BREAKING NEWS

Like Us

Tuesday, August 25, 2009

ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" திரைப்பட விமர்சனம்

ஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் கண்டபாட்டுக்கு அடித்து நோருக்கியிருந்தனர். நான் நேற்று தான் படம் பார்த்ததால் இனியும் கந்தசாமிய விமர்சிக்கிறது மனிதாபிமானம் இல்லை. அந்த மனுசனை எத்தனை பேரு தான் தாக்குவீர்கள். பாவம் ஒருவன் தோத்துப்போனா ஏறி மித்திக்கிறது தான் தமிழர் பண்பாடா ? இதுவரை குறித்த ஹீரோ எத்தனையோ படங்களில் எம்மை மகிழ்வித்து இருப்பதால் அவருக்கு போது மன்னிப்பு அளித்து அவரை  விமர்சனங்களில் இருந்து விடுதலை செய்து , ஒரு மாற்றத்துக்காக ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" படத்தை விமர்சிக்குறேன்.நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயா கடைசியாக எமக்கு சுப்புலக்ஸ்மியாக காட்சி தந்திருக்கிறார் என்பது பக்தகோடிகளான எமக்கு அளப்பெரிய மகிழ்ச்சியே.. எங்கே எம்மை எல்லாம் தவிக்க விட்டு விட்டு அந்த பைங்கிளி கோலிவுட்டுக்கும் , போலிவுட்டுக்கும் ஓடி விட கூடாது எண்டு நான் நல்லூர் கந்தசாமிய வேண்டிக்கொண்டு இருந்தனான். ஏற்கனவே யாறோ இங்கிலிச்ஷ் காரனுக்கு முத்தமிட்டு எங்க வயித்துல புளியை கரைத்து விட்டிருந்தது அந்த ஏஞ்சல். இந்த தடவை அந்த மூன்று மணி நேர படத்தில் நிறைய நேரம் எங்களுக்கு தரிசனம் தர வைத்ததற்காக சுசி கணேசனுக்கு ஒரு சபாஷ் போடலாம்.


இதுவரை கால தமிழ் சினிமாவில் இல்லாத மாதிரி அட்டகாசமான முறையில் ஸ்ரேயாவ காட்டின படத்தை எப்படி தோல்விப்படம் எண்டு கூற முடியும். ஒரு கதாநாயகி படம் முழுவது சேலையை தவிர்த்து , கட்டையாக முடி வெட்டி, போட்டு வைக்காமல் வந்தது, உலக தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்னும் போது படத்தை அரைத்தமாவு எண்டு கூறுவதில் என்ன நியாயம்.படத்தில் ஸ்ரேயா வரும் ஒவ்வொரு பிரேமும் கொள்ளை அழகு. அவரும் நல்ல involvement ஓட நடித்திருந்தார். அது போன்ற அழகான , கவர்ச்சியான , புதுமையான costume களை நான் இதுவரை எந்த ஆங்கில படத்தில் கூட பார்த்தது இல்லை. கிட்டத்தட்ட எழுபது தொடக்கம் நூறு வரையான costume களுக்கு காசை இறைத்து படம் எடுத்திருக்கும் தாணுவை பாராட்டாமல் இருப்பது நல்ல ரசிகனுக்கு அழகல்ல.


ஸ்ரேயாவின் அழகும், தாராளமும் என்னை மெய்மறக்க வைத்ததாலும் , படத்தொகுப்பில் ஒரு நேர்த்தி இல்லாத தாலும் எனக்கு பாதிப்படம் விளங்க வில்லை. ஆனால் ஏன் நண்பர் ஒருவர் தனக்கு ஒண்டுமே விளங்கேலடா எண்டு கவலைப்பட்டார். ஐயோ பாவம், ஸ்ரேயா தவிர வேற ஒண்டையும் அவர் பார்க்கல போலயிருக்கு எண்டு நான் நினைத்துக்கொண்டேன்.


கலைப்"புலி" இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிப்பதால் இந்த படம் இலங்கையில் வெளிவாருமா எண்டு எனக்கு சந்தேகம் இருந்தது..அனால் ஒரு மாதிரி பார்த்தாகிவிட்டது. பல பேர் தாணு இந்த படத்துடன் தொலைந்த்தார் எண்டு ஆருடம் கூறுகிறார்கள்..நான் நிறைய பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிப்பதாக கனவு கண்டவன் என்ற அனுபவத்தில் கூறுகிறேன். இருபத்தைந்து வருட அனுபவம் உள்ளவர் சரியாகவே கணக்கு போட்டிருக்கிறார். விக்கிரமுக்கு எண்டு ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. பாட்டுக்கள் ஹிட்டான ஒரு படம் படு தோல்வி அடைவதற்கு வாய்ப்புக்கள் குறைவு (sutha, 2009). பாட்டுக்களையும் , வடிவேலின் நகைச்சுவையும் தொலைக்காட்சிகளில் வரும்போது கட்டாயம் கூட்டம் வரும், ஆனால்  எல்லோரும் ஒரு தடவை மட்டும் படம் பார்ப்பார்கள். ரிபீட்டு பார்ப்பவர்களை மட்டுமே தாணு இழப்பார். எனவே தயாரிப்பாளர் என்ற முறையில் படம் போட்ட முதலை திருப்பி கொடுக்கும்.


மொத்தத்தில் , நகைச்சுவையுடன் கலந்து எழுதும் மொக்கை (பம்பல்) பதிவுகள் ஹிட்டாவது போல் ..ஸ்ரேயாவுடன் தரிசனம் தரும் கந்தசாமியின் உண்டியல் நிறையும்.

Sunday, August 23, 2009

இலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்

நானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந்து வோட்டுக்களோடு படுத்துவிடுகிறது. சில நேரம் என்னை தவிர வேறு யாரும் வோட்டு போடா மாட்டர்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் மினக்கெட்டு எழுதின பதிவை நாலு பேர் பார்க்கவில்லையே என்று கடுப்பா இருக்கும். நான் பதிவு எழுதுற நேரத்தைவிட எழுதின பதிவுக்கு ஹிட்ஸ்  கிடைச்சிருக்கா என்று தலையை பிச்சுக்கொண்டு தேடுற நேரம் அதிகம்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒண்டு காணவேணும் எண்டு தான் இலங்கை பதிவர் சந்திப்புக்கு போயிருந்தனான் , அப்படி போய் ஓரமாய் இருந்து வடையும் சாப்பிட்டு , கோப்பியும் குடித்துக்கொண்டு எல்லோரும் பேசுவத கேட்டுக்கொண்டு இருந்தேன். அப்படி கேட்டதில லோசன் அண்ணாவும், புல்லட்டும் பேசியதிலிருந்து எனது மில்லியன் டாலர் கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

புல்லெட் , மிக தரமான ஒரு நகைச்சுவை உணர்வாளர். ஒவ்வொரு ஜோக்கும் ஒவ்வொரு தகவல்கைளையும் காவி வந்தது (intelligent joker) அப்படி அவர் சொன்னது தான் " பின்னூட்டம் இட்டு மற்ற பதிவர்களுடனான உறவை வளர்க்க வேண்டும் என்பது. தான் தொடங்கிய காலத்தில் எல்லாப் பதிவுக்கும் போய் "சுப்பர் அப்பு" எண்டு பின்னூட்டம் இட்டதாக சொன்னார். நான் இதுவரை காலமும் அப்படி ஒண்டை செய்ததில்லை, எனக்கு வார ஒண்டிரண்டு பின்னுட்டங்களுக்கும் கூட பல சமயங்களில் பதில் சொல்வதில்லை. இந்த விடயத்தில் என்னை இனிமேல் மாற்றிக்கொள்ள அவரின் தகவல்கள் பிரயோசனமாய் அமைந்தது.

அடுத்து லோசன் அண்ணா பேசும் போது , தலைப்புக்களை அட்டகாசமாய், கவர்ச்சிகரமாய் போடவேண்டும் எண்டு சொன்னார். தனது " நயன்தாராவின் சிங்கம் வாழைப்பழம் தின்னுமா ? " எண்ட பதிவு பலத்த வரவேற்பு பெற்றது எண்டு சொன்னார். அவரின் அந்த பதிவை வாசித்ததில் இருந்து அது போன்ற பரபரப்பு தலைப்பு இடவேண்டும் எண்டு எனக்கும் ஆசை வந்திருந்தது. இதற்காக கீழே இருப்பது போன்ற சில தலைப்புக்களையும் தயார்படுத்தி இருந்தேன்,

சௌந்தர்யா ரஜனிகாந்துக்கும் பிரபல பதிவருக்கும்(நான் தான்) காதல்
நமீத்தா ரசிகர்கள் வெள்ளத்தால் அவதி (அப்பவாவது எம் மக்களில் கஷ்டங்களை நாலு பேர் பார்ப்பார்கள் எண்டு நினைத்து)

ஆனால் பின்னர் பேசிய ஒரு பதிவர், அப்படி எல்லாம் தலைப்பு இடக்கூடாது, அது தம்மை பிழையாக வழிநடத்துகிறது. தாங்கள் எதிபார்க்கும் விடயம் இல்லாமல் ஏமாற்றப்படுகிறோம் எண்டு புலம்பினார். நயன்தாரா, சிங்கம், வாழைப்பழம் என்ற சொற்களை பார்த்து விழுந்தடித்து ஓடியந்து ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்திருப்பார் போலும். தனிப்பட்ட நபர்கள் (நயன்தாரா ?) பாதிக்கப்பட கூடாது என்று கட்டமாக கூறினார். அவரின் கருத்துக்களுக்கு லோஷன் அண்ணா பலமாய் தலையாட்டிக்கொண்டு இருந்தார், அவரின் தலை ஆட்டலின் அர்த்தம் நயன்தாராவின் பெயருக்கு இனிமேல் களங்கம் ஏற்படாது என்பதா?

Thursday, August 20, 2009

யார் இந்த அழகான பொண்ணு ? யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..

தொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்கம் பன்னிரண்டு நிமிடங்களை ஆக்கிரமிக்கும் விளம்பரங்களை கண்ணுக்கு குளிர்ச்சியாக , அழகாக காட்டவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு விளம்பர இயக்குனருக்கும் உண்டு. ஒவ்வொரு தோல்வி அடையும் விளம்பரத்துடனும் , குறித்த விளம்பர சார்ந்த பொருளின் விற்பனையும் தோல்வி அடையும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

சமீப காலமாக அழகான ஒரு மொடல் நிறைய விளம்பரங்களில் தோன்றுகிறார். அவர் யார் ?என்ன பெயர் போன்ற விடயங்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் தோன்றும் ஒவ்வொரு விளம்பரமும் அழகாக , அர்த்தமுடையதாக செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை கதை கேட்டு விளம்பரங்களில் நடிக்கிறாரோ தெரியவில்லை.

இந்த பெண் வரும் விளம்பரங்களை பார்க்கும் போது தனி ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது, ரகசியமாக ரசிக்க தோன்றுகிறது, அழகாக நடிக்கவும் செய்கிறார். ஏன் இது போன்ற அழகு தேவதைகளுக்கு சினிமா கதவுகள் திறக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சேரன், பாரதிராஜா போன்ற ஹெரோஇன் தொடர்பாக தேடல் உள்ள இயக்குனர்கள் கூட கவனிக்க வில்லையே.

அவர் நடித்த விளம்பரங்களை தேடி தேடி தந்திருக்கிறேன், universal mobile phones,sowbhakkiya,ashok,3 roses tea என்று நிறைய விளம்பரங்களில் வருகிறார். அதையும் தாண்டி koohinoor jasmine condoms விளம்பரத்திலும் அனைவரையும் கவரும் இந்த மொடல் பற்றிய விபரம் தெரிந்தால் பின்னூட்டம் இடவும் .
பிடித்திருந்தால்(பொண்ணும்,பதிவும்)வோட்டுப் போடுங்கள்

Sunday, August 16, 2009

இது ஒரு இந்திய எதிர்ப்பு பதிவு

இந்தியர்களுக்கு , அதிலும் குறிப்பாக வட இந்தியர்களுக்கு ஒரு கர்வம் இருக்கிறது. தாங்கள் வானத்தில் இருந்து வந்ததாய் இறுமாப்பு கொண்டிருப்பார்கள். தங்களை அனைவரும் தலையில் வைத்து கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தங்கள் நாடு தொடர்பாக யாருக்கும் இல்லாத பற்று தங்களுக்கு உண்டு எனக்காட்டி கொள்வார்கள். ஓட்டு மொத்த இந்தியாவும் தங்களால் தான் பிரதிநிதித்துவ படுகிறது என்று உலகத்துக்கு கதை சொல்வார்கள்.

அப்துல் கலாமுக்கு அமெரிக்காவுக்கு சொந்தமான விமான சேவை ஒன்றில் செல்லும் போது, அவர் குடியரசு தலைவர் என்று பார்க்காமல் சோதனை செய்தது தவறு தான். அதற்காக அந்த விமான சேவை நிறுவனம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் வெறும் கூத்தாடி பயல் சாருக்க் கானிடம் இரண்டு மணிநேரம் அமேரிக்காவில் வைத்து விசாரணை நடத்தியதற்காக ஓட்டு மொத்த வட இந்தியாவும் இதை ஒரு தேசிய பிரச்சனையா கொள்வதற்கு என்ன காரணம்?அமெரிக்காவின் பார்வையில் சாருக்க் கான் சாதாரண மனிதன் தானே. அவரில் சந்தேகம் இருந்தால் அவர்கள் நாட்டுக்குள் நுழையும் போது விசாரிக்க தானே செய்வார்கள். இதை இனவாத தாக்குதல் என்று சாயம் பூசுவதில் யாருக்கு என்ன இலாபம்.

சருக்கானை பற்றி எல்லாருக்கும் தெரியும் , இந்தி சினிமாவில் ஓவராய் படம் காட்டுவதற்கு அவருக்கு நிகர் அவர் தான் . அவரின் ஓவரான பந்தா காரணமாகவே அவரை யாருக்கும் பிடிப்பதில்லை. இதுவே ரஜினி, கமலுக்கு நடந்திருந்தால் இது போல தூக்கி பிடித்திருப்பர்களா.

அமெரிக்க தலைவர்கள் வந்து, இந்தியா எமது தோழமை நாடு , அருமையான நாடு , அழகான நாடு என்று பீ பீ ஊதுவதில் , இந்தியாவில் நூறு கூடி மக்கள் கொண்ட ஒரு மார்க்கெட் என்பதை தவிர வேறு காரணம் இல்லை. வெள்ளையன் தங்களுக்கு எது வசதியோ அதை அடைவதற்காக எதுவும் செய்வான். அதை ஐநூறு ஆண்டுகள் அடிமையாக இருந்தும் இந்தியா புரிந்து கொள்ள வில்லையே. இப்படி பாசாங்கான அமெரிக்க பாசத்தை பார்த்து , தங்கள் மேலாண்மையை நிலை நாட்ட இது போன்ற காரணத்தை வைத்து மோதிக்கொள்வது நிறையவே ஓவராய் இருக்கிறது.

அப்படி மோதிக்கொண்டு அமேரிக்கா மன்னிப்பு கேட்டால் , மற்றுமொடு சுகந்திர தினமாய் கொண்டாடுவார்கள் போலும். சாருக்கான் டிவியில் வந்து பாரத் மாதாவுக்கு ஜெ என்பார். இப்படி எல்லாம் செய்வதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். ஆஸ்திரேலியா மாணவர் தாக்கப்பட்ட விடத்தில் பெரிதாக கத்தி கூப்பாடு போட்டும் அவுஸ்திரேலியா அரசாங்கம் கண்டு கொள்ள இல்லையே. மீண்டும் இந்திய மாணவரை கைது தானே செய்தது.

இந்தியா தனது நிலையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். வல்லரசு , வல்லரசு சினிமாக்களும் , மீடியாக்களும் ஊதுவதை பார்த்து தன்னை வல்லரசு என்றே நினைத்துக்கொண்டு விட்டது போலும். இந்த வல்லரசு நாட்டுக்கு தான் மும்பை வந்த பத்து தீவிரவாதிகளை பிடிப்பதற்கு மூன்று நாள் பிடித்தது. இதே வல்லரசு தான் நக்க்ஷல் தீவிராவாதிகளுக்கு பரிசுத்திட்டம் அறிவித்து அடக்க முனைகிறது. (ஆயுதம் மூலம் அடக்க முடியாமல்) இதே வல்லரசு தான் இலங்கை ராணுவத்திடமே தொடை நடுங்குகிறது.

இதுவரை வரலாற்றிலே எந்த ராணுவ சாதனையும் செய்யாது வல்லரசு என்று சொல்பவர்கள் இந்திய இராணுவம் மட்டுமே. (பாகிஸ்தானிடம் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை, தோல்வியில் முடிந்த இலங்கை அமைதி காக்கும் நடவடிக்கை , இவை இரண்டு மட்டுமே நான் அறிந்த அண்மைய இந்திய ராணுவ நடவடிக்கைகள். ) வேண்டும் என்றால் விடுதலை இயக்கம் ஒன்றை மறைந்திருந்து தாக்கியதை சாதனை கொள்கிறார்களோ தெரியவில்லை.?

பாரதி, வா.ஊ.சி. பகத் சிங், திருப்பூர் குமரன் வடிவத்தில் இன்று கூத்தாடி பயல் சாருக்க் கானின் போராட்டத்தையும் இந்திய விடுதலை போராட்டமாக கருதும் இன்றைய இந்தியர்கள் மனநிலையை எப்படி அழைப்பது ?

Monday, August 10, 2009

Scribd தரமான file sharing தளம்


தகவல்களையும் , கோப்புக்களையும் பரிமாற்றிக்கொள்வதற்கு ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. எனினும் மிகவும் திட்டமிட்ட முறையில் தகவல் கோப்புக்களை தேவைக்கு ஏற்றவாறு தேட கூடிய முறையில் இலகுவாக தருகிறது www.scribd.com என்ற இந்த தளம். இங்கு இலவசமாக எமக்கான தகவல் பக்கத்தை திறந்து Word, Pdf, Powerpoint,Xcel என்கிற தேவையான விடிவத்தில் உள்ள கோப்புக்களை உலக வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். நாம் share பண்ணும் ஒவ்வொரு file க்கான புள்ளிவிபரங்களையும் தருகிறது இந்த தளம். எத்தனை முறை எங்கள் கோப்புக்கல் தரவிறக்கம் செய்யப்பட்டன , எத்தனை மக்களால் பார்க்கப்பட்டது போன்ற விபரங்களையும் தருகிறது.

பெரும்பாலும் கல்வி, வியாபாரம், அறிவியல், புத்தகங்கள் போன்றவற்றுக்கான தரமான தளமாகவே இதை கருத முடியும், இதில் விடயங்கள் குறைவாக உள்ளதாலும் , படங்கள் போன்றவற்றை பகிர முடியாததாலும் இந்த தளத்தின் பயன்பாடு சரியான முறையில் உள்ளது. அது தவிர இங்கு நாம் பகிரும் கோப்புக்களுக்கு copyright போன்ற விடயங்கள் உறுதிப்படுத்தப் படுகின்றன. வேறு யாராவது எமது தகவல்களை திருடினால் , அல்லது தவறாக பயன்படுத்தினால் அதிக பட்ட்சம் இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கிறார்கள். குறுகிய காலத்தில் உலகில் மிகச்சிறந்த இருநூறு தளங்களுக்குள் இதுவும் இடம் பிடித்திருக்கிறது.

அதிகபட்சமான விளம்பரங்கள், கட்டணங்கள் இல்லாதபடியால் இன்றும் தரமான தளமாக இருக்கிறது http://www.scribd.com/
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes