BREAKING NEWS

Like Us

Friday, January 23, 2009

Slumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி

இந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ.ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றியும் , அவர் இசை அமைத்த Slumdog millionire பற்றியுமான அதிகபடியான தேடல்கள். 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தப் படம், குறைந்தது 8 விருதுகளையாவது அள்ளிவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த அளவு தரத்துடன் வேறு படங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் இப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது உள்பட நான்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டன.

அமைதியாக வந்த அந்த படம் எ.ஆர். ரஹுமான் ஆல் ஏக எதிர்பார்ப்புக்களை உலகம் முழுதும் ஏற்படுத்தியிருக்கிறது. அது அவருக்கு மட்டுமேயான தனித்துவமான திறமையால் சாத்தியமாகி இருக்கிறது , அவரின் திறமையை குறைத்துக் கூறுவது இந்த கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்த படம் எனக்குள் ஏற்படுத்திய அதிர்ச்சிகளையும் , அது தொடர்பாக என் கேள்விகளையும் பதிவு செய்வதே எனது நோக்கம்.என் பார்வையில் , இந்த படம் இந்தியாவின் , அதன் மக்களின் மிக அசிங்கமான ஒரு மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்தியர்கள் மட்டும் பார்த்து , தெரிந்து, மறைத்து வந்த பல விடயங்கள் இந்த படம் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு வரப்போகிறது.

நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன் , ஒரு உபகண்டமாக , உலகின் அடுத்த வல்லரசு எண்டு சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது. மிக திறமையான இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்குதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவரின் அதீத திறமைக்கு ஒரு சான்று.


இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதி இன்மை , குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில் , சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், இன ரீதியான சண்டைகள் , வேட்டுகுத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை , தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம் , அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டுவது என்பது லேசுப்பட்ட விடயமல்ல. இதன் காரணமாகவோ என்னவோ படத்தொகுப்பாளர் , இந்தியரான ரெசுல் பூக்குட்டி என்பவரது பெயரும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை கவ்ரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அறிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.

முதல் சந்தேகம் , எ.ஆர். ரஹுமான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்பட இல்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?


படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கத பாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்பட இல்லை. ஹீரோவை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் நெகடிவ் ஆக இருப்பதற்கு காரணம் என்ன ...? அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அணில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும். சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொரூரம்? இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனர் , உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திராந்கலிநூடாக தான் கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுகிறார். அந்த காட்சிகள் கூட இந்திய போலீஸ் காரரின் கேவலத்தை நன்கு பறைசாற்றுகிறார் இயக்குனர். இப்படியான காட்சி அமைப்பு படத்தின் கதை ஓட்டத்திற்கு கட்டாயம் தேவை தானா?


அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள், மற்றைய நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள் ?

இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும். கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார் படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்?
வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்றைய இந்திய நகரங்கள் பற்றி ? இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழுகிறது .

ஆனாலும் இயக்குனர் பொய்யான ஒன்றை கட்டவில்லை, நிஜமான பல விடயங்களையே கட்ட்சிப்படுத்தியிருக்கிறார். நாம் சென்று அமெரிக்க போன்ற நாடுகளின் மக்களையும் , மனிதர்களையும் கேவலமாக பிரதிபலித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா ? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?

இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் ஒன்றுக்கும் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction )விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய எதாதிபதியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளை கடுமையாக விமர்சித்து இருந்தார். எனவே விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலிய படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெற்றிருக்கிறது. இனிமேல் கமல் ஹசன் போன்றோரும் இந்தியாவை விமர்சித்து படம் நடித்தால் ஆஸ்கார் விருதுகள் வெகு தொலைவில் இருக்காது.

Share this:

Unknown said...

இந்த அதிர்ச்சி தேவைதான் . இன்னும் கழிப்பிட வசதி இல்லாமல் கஷ்டப்படும்போது அணு ஆயுதமும் உலக அரங்கில் அலட்டலும் நமக்கு தேவை தானா ? வெளியில் இருந்து ஒருத்தன் அடிக்கும்போது தான் வலிக்கிறது , என்ன செய்வது ?

Unknown said...

மன்னிக்கவும். தயவு செய்து கமல் என்ற சுயநலவாதியை இதில் சேர்க்காதீர்கள். அவருக்கு கூட்டு முயற்சியில் நம்பிக்கையில்லை.

Anonymous said...

"இந்த அதிர்ச்சி தேவைதான் . இன்னும் கழிப்பிட வசதி இல்லாமல் கஷ்டப்படும்போது அணு ஆயுதமும் உலக அரங்கில் அலட்டலும் நமக்கு தேவை தானா ? வெளியில் இருந்து ஒருத்தன் அடிக்கும்போது தான் வலிக்கிறது , என்ன செய்வது ?"

i think above sentense is absolutly correct..
bcz in India Ambinai, TATA birla (like rich people) in their home pet animal have food cost for one month is equal to five year salary of farmer in village...
but our GREAT DEMOCRACY watching, watching, watching, watching, watching, watching,watching, watching upto entire world abolished at time also our politican speak we are number second in democracry

Anonymous said...

Mr.iqbal, how dare u can say Kamal a selfish? he s one man army.. if he can win alone y should he trust other losers?> he has self belief and has a lots of self confidence..
u muslim buggers are always against him cos he s a brahmin.

but we tamil mutts are always praising about Rahman but he helps Islam terrorists..

True Thamilan

வினோத் கெளதம் said...

மிக அருமையான கட்டுரை.

நீங்கள் சொல்வது போல இந்தியா நாடு என்றாலே இப்படி தான் என்பதை மற்றவர்கள் மனதில் இப்படம் பதிய வாய்ப்பு நிறையவே உள்ளது..ஏன் இவர்களை போன்றோர் இந்தியாவின் வளர்ச்சி அடைந்த சமூகத்தின் அவலங்களை அலசி ஆராய்ந்து படம் எடுக்க கூடாது. கண்டிப்பாக அதே மாதரி எடுத்தாலும் விருது கிடைக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றல் அவர்களை பொறுத்தவரை இந்தியா எப்பொழதுமே ஏழை நாடு தான்.. நம் நாட்டில் இதே மாதரி சமூகமும் உண்டு..ஆனால் அது மட்டுமே இந்தியா அல்ல..இதை அவர்கள் உணர வேண்டும்.. குறிப்பாக இப்படம் உருவாக காரணமாக இருந்த இந்தியாவின் எழ்மையை துகில் உரித்து காட்டுவதை நினைத்து கொண்டு செயல்படும் தேசபக்தி மிகுந்த அயல்நாட்டில் படித்து வளர்ந்து வேலை செய்யும் அறிவுகளஞ்சிய எழுத்தாளர்கள் கொஞ்சம் குறைந்தபட்ச நேர்மையோடு சிந்திக்க வேண்டும்..

Anonymous said...

அது ஆங்கிலேய மனப்பான்மை. அவர்களுக்கு ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா, ஆசிய நாடுகள் மேல் இருக்கும் மனோபாவம். நம்மை கீழே வைத்து குனிந்து பார்ப்பதில் தான் அவர்களுக்கு ஆனந்தம். எந்த நாட்டில் இவை எல்லாம் முற்றிலும் இல்லை? லகான் அவர்களுக்கு புடிக்காது, காரனம் இந்தியன் அதில் ஜெயித்து விடுவான்.

இக்பால் said...

அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள்....

நீங்கள் சொல்வது போல இந்தியா நாடு என்றாலே இப்படி தான் என்பதை மற்றவர்கள் மனதில் இப்படம் பதிய வாய்ப்பு நிறையவே உள்ளது..ஏன் இவர்களை போன்றோர் இந்தியாவின் வளர்ச்சி அடைந்த சமூகத்தின் அவலங்களை அலசி ஆராய்ந்து படம் எடுக்க கூடாது.

Anonymous said...

நிதர்சனமான ஒரு பார்வை.
மிகதெளிவாக நீங்கள் சொல்ல வாந்ததை சொல்லியிருக்கிறீர்கள்.
உண்மையில் பாரத்த தேசத்தின் செயற்பாடுகள், மல்லாக்கா படுத்து துப்புவதுதான். அருமையாக அதை சுட்டிக்காட்டியிருக்கிறீகள்.
நன்றாகவிருக்கிறது.

Anonymous said...

Rasal Pookutty is not a film editor, he is a sound mixing engineer from Kerela.

Unknown said...

Mr.Anonymous
True Thamilan

இந்தக்கட்டுரையின் பின்னே இருப்பதும் எனது கமெண்டும் ஆதங்கமே!

Anonymous said...

உண்மையில் இதயத்தை தொட்ட பதிவு.. கேள்விகளில் உள்ள நியாயமான கோபம் என் பலருக்கு வரவில்லை.. அதுதான் இதற்கெல்லாம் காரணமோ..

நண்பா நேரம் இருந்ததால் https://eksaar.blogspot.com பார்க்கவும்

Ilaya said...

இதில் உண்மை என்ன வென்றால் ..இந்த கதை எழுதினவர் இந்தியர் தான் ...

Sutha said...

தவறு தான் ..ரெசுல் பூக்குட்டி படத்தொகுப்பாளர் அல்ல...அவர் ஒரு sound mixing engineer.கட்டுரையில் தவறு நேர்ந்து விட்டது.

//நம்மை கீழே வைத்து குனிந்து பார்ப்பதில் தான் அவர்களுக்கு ஆனந்தம். எந்த நாட்டில் இவை எல்லாம் முற்றிலும் இல்லை? லகான் அவர்களுக்கு புடிக்காது, காரனம் இந்தியன் அதில் ஜெயித்து விடுவான்.//

சத்தியமான வார்த்தைகள் ....என் முன்னைய பதிவான இதையும் பார்க்க. http://haran5533.blogspot.com/2009/01/blog-post.html

Sutha said...

ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Anonymous said...

Well an interesting article to read. I appreciate your diverse view on a particular issue. I do not think there is an exaggeration or a sense of undermining in this film. But the makers have been SELECTIVE. but that's also a true part of India. Well from a political point of view, I don't think a single film would demolish the dream of Indian regime to rule the world. However from a economical and cultural point of view, it does have a significant effect on the views of people all over the world about the India they know. I do not want to commend on your views of A.R.Rahman as he is a man known for us like a magician who had also produced floppy films in Tamil too. So perhaps his previous Hollywood films might be not that attractive. But I do not think Slumdog Millionaire is continuing to win awards as it is against the nature of India. certainly not A.R.Rahaman. All in all, I do appreciate your diverse views which had led to a completely differnt view of a devastating film. Good Luck..

Anonymous said...

Few years back a film called TRAFFIC won 4 acadamy awards. The whole plots of the story revolves around Drugs and betrayal and how americans are affected by drug problems. No american protested for it... Because its the fact...
Simply because the film displays every negative of india doesnt mean this is a bad film.... Its is not the only reason for the films sucess... the whole cinema community tells that its a feel good film at the end.... Sad that we are very ashamed that our mask is torn ....

If violence is a major concern for us... then paruthiveeran shud have been criticised as well.... On the positive side unlike paruthiveeran or subramaniapuram, slumdog ends in a positive note... We love india for all it +ves and -ves.... If one film portrays positive another will portray negatives.... So move on...
Let the world know that inspite of such standard of living we are a rising nation with lots of hope and dreams ... thats India.

Anonymous said...

Reason why Rahman is acclaimed of SlumDog.
Rahman is still in learning phase as far as Hollywood music is concerned...
But this film has indian roots and he is the master of indian music with a western touch... thats y his music was so amazing in the movie and the wrld loved it....... But it doesnt mean he will be acclaimed sameway for the next hollywood movie...

ஷாஜி said...

//Let the world know that inspite of such standard of living we are a rising nation with lots of hope and dreams ... thats India.//

--இதை நான் வழிமொழிகிறேன்...

butterfly Surya said...

நல்ல பதிவு.

ரஹமானுக்கு விருது கிடைத்தால் இந்தியன் என்ற முறையில் நமது எல்லோருக்குமே பெருமைதான்.

THE FACT:

இது போன்ற திரைப்படங்கள் வருவது இது முதல் முறையல்ல. Salam Bombay, Traffic Signal etc., etc., நிறைய படங்கள் வந்துள்ளது.

ஆனால் The producers of Slum Dog are very powerful.

இது எல்லாம் ஒரு வியாபார உத்தி.


இரண்டு வாரங்கள்ளுக்கு முன் வந்த செய்தி:

About Slum Dog:

ஆரம்பத்தில் 200பிரிண்ட் மட்டுமே போட திட்டமிட்டிருந்தோம். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கோல்டன் குளோப் அவார்ட் கிடைத்தபிறகு அது 400 ஆக உயர்ந்து விட்டது.

மேலும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மற்ற இந்திய மொழிகளிலும் டப் செய்ய முடிவு செய்திருக்கிறோம். தமிழில் இந்த மாதமே வெளிவருகிறது என்று கூட ஒரு செய்தி பார்த்தேன்.

நேற்றைய தட்ஸ்தமிழ் செய்தி பார்க்கவும்:

ஆஸ்கர் விருதை அள்ளப் போகும் கனவில் உள்ள ஸ்லம்டாக் .. குழுவினருக்கு மேலும் இரண்டு அமெரிக்க விருதுகள் கிடைத்துள்ளன.

நேற்று நடந்த விழாவில் அமெரிக்க தயாரிப்பாளர்கள் கில்டின் விருதும் ஸ்லம்டாக் படத்துக்குக் கிடைத்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் கிறிஸ்டியான் கூல்சன், இந்த ஆண்டின் சிறந்த தயாரிப்பாளராக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது.


உலக அழகியாக இந்திய அழகிகளூக்கு தொடர்ந்து விருது வழங்கப்பட்ட பிறகு அழகு சாதன் பொருட்கள் இந்தியாவில் எப்படி வியாபாரமாகிறது..??

கோவில் பட்டியில் மட்டும் இருபது Ladies Beauty parlour இருப்பதாக நண்பன் கூறினான். சென்னையில் குறைந்தது 3000 இருக்கும் என்பது என் கணிப்பு.

உங்கள் ஊரில் எத்தனை என்று எண்ணியதுண்டா..??

அதெற்கும் ஆஸ்காருக்கும் என்ன சம்மந்தம்.

இங்குதான் கியாஸ் தியரி வேலை செய்யும்.

எப்படி...?????

Wait and see a lot more to come..

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு

நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

Hi

உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு

நன்றி.

உங்கள் இணைப்பை இங்கு பார்க்கவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes