BREAKING NEWS

Like Us

Thursday, March 19, 2009

ஹோட்டல் ருவண்டா: நமக்கு நெருக்கமான படம்


பத்து லட்சம் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்ட பொது வெறுமனே பார்த்துகொண்டு இருந்ததற்காக வெட்கப்படுகிறோம் என்று எழுத்தொட்டத்துடன் நிறைவு பெரும் இந்த படத்துக்கும் , தமிழர்களாகிய எமக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது , ஒரு அதிர்ச்சி கலந்த மனிநிலையுடன் படத்தின் காட்சிகளுடனும் , வசனங்களுடனும் ஆழமாக ஒன்றிப்போக முடிந்தது. ஒரு சமூகத்துக்கு நேர்ந்த அவலம் மிக துல்லியமாக பதிவு செய்யப்பட்ட வரலாற்று ஆவணம் இந்தப் படம்.


கீழ்வரும் பகுதி இந்தப்படம் பற்றி அஸிப்மீரான் எழுதிய பதிவிலிருந்து பிரித்தெடுக்கப் பட்டிருக்கிறது. (http://asifmeeran.blogspot.com/2007/02/blog-post_3928.html) அவரின் கருத்துகள் உலகம் அதன் மக்கள் பற்றிய யதார்த்தமான உண்மையை பதிவு செய்திருக்கிறது.


படத்தைப் பார்த்து முடிக்கும்போது பத்து லட்சம் பேரை பலி கொண்ட ஒரு சம்பவம் நடந்ததே கூடத்தெரியாமல் வாழ்ந்திருந்த அவலத்தைப் பற்றிய குற்ற உணர்வும், அவமானமும் உள்ளுக்குள் உறுத்தியது உண்மை. இத்தனை பெரும் கொடுமைகளுக்கும் மத்தியில்தான் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு உலாவிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது கூசத்தான் செய்கிறது.


படத்தில் வரும் ஒரு காட்சியில் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் நடந்த கொடுமைகளைப் பதிவு செய்து விட்டு வந்ததும் பால் அவருக்கு நன்றி சொல்வார்.”நல்ல வேளையாக இதனைச் செய்தீர்கள். இதன் மூலமாவது உலகத்துக்கு இந்த பெருங்கொலைகள் தெரிய வரும்” என்று. அதற்கு அவன் பதில் சொல்வான்."உண்மைதான். இந்த விசயம் உலகத்துக்குத் தெரிந்தால் மட்டும் என்னாகப்போகிறது? ‘ஐயோ’ வென்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு சேனலை மாற்றிவிட்டு இரவுச்சாப்பாட்டில் மூழ்கி விடுவார்கள்” என்று.


அந்த யதார்த்தம் ரொம்பவே சுடுகிறது. நமக்கென்று ஏதும் வராதவரையில், நிகழாதவரையில் உலகில் எங்கே குண்டு வெடித்தாலும் அது வெறும் செய்தியாக சில விநாடிகள் மட்டுமே மூளைக்குள் பதியுமளவிற்குத்தான் இருக்கிறது மானுடம் இங்கு.மூன்றே மாதங்களில் 10 லட்சம் பிணங்களால் ருவாண்டா சுடுகாடான மானுட வரலாற்றுக் கறையில் தலையிட எந்த அமெரிக்க, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளும் முன்வராத அவலத்தை சொல்லிச் சென்றாலும் இந்தப் படம் உலக அரசியலை முன்வைக்கவில்லை.லட்சக்கணக்கானவர்கள் குரூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை குருதிச் சொட்டச் சொட்டக் காட்டி மனதிற்குள் இருக்கும் குரூரனை திருப்திப்படுத்தவும் முனையவில்லை இந்தப் படம்.


மாறாக, தான் தன் குடும்பம் என்று வாழ்ந்த ஒரு மனிதன், தன் கண் முன்னால் விலங்குகளைப் போல மனித உயிர்கள் வேட்டையாடப்படுவதை உணர்ந்து, தன்னால் முடிந்த அளவு மனித உயிர்களைக் காப்பாற்றும் தீரத்தை, மானுட நேசத்தை வலியுறுத்திச் செல்கிறது இந்தப் படம்.


Share this:

Anonymous said...

watch these movies too

"some timein april"
"Rabbitfence"

தென்னவன். said...

என்னை மிகவும் பாதித்த படம்..........

ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க..

நன்றி

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes