BREAKING NEWS

Like Us

Sunday, August 23, 2009

இலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்

நானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந்து வோட்டுக்களோடு படுத்துவிடுகிறது. சில நேரம் என்னை தவிர வேறு யாரும் வோட்டு போடா மாட்டர்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் மினக்கெட்டு எழுதின பதிவை நாலு பேர் பார்க்கவில்லையே என்று கடுப்பா இருக்கும். நான் பதிவு எழுதுற நேரத்தைவிட எழுதின பதிவுக்கு ஹிட்ஸ்  கிடைச்சிருக்கா என்று தலையை பிச்சுக்கொண்டு தேடுற நேரம் அதிகம்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒண்டு காணவேணும் எண்டு தான் இலங்கை பதிவர் சந்திப்புக்கு போயிருந்தனான் , அப்படி போய் ஓரமாய் இருந்து வடையும் சாப்பிட்டு , கோப்பியும் குடித்துக்கொண்டு எல்லோரும் பேசுவத கேட்டுக்கொண்டு இருந்தேன். அப்படி கேட்டதில லோசன் அண்ணாவும், புல்லட்டும் பேசியதிலிருந்து எனது மில்லியன் டாலர் கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

புல்லெட் , மிக தரமான ஒரு நகைச்சுவை உணர்வாளர். ஒவ்வொரு ஜோக்கும் ஒவ்வொரு தகவல்கைளையும் காவி வந்தது (intelligent joker) அப்படி அவர் சொன்னது தான் " பின்னூட்டம் இட்டு மற்ற பதிவர்களுடனான உறவை வளர்க்க வேண்டும் என்பது. தான் தொடங்கிய காலத்தில் எல்லாப் பதிவுக்கும் போய் "சுப்பர் அப்பு" எண்டு பின்னூட்டம் இட்டதாக சொன்னார். நான் இதுவரை காலமும் அப்படி ஒண்டை செய்ததில்லை, எனக்கு வார ஒண்டிரண்டு பின்னுட்டங்களுக்கும் கூட பல சமயங்களில் பதில் சொல்வதில்லை. இந்த விடயத்தில் என்னை இனிமேல் மாற்றிக்கொள்ள அவரின் தகவல்கள் பிரயோசனமாய் அமைந்தது.

அடுத்து லோசன் அண்ணா பேசும் போது , தலைப்புக்களை அட்டகாசமாய், கவர்ச்சிகரமாய் போடவேண்டும் எண்டு சொன்னார். தனது " நயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா ? " எண்ட பதிவு பலத்த வரவேற்பு பெற்றது எண்டு சொன்னார். அவரின் அந்த பதிவை வாசித்ததில் இருந்து அது போன்ற பரபரப்பு தலைப்பு இடவேண்டும் எண்டு எனக்கும் ஆசை வந்திருந்தது. இதற்காக கீழே இருப்பது போன்ற சில தலைப்புக்களையும் தயார்படுத்தி இருந்தேன்,

சௌந்தர்யா ரஜனிகாந்துக்கும் பிரபல பதிவருக்கும்(நான் தான்) காதல்
நமீத்தா ரசிகர்கள் வெள்ளத்தால் அவதி (அப்பவாவது எம் மக்களில் கஷ்டங்களை நாலு பேர் பார்ப்பார்கள் எண்டு நினைத்து)

ஆனால் பின்னர் பேசிய ஒரு பதிவர், அப்படி எல்லாம் தலைப்பு இடக்கூடாது, அது தம்மை பிழையாக வழிநடத்துகிறது. தாங்கள் எதிபார்க்கும் விடயம் இல்லாமல் ஏமாற்றப்படுகிறோம் எண்டு புலம்பினார். நயன்தாரா, சிங்கம், வாழைப்பழம் என்ற சொற்களை பார்த்து விழுந்தடித்து ஓடியந்து ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்திருப்பார் போலும். தனிப்பட்ட நபர்கள் (நயன்தாரா ?) பாதிக்கப்பட கூடாது என்று கட்டமாக கூறினார். அவரின் கருத்துக்களுக்கு லோஷன் அண்ணா பலமாய் தலையாட்டிக்கொண்டு இருந்தார், அவரின் தலை ஆட்டலின் அர்த்தம் நயன்தாராவின் பெயருக்கு இனிமேல் களங்கம் ஏற்படாது என்பதா?

Share this:

சுபானு said...

உணர்வுகளைப் பதிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே.

ஆதிரை said...

//அவரின் தலை ஆட்டலின் அர்த்தம் நயன்தாராவின் பெயருக்கு இனிமேல் களங்கம் ஏற்படாது என்பதா?

சிங்கமாவது அடங்குகின்றதாவது.... :P

புல்லட் said...

பின்னூட்டம் தொடர்ந்து இடவேண்டும்.. ஒரு பிரபல பதிவர் தனக்கென்று ஒரு நட்பு வட்டத்தை வைத்திருப்பார்.. அவர்களை வாசித்து பின்னூட்டுவார்.. மற்றவர்களை வாசித்தாலும் சிலவேளைதான் பின்னூட்டுவார்.. இது பிரப பதிவர்களின் வழமை.. நடுத்தர பேமஸ் பதிவர்கள்தான் உங்கள் இலக்காக இருக்கவேண்டும்.. மற்றும் அறிமுகமாகும் பதிவர்களை விழுத்துவது மிக இலகு.. இதற்காக தமிழிஸ் இலும் தமிழ் மணத்திலும் புதிய இடுகைகளை நோக்கி ஒரு வார இறுதியில் காவலிருங்கள்.. பிடித்து விடலாம்.. மேலும் ஆரம்பத்தில் ஒரு 15 வாசகர் வட்டம் ஏற்படுத்தி அவர்களுடன் உறவை இறுக்கிக்கொள்ளுங்கள்.. கவர்சிசயான தலைப்புகளும் பதிவிடும் நேரமும் செல்வாக்கு செலுத்தும் மற்ற காரணிகளாகும்.. இதன் மூலம் வாசகர்களை வரச்செய்யலாம்.. ஆனால் நிலைத்திருக்க செய்வது உங்கள் எழுத்துகளிலேயே தங்கியுள்ளது.. வாசித்ததும் அழித்துவிடுங்கள்.. இல்லாவிட்டால் வருபவன் கோபமாகி வீடவான்.. சந்திப்புக்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள்..

Unknown said...

அட...அதிலை இவ்வளவு விசயம் இருக்கா

Admin said...

புல்லட் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

மேலும் பல நல்ல இடுகைகளை எதிர்பார்க்கிறேன்.

ஊர்சுற்றி said...

நீங்கள் இப்படி நகைச்சுவையாக எழுதினாலே போதும் - பலரும் தொடர்ந்து வாசிக்க வருவார்கள்.

பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டதற்கு வாழ்த்துக்களும் சந்திப்பு வெற்றிபெற்றதற்கு பாராட்டுக்களும். :)

நிலாமதி said...

உங்கபதிவை பார்க்க வேணுமென்ற ஆவலில்எழுதியதை.நானும்பார்தேனுங்கோ. சொந்த காலில் நின்று போராடுங்கோ உங்க எழுத்துதான் உங்கவலிமை.எழுத எழுத ரசிகர் வட்டம் கூடும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆஹா அந்த ஹிட்ஸ் வேணடும் என்கிற கேள்விய கேட்டது நீங்க தானா சொல்ல வேயில்ல

Sutha said...

புல்லட் said...
புல்லெட் , பதிவுலகம் சம்பந்தமான உங்கள் அறிவும் அனுபவமும் ஆழமானது. நுணுக்கமான தகவல்களை அள்ளி வழங்குகிறீர்கள். ஒரு போல் Business Analyst போல் Analyse பண்ணி வைத்திருக்கிறீர்கள். நன்றி தோழரே

Sutha said...

Kiruthikan Kumarasamy said...
//அட...அதிலை இவ்வளவு விசயம் இருக்கா//......நீங்க எத சொல்லுறீங்க எண்டு தெரியேல ?...ஆனாலும் நயன்தாரா எண்ட பெயருக்குள்ள நிறைய விஷய உண்டு என்று இப்ப புரிந்துகொண்டன்

Sutha said...

நிலாமதி said...
//உங்கபதிவை பார்க்க வேணுமென்ற ஆவலில்எழுதியதை.நானும்பார்தேனுங்கோ. சொந்த காலில் நின்று போராடுங்கோ உங்க எழுத்துதான் உங்கவலிமை.எழுத எழுத ரசிகர் வட்டம் கூடும்.//

ஆனாலும் marketing, public relations எண்ட விசயங்கள் எல்லாத்துக்கும் தேவை எண்டத நானும் லேட்டா தான் புரிஞ்சு கொண்டேன் பாருங்கோ

வந்தியத்தேவன் said...

அடடே நீங்கள் முந்திவிட்டீர்களே இதே தலைப்பில் நான் நடந்த பம்பல்களை எழுத இருந்தேன், பகிடியாக உங்கள் பதிவை எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் நன்றிகளும்

Sutha said...

நன்றி ஊர்சுற்றி ...உங்கள் வாழ்த்துக்களுக்கு ...

சந்ரு said... ..
//மேலும் பல நல்ல இடுகைகளை எதிர்பார்க்கிறேன்//...இப்ப தான் பதிவர் சந்திப்புக்கு பிறகு ஒரு வேகம் வந்திருக்கு. இனிமேல் எழுதுவன்

Sutha said...

நன்றி சுபானு, ஆதிரை ..ஏன் போன்ற சின்ன பதிவர்களை ஊக்கப்படுத்துவதற்காக

நிகழ்காலத்தில்... said...

சுப்பர் அப்பு

:)))

வாழ்த்துக்கள்

Sutha said...

நன்றி வந்தியத்தேவன் அண்ணா. இந்த தலைப்ப போட்டு நான் உங்கள் நல்ல பதிவொன்றை குழப்பிட்டனோ தெரியவில்லை. . . மன்னிக்கவும்.

யோ வாய்ஸ் said...//ஆஹா அந்த ஹிட்ஸ் வேணடும் என்கிற கேள்விய கேட்டது நீங்க தானா சொல்ல வேயில்ல//

நான் அப்படி ஒரு கேள்வியும் நான் கேட்கல. என்னை அறிமுகப்படுத்தி கொண்டது மட்டும் தான் . கதவோரமா இருந்ததுல ஒரு படத்துல கூட விழவில்லை எண்ட கவலை வேற எனக்கு இருக்குது . அடுத்த முறை நடுவுல வந்து குந்தவேனும்.

SShathiesh-சதீஷ். said...

அதே பிரச்சனதான் எனக்கும் இருந்க்கின்றது, புல்லட் சொன்னது சரியானது..... உங்கள் தலைப்பை பார்த்து கவர்ந்து தான் உங்கள் பக்கம் வந்தேன். கலக்குங்கள். தொடர் ஹிட்சுக்கு வாழ்த்துக்கள்.

ARV Loshan said...

//அவரின் தலை ஆட்டலின் அர்த்தம் நயன்தாராவின் பெயருக்கு இனிமேல் களங்கம் ஏற்படாது என்பதா?

சிங்கமாவது அடங்குகின்றதாவது.... :P
//

அப்பிடிப் போடுறா அருவாளை.. ;) சிங்கம் அடங்குவதும், தங்கம் விலை குறைவதும் எப்பவாவது நடந்திருக்கா? ;)

ARV Loshan said...

சுவாரஸ்யமா எழுதி இருக்கிறீர்கள்.. என்ன தான் நகைச்சுவை, கவர்ந்திழுக்கும் தலைப்புக்கள் கவர்ச்சிப் படங்கள் இருந்தாலும் காத்திரமான எழுத்தும்,வலுவான விஷயங்களும் தான் அத்திவாரமாக இருக்கவேண்டும்..

கூடவே புல்லட் சொன்ன விஷயங்களையும் மற்றவர் என்ன எழுதுகிறார் என்பதையும் நோக்குங்கள்..

உங்கள் மனதில் பட்டதை படுகிற மாதிரி எழுதுவதோடு, உங்கள் பலம் என்ன என்பதியா புரிந்து கொள்ளுங்கள்.. இடையிடையே பரபரப்பு விடயங்களும் போடுங்கள்..

வாழ்த்துக்கள் சுதா..

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes