BREAKING NEWS

Like Us

Sunday, November 23, 2008

வாரணம் ஆயிரம்




எப்போதுமே சூரியா படம் மனதுக்கு பிடித்தமான ஒன்று என்ற எனது முன்மதிப்புக்களை இந்த தடவையும் காப்பாத்தி இருக்கிறார் சூரியா. அருமையான தத்துவங்கள், சுய மனித ஒழுக்கங்களை கோடிட்டு காடும் ஒரு படம். சூரியாவுக்கு நடிப்பில் வெள்ளுதுக்கட்ட அருமையான வாய்ப்பு . சிறப்பாகவே வெற்றிபெற்று இருக்கிறார். அவர் தவிர ஏனைய பாத்திரங்கள் முக்கியப்படுத்தவில்லை. நடிகைகள் தொடர்பில் என் ரசனை மட்டம் பெரிதும் விலகியே இருக்கிறது. சூரியா தவிர இசையும் கமெராவும் மட்டுமே கூடுதல் பலம். ஏற்கனகே மீடியாக்களில் விளம்பரப்படுத்தபட்டத்தை போல, தன் படம் என்பதை கெளதம் மேனன் சொல்லியே தெரிய வேண்டி இருக்கிறது. முன்னைய படங்களில் இருந்து சற்றே குறைந்திருக்கிறது அவருடைய , அவருக்கு மட்டுமேயான சில பல விடயங்கள். தவிரவும் திரைகதையில் இருக்கும் எதோ ஒரு தொய்வை அழகான காட்சிப்படுத்தல்கள் மட்டுமே சரி செய்கிறது. கிளை கதைகளில் கதைசொல்லும் உத்தி எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறது எண்டு எனக்கு சொல்ல தெரியவில்லை ஆயினும் இரட்டை வேடத்தின் குழப்பத்தையும் சிரமத்தையும் தவிர்க்க கமரவையே ஒரு பாத்திரமாக்கியது ரசிக்கவே செய்கிறது. சிறுவன் கடத்தல், தீவிவாதிகளுடன் சண்டை என்பன தேவையற்ற திணிப்புக்கள், சேரன் பாணியில் மென்மையாகவே கதையயை நகர்த்தியிருக்க சம்பவங்களை தீட்டியிருக்கலாம். எல்லாம் தவிர்த்து பார்த்தால் நீண்ட காலத்துக்கு பிறகு வந்த வர்ணம் நிறைந்த ஒரு சினிமா இந்த வாரணம் ஆயிரம்.

Sunday, November 16, 2008

பகவத் கீதை,


பகவத் கீதை, எப்போதுமே மனசுக்கு நெருக்கமான

அதில் ஒரு பகுதி..


யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது ‌பிரு‌ம்ம உண‌ர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.


எவ‌ன் ஒருவ‌ன் எதனாலு‌ம் ம‌கி‌ழ்வ‌தி‌ல்லையோ, துயர‌ப்படுவ‌தி‌ல்லையோ, எதையு‌ம், யாரையு‌ம் வெறு‌ப்ப‌தி‌ல்லையோ, எத‌ற்கு‌ம் ஆசை‌ப்படுவ‌தி‌ல்லையோ, ந‌ல்லது கெ‌ட்டது இர‌‌ண்டையு‌ம் துற‌ந்த மன‌ம் கொ‌ண்டவனா‌ய் எ‌ன்‌னிட‌த்‌தி‌ல் ப‌க்‌தி கொ‌‌ள்‌கிறானோ அவனே என‌க்கு ‌பி‌ரியமானவ‌ன்.



மேலு‌ம் ‌கிருஷ‌்ண‌ர் கூறு‌கிறார‌், பகைவனையு‌ம் - ந‌ண்பனையு‌ம், புகழையு‌ம் - ப‌ழியையு‌ம், கு‌‌ளிரையு‌ம் - வெ‌ப்ப‌த்தையு‌ம், இ‌ன்ப‌த்தையு‌ம் - து‌ன்ப‌த்தையு‌ம் சமமாக‌க் கொ‌ள்பவனு‌ம் என‌க்கு ‌பி‌ரியமானவனே!



இப்படி இருக்கத்தான் முயற்சி செய்கிறேன்,
ஆனால் என்ன செய்ய , சாதரண மனிதனாக தான் இருக்க முடியுது.

அசாத்தியமானதாத கூட படுகிறது, அப்படி இருப்பது

அதுவரை .........................

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes