BREAKING NEWS

Like Us

Wednesday, July 15, 2009

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.

பழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தகங்கள் அங்கு உள்ளன. அதை நடாத்திவரும் வேற்று மொழி பேசும் மனிதர் புத்தகத்தின் பெறுமதியை அதன் தடிப்பத்தை வைத்தே மதிபிடுவார். புத்தகம் கிழியாமல் கொள்ளாமல் இருந்தால் அதிகம் விலை சொல்லுவார். அதிகம் சேதமான மிக நல்ல எழுத்தாளரின் புத்தகத்தை கூட குறைந்த விலைக்கு முடித்துக்கொள்ளலாம்.

அப்படி ஒரு நாள் போன போது , குமுதம் ,ஆனந்த விகடன் , ஒரு சில பழைய "பக்தி" சஞ்சிகைகளுக்கு இடையே சில ராணி கொமிக்ஸ்கலும் கிடந்தன. கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களை பார்கிறேன். ஒரு பெண்ணின் முக முத்திரை பதித்த ராணி கொமிக்ஸ் புத்தகங்கள் இன்னும் வெளிவருகின்றனவா என்பது தெரியவில்லை. அதில் கிடந்தவை இரண்டாயிரத்து இரண்டு மூன்று காலத்தில் வெளிவந்தவை.

ராணி கொமிக்ஸ் மீதான ஏன் ஈடுபாடு ஆறாம் , ஏழாம் ஆண்டுகளில் மிக அதிகமாக இருந்தது. எட்டாம் ஆண்டுகளில் அதை படித்திருந்ததாக எனக்கு நினைவு இல்லை. அதற்கு பிறகு இண்டைக்கு தான்
முகமூடி வீரர் மாயாவி வாழ்ந்திருந்த ராணி கொமிக்ஸ் புத்தகத்தை பார்க்கிறேன். ஹாரி போட்டார்கள் , அனிமேசன் படங்கள் எல்லாம் வெளிவராத அந்தக்காலத்தில் ஏன் கனவுலக ஹீரோவாக இருந்தது மாயாவி தான். அவர் குத்தினால் தாடையில் மண்டை ஓட்டு குறி பதியும் , அதை அளிக்கவே முடியாதாம், என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கடைசி நேரத்தில் நம்ம விஜயகாந்த், எம்.ஜி. ஆர்ர் போல மாயாவி வந்து காப்பாற்றி விடுவார். மாயாவிக்கு ஒரு கேர்ள் பிரேண்டும் , சில உதவியாளர்களும் இருந்ததாக நினைவு இருக்கிறது. மாயாவியும் கேர்ள் பிரேண்டும் தங்க கடற்கரையில் குளிப்பதாக படங்களுடன் வரும் காட்சிகள் சில கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன அந்த காலங்களிலேயே...

என்னை போலவே பாடசாலையில் நிறைய பேர் ராணி கொமிக்ஸ் பைத்தியங்களாகவே திரிந்தார்கள். யார் அதிகம் வாசித்தார்கள் என்று போட்டியே நடக்கும். பாடம் நடக்கும் போது கூட கொப்பிக்குள் வைத்து சிலர் வாசித்து டீசெரிடம் அடியும் வாங்குவார்கள். பாடசாலைக்குள் இந்த புத்தகங்கள் கொண்டு வர கூடாது என்று தடைச்சட்டம் கூட இருக்குது. அதை மீறி ரகசியமாக கொண்டுவருவதும் அதை நண்பர்களுடன் பரிமாற்றி கொள்வதும் மாயாவி கதையை விட சுவாரசியமாக இருக்கும். சில நண்பர்கள் இந்த புத்தகங்களை வாடகைக்கும் விடுவார்கள். வாடகை இரண்டு ஸ்திக்கெர்கலாகவொ அல்லது வேறு பண்ட மாற்று பொருளாகவோ இருக்கும். ரெக்ஸ் , ரேயான் என்று வேறு பாத்திரங்கள் இருந்தாலும் மாயாவிக்கு தான் அதிகம் மவுசு இருந்திருக்கிறது..சில மாயாவி புத்தகங்கள் ஐந்து ச்டிக்கேர் வரை விலை போயிருக்கின்றன. சில சமயங்களில் டீசெரோ , மாணவர் தலைவர்களோ இந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களை கண்டு பிடித்து கிழிக்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஒரு நாள் நண்பன் ஒருவனின் நான்கு புத்தகங்களை மாணவ தலைவர் கிழித்து விட்டதால் அவன் நாள் முழுக்க அழுது கொண்டு இருந்தான். நாங்கள் எல்லாம் பொய் ஆறுதல் கூறினோம். பின்னர் ஒரு காலத்தில் வகுப்பறை நூலகம் என்று ஒரு நடைமுறை வந்த போது எங்கள் வகுப்பு அலுமாரியில் நிறையவே ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் ஒரு சில பாரதியார் , ராமகிருஸ்னர் புத்தகங்களுமே இருந்தன.

இப்படி சில காலங்கள் அறுபது எழுவது பக்கங்களுடன் வந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் முகமூடி வீரர் மாயாவியின் வீர சாகசங்களும் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி விட்டிருந்தன. இன்றைக்கு வாசிக்கும் சுஜாதாக்களுக்கும் , ராபின் ஷர்மாக்களுக்குமான ஆரம்பம் இது போன்ற மயாவிக்கள் வாழ்ந்த கொமிக்ஸ் புத்தகங்களால் தான் ஏற்படுத்த பட்டிருக்கிறது என்பதை எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்.?

Share this:

ஆபிரகாம் said...

பழைய மாயாவி புத்தகங்களில் ஒரு வெறியிலேயே படித்திருக்கிறே(ம்)ன். பாடம் நடக்குப் போது கூட புஸ்தாகத்தில் மறைத்து வைத்திருந்து படித்து ஆசிரியரிடம் திட்டும் வாங்கியிருக்கிறேன்.பின்னர் வந்த கலர் மாயாவி கதைகள் அவ்வளவு சுவார்சியம் இல்லாதவை. மயாவி உண்மையிலேயே இருப்பதாக நினைத்த காலங்களும் உண்டு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காமிக்ஸ் பதிவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தால் நீங்கள் கூட அதுபோல இடுகைகள் போட முடியும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டாச்சு; தமிழீஷில் நீங்கள் சேர்த்த பின் ஓட்டுப் போட்டுவிடுகிறேன்

Anonymous said...

பிளாஷ் கார்டன் கமல் என்றால் இரும்புத் திரை மாயாவி ரஜினிங்க...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழீஷிலும் ஓட்டுப் போட்டுவிட்டேன்

அசால்ட் ஆறுமுகம் said...

படிக்கும் காலத்தில் அம்மா சொன்ன ஞாபகம் ”உனக்கு படிப்பில கேள்வி கேட்டா தெரியாது, ஆனா மாயாவியில கேள்வி கேட்டா எல்லந் தெரியும்”

Anonymous said...

//பழைய மாயாவி புத்தகங்களில் ஒரு வெறியிலேயே படித்திருக்கிறே(ம்)ன். பாடம் நடக்குப் போது கூட புஸ்தாகத்தில் மறைத்து வைத்திருந்து படித்து ஆசிரியரிடம் திட்டும் வாங்கியிருக்கிறேன்.பின்னர் வந்த கலர் மாயாவி கதைகள் அவ்வளவு சுவார்சியம் இல்லாதவை. மயாவி உண்மையிலேயே இருப்பதாக நினைத்த காலங்களும் உண்டு.//

Yea True!!!!!!!

Unknown said...

in my school days i like 'mayavi'... he like a superstar in that days...
மாயாவி........ the real star in காமிக்ஸ் stars..... (karthik)

Unknown said...

http://www.youtube.com/watch?v=QdiAWXTFmps&feature=related

Unknown said...

http://www.youtube.com/watch?v=QdiAWXTFmps&feature=related

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes