BREAKING NEWS

Like Us

Friday, March 27, 2009

என் பதிவை படித்து முடிவு எடுக்கும் ஒபாமா.

அப்படி ஒரு தலைப்பு இடுவது நிறையவே ஓவராய்தான் இருக்குது . அனாலும் ஒரு நாலு பேர் அதிகமாய் வந்து என் பதிவை படிக்க மாட்டார்களா என்ற விபரீத ஆசை எப்போது தலைப்பு இடும் போதும் வந்துவிடுகிறது. ஆனாலும் இப்படி தலைப்பிட்டதற்கு ஒரு காரணம் இருக்கு , அதை கடைசியில் சொல்லியிருக்கிறேன் . நான் எதிர்வுகூறிய விவாதித்த சில விடயங்கள் பின்னைய காலங்களில் நடந்தது , அல்லது அது போல கருத்துக்கள் வெளிவந்தன. அது போன்ற சிலவற்றை இப்பதிவில் தொகுத்து இருக்கிறேன்.

கமல்ஹாசன்

"அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள், மற்றைய நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள் ?


இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார் படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்? வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்றைய இந்திய நகரங்கள் பற்றி ? இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழுகிறது . ஆனாலும் இயக்குனர் பொய்யான ஒன்றை கட்டவில்லை, நிஜமான பல விடயங்களையே கட்ட்சிப்படுத்தியிருக்கிறார். நாம் சென்று அமெரிக்க போன்ற நாடுகளின் மக்களையும் , மனிதர்களையும் கேவலமாக பிரதிபலித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா ? ("http://haran5533.blogspot.com/2009/01/slumdog-millionire.html)

இது போன்ற ஒரு கருத்தை நான் ரகுமானுக்கு அஸ்கர் விருது கிடைப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னமே பதிவிட்டு இருந்தேன். அதன் பின்னர் அந்த படம் இந்திய இறையாண்மையை பாதிக்கிறது /இல்லை என்கிற தலைப்புகளில் பல பதிவுகள் , பட்டி மன்றங்கள் எல்லாம் நடைபெற்றன. என் நம்ம கூட இதே தலைப்பில் கலந்துரையாடல் நடை பெற்றது. நேற்று கூட ஒரு விழாவில் நடிகர் கமலஹாசன் படத்தில் இந்தியா பற்றிய உண்மைய தானே காட்டியிருக்காங்க ...எண்டு விமர்சித்து இருந்தார்.

அதிமுக கூட்டங்கள்

"தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும், கட்டுமரமாக தான் மிதப்பேன் ...அதி நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் , கவிழ்ந்து விட மாட்டேன்".

என்ற கருணாநிதியின் வீர வசனங்கள் பற்றி ஒரு பத்தி எழுதினேன் , இப்போது எல்லாம் a.தி.மு.க பொதுக் கூட்டங்களில் எல்லாம் இதவை வைத்து தாரளமாக கருணாநிதியை கடிக்கிறார்கள் . அண்மையில் ஜெ யின் உண்ணாவிரதத்தில் நடிகர் குண்டு கல்யாணம் ...மேற்கண்ட விடயம் தொடர்பாக நகைசுவையுடன் பேசியிருந்தார்.

தமிழருவி மணியன்

தமிழகத்தில் ஒரு முன்றாவது அணி அமைவது மட்டுமே நீண்ட காலத்துக்கு தீர்வாக அமையும். அதில் விஜயகாந்தின் கட்சி , சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி , ராமதாசின் ப.ம.க , திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், வைக்கோவின் ம.தி.மு.க போன்ற பெரிய கட்சிகளுடன் சீமான் , தா.பாண்டியன் போன்றவர்களும் சேர்ந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். இல்லாது போயின் மேற்சொன்ன அத்தனை பேரின் பணமும் , நேரமும், அரசியல் கொள்கைகளும் கருணாநிதி , ஜெயலலிதா போன்ற சுயநல அரசியல் முதலைகளால் சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. (http://haran5533.blogspot.com/2009/03/blog-post_12.html)

இந்த பதிவு எழுதி சில நாட்கள் கழித்து தமிழருவி மணியன் , வீரகேசரி நாளிதழுக்காக இதற்குச்சமனான ஒரு கருத்தை சொல்லி இருந்தார். அதாவது தமிழகத்தில் தமிழர் பாதுகாப்பு பேரவையின் பெயரின் ஒரு மூன்றாவது அணி அமைய வேண்டும் என்று.

கடைசியாக ஒபாமா

"இங்க என்ன நடந்தாலும் பரவாயில்லை, எனக்கு ஏன்டா மாமா வெளிநாடுல இருக்கிறார் எண்டு கிளம்ப இருப்போர் கவனத்துக்கு, இத விட மோசமான நிலை தான் அங்க இருக்கு..பெட்ரோல் அடிக்கும் வேலையையும் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்துக்கொல்வதாய் கேள்வி...எனவே வாழமுடியாமல் கிளர்ச்சிகள் வெடிக்கும், வெளிநாடுகளில் வேலை சார்ந்ததாய் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் உருவெடுக்கும்.. இதனால் குடிவரவு கொள்கைகளில் கூட மாறுதல்கள் வரலாம்....வெள்ளைக்காரன் ஆசிய நாட்டவர் மோதல் எண்டு செய்திகள் வரலாம் ...சாப்பாட்டுக்காகவும் கொவ்ரவத்துக்க்ககவும் மனிதன் எந்த நிலைக்கும் செல்வான், அந்த நிலைகளை இனிவரும் கால உலகம் நிறையவே காண வேண்டி இருக்கும்......நவீன மனிதனின் அத்தனை துறைகளிலும் நிதி நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட கிளை பிரச்சினைகளும் கொழுந்துவிட்டு எரியும்"(http://haran5533.blogspot.com/2008/12/blog-post_9314.html)

இது தான் என்னையும் ஒரு பதிவராக்க ஊக்கப்படுத்திய பதிவு . அதில் நான் கூறியது போல , ஒபாமா அரசு பல குடிவரவு கொள்கைகளை மாற்றியிருக்கிறது. அமெரிக்க உட்பட பல நாடுகள் தங்கள் நாட்டின் வேலை வாய்ப்பில் சொந்த தேசத்தவருக்கே முன்னுரிமை என்று வெளிப்படையாகவே அறிவித்து உள்ளது.

எனவே இப்போது நான் போட்ட தலைப்பில் ஒரு அர்த்தம் இருக்கு தானே.

Wednesday, March 25, 2009

விஜயால் கோகோ கோலாவுக்கு பாதிப்பு.


சந்தோசம் என்றும் கோக் காலே என்று மேன்மையாய அடிப் பாடி அனைவரையும் கவர்ந்து வந்த கோக் விளம்பரத்தை இப்போது அதிகம் பார்க்க கிடைப்பதில்லை. கோக் குடித்து அனைவரையும் கூலாக இருக்க சொன்ன விஜய் அண்மைய பத்திரிகையாளர் சந்திப்பில் எரிந்து விழுந்ததை தொடர்ந்து கோகோ கோலா நிறுவனம் பாரிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.

வியாபர தூதுவரான விஜய் விளம்பரத்துக்கு முற்றிலும் மாறுபட்ட நிஜ நடத்தை காரணமாக பல கோடி பணத்தை இழக்கும் நிலைமை அந்த நிறுவனத்துக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த பல வருடங்களாக வியாபர தூதுவராக இருந்த விஜய் மாற்றப்பட கூடிய சந்தர்பங்களும் உள்ளன .

பிரசன்னா இல்லாத Airtel Super Singer நிகழ்ச்சி

சில பல நாட்கள் என் ஒரு மணி நேரத்தை விழுங்கிய நிகழ்ச்சிக்கு நாளையில் இருந்தது முற்றுப் புள்ளி வைக்கப் போகிறேன் , அளவுக்கு அதிகமாக நெகிழ்ந்து சென்றாலும் பொறுமையாக இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தது நம்ம பிரசன்னவுக்காகவும் , தம்பி ரோகிதுக்குஆகவும் தான். இப்போது இரண்டு பேருமே இல்லை என்கிற பொது இந்த நிகழ்ச்சி பார்க்க ஏனோ மனசு விரும்புது இல்லை.

எதோ எதோ காரணகளுக்காக , recall round மீண்டும் recall round எண்டு வைத்து தங்களுக்கு தேவையானவர்களை திரும்பவும் கொண்டு வந்து விட்டார்கள். ரோகித்துக்கு நடந்த சம்பவம் வருந்த தக்கது. இப்படி வருசக்கணக்கில் நிகழ்ச்சி போதும் எண்டு படிக்கிற பொடியனுக்கு தெரியுமா. சராசரியாக இந்த நிகழ்ச்சியின் ஒரு விளம்பர இடை வேளையில் பத்து விளம்பரங்கள் காட்டுகிறார்கள் . இப்படி வருமானம் கொழிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் போது இதை நிறுத்த நிர்வாகம் தயங்குகிறது போல் தெரிகிறது. ஆனாலும் இப்போது ரொம்பவே சலிப்பு தட்டுகிறது.. தரம் குறைந்து விட்டது.

பிரசன்னா இல்லாத நிகழ்ச்சி இன்னும் சலிப்பு. எந்த ஒரு பலமான பின்னணியும் இல்லாமல் , பிரசன்னா இந்த நிகழ்ச்சியினுடாக சாதித்தது அதிகம். மிக தரமான மக்கள் மனதை வென்ற அருமையான அந்த கலைஞனுக்கும் அவரது மனைவிக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மீதும் ஒரு முறை வைத்து பிரசன்னா தெரிவு செய்யப்பட்டால் மீண்டும் பார்க்க வருவேன். எனக்கு அந்த வெள்ளை புள்ளைய பார்த்தாலே புடிக்குது இல்லை , அனாலும் நம்ம நடுவர் அண்ணே (தற்போது மீசை இல்லாதவர்) ரொம்பத்தான் பரிதாபப் படுகிறார் . கண்ணீருக்கு மார்க்ஸ் போடுறவங்க என் நடுவரா வராங்களோ?

Sunday, March 22, 2009

இந்திய அரசின் நடத்தை (attitude) சரி இல்லையாம்: இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கும் புரிந்திருக்கிறதுதன் வினை தன்னைச்சுடும் என்பார்களே , அது போல தான் இந்தியாவின் அணுகு முறை மீண்டும் ஒரு முறை அவர்களையே சுட்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடைபெற வேண்டும் என்று நான் அதிக நாள் எதிர்பார்த்து காத்து இருந்தேன். இலங்கை அணி மீது லாகூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போதுஇந்திய ஊடகங்கள் நடந்து கொண்ட விதமும் , தெரிவித்த காட்டமான கருத்துக்களும் இப்போது இந்தியாவிற்குள்ளேயே உள் வீட்டு பிரச்சனையாகி இன்று உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது.
இந்திய பர்மியர் லீக் என்ற உள்ளூர் போட்டி இப்போது வெளிநாட்டில் நடை பெறுமாம். கேட்கவே சிறு பிள்ளை தனமா உள்ளது. ஒரு உள்ளூர் போட்டிக்கு பாதுகாப்பு தரமுடியாத அரசாங்கம் எப்படி உலக கிண்ண போட்டி , இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டில் டில்லியில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகைளை எல்லாம் நடத்தப் போகிறது என்பது ஆட்சியில் இருக்கிற காங்கிரசுக்கும் , டீலா திட்சிதுக்கும் மட்டும் வெளிச்சமான விடயம்.
உலகின ஐந்தாவது பெரிய இராணுவம் என்று பீலா விடும் நாட்டுக்கு , ஒரு கிரிக்கெட் போட்டி , ஒரு தேர்தல் என்ற இரண்டை கூட சமாளிக்க முடியாத நிலை இருக்கிறது என்று தலிபான் தீவிரவாதிகளுக்கு தெரிந்தால் , ஓட்டு மொத்த இந்தியாவையே இரண்டு நாட்களுக்குள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட முடியுமே? ஆக இந்திய உள்துறை அமைச்சின் இந்த முடிவு இது போன்ற ஒரு பலவீனமான ஒரு செய்தியை தான் வெளி உலகத்துக்கு சொல்லியிருக்கிறது.
போட்டிகளில் முதலிடப்பட்ட பணம் , காலம் என்பன தொடர்பில் பலரையும் கவலை கொள்ள செய்திருக்கிறது , டீம் உர்மையாளர்கள் பலரும் கப்பல் கவிழ்ந்தது போல இருந்தார்கள். லலித் மோடி தன்னை ஒரு பெரும் நிர்வாகி என்று காட்டிக்கொள்ள மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். அது எந்தளவு தூரம் வெற்றி தரும் என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும் , வெற்றி தாராது என்பதே என்னுடைய அனுமானம்.
பாக்கிஸ்தான் சம்பவத்துக்கு ரா (RAW) தான் காரணம் என்று இன்று செய்தி வெளியான நிலையில் , ஒருவேளை பாக்கிஸ்தான் சம்பவம் போன்று ஒரு கிரிக்கெட் போட்டியின் போது நடந்தால் அது தேர்தலின் ஓட்டு மொத்த முடிவையே பாதிக்கும் என்று சிதம்பரத்தின் ஹர்வர்ட்(HARWARD) மூளைக்கு விளங்கியிருந்தாலும் , அதை எப்படி பக்குவமாக கையாளுவது என்று அவர் படித்த பல்கலைக்கழகத்தில் சொல்லி கொடுக்க வில்லை போலும். நேரடியாக சொல்லாமல் லலித் மோடியை இழுத்தடித்து இருக்கிறார். ..அது கடைசியில் இந்திய அரசின் "பழக்க வழக்கம் " சரியில்லாததால் கிரிக்கெட் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்றுகிறோம் எண்டு சொல்லும் வரை கொண்டு வந்து இருக்கிறது. பாவம் காங்கிரசுக்கு தான் எத்தனை சோதனைகள். லல்லு வாழ்க, மாயாவதி வாழ்க, மூன்றாவது அணி வாழ்க... கடைசியாக லலித் மோடி வாழ்க .
Thursday, March 19, 2009

ஹோட்டல் ருவண்டா: நமக்கு நெருக்கமான படம்


பத்து லட்சம் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்ட பொது வெறுமனே பார்த்துகொண்டு இருந்ததற்காக வெட்கப்படுகிறோம் என்று எழுத்தொட்டத்துடன் நிறைவு பெரும் இந்த படத்துக்கும் , தமிழர்களாகிய எமக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது , ஒரு அதிர்ச்சி கலந்த மனிநிலையுடன் படத்தின் காட்சிகளுடனும் , வசனங்களுடனும் ஆழமாக ஒன்றிப்போக முடிந்தது. ஒரு சமூகத்துக்கு நேர்ந்த அவலம் மிக துல்லியமாக பதிவு செய்யப்பட்ட வரலாற்று ஆவணம் இந்தப் படம்.


கீழ்வரும் பகுதி இந்தப்படம் பற்றி அஸிப்மீரான் எழுதிய பதிவிலிருந்து பிரித்தெடுக்கப் பட்டிருக்கிறது. (http://asifmeeran.blogspot.com/2007/02/blog-post_3928.html) அவரின் கருத்துகள் உலகம் அதன் மக்கள் பற்றிய யதார்த்தமான உண்மையை பதிவு செய்திருக்கிறது.


படத்தைப் பார்த்து முடிக்கும்போது பத்து லட்சம் பேரை பலி கொண்ட ஒரு சம்பவம் நடந்ததே கூடத்தெரியாமல் வாழ்ந்திருந்த அவலத்தைப் பற்றிய குற்ற உணர்வும், அவமானமும் உள்ளுக்குள் உறுத்தியது உண்மை. இத்தனை பெரும் கொடுமைகளுக்கும் மத்தியில்தான் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டு உலாவிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும்போது கூசத்தான் செய்கிறது.


படத்தில் வரும் ஒரு காட்சியில் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் நடந்த கொடுமைகளைப் பதிவு செய்து விட்டு வந்ததும் பால் அவருக்கு நன்றி சொல்வார்.”நல்ல வேளையாக இதனைச் செய்தீர்கள். இதன் மூலமாவது உலகத்துக்கு இந்த பெருங்கொலைகள் தெரிய வரும்” என்று. அதற்கு அவன் பதில் சொல்வான்."உண்மைதான். இந்த விசயம் உலகத்துக்குத் தெரிந்தால் மட்டும் என்னாகப்போகிறது? ‘ஐயோ’ வென்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டு சேனலை மாற்றிவிட்டு இரவுச்சாப்பாட்டில் மூழ்கி விடுவார்கள்” என்று.


அந்த யதார்த்தம் ரொம்பவே சுடுகிறது. நமக்கென்று ஏதும் வராதவரையில், நிகழாதவரையில் உலகில் எங்கே குண்டு வெடித்தாலும் அது வெறும் செய்தியாக சில விநாடிகள் மட்டுமே மூளைக்குள் பதியுமளவிற்குத்தான் இருக்கிறது மானுடம் இங்கு.மூன்றே மாதங்களில் 10 லட்சம் பிணங்களால் ருவாண்டா சுடுகாடான மானுட வரலாற்றுக் கறையில் தலையிட எந்த அமெரிக்க, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளும் முன்வராத அவலத்தை சொல்லிச் சென்றாலும் இந்தப் படம் உலக அரசியலை முன்வைக்கவில்லை.லட்சக்கணக்கானவர்கள் குரூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை குருதிச் சொட்டச் சொட்டக் காட்டி மனதிற்குள் இருக்கும் குரூரனை திருப்திப்படுத்தவும் முனையவில்லை இந்தப் படம்.


மாறாக, தான் தன் குடும்பம் என்று வாழ்ந்த ஒரு மனிதன், தன் கண் முன்னால் விலங்குகளைப் போல மனித உயிர்கள் வேட்டையாடப்படுவதை உணர்ந்து, தன்னால் முடிந்த அளவு மனித உயிர்களைக் காப்பாற்றும் தீரத்தை, மானுட நேசத்தை வலியுறுத்திச் செல்கிறது இந்தப் படம்.


Saturday, March 14, 2009

42 Million Views, nearly 50,000 comments..miraculous event.

Thursday, March 12, 2009

ஏன் மனதும் : ஷிரேயாவின் இடையும்


சத்தியமாக எனக்கு ஹைக்கூ எல்லாம் எழுத தெரியாது . என்றாலும் ஏன் பதிவை பார்வை இட வரும் லட்சக்கணக்கான (ellam build up thaan)வாசகர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்ய அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்று தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தேன் ...

அதில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஷிரேயா அடிக்கடி வந்து கொண்டு இருந்தார். ..அதை பார்த்தபோது உள்ளத்தில் பீறிட்டு எழுந்த சில வசனங்கள் இவை. ஒரு வேளை அது ஹைகூவாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் ... யாராவது தெரிந்தவர்கள் , இதுவும் ஹைகூதான் எண்டு சொல்லி எனக்கு கவிஞன் அந்தஸ்து கொடுங்கப்பா..


ஹைக்கூ

ஏன் மனதும்
ஷிரேயாவின் இடையும்
ஒன்றுதான் ....
இரண்டிலுமே
மறைப்பதற்கு
ஒன்றுமில்லை......

.

.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் இடி விழுக

பலரும் எதிர்பார்க்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் குறித்தாயிற்று , தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியிருக்கின்றன. இலங்கை தமிழர் பிரச்சனையே தமிழக தேர்தலின் மையப்பொருள் அகி இருக்கிறது. தனது ஓட்டு மொத்த பலத்தையும் திரட்டி , வாக்காளருக்கு பணமாய் இறைத்து திருமங்கலம் இடைத்தேர்தலில் வென்றிருந்தது தி.மு.க . அனாலும் இன்றைய சூழ்நிலையில் இலங்கை தமிழர் விவகாரத்தில் கருணாநித்யின் நடிப்பின் உண்மை முகம் முற்றாக வெளிப்பட்ட நிலையில் இனிமேலும் அந்த விடயத்தை வைத்து எந்தவொரு அரசியல் லாபமும் பெறமுடியாத நிலைக்கு கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார். ஐயகோ நெஞ்சை உலுக்குகிறது , இதயத்தில் இடியாய் இறங்கியது என்ற அவரின் வீர வசனங்களின் உண்மையை தமிழக மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள். உள்ளத்தில் புழுக்களையும் உதட்டில் பூக்களையும் வைத்திருப்பவர்களின் விம்பம்மானது விடிவதற்குள் வெளிச்சமாகி விடுகிறது விடுகிறது என்ற வாசகம் கருணாநிதி விடயத்தில் காலம் கடந்தாவது நிஜமாகி இருக்கிறது .எந்த விடயத்தில் மெத்தப் பழுத்த கருணாநிதி சறுக்கி விழுந்தாரோ , அந்த இலங்கை தமிழர் விடயத்தை வைத்தே ஜெயலலிதா இப்போது வென்று காட்ட எத்தனித்து இருக்கிறார். இவ்வளவு காலம் அறிக்கை போர் மட்டுமே செய்து வந்த ஜெயலலிதா உண்ணா விரதம் என்ற ஆயுதம் ஏந்தி குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அனால் அவர் கருணாநிதியை விட கேவலமான இன உணர்வாளர் என்ற விடயம் தமிழக மக்களுக்கு தெரிய இன்னும் நிறைய காலம் எடுக்கும். ஆனாலும் அவருக்கு கிடைத்திருக்கும் ஒரே துரும்ம்புச் சீட்டு வைகோ , அவரை வைத்தே , இலங்கை தமிழர் பிரச்சனயை ஆயுதமாக்கி , இந்த தேர்தலில் ஜெயலலிதா அதிகபட்ச வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது. வைகோ தவிர்த்து தா.பாண்டியனும் அவருடனே இருக்கிறார் என்பதும் மற்றுமொரு பொன்ஸ். ஜெயலலிதா எதாவது கிளிக்கப்போகிராரா என்றால் இல்லை என்று அடித்து கூறலாம்.

தமிழ் மாநில காங்கிரஸ் , தமிழகத்தில் எந்த ஒரு இடத்தையும் கைப்பற்றும் நிலையில் இல்லை என்பது, தமிழகத்தில் இப்போது தோன்றியுள்ள மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மீதான இன உணர்வுள்ள தமிழரின் வெறுப்பே ஒரு சாட்சி. ஆனாலும் மத்தியிலும் இதர மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி பலமாகவும் , ஆளுமையாகவும் இருக்கின்றதென்பது குறிப்பிட்டு கூற வேண்டிய விடயம் தான். ப.ஜ.க அத்வானி போன்ற தலைவர்கள் , கூட்டணி இழுபறிகள் என்பன ..கட்டுக்கோப்பான , ராகுல் போன்ற இளமையா தலைவர்களையும் கொண்ட காங்கிரசுக்கு அதிக இடங்களை பெற்றுத்தரும் .


எனவே மாநிலத்தில் ஜெயலலிதாவும் , மத்தியில் காங்கிரசும் வரும் பட்சத்தில் வைக்கோ போன்றவர்களையும் காய் வெட்டிவிட்டு காங்கிரசுடன் கூட்டணி வைக்கவும் தயங்கமாட்டார் ஜெயலலிதா. அப்போது இலங்கை தமிழர் விவகாரம் காற்றில் பறக்கவிடப்படும். அவரின் அனுதாபங்கள் காற்றில் பறக்கவிடப்படும். காரணம் அவரும் தமிழர் அல்லவா. துரோகம் செய்வது தானே தமிழனின் இன்றைய தாரக மந்திரம்.


என்னவே இது போன்ற நிலைமைகளை தவிர்க்க, தமிழகத்தில் ஒரு முன்றாவது அணி அமைவது மட்டுமே நீண்ட காலத்துக்கு தீர்வாக அமையும். அதில் விஜயகாந்தின் கட்சி , சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி , ராமதாசின் ப.ம.க , திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், வைக்கோவின் ம.தி.மு.க போன்ற பெரிய கட்சிகளுடன் சீமான் , தா.பாண்டியன் போன்றவர்களும் சேர்ந்தால் தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் வரும். இல்லாது போயின் மேற்சொன்ன அத்தனை பேரின் பணமும் , நேரமும், அரசியல் கொள்கைகளும் கருணாநிதி , ஜெயலலிதா போன்ற சுயநல அரசியல் முதலைகளால் சுரண்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

Sunday, March 8, 2009

அபர்னா சென் என்றொரு பெண் இயக்குனர்


ஏற்கனவே எனக்கு Mr.Mrs iyer மூலமாக அறிமுகமானவர் தான் அபர்னா சென். 2001 இல் வெளியா இந்த படம் உலக அளவில் பெரிதும் பேசப்பட்டு இருந்தது. நான் வாழ்கையில் இதுவரை பார்த்த தரமான இந்தியப் படம் என்று அதனை கூறுவேன். மிகவும் மென்மையாக ஒரு ஆண் பெண் நட்பை அல்லது காதலை மிகவும் அழகாக பல்வேறு புறக் காரணிகளுடன் சொல்வதென்றால் அபர்னா சென் போன்ற தரமான பெண் இயக்குனரால் மட்டுமே முடியும். ஒரு கைக் குழந்தையுடன் கூடிய இந்துப் பெண் , ஒரு முஸ்லீம் வாலிபன் அகிய இருவரின் பஸ் பயணம் , ஜாதிக் கலவரங்களினுடாக எப்படிப் பயணிக்கிறது என்பதே படத்தின் ஒரு வரி கதை. தன் மகளான கொள்கொன்ன சென் சர்மாவை மீனாட்சி என்ற பிராமண தமிழ் பெண்ணாக அப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார் இயக்குனர். ( இவர் தான் இப்போது பெண்களுக்கான ஹோர்லிக்ஸ் விளம்பரத்தில் வருபவர்)

அந்தப் படம் ஏற்படுத்திய அதிகபட்ச ஈர்ப்பு காரணமா 15 park avenue என்ற படம் பார்க்க வேண்டிய ஆவல் ஏற்பட்டது. நான் முதல் கூறிய படம் போல் இல்லை என்றாலும் கூட பல அதிர்வுகளை இந்தப் படமும் ஏற்படுத்த தவறவில்லை. படத்தின் இயக்குனர் , நடிகை மட்டுமல்ல கதநாயகன் கூட முதல் கூறிய படத்தில் இருந்து வேறுபடவில்லை.


ஆனால் mr mrs iyer படம் இரண்டு கதாபாத்திரங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தியிருந்தது , மற்றைய படமோ மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை சுற்றி நடைபெறும் கதையில் பல கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வித்தியாசமான மனநிலையயும் , ஏகாந்தமாய் அமைந்திருக்கும் முடிவை கொண்டிருக்கும் 15 park avenue இல் சபானா அஸ்மி போன்ற பிரபல்யமானவர்களும் நடித்திருந்தார்கள். மனிதர்கள் பற்றிய நிஜ முகங்களையும் , அவர்களின் சுயநலமான மனித வாழ்க்கை , வாழ்க்கை தொடர்பான சகிப்பு தன்மைகளை அருமையாக காட்சிப்படுத்திய இந்தப் படம் உலகளவில் மிகச்சிறந்த படமாக பேசப்பட்டது.
இரண்டு படங்களுக்குமான காட்சித்துனுக்குகளை இங்கே இணைத்திருக்கிறேன்
Advertisement 2
Wednesday, March 4, 2009

பாகிஸ்தான் சம்பவம்: இந்தியாவுக்கு இணையில்லா சந்தோசம் அணையில்லா கொண்டாட்டம்


பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிகட் வீரர்கள் (மக்கள்) தாக்குதலுக்கு உள்ளானது இலங்கையில் இருக்கிற ஊடகங்களை விட இந்திய ஊடகங்களே அதிகம் அலட்டிக்க்கொள்ளுகின்றன. கடந்த ஆறு மாதத்தில் மும்பை தாக்குதலுக்கு அடுத்தபடியாக ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த நிகழ்வு இதுதான். மும்பை தாக்குதலில் இந்திய மக்களும் ஊடகங்களும் உணர்ச்சிவசப்படுவதற்கு ஒரு நியாயம் இருந்தது. ஆனால் அதே அளவு உணர்ச்சியை NDTVயின் பார்க்க தத்தும் , ஸ்ரீநிவாசன் ரையும் மீண்டும் மீண்டும் படுவதற்குப் பின்னாலும் , இரண்டு நாட்கள் கடந்தும் இந்த சம்பவங்கள் ஆறாமல் இருப்பதற்கும் என்ன காரணம்.?


இந்த ஒரு சம்பவத்தை இந்திய ஊடகங்களும் அதன் அரசியல் வாதிகளும் மிகப் பெரிய பிரச்சாரமாக எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். காய்ந்து பொய் கிடந்த அவர்கள் வாயில் திருப்பதி லட்டு விழுந்திருக்கிறது , அதில் இருந்து உச்ச பயன் பெறுவதற்கான நாடகம் தான் இந்த அதிகப்படியான தேடல்கள். தனது எதிரி நாடான பாகிஸ்தானை இந்த ஒரு சம்பவத்தை வைத்தே மட்டம் தட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம், வீரர்களுக்கு (வெளிநாட்டு மக்களுக்கு) உரிய பாதுகாப்புக்கு அளிக்கவில்லை எண்டு பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் மூக்கால் அழுகிறார்கள். பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்கிரார்கலாம். அப்படி என்றால் மும்பை தாக்குதலில் அப்பாவி மக்களும் வெளிநாடு உல்லாச பயணிகளும் இறந்த சம்பவத்தில் என்ன பாதுகாப்பு வழங்கி கிழித்தார்கள் எண்டு தெரியவில்லை.

இதே சம்பவம் இந்தியாவில் நடந்திருந்தால் , அதே பினாப் முகர்ஜி, இது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி என்று எச்சரிக்கையும் விட்டிருப்பார். தங்கள் பாதுகாப்பின் தாற்பரியம் பற்றி எதுவும் பேசிக்கொள்ள மாட்டர்கள். என்ன நியாயம் இது ? இது போல தான் இந்தியாவின் நியாய அநியாங்களும் சந்தர்ப்பவதங்களும் எல்லாவிடயத்திலும். சங்ககாராவுக்கு காயம் பட்டது எண்டு இந்திய பெண் ஊடகவியலாளர் கண்ணீருடன் கூடிய வருத்தத்தில் கேள்வி கேட்டதையும் , நலம் பெற வேண்டியதையும் பார்த்து எனக்கு அனந்த கண்ணீர் வந்து விட்டது. இந்திய மக்களுக்கு தான் எம் மீது எவ்வளவு பாசம்.

இந்த ஒரு சம்பவத்தை வைத்து தனது எதிரி நாடுகளான பாகிஸ்தானையும் பங்கலதேசையும் (அங்கும் அண்மையில் தீவிரவாத, அரசியல் பிரச்சனை) ஒதுக்கி தள்ளிவிட்டு தனது நெருங்கிய பங்காளியான இலங்கையுடன் சேர்ந்து உலக கோப்பை வைக்க திட்டம் தயாராகி விட்டது. பாவம் பாகிஸ்தான் இந்தியா போல் இல்லாமல் எதையும் நேராகவே சொல்லும்/ செய்யும் நாட்டுக்கு சிக்கல் மேல் சிக்கல்.

இன்னுமொரு தீவிர வாத தாக்குதல் இந்தியாவில் நடந்தால், இந்தியா பாகிஸ்தான் சண்டை மூல வாய்ப்புக்கள் அதிகம். அப்பாவி வீரர்களும் மக்களும் துன்பப் படுவார்கள், அப்போதும் பிரணாப் முகர்ஜி வேடிக்கை பார்ப்பாரோ இல்லை காயமடையும் மக்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எண்டு அறிக்கை விடுவாரோ? வாழ்க இந்தியா , வாழ்க இந்திய ஜனநாயகம்.
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes