
பலரும் எதிர்பார்க்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் குறித்தாயிற்று , தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியிருக்கின்றன. இலங்கை தமிழர் பிரச்சனையே தமிழக தேர்தலின் மையப்பொருள் அகி இருக்கிறது. தனது ஓட்டு மொத்த பலத்தையும் திரட்டி , வாக்காளருக்கு பணமாய் இறைத்து திருமங்கலம் இடைத்தேர்தலில் வென்றிருந்தது தி.மு.க . அனாலும் இன்றைய சூழ்நிலையில் இலங்கை தமிழர் விவகாரத்தில் கருணாநித்யின் நடிப்பின் உண்மை முகம் முற்றாக வெளிப்பட்ட நிலையில் இனிமேலும் அந்த விடயத்தை வைத்து எந்தவொரு அரசியல் லாபமும் பெறமுடியாத நிலைக்கு கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார்.

ஐயகோ நெஞ்சை உலுக்குகிறது , இதயத்தில் இடியாய் இறங்கியது என்ற அவரின் வீர வசனங்களின் உண்மையை தமிழக மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள். உள்ளத்தில் புழுக்களையும் உதட்டில் பூக்களையும் வைத்திருப்பவர்களின் விம்பம்மானது விடிவதற்குள் வெளிச்சமாகி விடுகிறது விடுகிறது என்ற வாசகம் கருணாநிதி விடயத்தில் காலம் கடந்தாவது நிஜமாகி இருக்கிறது .

எந்த விடயத்தில் மெத்தப் பழுத்த கருணாநிதி சறுக்கி விழுந்தாரோ , அந்த இலங்கை தமிழர் விடயத்தை வைத்தே ஜெயலலிதா இப்போது வென்று காட்ட எத்தனித்து இருக்கிறார். இவ்வளவு காலம் அறிக்கை போர் மட்டுமே செய்து வந்த ஜெயலலிதா உண்ணா விரதம் என்ற ஆயுதம் ஏந்தி குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அனால் அவர் கருணாநிதியை விட கேவலமான இன உணர்வாளர் என்ற விடயம் தமிழக மக்களுக்கு தெரிய இன்னும் நிறைய காலம் எடுக்கும். ஆனாலும் அவருக்கு கிடைத்திருக்கும் ஒரே துரும்ம்புச் சீட்டு வைகோ , அவரை வைத்தே , இலங்கை தமிழர் பிரச்சனயை ஆயுதமாக்கி , இந்த தேர்தலில் ஜெயலலிதா அதிகபட்ச வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது. வைகோ தவிர்த்து தா.பாண்டியனும் அவருடனே இருக்கிறார் என்பதும் மற்றுமொரு பொன்ஸ். ஜெயலலிதா எதாவது கிளிக்கப்போகிராரா என்றால் இல்லை என்று அடித்து கூறலாம்.
தமிழ் மாநில காங்கிரஸ் , தமிழகத்தில் எந்த ஒரு இடத்தையும் கைப்பற்றும் நிலையில் இல்லை என்பது, தமிழகத்தில் இப்போது தோன்றியுள்ள மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மீதான இன உணர்வுள்ள தமிழரின் வெறுப்பே ஒரு சாட்சி. ஆனாலும் மத்தியிலும் இதர மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி பலமாகவும் , ஆளுமையாகவும் இருக்கின்றதென்பது குறிப்பிட்டு கூற வேண்டிய விடயம் தான். ப.ஜ.க
அத்வானி போன்ற தலைவர்கள் , கூட்டணி இழுபறிகள் என்பன ..கட்டுக்கோப்பான , ராகுல் போன்ற இளமையா தலைவர்களையும் கொண்ட காங்கிரசுக்கு அதிக இடங்களை பெற்றுத்தரும் .

எனவே மாநிலத்தில் ஜெயலலிதாவும் , மத்தியில் காங்கிரசும் வரும் பட்சத்தில் வைக்கோ போன்றவர்களையும் காய் வெட்டிவிட்டு காங்கிரசுடன் கூட்டணி வைக்கவும் தயங்கமாட்டார் ஜெயலலிதா. அப்போது இலங்கை தமிழர் விவகாரம் காற்றில் பறக்கவிடப்படும். அவரின் அனுதாபங்கள் காற்றில் பறக்கவிடப்படும். காரணம் அவரும் தமிழர் அல்லவா. துரோகம் செய்வது தானே தமிழனின் இன்றைய தாரக மந்திரம்.
என்னவே இது போன்ற நிலைமைகளை தவிர்க்க, தமிழகத்தில் ஒரு முன்றாவது அணி அமைவது மட்டுமே நீண்ட காலத்துக்கு தீர்வாக அமையும். அதில் விஜயகாந்தின் கட்சி , சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி , ராமதாசின் ப.ம.க , திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், வைக்கோவின் ம.தி.மு.க போன்ற பெரிய கட்சிகளுடன் சீமான் , தா.பாண்டியன் போன்றவர்களும் சேர்ந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். இல்லாது போயின் மேற்சொன்ன அத்தனை பேரின் பணமும் , நேரமும், அரசியல் கொள்கைகளும் கருணாநிதி , ஜெயலலிதா போன்ற சுயநல அரசியல் முதலைகளால் சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
பெரும்பாலான அரசியல்வாதிகள், மக்களின் உணர்வுகளை வாக்குகளாக்கும் வித்தை தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். தொடர்ந்தும், மக்கள் உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் இந்த ஏமாற்றங்கள் தொடரும் என்பது வேதனைக்குரிய உண்மை...
Post a Comment