்கு பிறகு, நீண்ட காலத்துக்கு பின் வாசித்த புத்தகம் இது. இதை வாசித்த பிறகு சில பல காரணங்களால் ஆங்கில புத்தகங்களில் மோகம் பிடித்திருக்கிறது.

கிரீஸ் என்ற பஞ்சாபிக்கும், அனன்யா என்ற தமிழ் பிராமின் பொண்ணுக்கும் இடையில் வரும் காதல் இரு தரப்பினரரின் கலாச்சார முரண்பாடுகளிநூடே பயணித்து, பெற்றோரின் சம்மதத்துடன் எப்படி நிறைவேறுகிறது என்பதே சுவாரசியம் நிறைந்த இந்த நாவலில் சுருக்கம். இது எழுத்தாளரின் சொந்த கதை, IIM இல் MBA படித்த சேட்டன் பகத் கூடப் படித்த பிராமின் பெண்ணை காதலித்த கதையை  தான்
2 states நாவலாக , ஒரு வகையில் சொல்லவதானால் சுயசரிதையாக எழுதியிருக்கிறார்.

சேட்டன் பகத் இந்தியாவின் வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் ஒருவர். மிக குறுகிய காலத்தில், Best selling புத்தகங்களின் எழுத்தாளராக மாறி இருப்பவர். அவரின் புத்தகங்களை தழுவியே ஆமிர் கான் நடித்த 3 Idiods படம் வெளிவந்தது. அவரின் புதுமையான, வெளிப்படையான கதை சொல்லும் பாணி, இளைஞர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுத்தந்திருக்கிறது.

இந்தியாவில் காதல் என்பது ( ஏன் இங்கும் தான்) ஒரு ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறது, ஒரு பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறது என்பதை தாண்டி, திருமணம் வரையில் செல்கையில் அந்த ஆணின் குடும்பத்துக்கு பெண்ணின் குடும்பத்தை பிடித்திருக்க வேண்டும் , பெண்ணின் குடும்பத்துக்கு ஆணின் குடும்பத்தினை பிடித்திருக்க வேண்டும் என்பதாகவும், சம்பந்தப்பட்ட அந்த ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அவர்களில் குடும்பங்களையும் விரும்ப  வைக்க வேண்டும் என்ற சிக்கலான  இந்திய உறவுகளின் முரண்பாட்டினை சொல்லி ஆரம்பிக்கிறது நாவல்.

தம் காதலை நிறைவேற்றுவதற்காக, தங்கள் குடும்பத்தினரை compromise செய்ய ஆனநயாவும், கிரிஷும் செய்யும் போராட்டங்களும், அவர்களின் காம்பஸ் வாழ்கை, வேலைக்கான போராட்டங்கள் , காதலின் தவிப்புக்கள், சின்ன சின்ன சண்டைகள் , அவர்களில் பெற்றோர்களில் சிறு பிள்ளை தனமான செயற்பாடுகள் , தமிழ் , பஞ்சாபி கலாச்சார முரண்பாடுகள் மிக எளிய வார்த்தைகளால் புதுமையாக உணர வைக்கப்பட்டு இருக்கிறது.

சாதி , இனம், மதம், மொழிகளை கடந்து காதல் செய்யும்  இளைய உள்ளங்களின் அங்கீகரிக்கப்படாத பாட நூலாக மாறி , ஐம்பது  பதிப்புகளுக்கு மேல் வெளியாகி சாதனை படைத்திருக்கிறது , 
சேட்டன் பகத் எழுதிய இந்த  2 STATES

Saturday, July 10, 2010

மதராசப்பட்டினமும், அழகிய தேவதையும்......

முரண்பாடான  முயற்சிகள் எப்போதுமே சுவாரசியமானவை, அழகானவை, வலிகளையும் தாண்டி எதோ ஒரு சுகானுபவம்  தருபவை.ரசிக்கும் படியான வாழ்க்கை சில விதிகளை தாண்டிய எம் முரண்பாடான எண்ணங்களின் வெளிப்படுதல்களிலேயே தங்கி இருக்கிறது.

ஒரு வெள்ளைகார அழகிக்கும், ஒரு  அடிமைப்பட்ட இந்தியனுக்கும் ஏற்படும் முரண்பட்ட , விதிகளை மீறிய அழகிய  காதலும், அதன் எதிர்ப்புக்களும் தான்  மதராசப்பட்டினம் என்ற இந்த காலங்களை கடந்த காவியத்தின்   வன்லைன்.

அதிகம் அறிமுகம் இல்லாத இயக்குனர், ஆர்பாட்டம் இல்லாத நடிகர்கள் , பிரமிக்க வைக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட  படத்துக்கான விளம்பரங்கள் ஏற்படுத்திய தூண்டுதல்களையும்  தாண்டி, இது போன்ற நாம் பார்க்காத காலங்களின் கதைகளை கேட்பதிலும் பார்ப்பதிலும் எனக்கு  அதீத நாட்டம் இருக்கிறது. காலனித்துவ காலங்களில் நடந்த சம்பவங்கள், அதன் மனிதர்கள் , அவர்களின்  ஏக்கங்களை வலியோடு சொல்லும்  உணர்ச்சிகள் நிறைந்த சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அப்படி ஒரு புத்தகம் தான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "யாமம்". (யாமம் ஏற்படுத்திய தாக்கம்)  அந்த  புத்தகம்   போலவே நிறையவே மன நிறைவை இந்த படமும் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் படம் பார்க்க சென்றிருந்தேன்.

எதிர்பார்ப்புக்களை விட பிரமாதமாக, ஒரு ஆர்ட் பிலிம்க்கு உரிய சாயலின் அமைந்திருக்கிறது படம்.. படத்தின் தொடக்க பெயரோட்டத்தில் தொடங்கி  பழைய மதரசப்பட்டினத்தை திரையில் கொண்டுவர நிறையவே மினக்கெட்டு இருக்கிறார்கள். பீரியட் படங்களை எடுக்க துணிச்சல் வேணும். அந்த துணிச்சலில் நிறையவே வெற்றியும் கிடைத்திருக்கிறது கெமரமென்னுக்கும், ஆர்ட் டிரேக்டருக்கும். தவிரவும் க்ராபிக்ஸும் , செட்களும் நிறையவே  கைகொடுத்திருக்கிறது. காலத்தை பிரதிநிதித்துவ படுத்த இப்போதும்  இருக்கும் SHELL, COLGATE , HORLICKS, KIWI (நான்  கவனித்தவைகள், மேலும் பல இருக்கலாம்  ) போன்ற சில பிராண்ட்களை பயன்படுத்தி இருப்பது புதுமை. இந்த  பிராண்ட் களுக்கு இந்தளவு பெரிய பாரம்பரியம் இருந்திருக்கிறது என்பதை , இந்த படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

எனக்கு ஆரியாவை பார்க்க  பரிதாபமாய் இருக்கிறது, மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார். . தேவையானதை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். அனாலும் இந்த படம்  அவருக்கு பெரிய இமேஜ் கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. இது முழுக்க, முழுக்க கதாநாயகியின் படம், படத்தின் சிறப்பம்சமே டீன் ஏஜ் உலக  அழகியான எமி ஜாக்சன் என்ற அந்த தேவதை, மொத்த பிரேம்களையுயும் தன் அழகால் ஈர்த்து கொ(ல்)ள்கிறது அந்த ஏஞ்சல்.  அவர் தனித்து தெரிவதால் ஆரியா  பல காட்சிகளில் அடிபட்டு போகிறார். பூவுக்கு பிறகு பார்த்த மிக சிறந்த ஹீரோயின் SUBJECT இந்த படம்.

மொழியை வைத்து செய்யும் நகைச்சுவைகள் ஆழமான ரசனைக்குரியவை. படம் நீளமாக இருந்தாலும் திரைக்கதை நேர்த்தியாக  இருப்பது மிகப் பெரிய பலம். 
பின்னணி இசை பற்றி எனக்கு அதிகம் சொல்ல தெரியவில்லை, பாடல்கள் படத்துடன் சில இடங்களில் ஒட்ட மறுத்தாலும், இரண்டு பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அழகாய் இருக்கிறது. அதிலும் உயிரே .....என்று தொடங்கும் பாடல் கொள்ளை அழகு. பாடல்களில்  எமி ஜாக்சன் அணிந்திருக்கும்  காஸ்டியும்கள் "காலம்" என்ற கருப்பொருளையும் கணக்கில் வைத்து மிக மிக அழக்காக செதுக்கப்பட்டிருக்கிறது.

எனக்கு என்னவோ, இந்த ஹீரோயினுக்கு கிடைக்கும் வரவேற்பை  பார்த்து இனி வெளிநாட்டு   ஹெரோஇன் தான் வேண்டும் விஜய்களும், சூரியாக்களும் அடம் பிடிப்பார்கள் எண்டு தோன்றுகிறது. இனி தமிழ் சினிமாவின் ஹீரோயினுக்கான தேடல் இந்திய எல்லைகளை தாண்டி உலகமயமாக்கப்படலாம். இன்னும் பல படங்களில் அதே எமி ஜாக்சனை காணலாம் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் பல படங்களின் சாயல் இருந்தாலும், இலகுவாக அனுமானிக்ககூடிய கதையாக இருந்தாலும்,  தனித்து தெரிகிறது  மதராசப்பட்டினம். காரணம் இவராக இருக்கலாம்.

Saturday, March 20, 2010

ஆங்கில புத்தகங்கள் வாசிக்கும் பலருக்கும்

ஜோசித்து பார்த்தேன் , வெள்ளைகாரன் ஒரு ஒரு புத்தகம் எழுதினால் பல மில்லியன் பிரதிகள் விற்பனையாகிறது, சர்ச்சை தரும் விடங்களை பிரிண்ட் போட எத்தனையோ பப்ளிஷ் செய்யும் நிறுவனகள் வரிசை கட்டி நிற்கின்றன. எம்மவர் பலரும் எத்தனை ரூபாய் என்றாலும் கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்கள். ஆங்கில புத்தகத்தை வாசிப்பதில் அல்லது அதை வாசிப்பதாக காட்டிக்கொள்வதில் அலாதிப் பிரியம் அவர்களுக்கு. 

 எம்மவர் பலரும்  , புத்தகங்கள் எழுதி  , அவை வெறும் மண்ணோடு மண்ணாய் போகின்றன. மில்லியன் பிரதிகள் விற்பதுக்கு தகுதி இருக்கும் , புத்தகங்கள் கூட நாலு பேர்க்கு மட்டும் தெரிந்த விடய தானங்களாகி போகின்றன.  ஊக்கப்படுத்தவோ  , பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும் விதத்தில் அதை பதிப்பிக்கவோ யாரும் இல்லாத காரணத்தால்  பலரின் கதைகள் மௌனமாகவே இருந்து விடுகிறது.

வியாபர நோக்கமாகிவிட்ட இந்த உலகில் தரமான புத்தக தேடலுக்கான ஆர்வம் இல்லாமை , இறுதியில் அந்த மொழியில் வீழ்ச்சிக்கே இட்டுச்செல்லும். இதற்கு காரணம் யார் என்னும் போது , போலியான பகட்டுக்காய் ஆங்கில மொழிக்கும் அதன் புத்தகங்களுக்கும்  அடிமையாகிவிட்ட எம்மவர் மீதே அதிகம் கோவம் வருகிறது.

ஆங்கிலம் என்ற ஊடக மொழி அந்நியப்படாது போயிருக்கும் அல்லது ஆங்கிலம் என்ற அந்நிய மொழியை நான் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இன்றைய கால கட்டங்களில்  கூட அங்கில புத்தகங்களுடன் எனக்கு ஒன்ற முடியவில்லை. அவை மனதோடு வாசம் செய்ய மறுக்கின்றன. வாசித்தல் , ரசித்தல், அதனோடு வாழுதல் என்ற சுகானுபவத்தை முழுமையாக தர மறுத்து விடுகின்றன. இன்னும் தமிழ் புத்தகங்களியே ஏன் அதிக தேடல் தங்கி இருக்கிறது.

வாயில் நுழையாத ஆயிரம் ஆங்கில எழுத்தாளர்களை சொல்லும் எம்மில் பலருக்கும் ராஜநாராயணன் , எஸ். ராமக்கிஷ்ணன்,  போன்ற  எத்தனை கதை சொல்லிகளை  தெரியும். மல்லிகை போன்ற உள்நாட்டு இதழ்களை  தெரியும்.

ஆர்வமும் , ரசனையும் பல்வேறுபட்டு இருக்கலாம் ஆனால் , பிறந்து வளர்ந்து , பேசுகின்ற மொழியை காவு கொடுத்துவிட்டு , அன்னியத்துக்கு ஆட்படுகின்ற மனோபாவம் எப்படி எங்கிருந்து வருகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தன் தாய்  மொழியில் ஒன்றை ரசிக்காது பாராட்டாது பகட்டாய் புத்தக பிரியர்களாய் காட்டும் பலருக்கும், எம் மொழியிலும் ஒரு ரசனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதும் . மொத்த வாசிப்பு பரப்பில் கால்  வாசியாவது எம் மொழி படைப்புக்களில் ஆர்வம் வைப்பதும்,  ஆகக் குறைந்தது மொழி வளரவாவது உதவட்டுமே.  

Thursday, March 4, 2010

விண்ணை தாண்டும் அளவுக்கு எதுவுமில்லை ....

"உலகத்தில் இத்தனை பொண்ணுங்க இருக்கும்போது ஏண்டா எந்தப் பொண்ணு மேலும் எனக்கு காதல் வரமாட்டேங்குது? "

"நானும் ஒரு பிளட்டுல தான் இருக்கேன், ஏன் எங்க வீட்டு  மாடியில மட்டும் ஜெசி என்ற கிறிச்டயன்ட்  பொண்ணு இல்ல, ஒரு இந்து பொண்ணு, ஒரு சிங்கள பொண்ணு கூட குடி வர மாட்டேங்குது".

Msc Maths படிச்ச ஒரு த்ரிஷா வேணாம், Atleast  ஒரு A/L படிக்கிற figure  ஆவது இருந்திருக்கலாம் இல்ல. ஏன் இப்படி எல்லாம் நடக்க மாட்டேங்குது,

ஏன் எங்க ரோட்டுல மட்டும் எந்த பொண்ணும் அழகா சாரி உடுத்து HP  லப் டாப் மாட்டிக்கிட்டு போக மாட்டேங்குது?.
ஏன் நான்  போக்ஸ்சிங்/ கராத்தே எண்டு எதையும்  கத்துக்கல?, அண்ணன் இல்ல ஆறாம் வகுப்பு படிக்கிற ஒரு தம்பியவாவது அடிச்சு வீழ்த்தி இருக்கலாம். ஏன் எனக்கு இப்படி ஒண்ணுமே நடக்கல எண்டு .. கவலைப்பட்டுட்டு இருந்தேன் , அடுத்த சீன்லயே வசனம் வந்திச்சு ,

''காதலை தேடிக்கிட்டு போக முடியாது...
அது நிலைக்கணும்...
அதுவா நடக்கணும்...
நம்மள போட்டு தாக்கணும்...
தலைகீழ போட்டு திருப்பணும்...
எப்பவுமே கூடவே இருக்கணும்...
அதான் ட்ரூ லவ்......

என்னை தவிர , ஒட்டு மொத்த தியட்டரும் ஆர்ப்பரித்து அடங்கியது. இது தான் மச்சி டயலாக் எண்டு பின்னால ஒருத்தன் உணர்ச்சியை கொட்டினான்.. தலை கீழ நிக்கனுமாம், எப்பவுமே கூட இருக்கனுமாம் ... பல வெட்டிக் காதல்களை  காவியக்காதல் ஆக்கிவிட்டு அங்கீகாரம் தந்ததில் பலருக்கு தலை கால் புரியல.  ஐயகோ இந்த கருமாந்திரம் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.  நம்மள தலைகீழா போட்டு திருப்பும் அளவுக்கு காதல அனுமதித்தால், அப்புறம் நாம் யார், எண்டு தத்துவங்களாக துள்ளி எழுந்து...பின்பு தானாய் அடங்கியது ஏன்  எண்ணங்கள், இதனால் இடையில் ஒரு சில பிரேம்களில் த்ரிஷாவை ரசிக்க தவறி இருந்தேன் என்ற நினைவு வந்ததும் மீண்டும் படத்துக்குள் போனேன்.


கேயர்ஸ் தியரி எண்டு ஒன்று உண்டு, அது தான் தசாவதாரம் தொடங்கேக்க கமல் ஹாசன் சொல்லுவாரே வண்ணத்திப்புச்சி பறப்பதற்கும் தைவான்ல பூகம்பம் வருவதற்கும் சம்பந்தம் இருக்காம், அத மாதிரி இந்த படத்தில வார ஒவ்வொரு சீனும் மிக சாதரணமான சீன்கள், காதல் எண்ட ஒன்ற செய்யுற எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிற அன்றாட நிகழ்வுகள். அதை மிகப் பெரிய திரையில் , அழகான வசனங்களுடன் சொல்லும் போது எல்லோருக்கும் பிடித்து போகுது, தங்களுக்கும் அதே மாதிரி நடந்ததே எண்டு பார்த்து வியந்து போகிறார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றியே,

 நீ என்னை ஃபாலோ செய்கிறாயா என்று த்ரிஷா கேட்கும் இடம், தனக்கு ஏன் காதல் வரவில்லை என்பதற்கு த்ரிஷா சொல்லும் மூன்று காரணங்கள், அடிக்கடி நடக்கும் காதல் நாடகம், பிரண்ட்ஷிப் கதைகள், Sms சீன்கள்   என பல சீன்கள் எல்லோருக்கும் பொதுவான கெமிஸ்ட்ரி தானே, இதில் வியந்து பார்க்க என்ன இருக்கு. ஒரு வேளை அதை உணர்ந்து பார்த்தவர்களுக்கு பிடித்திருக்கலாம், ஆனால் எனக்கு இல்லை, ஏன் எனில் இப்படம் முழுவதுமே, திட்டமிடப்பட்ட "targeting'  ஒட்டு மொத்த இளைய உள்ளங்களை , காதல் என்ற பொதுவான உணர்வால் இளமையுடன் காட்டும் பொது யாருமே பிடிக்காது என்று சொல்ல மாட்டார்கள் என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் கெளதம் மேனன்.

ஆனாலும் அவருக்கேயான ஸ்டைலும் , சில திருப்பங்களாலும் தான் படம் தனித்து தெரிகிறது. கப்பல் செட்டில் "GVM"  எண்டு எழுதுவதாகட்டும், கௌதம் மேனனா? அவர் தான் தமிழ்ப் படங்களை இங்களிஷ்ல எடுப்பாரே அவரா எண்டு படத்துக்குள் வரும் நக்கல் ஆகட்டும், தன்னை நன்றாக "BRAND"  செய்கிறார், இயக்குநருக்காக பார்த்த படம் இது,  நான் எந்த சிம்பு படமும்  தியட்டர் சென்று பார்த்ததில்லை.

தமிழ் சினிமாவிலேயே கேவலமான ஒரு WALK  திரிஷவினுடையது, அனால் அந்த WALKகை முன்னும் பின்னுமாக முப்பத்தைந்து சீனில் வைத்தது நிறையவே  ஓவர், த்ரிஷா எப்போதும் CLOSE-UP  காட்சிகளுக்கே  அழகு என்பதை ATLEAST என்னிடமாவது கேட்டு தெரிந்து இருக்கலாம்.

ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்து நன்றாக  தெரிந்த ஒரு கதையில் கடைசி திருப்பங்களில் மட்டுமே படம் இயக்குனரால் புதுமை பெறுகிறது, மொத்தத்தில் "விண்ணை தாண்டி வருவாயா" வியந்து பார்க்கும் அளவுக்கு எதுவுமில்லை.

என்னுடைய பிற சினிமா பதிவுகள்,
அளிமங்கட (The road to elephant pass)
ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" திரைப்பட விமர்சனம்
நான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்...... 
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes