BREAKING NEWS

Like Us

Wednesday, April 29, 2009

நலன்புரிமுகாம்களை பார்வையிடும் வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இந்த கதை புரியுமா?


ஒரு ஊர்ல ஒரு பாடசாலை இருந்திச்சாம் , அந்த பாடசாலையில ஒரு டீச்சர் இருந்தாங்களாம். அந்த டீச்சர் ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு வருவாங்களாம் ஆனா பாடம் நடத்த மாட்டங்களாம் ... சில நேரம் பசங்களா படிக்க சொல்லி விட்டு டீச்சர் பெஞ்சுல தூங்கிடுவாவாம். பல நேரங்களில் நேற்று நடந்த மெகா சீரியல், கிரிக்கெட் மேட்ச் , சினிமா எண்டு பலதும் பத்தும் பேசியே பொழுத களிப்பவாம். இப்படி இருக்கேக்க அந்த டீசெரை பற்றி அந்த பாடசாலை அதிபருக்கு நிறைய முறைப்பாடுகள் வந்ததாம். அந்த டீச்சர் வகுப்பில பாடமே எடுக்கிறதில்ல எண்டு பெற்றோர்களும் வந்து முறைப்பாடு செய்தினமாம்.


இதற்க்கு ஒரு நடவடிக்கை எடுக்கோணும் எண்டு நினைத்த அதிபர் ..டீசெரை அழைத்து , நான் நீங்க படிப்பிக்கிரத்தை பார்க்கவேணும், எப்ப வர எண்டு கேட்டாராம் ? டீச்சர் அதுக்கு , நாளைக்கு எட்டாம் வகுப்புக்கு படிப்பிக்கும் பொது வந்து பாருங்கள் என்று கூறினாராம்.
அடுத்த நாள் அதிபர் அந்த வகுப்புக்கு சென்ற பொது அந்த டீச்சர் மிக அருமையாக படிப்பித்துக்கொண்டு இருந்தாராம். மாணவர்கள் எல்லாம் மிக ஆர்வத்துடன் பதில் அளித்தார்களாம். மிக சிறப்பாக விளங்குகிறது என்று எல்லா மாணவர்களும் தலை ஆட்டினார்கலாம். அதிபரும் அதை எல்லாம் பார்த்து நம்பி டீச்சர் நல்ல படிப்பிக்கிறீங்க எண்டு சொல்லி பாராட்டி விட்டு வந்தாராம். மற்ற டீசெர்களுக்கும் அந்த டீசெரை பற்றி புகழ்ந்து சொன்னாராம். சம்பளத்தையும் அதிகரிக்க பரிந்துரை செய்தாராம்.


அநியாயமாக ஒரு டீசெரை தவறாக நினைத்து விட்டோமே என்று அதிபர் பல தடைவை வருந்தினாராம். ஆனாலும் சில காலங்கள் கழித்து மீண்டும் அந்த டீச்சர் பற்றி பல முறைப்பாடுகள் வந்ததாம்..அதன் பின்னர் சுதாரித்துகொண்ட அதிபர் சில மாணவர்களை அழைத்து உருட்டி மிரட்டி விசாரித்த பொது உண்மை வெளிவந்தது. அந்த டீச்சர் குறித்த அந்த நாளில்(அதிபர் கண்காணித்த நாள்) மாணவர்களை தயார்படுத்தி , உனக்கு இந்த கேள்வி கேட்பேன் , நீ இந்த விடை கொடுக்கவேணும் , நான் படிப்பிக்கிறது விளங்குதா எண்டு கேட்டால் எல்லோரும் ஆம் எண்டு தலை ஆட்ட வேணும் , மாறி வேற என்னவாவது ஆட்டிநீக எண்டால் உரித்துபோடுவன் எண்டு மிரட்டினதை எல்லாம் மாணவர்கள் அதிபரிடம் சொன்னார்கள் .முடிவு - ஏமாந்து போனார் அதிபர், பாதிக்க பட்டார்கள் மாணவர்கள்..பிழைத்துக்கொண்டார் டீச்சர்.

காங்கிரஸ் படு தோல்வி, ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு


இப்படி ஒரு செய்திக்காக , ஐந்தாம் கட்ட தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும். தமிழர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இது போன்ற ஒரு செய்தி தான். சோனியா காந்தியும் அவர் காங்கிரஸ் கட்சியும் படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதே என் சமீபத்திய விருப்பம். இந்த தேர்தல் கருணாநித்யையும் அவரது அன்னை சோனியாவையும் இருந்த இடம் தெரியாமல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே கருணாநிதியின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலுடன் ஏறக்குறைய முடித்துவிடும் என்பதில் ஐயமில்லை . அதையும் தாண்டி அவருக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருக்குமாயின் ஜெயலலிதா குண்டுக்கட்டாய் தூக்கிவந்து சிறையில் வைப்பார் . மு.க.அழகிரி உட்பட பலருக்கும் ஜெயலிதா பல இன்ப அதிர்ச்சிகள் கொடுப்பார். அவரின் பழிவாங்கும் உணர்ச்சி பற்றி புதிதாய் எதுவும் தமிழக மக்களுக்கு சொல்லவேண்டியது இல்லையே.

என்ன திடீரென்று ஜெயலலிதா மீது பாசம் என்றெல்லாம் இல்லை, அவா வந்தும் எதுவும் செய்து கிழித்துவிட போவது இல்லை , தனி ஈழம், தமிழருக்கு தீர்வு என்பதெல்லாம் வெறும் தேர்தலுக்கனது என்பதை புரிந்து கொள்ளமுடியா அளவுக்கு நான் உணர்வு ரீதியாக முடிவு எடுப்பவன் இல்லை. ஆனாலும் கருணாநிதிமீதான அளவு கடந்த கோபம் , அவர் தமிழ் சமூகத்தின் காவலராக இருந்து கொமேடியானாக மாறியதால் ஏற்பட்ட ஏமாற்றம் என்பன அடுத்த மாற்றீடான ஜெயலலிதா மீது நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது. காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் தாங்களின் பாவம் புரிய ஜெயலலிதா வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.


அடுத்ததாக , நான் அதிகம் மதித்த மனிதர் ப.சிதம்பரம் , ஒரு வழக்கறிஞராக , ஹர்வர்ட் பட்டதாரியாக , சிறந்த ஒரு நிர்வாகியாக மதித்தேன் , ஆனால் இவ்வளவு இருந்தும் தமிழ் உணர்வு மனிதருக்கு குறைவுதான் . சிவகங்கையில் போட்டியிடும் அவர் படு தோல்வி அடைய வேண்டும் என்பதும் என் ஆவல் . பாரதிராஜா ஆவன செய்ய வேண்டும் .அவர்தவிர ஜெயந்தி நடராஜன் , பிரணாப் முகர்ஜி போன்ற அதி மேதாவிகளும் , தேர்தலில் போட்டி இடுவார்களாக இருந்தால் படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதும் மிகப் பெரிய ஆசை.


அது தவிர ப.ஜ.க. காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமையும் என்பதே என் எதிர்பார்ப்பு. அப்படி ஒரு ஆட்சி அமைந்தால் ஜெயலிதா அல்லது சந்திரபாபு நாயுடு பிரதமராக வேண்டும் . அதுவும் தமிழ் நாட்டில் இருந்து ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு நிறையவே பொருத்தமானவர் தான்.

Saturday, April 25, 2009

மாகாண சபை தேர்தலும் , வாக்களிக்க மறந்த தமிழனும்


இன்று கொழும்பு மாகான சபை தேர்தல், என்னுடைய வாழ்வில் முதல் வாக்கும் கூட இரண்டாயிரத்து நாலில் நடைபெற்ற இதே தேர்தலுக்கானது தான். ஏன் முதலாவது வாக்கில் ஒரு ஆட்டோ காரர் மாநகர மேயராக வந்தார் என்று கதை சொல்வதாயின் ஆகக் குறைந்தது நான்கு பத்தியாவது நான் டைப் அடிக்க வேண்டும். எனவே அதை தவிர்த்து நேரடியாக விடயத்துக்கு வருகிறேன்.

காலையிலேயே நண்பர் ஒருவருக்கு மெசேஜ் போட்டேன் , அடே வாக்கு போட போனியா எண்டு? இதுக்கு எல்லாம் எவன் போவான் எண்டு பதில் வந்தது அலட்சியமாக. எண்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாக்கில் அப்பா , நான் ஆகிய இருவரினதும் வாக்குகள் மட்டுமே பதிவானது. நான் வசிக்கும் பிளாட்டில் எழு பேர் மட்டுமே வாக்கு போட போனதாக எங்க சிகுரிட்டி ஐயா சொன்னார். முழு வெள்ளவத்தையிலும் இதே நிலைமை தான். நூற்றில் இருபது தமிழர்கள் வாக்களித்திருப்பர்களா என்பது எனக்கு சந்தேகமே . பெருன்பான்மை கட்சிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள் எல்லாம் மடையர்கள் , தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற தோரணையில் பசல்ல்ஸ் ஒழுங்கையில் சுவரொட்டி பார்த்தேன்.

கவலையில் எல்லா தமிழர்களும் இருக்கிறார்களோ எண்டு பார்த்தல் அதுவும் இல்லை , எது என்ன நடந்தாலும் எம் சமூகம் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. சிலருக்கு இன்று தேர்தல் என்ற ஒண்டு இருப்பது தெரியவே தெரியாது. நமது தமிழர்களும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றோ , தலை நகர தமிழரின் அரசியல் பிரநிதித்துவம் என்ன என்பது பற்றிய எந்த வித உணர்வும் இன்றி ஏன் சமூகம் தன் வேளைகளில் மட்டும் மும்மரமாக இருந்தது.

தொலைக்காட்சியில் போகும் செய்தியை பார்த்து கருணாநிதியை திட்டிக்கொண்டு இருந்தார் அம்மா . ஏமாற்றுவார் எண்டு தெரிந்தும் ஜெயலலிதா மீது எதோ ஒரு நம்பிக்கை எங்கள் வீட்டில் புதிதாக.. ஒருவேளை கருணாநிதி மீதான எதிர்ப்பு "டாக்டர்" "புரட்ச்சித்தலைவி" "அம்மா" அவர்களுக்கு ஆதரவாக மாறி இருக்கலாம். எம் சொந்த நாட்டில் தேர்தல் அதில் எமக்கான பிரதிநிதித்துவத்தை மறந்து எதோ ஒரு நாட்டின் தலைவர்களை நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம் .

எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமிழர்கள் வாக்களிக்க மறுத்ததன் விளைவுகள் , இன்று தமிழ் உயிர்கள் ஆயிரங்களில் பலியாகின்றன. லட்ச்சக்கணக்கான மக்கள் தமது பொருளாதாரம் இழந்து , தமது உழைப்பு இழந்து , உடைமைகளை இழந்து ஒருவேளை சோற்றுக்கும் , தண்ணிக்கும் யாரிடமோ கையேந்துகிறார்கள் . அளிக்கப்படாத தமிழனின் வாக்குக்கு இவ்வளவு விலையா ?
இல்லாவிடில் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்றால்.? இது ஒன்றும் கேயாஸ் தியரி போல் சிக்கலானது இல்லை . வாக்கு போட்டிருந்தால் அன்று வந்திருக்க கூடியவருக்கு கொஞ்சம் மனிதாபிமானமும் , நெஞ்சில் கொஞ்சம் ஈரமும் இருந்திருக்கும் ஆகக் குறைந்தது தமிழன் உயிர் மீதாவது ......
Saturday, April 18, 2009

சுஜாதாவின் பெயரால் ஒரு கோர தாண்டவம்

சுஜாதா என்ற காலத்தால் அழியாதா அந்தப் பெயர் , தம்மானா, ருக்மணி என்று இரண்டு அழகான ஹீரோஇன் போன்ற ஒரு சில காரணங்கள் மட்டுமே அதிகம் நேர்மாறான விமரிசிக்கப்பட்ட இந்தப் படத்தை பார்க்கத்தூண்டியது. ஏற்கனவே படம் எதிர்பார்ப்புக்களை சற்றும் பூர்த்தி செய்யவில்லை என்ற வகையிலான விமர்சனங்கள் நிறையவே வந்திருந்தன. அறிமுகமான காலம் முதலே தம்மன்ன மீது ஒரோ பெரிய ஈடுபாடு . அனால் ஆனந்த தாண்டவம் பார்த்தபிறகு நிறையவே குறைந்துவிட்டிருக்கிறது. ருக்மணி தனித்து தெரிகிறார். பாரதிராஜா அறிமுகம் செய்து வைத்த பொம்மலாட்ட நாயகி என்பது காரணமாக இருக்கலாம்.

சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் என்ற கதையை நான் படித்ததில்லை , ஆனாலும் இந்த ஆனந்த தாண்டவத்தை பார்த்த பிறகு அதை கட்டாயம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இவ்வளவு மோசமான ஒரு வகையில் சுஜாதா எழுதி இருக்க வாய்ப்பில்லை. அவருக்கு என்று தனித்துவமான சில விடயங்கள் இங்கு இல்லை அல்லது தவறாக கட்சிப்படுத்தப்படிருக்கிறது. நான் நிறையவே சுஜாதாவை வாசித்திருக்கிறேன் ஆனாலும் அவர் பெயர் சொல்லி வரும் இந்த படத்துடன் ஒன்ற முடியவில்லை என்பதால் எங்கயோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

அஸ்கர் ரவிச்சந்திரன் எவ்வளவு கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தினாலும், சினிமா ரசிகர்களை இந்தப் படம் மூலம் திருப்திப்படுத்துவது கடினம் தான். எனக்கு தெரிந்த தமிழ் சினிமாக்களில் (விஜய் , ராமராஜன் படங்கள் தவிர்த்து )ஒரு படத்தின் கதாநாயகனை இவ்வளவு மோசமாக சித்தரித்து பார்த்திருந்த சந்தர்ப்பங்கள் மிக குறைவுதான். பல செயட்கைதனமான (ராதக்ரிஷ்ணனின் மொட்டை உட்பட ) காட்சிகள், படத்துக்கு ஒட்டாத நகைச்சுவை , படத்தொகுப்பில் உள்ள தொய்வு என்பன படத்திலிருந்து பல மயில் தூரம் அன்னியப் படுத்துகின்றன. படத்தில் திரைக்கதை , பாத்திரங்கள் தெரிவு போன்ற பல அடிப்படைகளிலேயே தவறு இருக்கிறது. மொத்தத்தில் சுஜாத்தாவின் பெயரால் நடத்திய அகோர தாண்டவம் இந்த "ஆனந்த தாண்டவம்"


(இவருக்காக மட்டும் பார்க்கலாம் )

Wednesday, April 15, 2009

மனம் புத்தி என்ற இரண்டு உண்டு .


மனம் புத்தி என்ற இரண்டு உண்டு . மனது என்பது பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டு உள்ளது. இதற்கு புதிதாக எதையும் சேர்த்துக்கொள்ள தெரியாது. நடந்த சம்பவங்களை அவ்வப்போது வீடியோ போல் பதிவு செய்து வைத்துக்கொள்ளும். வார்த்தை , செயல் என்பது மனத்தின் வெளிப்பாடுகளே. எனவே மனத்தில் பதியப்பட்ட ஒன்று தான் வார்த்தையாகி வெளியே வருகிறது. பகட்டாய் பேசினாலும் , குத்தலாய் பேசினாலும் அது மனதின் வெளிப்பாடுகளே.

சுகிசிவம்.

Monday, April 6, 2009

குடிகாரன் பேச்சு : புகைப்படமாக....


Saturday, April 4, 2009

Edexcel: Commerce 7100 revision notes

This document is a complete summery of information to be taken into consideration for the students who are preparing for the edexcel g.c.e (o/l) examinations.

It demonstates all the elements of commerce in a simple, easy to study format. This revision kit will be worth for the last moment check in all topic areas studied under commerce.
For easy and simple download click here
Commerce Revision Notes (edexcel 7100) G.C.E.(O/L)
Commerce Revision Notes (edexcel 7100) G.C.E.(O/L) haran5555
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes