BREAKING NEWS

Like Us

Tuesday, August 25, 2009

ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" திரைப்பட விமர்சனம்

ஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் கண்டபாட்டுக்கு அடித்து நோருக்கியிருந்தனர். நான் நேற்று தான் படம் பார்த்ததால் இனியும் கந்தசாமிய விமர்சிக்கிறது மனிதாபிமானம் இல்லை. அந்த மனுசனை எத்தனை பேரு தான் தாக்குவீர்கள். பாவம் ஒருவன் தோத்துப்போனா ஏறி மித்திக்கிறது தான் தமிழர் பண்பாடா ? இதுவரை குறித்த ஹீரோ எத்தனையோ படங்களில் எம்மை மகிழ்வித்து இருப்பதால் அவருக்கு போது மன்னிப்பு அளித்து அவரை  விமர்சனங்களில் இருந்து விடுதலை செய்து , ஒரு மாற்றத்துக்காக ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" படத்தை விமர்சிக்குறேன்.நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயா கடைசியாக எமக்கு சுப்புலக்ஸ்மியாக காட்சி தந்திருக்கிறார் என்பது பக்தகோடிகளான எமக்கு அளப்பெரிய மகிழ்ச்சியே.. எங்கே எம்மை எல்லாம் தவிக்க விட்டு விட்டு அந்த பைங்கிளி கோலிவுட்டுக்கும் , போலிவுட்டுக்கும் ஓடி விட கூடாது எண்டு நான் நல்லூர் கந்தசாமிய வேண்டிக்கொண்டு இருந்தனான். ஏற்கனவே யாறோ இங்கிலிச்ஷ் காரனுக்கு முத்தமிட்டு எங்க வயித்துல புளியை கரைத்து விட்டிருந்தது அந்த ஏஞ்சல். இந்த தடவை அந்த மூன்று மணி நேர படத்தில் நிறைய நேரம் எங்களுக்கு தரிசனம் தர வைத்ததற்காக சுசி கணேசனுக்கு ஒரு சபாஷ் போடலாம்.


இதுவரை கால தமிழ் சினிமாவில் இல்லாத மாதிரி அட்டகாசமான முறையில் ஸ்ரேயாவ காட்டின படத்தை எப்படி தோல்விப்படம் எண்டு கூற முடியும். ஒரு கதாநாயகி படம் முழுவது சேலையை தவிர்த்து , கட்டையாக முடி வெட்டி, போட்டு வைக்காமல் வந்தது, உலக தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்னும் போது படத்தை அரைத்தமாவு எண்டு கூறுவதில் என்ன நியாயம்.படத்தில் ஸ்ரேயா வரும் ஒவ்வொரு பிரேமும் கொள்ளை அழகு. அவரும் நல்ல involvement ஓட நடித்திருந்தார். அது போன்ற அழகான , கவர்ச்சியான , புதுமையான costume களை நான் இதுவரை எந்த ஆங்கில படத்தில் கூட பார்த்தது இல்லை. கிட்டத்தட்ட எழுபது தொடக்கம் நூறு வரையான costume களுக்கு காசை இறைத்து படம் எடுத்திருக்கும் தாணுவை பாராட்டாமல் இருப்பது நல்ல ரசிகனுக்கு அழகல்ல.


ஸ்ரேயாவின் அழகும், தாராளமும் என்னை மெய்மறக்க வைத்ததாலும் , படத்தொகுப்பில் ஒரு நேர்த்தி இல்லாத தாலும் எனக்கு பாதிப்படம் விளங்க வில்லை. ஆனால் ஏன் நண்பர் ஒருவர் தனக்கு ஒண்டுமே விளங்கேலடா எண்டு கவலைப்பட்டார். ஐயோ பாவம், ஸ்ரேயா தவிர வேற ஒண்டையும் அவர் பார்க்கல போலயிருக்கு எண்டு நான் நினைத்துக்கொண்டேன்.


கலைப்"புலி" இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிப்பதால் இந்த படம் இலங்கையில் வெளிவாருமா எண்டு எனக்கு சந்தேகம் இருந்தது..அனால் ஒரு மாதிரி பார்த்தாகிவிட்டது. பல பேர் தாணு இந்த படத்துடன் தொலைந்த்தார் எண்டு ஆருடம் கூறுகிறார்கள்..நான் நிறைய பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிப்பதாக கனவு கண்டவன் என்ற அனுபவத்தில் கூறுகிறேன். இருபத்தைந்து வருட அனுபவம் உள்ளவர் சரியாகவே கணக்கு போட்டிருக்கிறார். விக்கிரமுக்கு எண்டு ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. பாட்டுக்கள் ஹிட்டான ஒரு படம் படு தோல்வி அடைவதற்கு வாய்ப்புக்கள் குறைவு (sutha, 2009). பாட்டுக்களையும் , வடிவேலின் நகைச்சுவையும் தொலைக்காட்சிகளில் வரும்போது கட்டாயம் கூட்டம் வரும், ஆனால்  எல்லோரும் ஒரு தடவை மட்டும் படம் பார்ப்பார்கள். ரிபீட்டு பார்ப்பவர்களை மட்டுமே தாணு இழப்பார். எனவே தயாரிப்பாளர் என்ற முறையில் படம் போட்ட முதலை திருப்பி கொடுக்கும்.


மொத்தத்தில் , நகைச்சுவையுடன் கலந்து எழுதும் மொக்கை (பம்பல்) பதிவுகள் ஹிட்டாவது போல் ..ஸ்ரேயாவுடன் தரிசனம் தரும் கந்தசாமியின் உண்டியல் நிறையும்.

Share this:

rooto said...

me e first!!! gd work sutha!!!!

ஐந்திணை said...

:-)

யோ வொய்ஸ் (யோகா) said...

ஏன் இந்த கொலைவெறி?

Unknown said...

//கலைப்"புலி" இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிப்பதால் இந்த படம் இலங்கையில் வெளிவாருமா எண்டு எனக்கு சந்தேகம் இருந்தது..//
நியாயமான சந்தேகம்...
ம்...
அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
பொதுவாக சினிமா விமர்சனங்களை படிப்பதில்லை என்றாலும் உங்களுடைய மொழிநடை அழகாக இருந்தது.

சப்ராஸ் அபூ பக்கர் said...

முதல் வருகை உங்கள் தளத்திற்கு....

தொஅருங்கள்... இனி அடிக்கடி வருவதாக உத்தேசம்....

ARV Loshan said...

படம் போட்ட முதலை திருப்பி கொடுக்கும். //

இதுவே தான் எனது கருத்தும்..

ஸ்ரேயா தாசன் என்று பெயர் மாற்றாமல் இருக்கும் வரை நல்லது. ;)

பூச்சரம் said...

பூச்சரம்

இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம்
DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

வந்தியத்தேவன் said...

ஹரன் நேற்றே உங்கள் பதிவைப் படித்துவிட்டேன் நேரம் காணாமல் பின்னூட்டம் இடவில்லை, எப்படியோ ஸ்ரேயாவை வைத்து விமர்சனம் எழுதிவிட்டீர்கள் எனக்கென்றால் இந்தப் படத்தில் ஸ்ரேயாவைப் பிடிக்கவில்லை.

Anonymous said...

meow meow பாடலில் ஸ்ரேயா சேலை (மாதிரி) ஒன்றை அணிந்திருந்தார்...

Anonymous said...

பூச்சரம்

இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம்
DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

?????? really?
did u come to the Bloggers meet?

Naren

நிலாமதி said...

விமர்சனம் நன்றாக இருக்கிறது
ஈடுபாடுடன்.(involvement.)
உடையலங்க்காரம்(costume ) என்ற தமிழ் பாவியுங்கள்.
நட்புடன் நிலாமதி

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes