BREAKING NEWS

Like Us

Monday, February 23, 2009

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கருணாநிதிக்கு : இலங்கையிலிருந்து கார்டூன்

மூன்று இந்தியர்களுக்கு இன்று ஆஸ்கார் விருது கிடைத்திருக்கின்ற இந்த நேரத்திலும் , ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி மருத்துவமனையிலிருந்து உண்ணாவிரதம் அறிவித்திருக்கின்ற நிலையிலும் , இலங்கையில் இருந்து வரும் பத்திரிகையான வீரகேசரி மூத்த தமிழ் குடிமகனான கருணாநிதிக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது அளித்து கார்ட்டூன் வரைந்து உள்ளது

Monday, February 16, 2009

நான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......


நான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில் பதிவெழுதி படத்துக்கு தாக்கம் ஏற்படுத்தியிருந்தனர் பலர். கஷ்டம் தான், அஜித் , விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு இது போன்ற விளிம்பு நிலை மனிதர்களின் கதையை புரிந்து கொள்ளும் பக்குவமும், பொறுமையுடன் இது போன்ற கதையை ரசிப்பது என்பதும் கஷ்டம் தான். எனவே அது போன்ற ரசிகர்களின் அதிகப்படியான கமர்ஷியல் சினிமாவுக்கான தேவைக்கு ஏற்ப இந்த கதையை பேரரசு இயக்கி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஒரு சிறு கற்பனை.

படம் இரு துருவங்களாக நகர்கின்றது. ஜோசியம் கேட்டு 14 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த மகன் ஆர்யா கடவுளின் உருவமாய் ருத்ரனாக வீடு வருகின்றான். இந் நிலையில் சொந்தம் பந்தம் மறந்து அகொரியாக திரியும் ருத்திரனிடம் பாசமாக பழகு கின்றனர் அவரது குடும்பத்தினர். முதலில் ருத்திரன் அனைவர் மேலும் எரிந்து விழுந்து கோபம் காட்டினாலும் சில நாட்கள் செல்ல செல்ல அவனிடம் மாற்றம் தெரிகிறது. அவனது அம்மா இத்தனை காலம் பிரிந்திருந்த சோகத்தை கண்ணீருடன் சொல்கையில் அகொரியின் இதயத்திலும் ஈரம் கசிகிறது. அம்மா செண்டிமெண்ட் பற்றி பேரரசுக்கா சொல்லிக்கொடுக்க வேண்டும் .

அடுத்ததாக தங்கச்சி செண்டிமெண்ட் , ருத்திரனுக்கு சின்ன வயதில் தன் தங்கையுடன் விளையாடிய காலங்கள் நினைவுக்கு வருகின்றன . இத்தனை காலமும் பிரிந்து இருந்த விட்டோமே என்ற ஏக்கம் மெல்ல மெல்ல வரத் தொடங்குகின்றன. அடிக்கடி தங்கையை பார்த்து உதட்டோரம் சிரிப்பதாக க்ளோஸ் அப் காட்சி வைக்கலாம். இது போன்ற நிலையில் (வானத்தை போல ஸ்டைலில் ) ஒரு கனவுப் பாடல் காட்சியில் அந்த குடும்பமே ஆடிப் பாடுவதாகவும் பாசம் பொழிவதாகவும் ஒரு பாடல் காட்சி. திடீரெண்டு ருத்திரனுக்கு உறவுகளை அறுத்தெறிந்து வரச்சொன்ன சாமியார் நினைவு வர கனவுப் பாடல் முடிவுக்கு வருகிறது.

மறுமுனையில் ஊனமுற்ற, மனநிலை பிறழ்ந்த உறவுகளை வைத்து பிழைக்கும் கும்பல். அவர்களில் கண் தெரியாத ஒருத்தியாக பூஜா... அந்த கூட்டத்துக்கு தலைவனாக முருகன் என்ற பெயரில் ஒருவர் அருமையாக நடித்து இருந்தார். அந்த பாத்திரத்துக்கு வடிவேலை போட்டிருந்தால் நகைச்சுவை பற்றாக்குறை தீர்ந்திருக்கும். அவர்களின் ஊனத்தை வைத்தே அருமையாக கிண்டல் அடித்திருக்கலாம் , எல்லோரும் வயிறு குலுங்க சிரித்திருபார்கள். .

ஊனமுற்றவர்களை பிடித்து செல்லும் கும்பலிடம் இருந்து தன் சகாக்களை காப்பதற்காக அகொரியான ருத்திரனிடம் வந்து முறையிடுகிறார் அம்சவல்லி. அவளின் கோரிக்கையை ஏற்று அந்த கும்பலை அடித்து துரத்தி கொன்று விடுகிறான் ருத்திரன். (பேரரசு ஸ்டைலில் நிறைய டாட்டா சுமோக்கள் , அரிவாள் வைத்து பறந்து பறந்து சண்டை வைக்கலாம்) இதனால் அவனை போலிசு பிடித்துச் செல்ல , கண் தெரியாத அம்சவல்லி ருத்திரனை ஜாமீனில் எடுக்க பிச்சை காரர்கள் எல்லாம் சேர்ந்து காசு சேர்ப்பதையும் , ஓவர் டைம் வேலை செய்வதையும் காட்டலாம்.

அடுத்த சீனில் , ஜாமீனில் வெளிவந்த ருத்திரனுக்கும் , அமசவல்லிக்கும் காதல் மலர்கிறது. ..அடுத் நிமிடம் அகொரியான ருத்திரனும் கண் தெரியாத அம்ச வள்ளியும் சுவிஸ்லாந்தில் டுயட் பாடுகிறார்கள். (கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு ஸ்டைலில்) இதன் பின் வில்லன் கூட்டம் பூஜாவை துரத்துகிறது. அவர்களை எல்லாம் சம்ஹாரம் செய்து கடத்தல் கும்பலிடம் இருந்து பூஜாவையும் , இதர பிச்சை காரர்களையும் காப்பாற்றுகிறார் நம் ஹீரோவான ஆரியா. பின் காசிக்கு சாமியாரிடம் சென்று இணைவதா அல்லது குடும்பத்துடன் சேர்வதா என்ற தீர்க்கமான கட்டம் ருதிரனுக்கு வருகிறது. இந்த சீனில் அகொரியினுடைய பால்ய கால நண்பனாக உள்ளே நுழையும் இயக்குனரான பேரரசு , ஐந்து பக்கம் வசனம் பேசி , ஆரியாவை குடும்பத்துடனும் , பூஜாவுடனும் இணைத்து வைக்கிறார். கடைசி காட்சியில் தாடி மீசை எல்லாம் எடுத்து ஜீன்ஸ், டி ஷர்ட் போட்டு வரும் ஆரியா பூஜாவுடன் துள்ளி குதிப்பதாய் படம் முடிகிறது.


தரமான படம் என்ற நிறைவுடன் வரும் ரசிகர்கள் , படத்தை பற்றி அஹா ஓகோ என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆரியா கட் ஒஉட்டுக்கு மாலை போட்டு பால் அபிசேகம் செய்கிறார்கள். ...படம் மாபெரும் வெற்றி அடைகிறது.

Saturday, February 14, 2009

how do i want to be ?


Thinks are changing every day, very often. we are not in the world that we lived yestereday. We dont know how the circumstances change tomorrow. But the human mind has to go through no of hurdles every minute to live in this world which has no of dimentions. When thinking how terible our mind and how we are bad on our emotions, i come across lot of questions , which cannot be answered only by me. i am too worried some times when handling thinks. i am not clear the way i have responded is ok or not?

But my behavious , emotions , words and lot other non quantifiable aspects are not only decided by me.. there are lots of other factors influence me on reacting to the nature and people. there was a saying that " the arm that i want to chose is decided by my enemy". So what is wrong when i am seleting an arm which can properly answer my enemy or friend. The think that is important is anyway that i am answering. If you are not going to be straight , wel i too follow your method. because i want to secure my self. if your are true , i will be true..there might not be any think to hide for the person with open hard. If you are unsure that i am truthful or not, i dont want a chance to prove anythink with a person who cannot believe me. You are the person who is deciding how do i want to be ? not me.

Tuesday, February 10, 2009

நெருங்கி வரும் ஆபத்து ...நிதி நெருக்கடியின் உச்ச தாக்கம் இனிமேல் தானா?


பொருளாதாரம் , நிதி நெருக்கடிகள், கம்பனிகளின் இலாப நட்டங்கள் என்று அந்நிய பட்ட ஒன்றாக இதுவரை இருந்து வந்த விடயங்கள் இப்போது நேரடியாக எமது வயிற்றில் அடிக்கும் நிலைக்கே வந்து விட்டன. எமக்கு நடக்கும் வரை பார்த்துக் கொண்டு இருப்பது தானே எமது பிறவிக்குணம். அதுவரை பக்கத்து வீடு பற்றி எரிந்தாலும் எமக்கு கவலை இல்லை. இதுவரை அப்படி இருந்ததில் குற்றம் ஒன்றும் இல்லை. எதோ பங்குச்சந்தையில் முதலிட்டவர்களுக்கு நட்டமாம் என்று வருத்தம்/சந்தோசம் பட்ட மக்கள் விழித்துக்கொள்ள நேரம் வந்தாச்சு.வேலை இழப்புக்கள் நமக்கு தெரிந்தவகளுக்கும் நிகழ்ந்திருக்கிறது என்று அடுத்தவர் கதை பேசுவதற்கான நேரம் இது. இந்தியாவில் பரவலாக இப்போது தொடங்கியிருக்கிறது. தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்த பலர் இப்போது பகல் நேர மெகா சீரியல் பார்பபதாய் கேள்வி. இலங்கையில் கூட டயலொக் போன்ற நிறுவனங்களும் இரண்டாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பியதாய் சிலர் கதைக்கினம்.சரி விடயத்துக்கு வருவம், இதுவரைக்கும் பெரிய நிறுவங்களின் வட்டத்துக்குள் இருந்த நிதி நெருக்கடி , இப்போது நடுத்தர நிறுவனங்களின் வட்டத்துக்கு வந்திருக்கிறது. இதனால் தான் இனி வரும் காலங்களில் பிரச்சனை இருக்கிறது. இந்த நடுத்தர நிறுவனங்கள் எவ்வளவு தூரம் நியாயமாக , இதய சுத்தியுடன் , பங்குதாரரின் நலனுக்காக செயற்படுகின்றன என்பது என்றுமே கேள்விக்குறி தான். எப்போதும் அவை தங்களுடைய நன்மைக்காக தேவையான போது இலாபத்தை உயர்த்தி நாம் சிறப்பாக செயற்படுகிரம் என்று காட்டியும், அதே வேளை பங்குலாபம் குடுக்காமல் தவிர்க்க நட்டம் இருப்பதாக காட்டியும் கோல்மால் செய்வது எந்த நிறுவங்களுக்கும் புதிது இல்லை.எனவே வருகின்ற மார்ச் மாத கடைசியில் தமது நிதி அறிக்கையை தாக்கல் செய்யும் இந்த கம்பனிகள் தமக்கு இருக்கிற கொஞ்ச இலாபத்தையும் சுருட்டிக்கொல்வதற்கு நிறையவே வாய்ப்புக்களை "நிதி நெருக்கடி" என்ற காரணம் நிறையவே பெற்றுத்தந்திருக்கிறது. அது ஏற்றுக்கொள்ளக்குடிய காரணமும் கூட. எனவே பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்வரும் நிதி ஆண்டுக்கு இலாபம் இருந்தாலும் கூட பாதகமான நிலுவையையே பங்கு தாரருக்கு போலியாக காட்ட காத்து இருக்கின்றன. எனவே பெரும்பாலான பெரிய , நடுத்தர நிறுவனங்கள் இப்படி முயற்சிக்கும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் பொருளாதார சரிவை அனைத்து துறையிலும் எதிர்பார்க்கலாம். குறிப்பாக நடுத்தர உற்பத்தி தொழில்கள், மொத்த மற்றும் சில்லைறை வியாபர நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்திக்க வாய்ப்பு நிறையவே இருக்குது. பெரிய நிறுவங்கள் மாடுமே நேர்மையான முறையில் காலாண்டு (முன்றாம்) அறிக்கை வெளிடிட்டு தமது நட்டத்தையும் , வேலை குறைப்பு விபரங்களையும் வெளியிடுகின்றன ...அதன் விளைவுகள் தான் நாம் இப்போது காணும் வேலை இழப்புக்கள். எனவே எண்ணற்ற நடுத்தர, சிறிய நிறுவனங்களின் விபரங்கள் இனித்தானே வர இருக்கிறது.அமெரிக்க பொருளாதாரம் விழுந்தால் கரை ஏத்த ஒபாமாவும் பணமும் அவர்களிடம் இருக்கு. ஆனால் எம்மில் பல முதலைகள் சந்தர்பங்களை பாவித்து சுரண்ட காத்திருப்பதால். ...அமெரிக்காவின் விளைவுகளை விட கடுமையான விளைவுகள் சத்தம் இல்லாமல் நெருங்கி வருகின்றன. எனவே தொழில் செய்யும் பலரும் அதிகம் கவனமாக இருக்க வேண்டிய காலம் இனித்தான் வர இருக்கிறது.

Tuesday, February 3, 2009

நிதி நெருக்கடியின் பிந்திய தகவல்கள் உடனுக்குடன். ..ஏற்கனவே எதிபார்க்கப்பட்டது போல நிதி நெருக்கடி கோர தாண்டவம் ஆடுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் நாள்தோறும் வேலை இழக்கும் பட்டியலையும் , அந்த நிறுவனம் இந்த வருடத்தில் அடைந்திருந்த நட்டத்தையும் வெளியிட்டு எதோ சந்தோசம் அடைந்து கொண்டு இருக்கின்றன . ஆனால் கீழே தரப்பட்ட இலக்கங்களுக்கு பின்னால் எத்தனை வேதனையும் வலியும் , எத்தனையோ சமூக பிரச்சனைகளும் இருக்கிறது என்பதை இனி வரும் கால உலகில் காணலாம். வேலை இழப்பும் , நட்டமும்நெருக்கடியின் நேரடி விளைவுகளே , மறைமுக விளைவுகள் உயிரும் உணர்வுகளின் சம்பந்தப்பட்ட விடயங்களின் விளைவுகளை விரைவில் எதிர்பார்க்கலாம். உலகின் பிரபலமான கம்பனிகள் அண்மைல் வெளியிட்ட வேலை குறைப்பு அட்டவனை வருமாறு
HSBC: 5000 jobs


Citigroup: 52,000 jobs


Fidelity Investments: 3,000


Royal Bank of Scotland : 3,000 jobs


Sun Microsystems: 6,000 jobs


United States Steel Corp: 675 jobs

British Telecom: 10,000 jobs


Morgan Stanley: 19 per cent of its staff


Virgin Media: 2,200 ஜொப்ஸ்


Yell Group: 1,300 jobs


Nokia Siemens Networks: 1,820 jobs


Volvo AB: 1,000 jobs


DHL US Express: 9,500 jobs


Nortel Networks Corporation: 1,300 jobs

General Motors Corp: 3,600 jobs


EW Scripps Co: 400 jobs


Ford Motor Company: 2,600 jobs


Volvo: 6,000 jobs


Corus: 400 jobs


American Express: 7,000 jobs


Bank of America : 7,500 jobs


Development Bank of Singapore Group: 900 jobs


Mattel Inc: 1,000 jobs


New York City: 3,000 jobs


AMD: 500 jobs


Goldman Sachs: 3,200 jobs

வாழ்கை அழகானது (Life is Beautiful)


எத்தனையோ தமிழ் படங்கள் வாழ்கை முழுதும் பார்த்து பழகிய எனக்கு , ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த இத்தாலிய திரைப்படம் அதிக பட்ச அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது சர்வ சாதாரணமான ஒன்று தான். இதுவரை கால சினிமா ரசிகனாக நான் அதிகம் கவரப்பட்டும் ரசித்ததும் இந்த படமாக தான் இருக்கும். இயக்குனர் பேரரசு , தலை சிறந்த நடிகர் விஜய் போன்ற குறுகிய தமிழ் சினிமா வட்டத்தின் தேடலுக்குள் இருந்த எனக்கு இது போன்ற உலக சினிமாக்கள் அதிகம் வியப்பையே தருகின்றன.

உலகம் முழுதும் ஏராளமான விருதுகளை குவித்த இந்த படம் , இத்தாலிய சினிமாவின் மகுடமாக கருதப்படுகிறது. வாழ்கை அழகானது என்று அருமையான தலைப்புடன் வெளிவந்த இந்த படம் , இதை பார்த்தவர்கள் மனங்களில் வாழ்க்கை தொடர்பான அழகான பார்வையை ஏற்படுத்திடிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இரண்டாம் உலகம் போர் காலத்தில் நடக்கும் மிகவும் அருமையான கதை, வித்தியாசமான காட்சி அமைப்பு , புதுமையான சம்பவங்களால் காட்சிகளை கோர்த்திருக்கும் விதம் என்பன தரமான திரைப்படம் என்பதற்கு அழகான ஆதாரங்கள். சினிமாவிற்கு எந்த அளவு திரை கதையும் காட்சிபடுத்துதலும் முக்கியம் என்பதற்கான முன்உதாரணம் இப்படம் .

இந்த கதையை எழுதி இயக்கி நடித்திருக்கும் அந்த நபரின் தனித்துவமான திறமையை நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சிகளையும் பின் ஒரு முறை வரும் சம்பவத்துடன் சேர்த்த விதம். மிக அழகாக ரசித்து சொல்லப்பட்ட காதல். இரண்டாம் உலகப் போரில் ஜேர்மன் படைகளிடம் சிறைப்பிடிக்கப்பட்ட யுத மக்களின் சோக வரலாற்றை மறைமுகமாக காட்சிப்படுத்திய விதம் அருமை. அந்த வேதனைகளையும் மீறி தன் மகனின் சந்தோசத்திற்காக சோகத்தையும் சுகமாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் முடிவுகள் நினைவுகளில் மாறாமல் நிற்கின்றன. தலைப்பை போலவே படமும் அழகானது தான்.
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes