BREAKING NEWS

Like Us

Monday, December 29, 2008

Horlicks Vs Complan மோதல் : நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்.

போட்டி விளம்பரங்கள் தேவைதான். ஆனால் அவை ஒன்றை ஒன்று தரக்குறைவான முறையில் தாக்குவதாக இருக்க கூடாது. அண்மைக்காலமாக முன்னணி வியாபர நாமங்களான ஹோர்லிக்க்ஸ் மற்றும் காம்ப்ளான் ஆகிய பிராண்ட்கள் மோதிக்கொள்வதை பார்த்து வாடிக்கையாளர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஒருவர் மற்றவரை விட மேலானவாரக காட்டி கொள்ள தங்களுடை பொருளையே தரக்குறைவாக பேசுவது தேவைதானா? அதுவும் சிறுவர்களையும் தாய்மாரையும் வைத்து என்பது சற்றே சிந்திக்க வேண்டிய விடயம் தான். இந்த மோதலுக்கு என்ன காரணம், இதன் பின்னணியில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் , இந்த பொருள்களின் ஹோல்டிங் கம்பனிகள் எவை எவை என்று அலசுகிறது , இந்த கட்டுரை.

இந்த இரு பொருள்களின் நிறுவனங்களும் எதோ இரண்டு சிறிய கம்பனிகள் என்றால் ஆச்சரியமில்லை ... ஆனால் ஹோர்லிக்க்ஸ் இன் தாய் கம்பெனி GlaxoSmithKline Consumer HealthCare Ltd (GSK) complanin கம்பெனி Heinz India Ltd இரண்டுமே உலகத்தரம் வாய்ந்த மிகப்பெரிய கம்பனிகள் என்பது தான் வேதனைக்குரிய விடயம். இந்த கம்பெனிகளின் வியாபார விழிமியங்களும் சமூக பொறுப்புக்களும் எங்கு போயிற்று என்பது தான் எம் முன் விரித்து நிற்கும் பெரிய கேள்வி. இதை எல்லாம் அனுமதித்துவிட்டு இந்தியாவின் நுகர்வோர் தொடர்பான சட்டங்களும் கோட்பாடுகளும் என் மௌனித்து இருக்கின்றன. இது போன்ற விளம்பரங்கள் இன்னும் எத்தனையோ வியாபார போட்டிகளுக்கும் , சண்டைகளுக்கும் முன்னுதாரணமாக அமைய போகின்றது என்பதை அவை அறியவில்லையா?.


இது போன்ற மற்றவரை தாக்கும் போட்டி விளம்பரங்களை கடந்த மூன்று மாதங்களாக தான் தொலைக்காட்சியில் பார்க்க முடியுது. அதற்கு முன் அந்த கம்பெனிகளுக்கு இடையில் உறவு சரியாக இல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. முதலில் ஹோர்லிக்க்ஸ் தான் காம்ப்ளன் பாதிக்கப்படும் விதமாக விளம்பரம் செய்தது. அதில் இரண்டு அம்மாக்களும் ஒரு பையனும் வீதியில் நிண்டு பேசிக்கொண்டார்கள். பிறகு அதே மாதிரியான பையனும் அம்மாக்களும் சூப்பர் மார்க்கெட்டில் நிண்டு ஹோர்லிக்க்சை கடுமையாக , தரம் குறைந்த உற்சாக பானம் என்று வாதிட்டு கொண்டார்கள். இத்தனைக்கும் இந்தியாவில் அறுபது வீதமான மார்க்கெட் ஷேர் ஹோர்லிச்ஸ் வசமே உள்ளது. காம்ப்ளன் வெறும் பதினைந்து சதவீதம் மட்டுமே உள்ளது . இருந்தும் என் இந்த கொலை வெறி தாக்குதல் என்று புரியவில்லை. இதற்கு ஒரு காரணம் கூறுகிறார்கள் , சமீபத்திய ஆய்வு ஒன்று ஹோர்லிக்க்சை விட கோம்ப்லனில் தான் மிக உயர்ந்த சத்துக்கள் பன்மடங்கு அதிகம் இருப்பதாக கண்டறிந்திருக்கிறது. இந்த ஒரு காரணம் தான் ஹோர்லிக்க்சை அது போன்ற விளம்பரங்களை வெளியிட தூண்டுதலாக இருந்திருக்கலாம்.


இன்னும் பலர் இது மேற்சொன்ன இரு நிறுவனங்களினதும் ஒன்றிணைந்த செயற்பாட்டு நாடகம் என்றும். தங்கள் இருவரினதும் மார்க்கெட் ஷேர் இணை அதிகரித்துக்கொள்ள அவர்களினது கூட்டிணைந்த சதி என்றும் தெரிவிக்கிறார்கள். சிறுவர்களையும் அம்மா மாரையும் மொத விட்டு தங்கள் பொருள்களின் விற்பனையை பன்மடங்கு அதுகரித்து கொள்ளும் முயற்சியே இந்த விளம்பர நாடகம்.


எது எப்படி இருந்தாலும் சிறப்பான விளம்பர நாகரீகமும் , மென்மையான வியாபார விளிமியமும் பேணப்பட வேண்டும் என்பது தானே ஒரு நல்ல வியாபாரத்தின் பண்பு..Saturday, December 27, 2008

அடுத்த வருடத்தில் எந்த பங்குகளில் முதலிடுவது சிறந்தது? ஒரு சொதப்பல் ரிப்போர்ட்

நீங்கள் இப்போது வீடுக்கு போகலாம் அல்லது you are fired என்ற ஆங்கில வார்த்தைகள் தான் அடுத்த வருடத்தில் அனைத்து வியாபர நிறுவனங்களிலும் அதிகம் பாவிக்கப்படும் வார்த்தையாக இருக்கப்போகிறது. நிறுவங்களில் நிதி ஈட்டத்துடன் சம்பந்தப்பட்ட பங்குச்சந்தை , வங்கிகள் , நிதி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கிப்போய் உள்ளதாலும் நிறுவங்களின் முதலானவராகவும் மதிக்கப்படுபவராகவும் கருத்தப்படுகின்ற சாதாரண நுகர்வோனிடம் செலவிடக்கூடிய பணத்த்தின் அளவு குறைவாக உள்ளதாலும் இனிவரும் காலங்களில் தனது வியாபர நடவடிக்கைகளை மட்டுப்படுத்த அல்லது குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அனைத்து நிறுவனங்களுக்கும் உள்ளது.

காப்பீட்டு கம்பனிகளையும் வணிக வங்கிகளையும் மட்டும் தான் நிதி நெருக்கடி பாதிக்கும் என்று யாராவது சொன்னால் நம்பவேண்டாம் , நிதி நெருக்கடியில் விளைவுகள் ஒரு சங்கிலித்தொடராக அனைத்து வகையான வியாபாரங்களையும் பாதித்து வருகிறது. கடந்த வாரங்களில் Toyata , GM எண்டு ஆடம்பர வாகனங்களில் தலைவிரித்து ஆடிய பிரச்சனை , எதிர்வரும் காலங்களில் அரிசி, மாவு, கத்தரிக்காய் எண்டு சகலதையும் பாதிக்கும் எண்டு நோக்கர்கள் கருதுகிறார்கள். நிறைவு பெறுகின்ற இந்த இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் எந்த ஒரு நிறுவனமும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி எந்த ஒரு ஊழியருக்கும் போனஸ் மற்றும் எந்த ஒரு மேலதிக அனுகூலங்களும் வழங்கவில்லை. அடுத்த வருடத்தில் இருந்து ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் படலம் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தப்படும். எனவே வேலை இழக்கும் பலரும் என்ன செய்வினம் எண்டு யோசித்தால், பிவரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.


பெரிய நிறுவனங்களில் இருந்து வேலை இழப்போர் , மிகுந்த வேதனையுடன் தமது தகுதிகளை பெருக்கிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவர். இதனால் எதிர்வரும் காலத்தில், MBA, MSC மேன்நிலை கல்விக்கான கேள்வி அதிகரிக்கும் , பலர் தம்மிடம் இருக்கும் கொஞ்ச பணத்தையும் கல்வி நிறுவனக்களுக்கு அளித்து அவற்றின் வருவாய் பெருக்கத்துக்கும் உதவுவர். சின்ன சின்ன tutory கலில் கூட mba clas நடக்கலாம். எனவே கல்வி சார்ந்த போட்டியும் தேடலும் பன்மடங்கு அதிகரிக்கும்.


இன்னும் சில வேலை இழப்போர் , சுய தொழில் எண்டு பல தொழிலும் செய்வர். ஒருவர் மட்டும் செய்யும் தொழில்கள் அதிரடி வேகத்தில் அதிகரிக்கும். அடி மட்ட வேலை வியாபாரங்களில் கடும் போட்டி நிலவும். ஒரே தொழிலில் பல பிரதிஈடுகள் கிடைக்கும் . மிக மலிவான விலையில் மனித ஊழியத்தை விலைக்கு வாங்கலாம். இதனால் தொழில் சார்ந்த அடி பிடி சண்டைகள் பல்கிப் பெருகுவதாலும் , வேலை இன்மையால் ஏற்படும் மன அழுத்தம், மாரடைப்பு போன்ற வியாதிகளாலும் மருத்துவமனைகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.


எனவே அடுத்தவருடத்தில் பங்குச்சந்தையில் முதலிட இருப்பதாயில் , கல்வி நிறுவனங்களின் பங்குகளிலும், ஆஸ்பத்திரிகள் மருத்துவமனைகளின் பங்குகளிலும் முதலிட்டால் கூடிய லாபம் உழைப்பதுடன் முதலீடை ஆபத்து இல்லாமல் வைத்துக்கொள்ள முடியும்.

நவம்பர் 2005 இல் நான் எழுதியது

ஒரு தேசமே
தோற்றுப்போய்
நீ வெற்றி
பெற்றிருக்கிறாய்,

தொடர்ந்து
அநியாயங்களே
வெற்றி பெறுவது
இங்கு
மட்டும் தானோ?

இன்னுமொரு
இருண்ட யுகம்
ஆரம்பித்து வைக்கிறாய்
கடந்ததை
விட மோசமாக ,

ஆர்ப்பரிக்கின்றனர்
பலர்..
உனது அங்கவஸ்திரமே
நாளை தூக்குகயிறு
ஆவது தெரியாமல்,

மிலோசவிக்கையும்
போல்போட்டையும்
உன்னில் பார்கிறேன்
தன் சொந்த
தேசத்து மக்களையே
கொன்றோளித்தவர்கள்
அவர்கள்....

Thursday, December 25, 2008

கர்த்தராகிய ஏசு கிறிஸ்து

“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று தன்னை நாடி வந்த மக்களுக்கு கர்த்தராகிய ஏசு கிறிஸ்து உறுதியளித்தார்.

இந்தவருடமாவது தேவ குமாரர் சொன்னவைகள் தமிழ் மக்கள் வாழ்க்கையில் நிஜமாகி அமைதியும் சமாதானமும் திரும்பட்டும்.

Wednesday, December 24, 2008

Statistics: G.C.E A/L - Business Statistics

These are some of the model papers set by me for the G.C.E A/L students of Sri Lanka, who is sitting for Business Statistics exam under the local curriculam in english medium. These marerials are as a result of my preparation for few students to whom i am facilitating this subject. Today at the moment there are only few students/schools are following this subject in an around Colombo area. But in near future dare will be a huge need for the resource matereal when all the national acadamic activities shift to the english medium. i would predict this would happen in the year of 2015 approximately. I would like to keep on uploading all the materials i have, which will be helpful for few students in any of the future date.

Download all the model papers at this project link

http://www.savefile.com/projects/808721850

Tuesday, December 23, 2008

எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்

வாழ்கையில் முதன் முதலாக வாங்கி படித்து முடித்த எண்ணுரு பக்க புத்தகம். இப்புத்தகத்தை அதிக விலை கொடுத்து வாங்க நிறையவே ஜோசித்தேன். இதை வாங்க தூண்டுவதற்காக எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் அருமை பெருமைகளை எல்லாம் நண்பன் ரிஷங்கனுக்கு ஐஸ் வைத்தேன். எனக்கு ராமகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் , ராஜநாராயணன் போன்ற தரமான கதைசொல்லிகளை அறிமுகப்படுத்தியவனே அவன் தான். என் போலி வார்த்தைகள் அவனிடம் பலிக்கவில்லை, வேறு வழி iன்றி நானே இதை வாங்கினேன் அவன் இன்னுமொரு அருமையான நாவலான யாமம் வாங்கிக்கொண்டான். இன்னுமொரு சிறப்பும் இப்புத்தகத்துக்கு உண்டு , படிப்பு சம்பந்தமான புத்தகங்கள் தவிர்த்து நான் அதிகம் விலை கொடுத்து வாங்கிய முதல் புத்தகமும் இதுவே. இரண்டு family pizza வாங்கும் அளவுக்கு நான் சம்பளம் எடுத்து நான் உயிர் வாழ்ந்த காலங்களில் எல்லாம் இரவல் புத்தகங்களிலேயே அறிவை நிரப்பியிருக்கிறேன். அப்போதெல்லாம் கிடைத்த திருப்பதி , மூன்று மாதங்களாக இழுத்தடித்து வாசித்து முடித்த இந்த புத்தகத்தில் கிடைக்கவில்லை. அதன் அளவை கூட்டுவதற்காக பல நீர்த்துப்போன கதைகளையும் சேர்த்திருப்பது சலிப்பை தருகிறது. அனாலும் பல இடங்களில் எழுத்த்ழாரின் தனித்துவமான துக்கமும் வலியும் நிறைந்த பத்திரங்களை அனுபவிக்க முடிகிறது.


எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் தொகுப்பு
நவீன தமிழ் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கிய எஸ்.ராமகிருஷ்ணனின் முழுமையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. காலத்தால் புறக்கணிக்கப்பட்டு சாம்பல் படிந்து கிடக்கும் கிராமங்களையும் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தவர்களாக தனிமையும் துயரமுமாக அலைவுறும் விளிம்பு நிலை மனிதர்களையும் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் எங்கும் காண முடிகிறது. கதை சொல்லலில் பல புதிய சாத்தியங்களை உருவாக்கும் இவரது மிகு புனைவும் கவித்துவ மொழியும் தமிழ்க் கதையாடலில் மிகத் தனித்துவமானது. ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் புதியதொரு தமிழ் புனைவியலை உருவாக்கு கின்றன என்பதே அதன் சிறப்பம்சம்.

Sunday, December 21, 2008

தலை கீழாய் நின்றாலும் தங்கபாலு தமிழக முதல்வர் ஆக இயலாது.

ஆள் ஆளுக்கு ஒரு தொலைக்காட்சி சேவையை வைத்துக்கொண்டு தமிழக தலைவர்கள் காட்டும் அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லை. கட்சித்தலைவர் ஆனாலே ஒரு சேனல் தொடங்க வேண்டும் என்பது தமிழகத்தில் கட்டயமகிவிட்டது. இதர மாநிலங்களில் இது போன்ற நிலைமை உண்டா என தெரித்தவர்கள் சொல்லுங்கள். விஜகாந்தும் இனி சேனல் தொடங்கலாம். அவரிடம் காசு இல்லியோ என்னவோ பத்திரிகைகளை மாதக்கணக்கில் குத்தகைக்கு எடுத்துள்ளார். விகடனில் விஜகாந்தின் அரசியல் நாடகம் தொடராக வருகிறமை குறிப்பிடத்தக்கது. கப்டனுக்கு தான் நிறைய காலமாய் முதல்வர் அகும் கனவு இருக்கென்றால், அதில் ஒரு நியாயம் இருக்கு. ஆனால் உட்கட்சி பூசலையே தீர்க்க தெரியாத தமிழக காங்கிரசில் இருந்து வந்த தங்கபாலுக்கும் முதல்வர் கனவுகள் ஏராளம் என்பதை தான் சகிக்க்க முடியாமல் இருக்கு. சோனியாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காய் அவர் செய்யும் அட்டகாசத்திற்கு அவருக்கு நிகர் அவரே. சுப்பிரமணிய சாமி, மணிசங்கர் ஐயர் ஆகியோரை கூட மண் கவ்வா வைத்து விட்டார்.

த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைமையகமான செ‌ன்னை ச‌த்‌தியமூ‌‌‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் ‌விடுதலை‌ச் ச‌ிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தொ‌‌ண்ட‌ர்க‌ள் தா‌க்குத‌லி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.இ‌த்தகவலைய‌றி‌‌ந்த ‌த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் த‌ங்கபாலு, ‌விடுதலை‌ச் ச‌ிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவனை கை‌து‌ செ‌ய்ய‌க்கோ‌ரி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ஜே.எ‌‌ம். ஹாரூ‌ண், ‌கிரு‌ஷ்ணமூ‌‌‌ர்‌த்‌தி ம‌ற்று‌ம் 300‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட தொ‌‌‌ண்ட‌ர்களுட‌ன் தே‌னி‌யி‌ல் க‌ட்‌சி தொ‌‌ண்ட‌ர்க‌ள் கூ‌ட்ட‌‌ம் நட‌ந்த ‌தியாகராஜ‌ன் ‌திருமண அர‌ங்‌கி‌ல் இரு‌ந்து ஊ‌ர்வலமாக‌ச் செ‌ன்றா‌ர்.‌பி‌ன்ன‌ர் தே‌னி - பெ‌ரியகுள‌ம் சாலை‌யி‌ல் அம‌ர்‌ந்து ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட அவ‌ர்க‌ள் ‌திருமாவளவ‌னி‌ன் க‌ட்-அவு‌ட்டு‌க்கு ‌தீ வை‌‌த்தன‌ர். இதை‌த்தொட‌ர்‌ந்து இதை‌த்தடு‌க்க வ‌ந்த காவ‌ல்துறை‌யினரு‌ வந்தனர். எல்லோரும் பாத்துகோங்க என்னையும் கைது செய்யுறாங்க , நானும் பெரிய அரசியல்வாதிதான் எண்டு வடிவேல் கணக்கா அவர்களின் ஜீப்பில் தானே சென்று எரிய தங்க பாலு தான் கைது செய்யப்பட்டதாக தானே அறிவித்தார் . அவரது மெகா தொலைக்காட்சி "தங்கபாலு கைது தமிழகம் கொந்தளிப்பு" என்று செய்தி வெளியிட்டது...அப்படி எதாவது நடந்ததா எண்டு விசாரிச்சு பார்க்க வேண்டும்.

இன்னும் கொஞ்ச நாளில் இவரது பீலா தங்காமல் சோனியாவே த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் பதவியை பறிக்கலாம். அப்பவாவது முதல்வர் ஆசை விட்டு போகுதா பார்க்க வெண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது.

Friday, December 19, 2008

அபியும் நானும்.எதோ சினிமா பற்றி சொல்ல போகிறேன் என்று எதிர்பார்த்து நீங்கள் உங்கள் mouse பட்டனை கிளிக்கி இருந்தால் மன்னிக்கவும்...இதில் நான் எழுத இருப்பது எனக்கும் அபிக்குமான ஒரு நட்பு பற்றி...இப்போது அபி எங்கு இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது, அவளுக்கும் எனக்கும் எந்த தொடர்புகளும் இல்லை, தொடர்பு கொள்ளும் நிலையிலும் அவள் இல்லை. அபிக்கு என்னை பற்றிய ஞாபகங்கள் வருமா? அவள் நினைவுகளின் நான் இருக்கிறேனா ? ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களாவது அபி என்னை பற்றி நினைக்கிராள? என்பது தொடர்பாக பல கேள்விகள் என் மனமெங்கும் பரந்திருக்கிறது.
இன்றோடு ஒரு வாரம் கடந்தாகிவிட்டது அபி என்னை பிரிந்து சென்று.. போகும் பொது கூட அபியை பார்க்க முடியவில்லையே, அவளது அழகான சிரிப்பை நுகரமுடியவில்லையே என்ற கவலையும் ஏக்கமும் என்னை அதிகமாக வாட்டுகிறது. எதோ அதிகமாக நேசித்த ஒன்றை இழ்ந்துவிட்டதன் வலியை வாழ்வில் முதல்முறையாக அனுபவிக்கிறேன்.
அபி யார் ? அபி என்ற பெயர் வெறும் சுவரசியதுக்காக மட்டும் செருகபட்டதா என்றால் நிச்சயமாக இல்லை. அதிகம் நெருக்கமான அடுக்குமாடி குடியிருப்பில் என் அயல் வீட்டுக்காரி அபி என்கிற அபிநயா. நாலரை வயது மட்டுமேயான ஒரு குட்டி தேவதை. என் இத்தனை வருட வாழ்வில் அவள் மட்டுமே என்னுடன் அதிகம் மழலை மொழி பேசியிருக்கிறாள். என்னிடம் வந்து இது என்ன, அது என்ன, அது என் இப்படி இருக்கு? இது என்ன கலர்? நீங்க என்ன செய்யிறீங்க? என்று அவள் அபினயமாய் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க பல தடவை நான் அதிகம் சிந்திக்கவேண்டி இருந்திருக்கிறது. பல விடியல்கள் அபியின் குரல் கேட்டே நான் விழித்திருக்கிறேன். எழுந்து பார்க்கையில் கண்களால் சிரித்துகொண்டு இருப்பாள் அபி.
அபி குடும்பத்துடன் நிரந்தரமாகவே வெளிநாடு ஒன்றுக்கு செல்ல இருக்கிறாள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். சரியாக இந்த நாள் தன் என்பதை நான் நின் நினைவில் நிறுத்திவைக்க தவறி இருந்தேன். தேடிரென்று ஒரு நாள் அபி நாளைக்கு போகபோகுது என்று தகவல் கிடைத்தது.. நேரம் எட்டு மணியை தாண்டி இருந்த போதிலும் வீதிக்கு சென்று ஒரு GIFT வாங்கி வந்தேன். வந்து பார்த்த பொது அபி வீட்டில் இல்லை. வந்ததும் என் நினைவு பரிசை கொடுத்து விடலாம் என்று காத்திருந்தேன். இரவு நெடு நேரம் வரை அபி வரவில்லை. சரி அடுத்த நாள் போகும்போது கொடுத்துவிடலாம் என்று இருந்துவிட்டேன். அடுத்த நாள் நான் எழுந்த பொது , விடிய ஐந்தரை மணிக்கே அபி போய்விட்டதாக கூறினார் அப்பா. ஏமாற்றமும் கவலையும் தொண்டையை அடைத்துக்கொண்டது...அன்று முழுவதும் நினைவுகள் அபியையே சுற்றி வந்தன....இனி மீண்டும் அபியை சந்திப்பேனா....அப்படி சந்தித்தால் அபியின் நினைவுகளில் நான் இருப்பேனா ? போன்ற விடை தெரியாத கேள்விகளுடன் அபிக்காக நான் வாங்கி பொம்மையை ஒரு நாளில் சில தடவைகள் பார்த்துக்கொள்கிறேன்..............

Wednesday, December 17, 2008

என்னை மீறிய எண்ணங்கள்
நான்
கடந்துவரும்
கல்லறைகளில் எல்லாம்
எத்தனையோ கதைகள்
புதைந்து
கிடக்கின்றன,

மரங்கள்
எல்லாம் என்னை
பார்த்து ஏதோதோ
கடந்தகால சம்பவங்களை
சொல்ல நினைப்பதாய்
எனக்குப்படுகிறது,

நடந்துவரும்
சாலைகளில் எல்லாம்
எழுதப்படாத எத்தனையோ
வரலாறுகள்
சிதிலமாகி
கிடக்கிறது,

உருவம் இல்லா
ஏதோ ஒரு பயம்,
என் மனதின் எங்கோ
ஒரு மூலையில்
விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே
இருக்கிறது.....

சின்ன சின்ன வேலைகள்

2004 ஆம் வருட காலப்பகுதி. campus தொடங்கும் வரை ஏகாந்தமாய் களித்த காலப்பகுதி. நீண்ட பகல்களும் இரவுகளும் இலக்கில்லாமல் களிந்த புதிரான நாட்கள் அவை. அப்போது தான் இந்த கம்ப்யூட்டர் என்ற ஒன்றும் எனக்கு அறிமுகமாகி இருந்தது... தன் பிள்ளை எதோ பெரிதாய் சாதித்து விட்டதாய் எண்ணி என் அப்பா வாங்கித்தந்த/புர்த்திசெய்த விலை உயர்ந்த அத்தியாவசிய தேவை அது...


அடுத்த பில் கேட்ஸ் எண்டு கற்பனைகளை வளர்த்துக்கொண்டு ஆராச்சிகளில் இறங்கிய காலம். அதற்குள் என்ன எல்லாம் இருக்கு எண்டு கண்டுபிடிப்பதில் தலையை பித்துக்கொண்டதிலேயே களிந்த்தது என் பல நாட்கள். அப்படி செய்த முயற்சியில் பல புதிய கண்டுப்பிடிப்புக்களை செய்துவிட்டதாக நான் காட்டிய படங்கள் கணக்கில் அடங்காது.... அத்தகைய சில படங்களை இப்போது youtube இல் எத்தியிருக்கிறேன். எப்போது பார்த்தாலும் நிறைய சிறுபிள்ளை தனமாகவும் அதே நேரம் கொஞ்சம் பெருமையாகவும் நான் நினைத்துக்கொள்கிற விடயங்களில் இதுவும் சில.மேலதிமாக பார்க்க http://www.youtube.com/haran5533

Sunday, December 14, 2008

ஐயோ பாவம் டாட்டா

உலக நாடுகள் நிதி பிரச்சனைகள் தவித்துக்கொண்டு இருக்கின்றன. வங்கிகளையும் காப்பீடு நிறுவனங்களையும் பதித்த பிரச்சனை கடந்த வாரம் அமெரிக்காவின் general moter இலும் இடியாய் இறங்கியது கடந்த காலங்களின் இல்லாத அளவில் அவர்களின் வருமானம் குறைந்துள்ளது. அரசும் கூட 14.3 billion dollar கொடுக்காமல் கையை விரித்துவிட்டது. மக்களிடம் வீடு கடனை அடைக்கவே காசு இல்லை என்கிர பொது வாகனத்துக்கு எங்கிருந்து கிடைக்கும்.


இதை எல்லாம் வேடிக்கை பார்த்த ரத்தன் டாட்டா இப்படி ஒரு புதுமையான முறையில் அரசிடம் கையேந்தி உள்ளார். செய்தி சேவை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, அரசுகள் தேவையான பணப் புழக்கத்தை ஏற்படுத்துவதுடன், நியாயமான வட்டியில் கடன் கொடு‌க்க தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எண்டு கூறியுள்ளார்.(அப்போது தான் அவரது கார்களையும் தைரியமாக விக்க முடியும் )அவர் மேலும் கூறுகையில், வங்கிகளில் அரசுகள் பணத்தை புழக்கத்தில் விடுவதுடன், இது நுகர்வோருக்கு கடன் கிடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றார். இந்திய நிதி சந்தையில் அரசு போதுமான முதலீடு செலுத்தி, கடன் கிடைக்க செய்தால், நாங்கள் உள்நாட்டு பொருளாதார நிலைமைக்கு தகுந்த மாதிரி, அதிக பாதிப்பு இல்லாமல் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்டுவோம். (உஉட்டுங்கள் )ஏற்கனவே நரேந்திர மோடியிடம் குஜராத்தில் நானோ தொழிற்சாலை அமைக்க பல்வேறு வழிகளில் சலுகைகளை பறித்த டாட்டா , இப்போது இந்திய அரசுக்கே துண்டில் போடுறார்.

தாஜ் ஓட்டலை திருத்த காசு இல்லை எண்டதுக்காக இப்படியா பல்டி அடிப்பது mr.tataThursday, December 11, 2008

300a great historic flim after long time. lot of aspects of the movie made me to recommend as a great one.

300 is a 2007 film adaptation of the graphic novel of the same name by Frank Miller, and is a fictionalized retelling of the Battle of Thermopylae. The film is directed by Zack Snyder while Miller served as executive producer and consultant. The film was shot mostly with a super-imposition chroma key technique, to help replicate the imagery of the original comic book.
Spartan King Leonidas and 300 Spartans fight to the last man against Persian 'God-King' Xerxes and his army of more than one million soldiers. As the battle rages, Queen Gorgo attempts to rally support in Sparta for her husband. The story is framed by a voice-over narrative by the Spartan soldier Dilios . Through this narrative technique, various fantastical creatures are introduced, placing 300 within the genre of historical fantasy.(wikipedia)

Wednesday, December 10, 2008

அமெரிக்காவின் நிதி நெருக்கடியும் நானும்.


அமெரிக்காவின் முதலீட்டு வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் திவாலானதால் உருவான நிதி நெருக்கடி முதலில் ஐரோப்பாவையும், பிறகு ஜப்பானையும் அதன் பிறகு சீனா, இந்தியா மட்டுமின்றி, உலகின் மிகமுக்கியம்மான ஜீவராசியாகிய என்னையும் கடுமையாக பாதித்து இருக்கிறது. நாலு வருடங்கள் பட்டப்படிப்பு எண்டு ஒன்றை படித்து விட்டு, எதோ ஒரு பல்தேசிய நிறுவனத்தில் முகாமைத்துவ மேலாளராக, கொழும்பின் எதோ ஒரு கட்டடத்தின் பதினெட்டாவது மாடியிலிருந்து கடலைப் பார்க்கும் என் கனவு இன்னும் கனவாகவே இருக்கிறது. பொருளாதார நெருக்கடி, பெரிய நிறுவனங்களின் ஆள்குறைப்பு, அடி மாட்டு சம்பளத்தில் என்னை சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கும் கஞ்ச கம்பெனிகளின் மனிதர்கள் எண்டு நிறைய விடயங்கள் என் தூங்காத இரவுகளை பயமுறுத்துவதால் மேற்சொன்ன கனவுகள் இப்போது வருவதில்லை. எனவே இந்த நிதி நெருக்கடிகளின் விளைவுகளை மல்லாக்க படுத்து சுஜாதா STYLE லில் யோசித்து பார்த்தேன் .....விளைவு.


நிதி நெருக்கடியின் விளைவு , நிறைய பேர் இலங்கையிலும் வெகு விரைவில் வேலை இழப்பர். இந்த நிலைமை அடுத்த இரண்டு வருடங்களுக்கு தொடரலாம். ஏற்கனவே அரசின் அழுத்தங்களால் NGO க்கள் வெளியேறிவிட நிலையில், பல பல்தேசியக் கம்பனிகளும் அடுத்துவரும் வாரங்களின் தனது ஆள் குறைஇப்புக்களை அறிவிக்கும். தொடர்ந்து OUTSOURCING, BACK OFFICE எண்டு சொல்லுவோரும் பெட்டி கட்டுவர். எனவே இனிவரும் EMEGENCY காலத்தில் பொருளாதாரம் தொடர்பாக மிகவும் அபாரமாக செயற்படும் இலங்கை அரசு வேலை தொடர்பான வாக்குறுதிகளையும் தன்னுடைய செய்திகளில் ஸ்பெஷல் செக்மேன்டாக சேர்த்துக்கொள்ளும். ஏற்கனவே நிறைய ஸ்பெஷல் செக்மேன்ட் காட்டி மக்களை பெக்கட்டுவதுபோல.


வேலை வெட்டி இல்லாத நிறைய பேர் ஒரே வேலையை குறிவைத்து களத்தில் குதிப்பர்....ஒரு பொருளை நிறயா பணம் துரத்துவது பணவீக்கம் (inflation)என்பது போல் (இங்கு பொருளின் விலை அதிகரித்து செல்லும்) ஒரு வேலையை நிறைய மனிதர்கள் துரத்தினால் குறித்த வேலை தொடர்பான சம்பளம் குறையும். இந்த நிலைமையை நாங்கள் வேலைவீக்கம் (EMPLATION)எண்டு இனிமேல் அழைக்கலாம். இந்த நிலைமையில் 30000 பெறுமதியான வேலையை 10000 க்கும் செய்வதற்கு தகுதியான ஆள் கிடைக்கலாம். (இந்த புதிய தத்துவத்தை நான் தான் முதலில் கண்டு பிடித்தேன், வாசகர்கள் plagiarism எண்டு குற்றம் சாட்டுவதானால் தகுந்த ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும்) . இதனால் பொருளாதாரம் downsize அடைந்து மக்களின் கொள்வனவு ஆற்றல் குறையும். அது சகல துறைகளையும் பாதிக்கும்.கொள்வனவு ஆற்றல் குறைந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து நல்ல economics புத்தகம் எடுத்து வாசிக்கவும்..


இங்க என்ன நடந்தாலும் பரவாயில்லை, எனக்கு ஏன்டா மாமா வெளிநாடுல இருக்கிறார் எண்டு கிளம்ப இருப்போர் கவனத்துக்கு, இத விட மோசமான நிலை தான் அங்க இருக்கு..பெட்ரோல் அடிக்கும் வேலையையும் வெள்ளைக்காரன் ஆக்கிரமித்துக்கொல்வதாய் கேள்வி...எனவே வாழமுடியாமல் கிளர்ச்சிகள் வெடிக்கும், வெளிநாடுகளில் வேலை சார்ந்ததாய் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் உருவெடுக்கும்.. இதனால் குடிவரவு கொள்கைகளில் கூட மாறுதல்கள் வரலாம்....வெள்ளைக்காரன் ஆசிய நாட்டவர் மோதல் எண்டு செய்திகள் வரலாம் ...சாப்பாட்டுக்காகவும் கொவ்ரவத்துக்க்ககவும் மனிதன் எந்த நிலைக்கும் செல்வான், அந்த நிலைகளை இனிவரும் கால உலகம் நிறையவே காண வேண்டி இருக்கும்......நவீன மனிதனின் அத்தனை துறைகளிலும் நிதி நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட கிளை பிரச்சினைகளும் கொழுந்துவிட்டு எரியும்


80 பதுகளில் வந்தது போன்று வேலை இல்லா பிரச்னையை மையமாக வைத்து தமிழ் திரைப்படங்கள் வரும்...உலக நாயகன் கமலஹாசன் "எருமையின் நிறம் கருப்பு " எண்டு படம் நடிக்கலாம்...அப்போதும் கூட நானும் ரிஷாங்கனும் SREYA வுக்குப் பதில் தம்மனாவ போட்டிருக்கலாம் என்று சிலாகித்து பேசிக்கொண்டு இருக்கலாம்............WILL SEE

செழியனின் " பேசும்படம்" தொடர்பாக


ஆனந்த விகடனில் வெளிவந்த உலக சினிமா மூலமானது, உங்கள் எழுத்துக்கள் மீதான என் பிரியம். வெளிவந்த காலம் முதலே விகடனில் தேடி வாசிக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்று. எழுத்துக்களின் இனிமையும், உங்களுக்கு மட்டுமேயான சில பல விடயங்களும் ஒளிப்பதிவாளர் என்ற முகம் மறந்து ஒரு எழுத்தாளராகவே அதிகம் என்னை கவர்ந்திருக்கின்றன.


"பேசும்படம்" என்ற அந்த புத்தகத்தை நல்ல சினிமா மீதான என் ரசிக்கும் தன்மையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதட்ககாவே பணம் கொடுத்து வாங்கினேன். அந்த எதிர்பார்ப்புக்களை நிறையவே பூர்த்தி செய்து இருக்கிறது புத்தகம் என்பது தொடர்பில் எனக்கு மகிழ்ச்சி. கட்டுரைகளும் விமரிசனங்களும் நிறையவே வித்தியாசமாக சிந்திக்க தூண்டுகிறது. திரைக்கு பின்புலத்தில் இருக்கும் உழைப்பும் , ஏக்கமும் புரிகிறது. இரண்டு ஆசிரியர்கள் ஒரு நதிக்கரை என்ற பகுதி அருமையாக உள்ளது. கன்னத்தில் முத்தமிட்டால் விமரிசனத்துடன் உடன்பட முடியவில்லை ...மன்னிக்கவும். தொடர்ந்தும் உங்கள் எழுத்துக்கள் வாசிக்க ஆர்வமாய் உள்ளேன்.
Wednesday, December 3, 2008

பாதை மாறும் உலகின் போக்கு

கடந்த வாரத்து சம்பவங்கள், நான் வாழும் இந்த உலகம் தொடர்பான என் மதிப்பிடுகளை நிறையவே மாற்றி இருக்கிறது. செய்திகள் மீதான என் தீராத தாக்கத்தை மேலும் அதிகபடுத்தியிருக்கிறது. அடிப்படை மனிதப் பண்புகளை தொலைத்துவிட்டு இந்த உலகத்து மக்கள் எதை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறார்கள் என்ற கேள்விகளை மனதெங்கும் பரவவிட்டிருக்கிறது. இது போன்ற நிலை நீடித்தால் அண்மித்த நூற்றாண்டுகளில் மனித இனம் தன்னைத்தானே அளித்துக்கொண்டுவிடும் என்பதில் எந்த சந்தேதங்களும் இல்லை. கொடுரத்தை செய்யவும் ரசிக்கவும் மனித இனம் மீண்டும் பழகிறது என்ற உண்மை கடந்த வாரத்தின் இந்த சம்பவங்களின் மூலம் தெளிவாகிறது.

- மும்பை மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்
- நைஜீரியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையான மோதலில் நூறுக்கும் அதிகமானவர்களின் பரிதாப மரணம்.
- இலங்கையில் உள்நாட்டு போரில் கிளச்டேர் குண்டுகளின் பாவனை.
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes